பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், ஏப்ரல் 13

அப்பாவுக்கு !

மீண்டும் துபாய் நண்பர் முகமத் காலித் இடமிருந்து

எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...


முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை...

அம்மா
எத்தனையோ முறை
திட்டினாலும்
உறைத்ததில்லை
உடனே
உறைத்திருக்கிறது
என்றேனும்
அப்பா
முகம் வாடும் போது


உன் அப்பா
எவ்வளவு உற்சாகமாக
இருக்கிறார் தெரியுமா
என என் நண்பர்கள்
என்னிடமே சொல்லும்
போதுதான் எனக்குத்
தெரிந்தது
எத்தனை பேருக்குக்
கிடைக்காத தந்தை
எனக்கு மட்டும் என...


கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?
---------
சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைபயில
சொல்லிக்கொடுத்த
அப்பா
என் கரம் பிடித்து
நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..?லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறும் அப்பா
இன்று நான்
தடுமாறிய போது
பதறாமல் இருக்கிறார்
மீளா துயிலில்..
.


அம்மா செல்லமா
அப்பா செல்லமா
என கேட்டபோதெல்லாம்
பெருமையாகச் சொல்லி
இருக்கிறேன்
அம்மா செல்லமான
அப்பா செல்லம் என
இன்று
அப்பா சென்ற பின்னர்
நான் யார் செல்லம்..?எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
எனச் சொன்னாலும்
அப்பாவை போல்
யார் இருக்க முடியும்..?சொல்லிக்
கொடுத்ததில்லை
திட்டியதும் இல்லை
இல்லை என்றும்
சொன்னதுமில்லை
வேண்டாம் எனக்
கூறியதும் இல்லை
இருந்தும் ஏதோ
ஒன்றினால்
கட்டுப்படுத்தியது
அப்பாவின் அன்பு


நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் இல்லை..

அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
இல்லாமலும் போகலாம்...


வெறும் காமமும்,கோபமும், வெறுப்பும், சண்டையும்,பகையும்,  ஆட்டமும், பாட்டமும், திமிறும், அகந்தையுமா வாழ்கை? 


அன்பை தருவதும் பெறுவதும்தான்  அது.

18 comments:

அஹமது இர்ஷாத் சொன்னது…

அப்பாவை பற்றின கவிதை அருமை.

அதிலும்.

//கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..//
சூப்பர்..

யூர்கன் க்ருகியர் சொன்னது…

கடைசி வரை படிக்க முடியவில்லை
கண்களில் கண்ணீர்

கக்கு - மாணிக்கம் சொன்னது…

அஹமது இர்ஷாத் கூறியது...
//அப்பாவை பற்றின கவிதை அருமை.//வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இர்ஷாத்

அவைகள் கவிதைகள் இல்லை.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//கடைசி வரை படிக்க முடியவில்லை
கண்களில் கண்ணீர் //

யூர்கன் கூறியது.நன்றி மாப்ள.

வேலன். சொன்னது…

ம்...மாம்ஸ்் சான்ஸே இல்லே..பிளாக்கில் டெம்ப்ளேட்் டிசைன் தூள் கிளப்புகின்றீர்கள்...பதிவும் அருமை..வாழ்க வளமுடன்,வேலன்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

டெம்ப்ளேட் தூள் கிளப்புவது பெரிய வேலையா?
எல்லாம் தான் ரெடி மேடா வந்து விட்டதே!

நன்றி மாப்ள.

சசிகுமார் சொன்னது…

சூப்பரா இருக்கு சார்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

www.bogy.in சொன்னது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Engineering சொன்னது…

நேரடியாக காட்ட முடியாத அப்பா பாசம்....
அதற்காக கண்டிப்பான அப்பா என்று அர்த்தம் இல்லை.........

அருமையான எல்லையில்லா பாசம்
(பதிவு.......... )

தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்......

rajendran சொன்னது…

nenjam niraindhadhu,aanandha kanneey valindhadhu.

Riyas சொன்னது…

Brother... Superb

Riyas

கக்கு - மாணிக்கம் சொன்னது…

சசிகுமார்,
எஞ்சினியர் சக்திவேல்,
www.bogy.in,
ராஜேந்திரன்
மற்றும் ரியாஸ்.
தொடர்ந்து வாருங்கள்.தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே!

பார்வையாளன் சொன்னது…

இனிய பதிவு.... உள்ளம் தொடும், உணர்ச்சிகரமான வரிகள்...

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கண்மணி/kanmani சொன்னது…

ஆஹா எத்தனை புரிதல்
அன்பில் அம்மாவை முன் நிறுத்திப் பின் தங்கும் அப்பா
அருமை

கண்மணி/kanmani சொன்னது…

அப்பாவின் அருமை அவரின் இழப்பிற்குப் பிற்கே புரிகிறது

கக்கு - மாணிக்கம் சொன்னது…

உண்மைதான். நிழலின் அருமை வெய்யிலில் தானே தெரியும்!
இல்லாதபோதுதான் அவற்றின் அருமை நம்மை ஏங்க வைக்கிறது
அதுவரை நம்மை, நம் புத்தியை மறைத்து திரைபோட்டு வைப்பது எது?
திமிறா, அகந்தையா அல்லது அறியாமையா? இவை எல்லாம்தானா?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

எம்.ஏ.சுசீலா சொன்னது…

அன்புடையீர்,
வணக்கம்.
தங்கள் அப்பா இதயத்தை நெகிழ்த்திவிட்டது நிஜம்.குறிப்பாக இறுதிப் பகுதியின் முத்தாய்ப்பு படைப்புக்குக் கூடுதல் கனம் சேர்க்கிறது.
வலை அமைப்பையே வேறு வகையாக மாற்றி அசத்திவிட்டீர்கள்.
ஆனால் பின்னணியின் வண்ணத் தாக்கம் சில சொற்களைப் படிக்க இயலாமல் செய்து விடுகிறது.முடிந்தால் இலேசான வண்ணத்துக்கு மாற்றினால் எழுத்துக்கள் தெளிவாய்த் தென்பட வழி ஏற்படும் .இது ஒரு சின்ன ஆலோசனை மட்டும்தான்.
நன்றி.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக