பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, மார்ச் 5

மேலும் ஒரு ஜோடி சவங்கள்:


/ஒரே சவத்தை எத்தனை நாளைக்கி கட்டி எளவெடுக்கறது? //
/அய்யா பதிவர்மாருங்களே,

நித்யானந்தத்தை கட்டி அழுதது போறுமையா! வேற ஒண்ணும் காத்துக்கிட்டிருக்கையா. அதை மறந்துடாதீங்க? அந்தப்பக்கமும் போலாங்கையா! //

                                             Dr.Palaniappan Kandaswamy
சார், 

நான் போய்விட்டேன்.

இது எப்படி இவர்களுக்கு மிக எளிதாக முடிகிறது?எப்படி இது சாத்தியம் ??நண்பர் ஒருவர் இங்கு சென்னையில், தஞ்சாவூர் படங்கள் செய்வதில் திறமையானவர், ஒரு நாள் அவரின் வீட்டிற்கு செல்ல நேர்ந்தது.கணவன் மனைவியாக சிம்மாசனத்தில் அமர்ந்த இவர்களின் படத்தை மாதிரியாக  கொண்டு இந்த கிழட்டு தம்பதிகளின் தஞ்சாவூர் படம் ஒன்றை தயார் செய்யும் வேளையில் இருந்தார்.

வியப்பும் ஆச்சரியமும் மேலிட, " இது என்ன புது கூத்து ஆரம்பித்து வைகிறீர்கள்" என்று கிண்டலாக அவரிடம் கேட்டேன். " கூத்து முன்னரே ஆரம்பித்து விட்டதே, நாம் என்ன புதிதாக ஆரம்பிப்பது? " என்றார் 
சிரித்துக்கொண்டே.

தஞ்சாவூர் படம் வரைபவர்கள் தெய்வ உருவங்கள் அன்றி வேறு ஒன்றையும் வரைய மாட்டார்கள் என்பது ஒரு எழுதாத சட்டம்


 என்றார்.யாரோ ஒரு "பக்கதர் " இந்த தம்பதிகளின் படத்தை கொடுத்து,

 " இவர் கல்கி பகவான் " என்று அறிமுகம் செய்து அளந்து விட்டு இவர்களின் படத்தை தஞ்சாவூர் பாணியில் வரைந்து தம் வீட்டில் மாட்டிக்கொள்ள ஆசை என்ற கதையையும் சொன்னார்.

" நீங்கள் என்ன சொன்னிர்கள் ?" என்று நான் வினவ, "நாமெல்லாம் சொல்லி புரிந்து கொள்ளும் "ஜாதிகள்" இல்லை அவர்கள் " மேலும் "என்னிடம் வந்த வேலை இது அவ்வளவுதான் என்ன செய்யலாம் " என்று பதில் அளித்தார். 

எனக்கு எரிச்சலும் கோபமும் மட்டுமே வந்தது. வந்து என்ன பயன்?.ஆனால் இன்று கல்கி பகவான் தம்பதிகள் சிரிப்பாய் சிரிகின்றன்ர். வீடியோ ஆதாரங்கள் நிறைய வலைகளில் போட்டு வைத்துள்ளனர். அதானால் மீண்டும் அவைகளை இங்கு இடவில்லை.“கல்கி” ஆசிரமத்தில் செக்ஸ் லீலையா? போதை மருந்து
 கொடுத்து பெண்களை மயக்குவதாக புகார்.

ஐதராபாத், மார்ச். 3-

ஆந்திர மாநிலம் நெகமத்தில் கல்கி பகவான் ஆசிரமம் மற்றும் கோவில் உள்ளது. விஜயகுமார் என்ற எல்.ஐ.சி. ஏஜெண்டு சாமியாராக மாறி இந்த ஆசிரமத்தை அமைத்தார். தனது பெயரை கல்கி பகவான் என்று மாற்றிக் கொண்ட அவர் ஆசிரமத்துக்கும் கல்கி ஆசிரமம் என்று பெயர் சூட்டினார்.

தமிழ்நாடு, கர்நாடகா, உள்பட பல்வேறு மாநிலங்களிலும் கல்கி பகவானுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர்.
பிரபல தொழில் அதிபர்கள், உயர் பதவிகளில் இருப்பவர்கள், கம்ப்யூட்டர் என் ஜினீயர்கள் என உயர் அந்தஸ்துகளில் இருப்பவர்கள் இதில் பக்தர்களாக இருக்கின்றனர்.

இவர்களில் பலர் ஆசிரமத்திலேயே தொடர்ந்து தங்கி இருக்கின்றனர்.
இந்த நிலையில் கல்கி ஆசிரமம் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து ஆந்திராவில் ஒளிபரப்பாகும் டி.வி.-9 செய்தி சானல் ஆசிரமத்தில் விசாரணைகளை மேற் கொண்டு சில வீடியோ காட்சிகளை ஒளிபரப்பியது.
அதில் ஆசிரமத்தில் கல்கி பகவான் முன்னிலையில் ஏராளமான ஆண்-பெண் பக்தர்கள் அரைகுறை மயக்கத்தில் இருப்பது போல உட்கார்ந்து இருக்கிறார்கள்.

ஆண்-பெண் பக்தர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தமிட்டு கொள்கின்றனர். இத்தனைக்கும் அவர்களில் பலர் இளம் ஆண்-பெண்கள். இவர்களில் சிலர் அரை குறை உடையுடன் இருக்கிறார்கள்.

இந்த காட்சிகளை ஒளி பரப்பிய டி.வி.சானல் இதற்கு மேலும் ஒளிபரப்ப முடியாத ஆபாச காட்சிகள் தங்களிடம் சிக்கி இருப்பதாகவும், அங்கு செக்ஸ் லீலைகள் நடப்பதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளது.

தனது நிருபர்கள் குழு 6 மாதமாக கஷ்டப்பட்டு இந்த படங்களை எடுத்ததாகவும் அந்த செய்தி சானல் தெரிவிக்கிறது.

ஆசிரமத்தில் கொடுக்கும் பிரசாதத்தில் பக்தர்களுக்கு போதை மருந்து கலந்து கொடுப்பதாகவும், இதை சாப்பிடும் பக்தர்கள் கிறக்கம் ஏற்பட்டு இப்படி ஆபாச செயல்களில் ஈடுபடுவ தாகவும் பக்தர்கள் சிலர் கூறி இருக்கின்றனர்.

இந்த ஆசிரமத்தில் ஏராளமான பணக்கார இளம் பெண்களும் சேர்ந்து உள்ளனர். அவர்களின் பெற்றோர்கள் அவர்களை அழைத்த போது அங்கிருந்து வரமறுத்த சம்பவங்கள் பல ஏற்கனவே நடந்தன.
இப்போது வெளியாகி இருக்கும் டி.வி. காட்சியை பார்க்கும் போது அவர்கள் ஏதோ ஒரு விவகாரத்தில் அடிமையாகி இருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.

இந்த காட்சி ஒளிபரப்பானதும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கல்கி பகவான் ஆசிரமத்தை தாக்கினார்கள். டி.வி. காட்சி தொடர்பாக கல்கி ஆசிரமத்தில் இருந்து எந்த விளக்கமும் இதுவரை வரவில்லை.

நன்றி : மாலை மலர் 

9 comments:

பட்டாபட்டி.. சொன்னது…

என்னா சார்..
நானும் கூட பயந்துட்டே இருந்தேன்..
திரும்ப இந்தியா போயி என்ன பிஸ்னஸ் பண்ணலாமுனு..?

இது நல்லாயிருக்கே..
( இவர்கள் திருந்தப் போவதில்லை.. ஆனால் நாம் ?..
அது நம்ம கையிலதானே இருக்கு சார்..)

[ எந்த வார்த்தைகளையும் நீக்கிக்கொள்ளலாம்.. உங்கள் விருப்பம் சார்..]

கக்கு - மாணிக்கம் சொன்னது…

உண்மையை சொல்லவேண்டுமென்றால்..................................

//நாமும் இதுமாதிரி ஆரம்பித்தால் என்ன //
என்ற கதியில்தான் சிந்தனை போகிறது.நாமெல்லாம் படித்து, பாடுபட்டு கிழித்து "ஒன்றுக்கும் லாயக்கில்லை "
என்று பெண்டாட்டியாக வந்தவளே மொத்தும்போது இந்த மனிதர்கள் மிக எளிதாக புத்திசாலிதனமாக இரண்டு முன்று வருடங்களில் கோடீஸ்வரர்களாக, தெய்வ அவதாரங்களாக மறு பிறப்பு எடுப்பது எனக்குள் பொறாமையை தான் உண்டாக்குகிறது.

நீங்கள் ரெடி என்று சொல்லுங்கள் என்னுடன் உள்ள சிலரை சேர்த்துக்கொண்டு இவர்களையும் மிஞ்சும் வண்ணம்
கார்பொரேட் சாமியார்களாக உலாவரலாம்

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ சொன்னது…

ஏவளவோ பண்ணிட்டோம் . இதையும் ஒரு கை பார்க்க வேண்டியதுதான் .

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//பிரபல தொழில் அதிபர்கள், உயர் பதவிகளில் இருப்பவர்கள்,
கம்ப்யூட்டர் என் ஜினீயர்கள் என உயர் அந்தஸ்துகளில் இருப்பவர்கள் இதில் பக்தர்களாக இருக்கின்றனர் //

இவர்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து அம்மணமாக தண்ணீரில் நிற்க வைத்து.
தண்ணீரில் செருப்பை நனைத்து, அதனால் அடித்தாலும் தகும்.

பட்டாபட்டி.. சொன்னது…

//
இவர்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து அம்மணமாக தண்ணீரில் நிற்க வைத்து.
தண்ணீரில் செருப்பை நனைத்து, அதனால் அடித்தாலும் தகும்.
//
அது..சூப்பர்னே..
அடிக்கும்போது .. இடுப்புக்கு கீழேனு தெளிவா சொல்லிடுங்க

Dr.P.Kandaswamy சொன்னது…

பட்டாபட்டி கூறியது,
//அது..சூப்பர்னே..
அடிக்கும்போது .. இடுப்புக்கு கீழேனு தெளிவா சொல்லிடுங்க//

ஏனுங்க, நீங்க எல்லாம் திராட்சைலெ கவாத்து செய்யற secature கத்திரின்னு ஒண்ணு பார்த்தில்லைங்களா?
http://t1.gstatic.com/images?q=tbn:p3NR4IdK1cKlCM:http://upload.wikimedia.org/wikipedia/commons/b/b1/Secateur_ouvert.jpg
இப்ப பாருங்க. இதை உபயோகப்படுத்தணுங்க

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சார்,

இனம் இனத்தோடு தான் சேரும் என்பார்கள், அதுதான் இப்போ நடந்து கொண்டிருகிறது போலும்.

அன்புடன் மலிக்கா சொன்னது…

என்னா சொன்னாலும் ஏறப்போவதில்லை காதில் என்பதுபோல் போய்கொண்டேயிருக்கும் உலகம்..

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக