பல்டி அடித்த குமுதம் போடும் பத்தினி வேஷம்
வெறும்பயலை சாமியாராக்கி "ஆன்மீக" சேவை செய்த மானம் கெட்ட குமுதம் இன்று அவன் வெறும் ஆசாபாசம் கொண்ட சராசரி மனிதன் தான் என்று தெரிந்தவுடன் பிளேட்டை மாற்றி விட்டிருக்கிறது.
கார்பரேட் கழிசடைகளா!!
மனசாட்சியே இல்லையா நீசத்தனம் கொண்டவர்களே !!
சூடு, சொரணை, மானம் இருந்தால் இனிமேல் ஒருவரும் குமுதம், விகடன் வாங்காதீர்கள். மற்ற அணைத்து இதழ்களையும் புறக்கணியுங்கள். இவைகள் எதுவும் நமக்கு தேவை இல்லாத கழிசடைகள்.
1. முதல் வேலையாக கேபிள் கனக்ஷனை பிடிங்கி எறியலாம். டிஷ் .D2H போன்ற வசதிகளை களைந்து குப்பையில் போடலாம். T.V. வேண்டும் என்று விரும்பினால் தூர்தர்ஷன் , பொதிகை இவைகள் போதும் என்ற மன நிலை வேண்டும்.
2.வார, மாத இதழ்களை நிறுத்திவிடலாம்.. அவைகள் எதுவானாலும் சரி."இது சரி ,அது வேண்டாம் " போன்ற கிறுக்குத்தனங்கள் வேண்டாம். இவைகள் யாவையும் நம்மை வைத்தே பிழைகின்றன அன்றி நமக்கு இது போன்ற பத்திரிக்கைகள் துளியும் தேவை இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.குமுதமும், மங்கையர் மலரும் ஒரே ரகங்களே. குமுதத்தில் சினிமாவும், ஆபாசமும்,கவர்ச்சியும் என்றால் கல்கி மங்கையர் மலர், சிநேகிதி போன்றவைகளால் ஆன்மீகமும், வாஸ்துவும், ராசி கற்களும்.சமையல் குறிப்புகளும்.
இவைகள் வீட்டில் இல்லை என்றால் வீடு மங்களகரமாக , அமைதியாகவே இருக்கிறது.
நான் இவைகளை வாங்குவதுமில்லை, கிடைத்தால் கூட படிப்பதுமில்லை.இந்த கழிசடைகளை நிறுத்தி இருபது வருடங்களுக்கு மேலாகிறது.
3. செய்திகளுக்கும் நடப்புகளுக்கும் என ஒரு தின சரி பத்திரிக்கையே போதுமானது.
4. ரேடியோ கேட்கும் பழக்கத்தை மீண்டும் புதுப்பிப்பது. குறிப்பாக AIR FM நிகழ்ச்சிகள் சற்று மரியாதையுடன் இருக்கின்றன.
5. அவரர்களுக்கு பிடித்த பாடல்களை MP3 ஆக மாற்றி ப்ளேயரில் கேட்பது
சாலவும் சிறந்தது. வீட்டில் வேலைகளும் தடங்கல்கள் இல்லாமல் நடக்கும்,பிடித்த பாடல்களையும் கேட்டுமகிழலாம்.
6. தெய்வ நம்பிக்கை உண்டென்றால் பழைய கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வதோடு நிறுத்திக்கொள்ளலாம்.
7. குடுபங்களில்,தொழிலில் பிரச்சினைகள் என்றால் எல்லோரும் அமர்ந்து மனம் விட்டு பேசலாம்தானே,தொட்டதெற்கெல்லாம் பூசாரி, மந்திர வாதி, சாமியார் என்று ஓடவேண்டாமே !.
இன்னம் அவரவர்களுக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள்
5 comments:
Matchi , i 'm in hurry now... naalaikku vanthu vachukkaren (vaasikkiren)..
!!
தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி உலவு!
மாப்பள , கொஞ்சம் நமக்கும் நேரம் ஒதுக்கைய்யா !!
வருகைக்கு நன்றி!
//இவைகள் யாவையும் நம்மை வைத்தே பிழைகின்றன அன்றி நமக்கு இது போன்ற பத்திரிக்கைகள் துளியும் தேவை இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.//
மிகச் சரி, இப்பத்திரிகைகள் கொஞ்சம் கூட சமுதாய நோக்கில் இயங்குவது இல்லை.
நம் தாத்தாவும் பாட்டியும் அப்படித்தானே சந்தோஷமா இருந்தாங்க
சங்கு மணி மற்றும் ரமேஷ் இவர்களுக்கு நன்றி
மீண்டும் வாருங்கள்.
கருத்துரையிடுக