சாமியின் மன அலைகள் - Dr.Palaniyappan Kandaswamy
டாக்டர் . பழனியப்பன் கந்தஸ்வாமி அவர்களின் பதிவுக்கு பின்னூட்டமாக இட்ட என் உணர்வுகளை இங்கே தந்துள்ளேன்.
// நமது நாட்டில் வருடந்தோறும் படித்தவர்கள் அதிகமாகிக் கொண்டு வருகிறார்கள். அதே நேரத்தில் கோயில்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது. படித்தவர்களின் கடவுள் நம்பிக்கை அதிகமாயிருக்கிறது என்று சொல்லலாம் அல்லவா?//
Dr.P.Kandaswamy.
Dr.P.Kandaswamy.
உண்மைதான், அதேசமயம் வித விதமான வகை வகையான குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறதே ! ஆண்களுக்கு ஈடாக பெண்களும் இதற்க்கு சளைத்தவர்கள் அல்ல என்ற கால கட்டத்தில் தானே இருக்கிறோம்?
படித்தவர்கள் அதிகமாகி விட்டனர், இது வெறும் எண்ணிக்கையில்தான்,புத்தி சாலிகள் இல்லை.அறிவாளிகள் இல்லை.ஆக்க பூர்வமானவர்கள் இல்லை
கோயில்கள் அல்லது வழிபாட்டுத்தலங்கள் (இதுதான் பொருத்தமாக இருக்கிறது)அதிகமாகி விட்டன.ஆனால் தனி மனித நேர்மையும் , நற்குணங்களும், பிறர் நலமும் காக்கும் பெரிய மனதும் வழக்கொழிதலவா போய்விட்டது!
எம்மதமாயினும் எந்த தெய்வமாயினும் அதில் நம்பிக்கை கொண்டோர் அதிகம் என்றால் நாம் எவருமே இங்கே இந்த கருத்துக்களை பரிமாற அவசியமே இருந்திருக்காதே!
கடவுள் நம்பிக்கையில் "எதுவும் செய்யலாம் " என்ற எண்ணம் எங்கும் எல்லோருக்கும் பரவி, விரவி நிற்கிறது.
இல்லையென்றால் பிரேமானந்தா பொருக்கி ஜெயிலில் இருந்து வெளியில் வரும்போது அவன் காலில் விழுந்து ஏன் வணங்க்கின்றனர் பெண்கள்?
"There's probably no God"
The posters could run from January 2010
'No God' slogans for city's buses-London
------------------------------------------------------
..........Max Well's Equations
காஞ்சி தேவநாதன் கோவில் குருக்கள் கடவுள் ' வாழும் 'கர்ப்ப கிரகத்தில்' தான் கலவி கலையை 'சுவாமிக்கு' நடத்திக்காட்டுவான்.
நித்தியாவும் சினிமாகாரியும் புணர்ந்து கொள்வதை சன் டி.வி. யும் ,நக்கீரனும் காட்டி கல்லா கட்டும் போது தான் தெரிகிறதா அந்த பன்னாடை வெறும் மனுஷப்பயல் என்று ? அதற்க்கு பத்து இருபது வருடங்களுக்கு முன்னர் நம் புத்தி பீ தின்னவா போயிருந்தது? அவன் தடவி விட்டால் நோய்கள் குணமாகி விடுமாம். பின் என்ன மயித்துக்கு டாக்டருக்கு படிக்கணும்? ஏன் ஊரெல்லாம் ஆஸ்பதிரி மயமாக இருக்கு?
கிருஸ்துவ பாதிரிமார்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல.காலித்தனங்கள் செய்து தங்களின் காம களியாட்டங்களை நடத்துகின்றனர். அநாதை இல்லம் என்ற போர்டு மாட்டிகொண்டு
எத்தனை எத்தனை சிறுவர்கள் இவர்களின் பாலியல் இச்சைகளுக்கு பலியாகின்றனர்?
எத்தனை எத்தனை சிறுவர்கள் இவர்களின் பாலியல் இச்சைகளுக்கு பலியாகின்றனர்?
இஸ்லாத்தில் நம்பிக்கை உள்ளவர்களாக அறியப்பட்டவர்கள்தான் வேண்டாதவர்களை நாற்சந்தியில் தூக்கில் தொங்க விடுகின்றனர்,ஆட்டை கறிக்கு அறுப்பது போல மனிதர்களை குருதி கொப்பளிக்க அறுக்கின்றனர். குண்டு வெடிப்புகளுக்கு 'தாங்களே ' என்று மார் தட்டிகொல்கின்றனர்.
மதமும், கடவுள் நம்பிக்கையும் இவர்கள் எல்லோரின் வக்கிரமான செயல் களுக்கும், கொடுங்கோல் அராஜகத்துக்கும் .பணம் பண்ணவும் ஒரு "சாய்மானம் "
இந்த "சாய்மானத்தில்"சாய்த்து கொண்டு இவர்கள் என்ன வேணுமானாலும் செய்யலாம் என்றால் அந்த" சாய்மானம் "
உடைத்தெறிந்து போக வேண்டாமா? மனிதர்கள் மனிதர்களாக வாழவே இந்த மதம், கடவுள் நம்பிக்கை என்றால் அந்த கடவுளும் அதன் நம்பிக்கையும் நாசமாய் போகட்டும்!
18 comments:
உங்களுடைய கருத்துக்களுக்கு தலைவணங்க்கிறேன் மாணிக்கம்,
தனி மனித குணமேம்பாட்டுக்கு உதவாத எந்த இறை நம்பிக்கையும் போலியானதுதான். சிந்தனைகள் தெளிவு பெற்றால்தான் மாற்றங்கள் உண்டாகும்.
அந்த வகையில் என்னுடைய பதிவு கருத்து ஊக்கியாக இருந்த்தில் மகிழ்ச்சியே. "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு" என்று அண்ணா சொன்ன வரிகளை நினைவு கொள்வோம்.
நச் பதிவு....
\\மனிதர்கள் மனிதர்களாக வாழவே மதம், கடவுள் நம்பிக்கை என்றால் அந்த கடவுளும் அதன் நம்பிக்கையும் நாசமாய் போகட்டும்!\\
இந்த வரிகளில் எதோ தவறு இருக்கிறதுஎன்று நினைக்கிறேன். நீங்கள் சொல்ல நினைத்தது இது தானா...
ஒவ்வொரு வரியும் சாட்டையடி
மனித இனம் திருந்துமா?
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Posters are nice! ( சிந்திக்க தூண்டுகிறது ..)
வேறு என்னத்த சொல்ல ??
!!! ஓம் ஷாந்தி ஓம் !!!
என்ன ஆச்சு....எல்லோருக்கும்..? ஏன் டென்ஷன் ஆகின்றார்கள்....யாரப்பா அங்கே...கதவை திறங்கள் காற்று வரட்டும்...டி.வி.யை போடுங்கள் மனம் அமைதிஅடையட்டும்...வாழ்க வளமுடன்...ஒம்...சாந்தி..ஒம்.....வேலன்.
மனிதர்கள் மனிதர்களாக வாழவே இந்த மதம், கடவுள் நம்பிக்கை என்றால் அந்த கடவுளும் அதன் நம்பிக்கையும் நாசமாய் போகட்டும்!
எல்லார் புத்தியிலும் உறைக்கும்படி சொன்னீங்க! அற்ப்புதமான படைப்பு.
//அந்த வகையில் என்னுடைய பதிவு கருத்து ஊக்கியாக இருந்த்தில் மகிழ்ச்சியே. //
Dr.P.Kandaswamy
உண்மைதான் .உங்கள் பதிவுக்கு பதிலாகவே எழுத தலை பட்டேன்.
உங்கள் பதிவிற்கு பின்னூட்டம் இட்டதைவிட இங்கு சற்று உஷ்ணத்துடன் எழுதயுள்ளேன்.
அது ஆதங்கத்தால் வந்த சூடு. அதனால் எவருக்கும் தீமை இல்லை.
ஆக்கமும் ஊக்கமும் பெரியோர்கள் தருவதுதானே!
வருகைக்கும், கருத்துக்களுக்கும்,ஆதரவிற்கும் மிக்க
நன்றி சார்.
பட்டாபட்டி.. சொன்னது…
நச் பதிவு....
அய்யா சாமிகளா நா ரொம்ப சின்ன புள்ள
நீங்கதான் வழி காட்டனும்.
நன்றி
ஜீவன்சிவம் சொன்னது…
\\மனிதர்கள் மனிதர்களாக வாழவே மதம், கடவுள் நம்பிக்கை என்றால் அந்த கடவுளும் அதன் நம்பிக்கையும் நாசமாய் போகட்டும்!\\
இந்த வரிகளில் எதோ தவறு இருக்கிறதுஎன்று நினைக்கிறேன். நீங்கள் சொல்ல நினைத்தது இது தானா..//
சரிதான்.
அது எழுத்துப்பிழைதான்.உடனே சரிசெய்துவிட்டேன்.
உடைத்தெறிந்து போக வேண்டாமா? மனிதர்கள் மனிதர்களாக வாழவே இந்த மதம், கடவுள் நம்பிக்கை என்றால் அந்த கடவுளும் அதன் நம்பிக்கையும் நாசமாய் போகட்டும்!
வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வர வேண்டுகிறேன்.
ஜிஎஸ்ஆர் சொன்னது…
//ஒவ்வொரு வரியும் சாட்டையடி
மனித இனம் திருந்துமா?//
நாம் இங்கு எழுதுவது just a sharing அவ்வளவுதான்.நாம் இங்கு எதையும் பிரட்டி போட போட இயலாது.
நாம் யார் பிறரை திருத்த??
வெறும் பொழுது போக்காக இல்லாமல் இடையில் இது போன்ற சிந்தனைகள் இருந்தால் ஒன்றும் தப்பில்லை அல்லவா.
வருகைக்கு நன்றி. தொடர்ந்து வர வேண்டுகிறேன்.
யூர்கன் க்ருகியர் சொன்னது…
Posters are nice! ( சிந்திக்க தூண்டுகிறது ..)
வேறு என்னத்த சொல்ல ??
!!! ஓம் ஷாந்தி ஓம் !!!
மாப்ள நீ கூட கிண்டல் அடிக்காத.அந்த 'பச்சை கொயந்தய கொஞ்சம் பாத்துக்கோ'
வருகைக்கு நன்றி
//என்ன ஆச்சு....எல்லோருக்கும்..? ஏன் டென்ஷன்//
வேலன்.
கதவ சரியா தெருக்காம காத்தும் வராம ..ஒரே புழுக்கம் அத்தான்.....
வருகைக்கு நன்றி மாப்ஸ்.
பேரா முக்கியம் சொன்னது…
//மனிதர்கள் மனிதர்களாக வாழவே இந்த மதம், கடவுள் நம்பிக்கை என்றால் அந்த கடவுளும் அதன் நம்பிக்கையும் நாசமாய் போகட்டும்!
எல்லார் புத்தியிலும் உறைக்கும்படி சொன்னீங்க! அற்ப்புதமான படைப்பு.//
அதெல்லாம் சரிதான். ஒரு பேரு கூடவா புனே ல கிடக்காம பூடிசீ ??
என்னையா யூர்கனு நீ கூட இருக்கும் போதா நம்ம ஆளுவ இப்படி இருக்கணும் ?
சீக்கிரம் ஒரு நல்ல பேர இவருக்கு வையி கண்ணு.
குச்சி
குடைசல்
காடன் பட்ட்ஸ்
அரிப்பு
இந்த மாதிரி.OK வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, மீண்டும் வருக
இங்கே மதங்கள், சாமியார்கள் என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக, அரசியல் கட்சிகள், தலைவர்கள், கழகங்கள் இப்படி எதை வைத்து வேண்டுமானாலும் பாருங்கள்!
இதே கோளாறுகள், இதை விட விகாரமாக அங்கே இளித்துக் கொண்டு முன்னால் நிற்பதைப் பார்க்கலாம்!
ஆக, தவறு என்பது நம்பிக்கை என்பதில் இல்லை! நம்பிக்கை என்ற பெயரில், சோம்பேறியாகவே இருந்துவிடுகிற இயல்பில் தான் இருக்கிறது!
மதங்கள், ஒரு கால கட்டம் வரை உபயோகமாக இருந்தன என்பது வரை உண்மை!
கோளாறுகள், களையப் படவேண்டிய பார்த்தீனியச் செடிகள் வேறு இடங்களில் இருக்கின்றன!
//நித்தியாவும் சினிமாகாரியும் புணர்ந்து கொள்வதை சன் டி.வி. யும் ,நக்கீரனும் காட்டி கல்லா கட்டும் போது தான் தெரிகிறதா அந்த பன்னாடை வெறும் மனுஷப்பயல் என்று ? அதற்க்கு பத்து இருபது வருடங்களுக்கு முன்னர் நம் புத்தி பீ தின்னவா போயிருந்தது? அவன் தடவி விட்டால் நோய்கள் குணமாகி விடுமாம். பின் என்ன மயித்துக்கு டாக்டருக்கு படிக்கணும்? ஏன் ஊரெல்லாம் ஆஸ்பதிரி மயமாக இருக்கு?//
மிக அருமையாக சொன்னீர்கள். நான் உங்களது எழுத்துக்களை வாசித்து வருகிறேன். நன்றாக உள்ளது. (Jeevendran எனும் பெயரில் உங்களுக்கு தமிளிஷில் வாக்களிப்பது அடியேன்தான்).தொடரட்டும் உங்கள் பணி
//இங்கே மதங்கள், சாமியார்கள் என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக, அரசியல் கட்சிகள், தலைவர்கள், கழகங்கள் இப்படி எதை வைத்து வேண்டுமானாலும் பாருங்கள்!//
//கோளாறுகள், களையப் படவேண்டிய பார்த்தீனியச் செடிகள் வேறு இடங்களில் இருக்கின்றன!//
கிருஷ்ணமூர்த்தி சொன்னது
நீங்கள் சொல்வதில் பாதி மட்டுமே உண்மை. இதை சரியாக சொல்ல வேண்டுமென்றால்
// இங்கே மதங்கள்,சாமியார்கள்,அரசியல் கட்சிகள்,தொழில் அதிபர்கள்,தலைவர்கள்,கழகங்கள்,சினிமாகாரர்கள் //
இப்படித்தான் வரிசை வரும்.
நடப்பில், மேல உள்ள அணைத்து பிரிவினரும் இணைந்தே செயல் படுவது கண்கூடு.
There is always an invisible united link is prevailing among those group which is common now a days.
மதங்கள்
சாமியார்கள்/ போதகர்கள்
தொழில் அதிபர்கள்
தலைவர்கள்
அரசியலார்கள்
சினிமா காரர்கள்
பொதுமக்கள் (பெண்கள் முதலிடம்)
இப்படித்தான் அமைகிறது.
தலைவர்கள், அரசியல்வாதிகள் என்று சொல்லிவிடுவதால் கழகங்கள் அதில் வந்து விடுகின்ற.
"நமது ஆட்கள்" என்ற நிலைவந்துவிட்டால் விட்டு கொடுக்க தோன்றும். நியாயம் இருக்காது. அதுதான் நடந்து கொண்டும் இருக்கிறது.
//பார்தீனியச்செடிகள்// எங்கும் உள்ளது என்றுதான் சொல்லவந்தேன்.
//மிக அருமையாக சொன்னீர்கள். நான் உங்களது எழுத்துக்களை வாசித்து வருகிறேன். நன்றாக உள்ளது//
--ஆராய்வு கூறியது.
மிக்க நன்றி தாங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும்,
வோட்டு போடுபவர்களை நான் தினமும் பார்த்து வருகிறேன்.
உங்கள் பெயரையும் எப்போதும் அறிவேன். மிக்க நன்றி அன்பரே.
தொடர்ந்து வர விழைகின்றேன் நன்றி .
கருத்துரையிடுக