பகிர்ந்து கொண்டவர்கள்!

சனி, மார்ச் 6

கோவிந்தா! கோவிந்தா!!


மீண்டும் மீண்டும் வருவோமே!!

ஒரு முன்னாள் L.I.C  ஏஜென்ட்டும் அவன் பெண்டாட்டியும் கடவுள் அவதாரங்கள் !!??

ஆசிரமம் விராட் அவதாரமாம் !!

பிசினஸ் தூள் பறக்க !!!


அம்மா பத்மாவதி பகவான் !!


பிரசாதம் பிரமாதம்!!ஷில்பா ஷெட்டி,பக்த கோடிகளில் சிலர் 


ஆசிரமம் 


சத்தியமாக இது என் வேலை இல்லை 
அப்படியே கிடைத்தது !But too late !!!சித்தூர் : 
ஆந்திராவில் சித்தூர் மாவட்டம் குப்பம் தொகுதியில் உள்ள ராமகுப்பத்தில் ‘நித்யலோகம்‘ என்ற பெயரில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புதான் கல்கி ஆசிரமம் முதன் முதலில் தொடங்கப்பட்டது. பிறகு சென்னை, பெங்களூர், சித்தூர் மாவட்டம் வரதய்யா பாளையம் மற்றும் வெளிநாடுகளிலும் ஆசிரமம் தொடங்கப்பட்டது.
வரதய்யா பாளையத்தில் அரசு மற்றும் வனத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்ரமித்து கல்கி ஆசிரமம் கட்டப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. மேலும், இந்த ஆசிரமத்தில் பக்தர்களிடம் கோடிக்கணக்கான பணம் மோசடி செய்யப்பட்டதாகவும், பெண் பக்தர்களுக்கு போதை லேகியம் வழங்கியதாகவும் விஜயவாடாவை சேர்ந்த நாராயணா என்பவர் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக, ஐதராபாத்தில் உள்ள மனித உரிமை ஆணையத்திடமும் அவர் புகார் கொடுத்தார்.
அதை விசாரித்த மனித உரிமை கமிஷன் தலைவர் நீதிபதி சுபாஷன் ரெட்டி, கல்கி ஆசிரம விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்த சித்தூர் கலெக்டர் சேஷாத்ரி, எஸ்.பி. லட்சுமி ரெட்டி, வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் போலீசார் நேற்று முன்தினம் விசாரணையை தொடங்கினர். நித்யலோகம் ஆசிரமத்தில் குப்பம் இன்ஸ்பெக்டர் அமர்நாத் செட்ரிக் தலைமையில் போலீசார் விசாரணை தொடங்கினர். ஆசிரமத்துக்கு சம்பந்தப்பட்ட சொத்து விவரங்கள், கல்கி சாமியாரின் பின்னணி குறித்து விசாரித்தனர்.
இந்த ஆசிரமத்துக்கு தொடர்புடைய 79 ஏக்கர் நிலமும், கல்கி சாமியாரின் நண்பர் சங்கர் பகவத் பெயரில் இருக்கிறது. கல்கி சாமியார் பெயரில் ஒரு ஏக்கர் நிலம் கூட இல்லை என்பதும் தெரிய வந்தது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறப்படும் நிலங்களை ராமகுப்பம் தாசில்தார் குருராஜாராவ் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். நேற்றும் 2வது நாளாக போலீசாரும், வருவாய்த் துறை அதிகாரிகளும் சோதனை நடத்தினர்.
15 comments:

knvijayan சொன்னது…

புகைப்படத்திளிருப்பது தேவ கெளட அல்ல.

Vijayan சொன்னது…

புகைப்படத்திளிருப்பது தேவ கெளட அல்ல.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

அப்படியென்றால் அகற்றி விட்டேன்
நன்றி நண்பரே!

Dr.P.Kandaswamy சொன்னது…

நல்ல தகவல்கள் மாணிக்கம் அவர்களே,
ஒன்னெஸ் கோவில் கட்டுவதற்கு பல நூறு கோடி ரூபாய்கள் ஆகியிருக்கும் போல தெரிகிறது. தேவலோக தச்சன் மயன் வந்து ஓரிரவில் கட்டித் தந்திருந்தால் தவிர இந்தக்கட்டிடம் கட்ட ஓரிரு ஆண்டுகளாவது ஆகியிருக்கும்.
அப்போது ஆந்திராவில் இந்திய அரசு இன்கம்டேக்ஸ் டிபார்ட்மென்ட் அமைக்கவில்லை என்று நினைக்கிறேன். இன்கம்டேக்ஸ் டிபார்ட்மென்ட் இருந்திருந்தால் என்ன, ஏது என்று கேட்டிருக்கமாட்டார்களா? நம்ம இன்கம்டேக்ஸ் ஆளுக என்ன சாதாரணமானவர்களா?

யூர்கன் க்ருகியர் சொன்னது…

//வரதய்யா பாளையத்தில் அரசு மற்றும் வனத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்ரமித்து கல்கி ஆசிரமம் கட்டப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.//

ஆரம்பமே ஆட்டைய போட்டதா ? ந்கோன்னியா!!

யூர்கன் க்ருகியர் சொன்னது…

//பிரசாதம் பிரமாதம்!!//

கஞ்சாதான் பிரசாதமா ???

யூர்கன் க்ருகியர் சொன்னது…

//ஒரு முன்னாள் L.I.C ஏஜென்ட்டும் அவன் பெண்டாட்டியும் கடவுள் அவதாரங்கள் !!??//


முன்னாடி L.I.C க்குதான் ஏஜென்ட்டு இப்போ கடவுளுக்கே ஏஜென்ட்டு....
இப்போ இதான் சூப்பர் ப்ராஜெக்ட்டு ,, செமையான மார்க்கெட்டு

யூர்கன் க்ருகியர் சொன்னது…

//ஷில்பா ஷெட்டி,பக்த கோடிகளில் சிலர் //
நடிகர் நடிகைகள், அரசியல்வாதிகள் அப்புறம் வார இதழ்கள்
இந்த கம்முனாட்டிகளால்தான் எவ்வளவு பிரச்சினை ?

கக்கு - மாணிக்கம் சொன்னது…

சார், தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் முதலில் நன்றி.

எனக்கு புரிந்தவரை ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசியல் வாதிகள்,அரசின் பல்வேறு துறை சார்ந்த நிர்வாக மற்றும் அதிகார மையங்கள்,பெரும் செல்வ வளம் படைத்த தெழில் அதிபர்கள்,பிரபலங்கள்,சினிமா காரர்கள்,(காரிகள்) ஆனைவரும் இந்த வகை "ஆன்மீக சக்தி" சுவாமிகள், அவதாரங்கள் இவர்களிடம் சரணாகதி அடைந்து கிடப்பதால் சட்டமும் நடை முறையும் அவர்களுக்கு இடைஞ்சலாக இருக்காது.

நீங்கள் கேட்பது நியாயம் தான், இப்போது செய்யும் துறை சார்ந்த நடவடிக்கை களை ஏன் இவர்கள் ஆரம்பத்தில் செய்வதில்லை? எல்லா இடத்திலும் எல்லா காரியங்களிலும் துறை சார்ந்த நடவடிக்கைகள் கட்டுப்பாடுகள், சட்ட அமலாக்கம் போன்றவைகள் இறுதியில் அல்லவா வருகிறது? அதுதான் ":பகவானின் " மகிமை.
இந்த விஜய் டி.வி. இந்த பகவானை இன்னமும் விட்டா பாடில்லை.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

மாப்ஸ், நீ கூட லேட்டாதான் வந்துகினுகீர, இன்னா மேட்டரு?
சரி ரொம்ப தாங்க்ஸ் பா...


சரிபா. அங்கன புனா ல நல்ல எடமா ஒரு 100 ஏக்கரு தேறுமா ன்னு பாத்து வையி கண்ணு.
தோஸ்துங்கோ நெறிய பேரு மெர்ஸலாயி கிடக்கராங்கோ. அல்லாரும் சேந்து அங்க ஒரு "ஆஸ்ரமம் "
ஆரம்பிக்கலாம் ராசா. அத்தான் இப்பவே எடத்துக்கு சொல்லிகினேன்.
Don't worry நீயி தான் கண்ணு "சுவாமி இளைய ஜெயானந்தா" இன்னா பிரிதா ??

யூர்கன் க்ருகியர் சொன்னது…

//அல்லாரும் சேந்து அங்க ஒரு "ஆஸ்ரமம் "
ஆரம்பிக்கலாம் ராசா.//

மச்சி சூப்பர் ஐடியா .

ஆரம்பம் எல்லாம் அமர்களமாதான் இருக்கும்
கடைசில ரண களமாயிடும்

டீலா நோ டீலா?

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// ஆரம்பம் எல்லாம் அமர்களமாதான் இருக்கும்
கடைசில ரண களமாயிடும் //

//டீலா நோ டீலா?//யூர்கன் க்ருகியர் கூறிய


அதுக்குள்ளார ஒரு 100 . 200 கோடி பாதிடலாமுள்ள கண்ணு.
அது போதுமே

ரோஸ்விக் சொன்னது…

வாழ்கையில இது மாதிரி ஒரு மடமாவது கட்டணும்னு ஆசையா இருக்குயா... ஃப்ரீயா எதாவது நடிகைகள் என்னோடு பங்குபோட தயாரா இருக்காங்களா??

கக்கு - மாணிக்கம் சொன்னது…

அடப்பாவி மனுஷா ? இந்த கேள்விய என்கிட்டயா கேக்கிறது? நானே ஒரு தண்ட கருமாந்திரம்.!
பொழைக்க வழி தெரியாம ப்ளாக் எழுத வந்தேன்.

ஐயோ மாப்பள யூர்கன் க்ருகியர் கொஞ்சம் இங்க வந்து இந்த கொடுமைய பாரு கண்ணு!

யூர்கன் க்ருகியர் சொன்னது…

http://cyber-mvk.blogspot.com/2010/03/blog-post_23.html

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக