பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், மார்ச் 22

என் வீட்டு காரருக்கு பில்டர் காப்பின்னா உசிரு!






நாடாளுமன்ற தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் அதே தேர்தல் தேர்ந்தெடுப்பு முறை இல்லாமல் வேறு வழியில் அங்கே சென்று அமர்வது என்பது என்னவகையான ஆட்சிமுறை? யாராவது சொல்லுங்களேன். நாட்டு மக்களின் எண்ணங்களுக்கும் எதிபார்புக்களுக்கும் எதிராகவே இவர்கள் செயல் படுகின்றனர். சென்ற முறை பார்லிமென்ட் தேர்தலில் மயிலாடுதுறையில் நின்று மண்ணை தின்றவர் ராஜீவின் நண்பர் மணி சங்கர் அய்யர்







அவரை மீண்டும் பார்லிமெண்டுக்கு கொண்டுவந்துள்ளது நாடாளும் காங்கிரஸ் கட்சி. இவர் M.P.  ஆக இருந்து மயிலாடுதுறை தொகுதிக்கு என்ன செய்து விட்டார் என்பது அவருக்கு வாக்களித்தவர்களுக்கு தெரியும்.தொகுதிக்கு இவரால் ஒன்றும் பலனில்லை என்ற கோபத்திலேதான் மக்கள் இவரை நிராகரித்தனர். இப்படி இருக்க, இவரை மீண்டும் பார்லிமெண்டின் கொள்ளை புறமாக உள்ளே கொண்டுவந்துவிட்டனர் .என்ன ஜனநாயகமோ என்ன மக்களாட்சியோ!
கலைவல்லுனர்கள்,கல்வியாளர்கள் மற்றும் துறை சார் வல்லுனர்களுக்கேன்ற சிறப்பாக உள்ள நியமன M.P.  இடங்களுக்கு தேர்தெடுக்கும் யுக்தியில் இவரை தேர்ந்தெடுகிறார்கள் காங்கிரஸ் காரர்கள். மேல் கூறிய எந்த வகை தகுதியாவது  அண்ணாரிடம் இருக்கிறதா என்ற யாராவது சொலுங்கள். இல்லை இவர் பதவியில் இருந்தபோதுதான் என்ன சாதித்தார் என்றாவது சொல்லுங்கள்.

அவரிடம் உள்ள சிலதகுதிகள் முக்கியமானது, காங்கிரஸ் தலைமையினை துதிபாட அவரை மிஞ்ச ஆள் இல்லை. படு பயங்கரமாக ஜால்ரா அடிப்பார். நேரு, இந்திரா, ராஜீவ் ,சோனியா மற்றும் ராகுல் என்று தண்டோரா அடிப்பதில் மிக கெட்டிக்காரர்.இந்த விஷயத்தில் கட்ச்காரர்களே இவர்மீது பொறாமை படுவார்களாம்.இன்னுமொரு தகுதி உள்ளது. டேராடூனில் ராஜீவுடன் பள்ளிக்கூடத்தில் படித்துல்லாராம் . இவைகளை விட மிக அருமையான தலையாய தகுதி ஒன்றுள்ளது. 

மணிசங்கர் அய்யர் வீட்டின் பில்டர் காப்பிக்கு ராஜீவ் அடிமையாம்.அதுசரி
இவரது வலைத்தளம் பார்க்க படு சுவாரஸ்யமாக இருக்கும்.ஊரில் உள்ள கட்சிகளின் கலர்களை எல்லாம் வாரி Template  போடடுவைத்துள்ளார்.சென்றுதான் பாருங்களேன்









18 comments:

யூர்கன் க்ருகியர் சொன்னது…

//நாட்டு மக்களின் எண்ணங்களுக்கும் எதிபார்புக்களுக்கும் எதிராகவே இவர்கள் செயல் படுகின்றனர்.//
நாட்டு மக்களுக்கு பெரிதாய் என்ன எதிர்பார்ப்பு இருக்கபோகிறது?
இலவச தொலைகாட்சி, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி அட... மீறி போனா ரெண்டு ஏக்கரு நிலம்.
நாடு நாசமாய் போனதன் காரணம் ஜால்ரா மணி மாதிரியான அரசியல்வாதிகள் அல்ல ...நாசமாய் போகின்ற மக்களும் தான்!!

யூர்கன் க்ருகியர் சொன்னது…

//காங்கிரஸ் தலைமையினை துதிபாட அவரை மிஞ்ச ஆள் இல்லை. படு பயங்கரமாக ஜால்ரா அடிப்பார்//

டங்குவாலுவை விடவா ???

வேலன். சொன்னது…

ஏம்மா...ஆட்டோ ரெடிபண்ணு...முதலில் சென்னை அங்கிருந்து புனா...மிச்சத்தை வந்து பேசிக்கலாம்....வாழ்க வளமுட்ன்,வேலன்.

Engineering சொன்னது…

//நாடாளுமன்ற தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் அதே தேர்தல் தேர்ந்தெடுப்பு முறை இல்லாமல் வேறு வழியில் அங்கெ சென்று அமர்வது என்பது என்னவகையான ஆட்சிமுறை?//

இதெல்லாம் அரசியல்லில சகஜம் ............

பொன் மாலை பொழுது சொன்னது…

ஓரளவு ஒழுங்காய் இருந்தவர்களையும் யார் கெடுத்தது?
அந்த டங்குவாலுவே காண்டாகிவிடுமாம் நம்ம அய்யரிடம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாப்ள!

பொன் மாலை பொழுது சொன்னது…

வேலன் மாப்ள, நீங்க ஆட்டோல ச்ஹென்னை வர்றது வேஸ்ட். வேண்டுமென்றால் பிளைட் பிடித்து என்னிடம் வாருங்க, புனே போனிங்கன்ன நிலைமை இன்னமும் மோசமாகிவிடும்.
அங்கு ஒரு கூட்டமே காத்திட்டு இருக்கு.அதுல புதுசு புதுசா ஆளுங்க வேற எல்லாம் கில்லாடி புள்ளங்க போவாதீங்க

பொன் மாலை பொழுது சொன்னது…

அய்யா என்ஜீனியர் தம்பி உங்களுக்கு யூர்கன் இன்னமும் சரியா சொல்லிதரல போல.

ராஜ நடராஜன் சொன்னது…

//நாடாளுமன்ற தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் அதே தேர்தல் தேர்ந்தெடுப்பு முறை இல்லாமல் வேறு வழியில் அங்கே சென்று அமர்வது என்பது என்னவகையான ஆட்சிமுறை?//

மணி சங்கர் யோசிக்கிறாரா?அல்லது உங்க இடுகையப் பார்த்து கவலைப்படுகிறாரா?சரியான படமா புடிச்சு போட்டிருக்கீங்க.காபி சூடாத்தான் இருக்குது.

அடைப்பானின் வார்த்தைகள் ஜனநாயக சோரம் என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள்.

பொன் மாலை பொழுது சொன்னது…

வாருங்கள் அன்பரே! எப்படி குவைத்?
அதுசரி,
// மணி சங்கர் யோசிக்கிறாரா?அல்லது உங்க இடுகையப் பார்த்து கவலைப்படுகிறாரா?சரியான படமா புடிச்சு போட்டிருக்கீங்க
.காபி சூடாத்தான் இருக்குது.//
-------------------------ராஜ நடராஜன் சொன்னது.

உங்களுக்கும் நக்கல் ரொம்ப ஜாஸ்திதான் போல.என் இடுகையை பார்த்து அவர் யோசிக்கவோ கவலை படவோ செய்ய எண்ணி தேர்ந்தெடுத்து போட்ட படமல்ல. அது அப்படியே அமைந்துவிட்டது. காப்பி சூடாக இருந்தால் தானே நல்லா இருக்கும். தெரிந்துதான்
'நகைச்சுவை' தலைப்பில் வெளியிட்டேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

pichaikaaran சொன்னது…

இப்பத்தான் பார்தேனுங்கனா ,,, தேன் நடைல, தெளிவா பேசறீங்க... நன்றி

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

/தொகுதிக்கு இவரால் ஒன்றும் பலனில்லை என்ற கோபத்திலேதான்.../

மணிசங்கர் ஐயர் மட்டும் தானா? தொகுதிக்கு நல்லது செய்த, அல்லது செய்துவரும் ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினரையோ, கஞ்சாக் கருப்பு சுருக்கமாகச் சொல்வது போல சமஉ, அட தெல்லாம் கூட வேண்டாம், ஒரு வார்டு கவுன்சிலரைக் காண்பித்து விடுங்கள், பார்க்கலாம்!

மன்மோகன் சிங் மட்டும் மக்களுடைய பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு செயல்படுகிறவர் மாதிரித் தோன்றுகிறதா?

இந்தத் தேர்தல் முறையை வைத்துக் கொண்டு, நல்ல பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க முடியாது! காமெடிப் பீஸ்களை மட்டுமே உர்வாக்க முடியும்!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

வெள்ளையர்களிடம் சுதந்திரம் வாங்கிவிட்டோம்.. ஆனால் .. காங்கிரஸ்காரர்களிடம் இருந்து எப்போது?

பனித்துளி சங்கர் சொன்னது…

//காங்கிரஸ் தலைமையினை துதிபாட அவரை மிஞ்ச ஆள் இல்லை. படு பயங்கரமாக ஜால்ரா அடிப்பார்//

என்ன பண்ணாலாம் இதற்கு ஏதாவது பண்னியே ஆகணும் !

பொன் மாலை பொழுது சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பொன் மாலை பொழுது சொன்னது…

//இப்பத்தான் பார்தேனுங்கனா ,,,
தேன் நடைல,
தெளிவா பேசறீங்க... நன்றி//

பிச்சைக்காரன் (இதென்ன பெயர்!? )


எனக்கு அப்படி தோன்றவில்லை. எல்லோரையும் போலவே நானும் இங்கு உளறி,கிறுக்கிக்கொண்டு இருக்கிறேன்
அவ்வளவுதான்.வருகைக்கு நன்றி மீண்டும் வரவும் .

பொன் மாலை பொழுது சொன்னது…

//இந்தத் தேர்தல் முறையை வைத்துக் கொண்டு, நல்ல பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க முடியாது! காமெடிப் பீஸ்களை மட்டுமே உர்வாக்க முடியும்!//

கிருஷ்ண மூர்த்தி சொன்னது



அதைதானே ஒவ்வொரு தேர்தலின் போதும் செய்துவருகிறோம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பொன் மாலை பொழுது சொன்னது…

//வெள்ளையர்களிடம் சுதந்திரம் வாங்கிவிட்டோம்.. ஆனால் .. காங்கிரஸ்காரர்களிடம் இருந்து எப்போது?//

பட்டா பட்டி சொன்னது.



உண்மையில் உங்களுக்கு இது போன்ற நம்பிக்கைகள் உண்டா என்ன?

வெள்ளை போனால் கருப்பு வரும், கருப்பு போனால் சிவப்பு வரும்.சிவப்பு போனால் பச்சை வரும்,

பச்சை போனால் நீலம்.................... இப்படி இவை வெறும் நிறங்களின் மாற்றமே அன்றி வேறு ஒன்றும் மாறுவதில்லை எல்லோருக்கும் ஒரே சித்தாந்தமே. அதில் வேறுபாடு என்பதெல்லாம் ........சுத்த பம்மாத்து தல!

பொன் மாலை பொழுது சொன்னது…

//என்ன பண்ணாலாம் இதற்கு ஏதாவது பண்னியே ஆகணும் !//

பனித்துளி சங்கர் சொன்னது.



என்ன பண்ணலாம்? "ஜால்ரா நம்பர் ஒன் "

டி.வி பாணியில் போட்டி ஆரம்பிக்கலாமா?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சங்கர்
மீண்டும் வருக

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக