பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், பிப்ரவரி 15

சிரிப்பாய் சிரித்து !!!

Hats off   C.S.அமுதன்!!




1982 களில் என்று நினைவு,சென்னை தேவி தியேட்டரில் மெல் ப்ரூக்ஸ் தயாரித்து நடித்த History of the World படம் சக்கை போடு போட்டு ஓடிகொண்டிருந்தது. படம் பயங்கர காமெடி.


அவர்கள் கிண்டல் அடிக்க எடுத்துக்கொண்டது மானிடர்களின் வரலாறும் பின்னர் தற்காலம் வரை.கற்கால மனிதர்களில் இருந்து ஆரம்பித்து வரிசையாக வந்துகொண்டிருக்கும்.பைபிள் கதைகளில் வரும் மோசஸ் மற்றும் Ten Commandments படத்தினை அதன் நிகழ்சிகளை கிண்டல் அடித்திருப்பார்கள். கடவுள் யூதர்களின் தலைவரான மோசசிற்கு உண்மையில் பதினைந்து கட்டளைகளைத்தான் தருவார். அவைகள் ஒரு கல் பலகையில் மின்னல் மூலம் பதிந்துவிடும். அதனை எடுத்துக்கொள்ள ஆணை வரும், வயதான மோசஸ் கீழே குனிந்து அந்த கட்டளைகள் பதித்த கல் பலகையினை தூக்குவார், கல்பலகையின் மேல் புறம் இருந்த முதல் ஐந்து கட்டளைகள் புட்டுக்கொண்டு கீழே விழுந்து சிதற, மோசஸ் கைகளில் மீதம் உள்ள பத்து கட்டளைகளே இருக்க
அவர்,
" Ho....... 10 Commandments " எனும் போது தியேட்டர் அதிரும்.ஜீசஸ் இடமிருந்த ஒரு சுருக்கு பையை கள்வன் ஒருவன் பிட் பாக்கெட் அடிப்பதும் நடக்கும்.ரோம சாம்ராஜிய மன்னர்களை பயங்கரமாக வாருவார்கள். அந்தபுற காவலுக்கு அவர்கள் ஆப்ரிக்க நாட்டு அலிகளை நிறைய வைத்திருப்பார்கள். அதில் ஒரு ஆண்மையான படை வீரனும் ஒருநாள் கலந்துவிட, விஷயம் மன்னருக்கு தெரிந்து அந்த ஒருவனை மட்டும் தனியாக அடையாளம் காணவேண்டி அனைவரையும் வரிசையாக நிற்கவைத்து ஒரு அரை குறை உடை அணிந்த ஆடல் அழகியினை
அவர்கள் முன்பு ஆட வைக்க, அந்த ஆட்டக்காரியோ தான் முழு "திறமையையும் " காட்டி அவர்கள் முன்பு ஆட,


அலிகள் கூட்டத்தில் கலந்து நின்ற படை வீரனின் இடுப்பின்
முன்பகுதி ஆடை மெதுவாக மேலே எழும்பிவிட, அவனை கண்டுபிடித்த வுடன் அவனை பிடிக்க மற்றவர்கள் ஓட , அவன் தாவி ஓடி மறைந்து விடும் காட்சியில் தியேட்டரே கல கலத்து விடும். தேவாலயங்களில் உள்ள கன்னிகா ஸ்தீரிகள்தொகுப்பாக நீச்சல் குளத்தின் முன் வந்து நின்று அவர்களின் உடைகளை ஒரு நொடியில் களைந்து விட்டு நீச்சல் உடையுடன் குளத்தில் குதிப்பார்கள் இதனை யாரும்எதிர் பார்க்காததால் சிரிபொலி வெடியாய் கிளம்பும்.


"தமிழ் படம்" இவைகளை மீண்டும் எனக்கு நினைவூட்டியது. Y Not Creations போடுவதிலிருந்து கடைசியில் "நடந்தால் பி பி குறையும், கொலஷ்ற்றால் குறையும்"என்று டைரக்டர் கார்ட் போடும் வரை இவர்கள் படுத்தும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஒருவரையும் பாக்கி வைக்காமல் அத்தனை பேரையும் வாருவதென்றால்....


கொஞ்சம் அல்ல நிறையவே "தில்" வேண்டும். அது நிறைய இருக்கும் போல. டெட்ரா பாகெட் கள்ளிப்பால் டப்பா பிரமாதமான ஐடியா. தமிழ் படங்களில் நாட்டாமை வேஷம் கட்டிய அத்தனை பேர்களும் இங்கே Clen Bowled.


பிடரி கழுத்து வரை தொங்கும் விக் தலை முடி, மார்பிலும் உடம்பிலும் சந்தனபூச்சு,கழுத்தில் கொத்து கொத்தாக தங்க சரடுகளும் டாலர் செயினும், கைகளில் பட்டை பட்டையாக காப்புகள், கொட்டை பாக்கு சைசில் விரல்களில் மோதிரங்கள்,வாயில் வெத்திலை குழம்பும், நெற்றியில் விபூதி சந்தன கும்கும பொட்டும், சான் அகல ஜரிகை பட்டு வெட்டியும் பீதாம்பரமும்........


இவர்கள் அதிகமாக இந்த தமிழ் பட நாட்டாமை காரர்களையே வாரி விட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் நாட்டாமை எல்லாரையும் ஊரை விட்டு தள்ளி வைத்து கடைசியில் தானும் தனி ஆளாக போய்விட்டு அதே தோரணையில் மெண்டலாகி.........


சாய்வு நாற்காலியில் இருந்து கொண்டு தனக்கு தானே தீர்ப்பு சொல்லிக்கொண்டு அமர்திருப்பது கண்டு எனக்கு "ஐயோ பாவம் " என்றுதான் இருந்தது. வில்லனின் ஆட்கள் தங்களை தாங்களே சாக அடித்து கொள்வது வயிறு புண்ணாகிவிடும் என்றால் அந்த "D" வில்லன் யார் என்று காட்டும் போது தியேட்டரே அதிரும். தங்கச்சி பட்டி ஊர்பற்றி விளக்கும் போது, என் இருக்கை முடிந்து பின்னர் அடுத்த வரிசை இருக்கை ஆரம்பிக்கும் இடத்தில் முதல் ஆளாக உட்கார்ந்திருந்த ஒருவர் தாள முடியாமல் இருக்கையிலிருந்து நழுவி அருகில் தரையில் சரிந்து விழுந்து சிரித்துக்கொண்டு கிடந்ததை பலர் வியப்பாக பார்த்தனர்.


தலையில் ஒளிவட்டம் சுழலும் இயக்குனர்கள், கொம்பு முளைத்த ஹீரோக்கள், இரத்தின கிரீடம் அணிந்த சூப்பர் ஸ்டார்கள், மெகா, சுப்ரீம், அல்டிமேட் எல்லாரையும் புஷ்ஸ்ஸ்ஸ் ....என்று ஊத்தி தள்ளி விட்டார்கள். சிரிப்பாய் சிரித்து சிரித்து கண்களில் அவ்வப்போது நீர் கோத்துக்கொண்டது உண்மை.


இவர்கள் எல்லாரும் வெறும் Media Hype மட்டுமே என்பதை துணிச்சலுடனும் கண்ணியத்துடனும் சொல்லி இருக்கிறார்கள்.
இதுவரை எந்த கொம்பனும் தங்கள் தமிழ் படங்களில் சொல்ல இயலாத ஒரு செய்தி, நிகழ் காலத்திற்கு மிக மிக இன்றி யமையாத ஒரு 
"மெசேஜ் " (கொம்பர்கள் பாஷையில்) அந்த "வில்லனால்" சொல்லப்படுவது படத்தின் High Light.


சிறப்பான சீரிய முயற்சி, நல்ல உழைப்பும் கூட தெரிகிறது. இது போன்று படங்கள் வருவது நமக்கு நல்லதுதான். சினிமா காரர்கள் எங்கு இருக்க வேண்டுமோ அங்கு இருப்பதே அவர்களுக்கும் மரியாதை. மக்களுக்கும் மதிப்பு. இதை மற்றவர்களும் உணரவேண்டும்.







13 comments:

யூர்கன் க்ருகியர் சொன்னது…

தமிழ் சினிமா உலகம் இப்போ சிரிப்பு உலகமாகி விட்டது....
இந்தமாதிரி என்னைக்கோ வர வேண்டியது இப்பதான் வந்திருக்கு ... :)

இந்த படத்தின் மேல் சில முன்னணி (?!) தமிழ் திரை நாயகர்களும் இயக்குனர்களும் காண்டில் உள்ளதாக கேள்விபட்டேன் ..அதப்பத்தி எதாவது தெரிந்தால் எடுத்து உடறது >>>!!

பொன் மாலை பொழுது சொன்னது…

Nothing doing, பேரன் தயாரித்த படத்தை பார்த்து தாத்தாவின் முகத்தில் பெருமிதம். எல்லா "தமிழ் திரைப்பட ஜாம்பவான்களும் " பேஸ் அடித்து போய் உள்ளனர் என்று கேள்வி. திருடனுக்கு தேள் கொட்டிய கதைதான் மாப்ஸ்.

டவுசர் பாண்டி சொன்னது…

எனுக்கு தெரிஞ்சி !! உங்க மாப்பு போட்ட கருத்துளியே இது தான் பெரி கருத்து
பா !! ( இன்னா இருந்தாலும் , நீ , மாம்சு இல்லியா அதாம்பா )

உனுக்கு அப்பால பதிலு குடுக்கறேன் ,

பொன் மாலை பொழுது சொன்னது…

இன்னா பா..... ஆட்டோ
புச்சாகீதே வருமா??
இன்னா பாண்டி இப்பதா வழி கெட்சிதா இங்க வர்றதுக்கு. இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல? ஆக்காங்........................

வேலன். சொன்னது…

ஆமாம் நீங்கள் டமிலிஷ்ஷலில் சமர்ப்பிக்கவில்லையா...உடனே சமர்ப்பியுங்கள்....வாழ்க வளமுடன். வேலன்.

பொன் மாலை பொழுது சொன்னது…

தமிளிஷ் இல் போட்டாச்சு மாப்ஸ்.
நன்றி

Engineering சொன்னது…

படம் ரிலீஸ் ஆட்சுணா சொல்லுங்கள்.... பார்போம்.....
வயிறு வலிக்கும் வரை......

பொன் மாலை பொழுது சொன்னது…

அய்யா சாமீ...................படம் ரிலீசாகி எல்லா இடங்களிலும் சக்கை போடு போடுகிறது.அதுசரி , நீங்க எல்லாரும் பாக்கனும்னா ஒன்னு மும்பை போகணும் ,இல்ல சென்னை வரணும். புனே யில் தமிழ் படம் திரையிடுவார்களா என்ன? திருட்டு DVD யா ? மூச். இதனை தியேட்டரில் எல்லோருடனும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று. படத்தைப்போல மற்றவர்கள் அடிக்கும் "டைமிங் கமெண்ட்ஸ்" எல்லாம் தூள்!!

யூர்கன் க்ருகியர் சொன்னது…

//படம் ரிலீஸ் ஆட்சுணா சொல்லுங்கள்.... பார்போம்.....//


யோவ். சரவணா,,

புனே வில தமிழ்படம் ரிலீஸ் ஆகி ரொம்ப நாள் ஆச்சு..
ஆபீஸ் விட்டா வீடு ,, வீட்ட விட்டா ஆபீஸ்ன்னு நல்ல புள்ளையாவே இருந்தா ஒண்ணுமே தெரியாது..
புனேவில் எங்கேங்க என்ன என்ன படம் காட்டுறாங்க ... எங்கேங்க பார் இருக்கு,, என்னவெல்லாம் கிடைக்குது ( கோயில்ல உண்ட கட்டி வாங்குறது கூட ) எல்லாத்தையும் சொல்லி தரேன்....

( முந்தா நாள் ரெண்டாயிர ரூபா கடன் கேட்டேனே ...தரவே இல்ல ..!!)

இனிமேலாவது திருந்து சரவணா !

யூர்கன் க்ருகியர் சொன்னது…

இப்போதான் உங்க ப்ளாக் ஒரளவிற்கு பாக்கறமாதிரி இருக்கு.
சூப்பர் மச்சி !!
good work done!

யூர்கன் க்ருகியர் சொன்னது…

உங்க ப்ளாக் Header Imageக்கு நீங்க வேலன் சார் கிட்ட கேட்டீங்கன்னா போடோஷப் மூலமா உங்க பேரெல்லாம் போட்டு சூப்பர் ஆக செய்ஞ்சு கொடுப்பாரு...
அப்புறம் உங்க ப்ளாக் இன்னும் கலக்கலா இருக்கும் ..

வேலன். சொன்னது…

//படம் ரிலீஸ் ஆட்சுணா சொல்லுங்கள்.... பார்போம்.....//


யோவ். சரவணா,,

புனே வில தமிழ்படம் ரிலீஸ் ஆகி ரொம்ப நாள் ஆச்சு..
ஆபீஸ் விட்டா வீடு ,, வீட்ட விட்டா ஆபீஸ்ன்னு நல்ல புள்ளையாவே இருந்தா ஒண்ணுமே தெரியாது..
புனேவில் எங்கேங்க என்ன என்ன படம் காட்டுறாங்க ... எங்கேங்க பார் இருக்கு,, என்னவெல்லாம் கிடைக்குது ( கோயில்ல உண்ட கட்டி வாங்குறது கூட ) எல்லாத்தையும் சொல்லி தரேன்....

( முந்தா நாள் ரெண்டாயிர ரூபா கடன் கேட்டேனே ...தரவே இல்ல ..!!)

இனிமேலாவது திருந்து சரவணா !//

சரவணன்சார் படம் எங்கே ஓடுகின்றது என்றுதான கேட்டார்...உண்ட கட்டி வாங்கிறது எல்லாமா கேட்டார்...//
யூர்கன் க்ருகியர் கூறியது...
இப்போதான் உங்க ப்ளாக் ஒரளவிற்கு பாக்கறமாதிரி இருக்கு.
சூப்பர் மச்சி !!
good work done!//

மாம்ஸ்க்கு மட்டும் நீண்ட.........கருத்துபோட மாப்பிள்ளைக்கு நேரம் இருக்கும். நாங்கள் இருவரும் பாவம்...இருக்கட்டும் இருக்கட்டும் ...பார்த்துக்கொள்கின்றோம்.....//
யூர்கன் க்ருகியர் கூறியது...
உங்க ப்ளாக் Header Imageக்கு நீங்க வேலன் சார் கிட்ட கேட்டீங்கன்னா போடோஷப் மூலமா உங்க பேரெல்லாம் போட்டு சூப்பர் ஆக செய்ஞ்சு கொடுப்பாரு...
அப்புறம் உங்க ப்ளாக் இன்னும் கலக்கலா இருக்கும் ..//

நீங்க இங்க வந்தீங்கனா அவருக்கு டிசைன் செய்துதருகின்றேன்...சொல்லுங்க் எப்ப நீங்க வறீங்க....?//

வாழ்க வளமுடன்.
வேலன்.

saravanan சொன்னது…

உங்களுக்கு என்னென தெரிமோ எல்லாம் சொல்லி குடுங்கள்......
கத்துகுரேன்.... உங்க தயவால்.....

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக