பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், பிப்ரவரி 22

நீங்கள் எல்லாம் யார்?
ஏன் இந்த ஆட்டம் ?  

கடந்த சில வருடங்களாகவே இந்த சினிமா காரர்கள் ஆடும் ஆட்டம் எல்லாருக்கும் எரிச்சலைத்தான் தருகிறது. இவர்கள் அப்படி தங்களிப்பற்றி என்னத்தான் நினைத்துக்கொண்டுள்ளனர்? கேமராவின் முன் நின்று நடித்துவிட்டால் என்ன மேலே  இருந்து "தேவ தூதன் " அல்லது "தேவ தூதி"?! இறங்கி வந்து விட்டதாக நினைப்பா? 


நடிகைகள் தான் கட்டும் புடவையில் கூட " பால்ஸ் " சற்று கிழிந்து விட்டால் உடனே ஓடிப்போய் தமிழக முதல்வரை சந்தித்து மீடியாக்களில் போட்டோவுடன் செய்தி. 
நடிகர்கள் தாங்கள் அணியும் பேண்ட்டில் உள்ள பட்டன் பிய்ந்து போனால் ஓடு முதல்வரிடம்!!

இவர்களுக்கெல்லாம் என்ன மனதில் நினைப்பு? 
அவருக்கு வேறு வேலைகளே இல்லையா என்ன ? இது என்ன கண்றாவி பழக்கம் இப்போது தலை விரித்து ஆடுகிறது?
ஆயிரம் ஆயிரம் பிரச்ச்சனைகளுடம் கோடிக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளையும் கழித்து வருகின்றனர். கோடி கோடியாக கல்லா கட்டி அது போதாது என்று டுபாக்கூர் கம்பெனிகளுக்கு விளம்பர படங்களில் வேஷம் கட்டி நடித்து, கருமம் பிடித்த டிவி களிலும் 
பலவாறு" இத்துப்போன "தங்களின் முகம் காட்டி மேலும் மேலும் வாரி கொட்டிக்கொள்ளும் இவர்களுக்கு என்ன கேடு காலம் வந்துவிட்டது? 

நடித்தோமா கல்லாவை கட்டி விட்டு நிம்மதியாக இருந்தோமா என்று இல்லாமல் எந்த கருமதிர்காக எல்லோரும் அலைகிறீர்கள்? உங்களை விட்டால் நாட்டில் வேறு ஒன்றும் இல்லையா என்ன? 

ஆட்சியில் உள்ளவர்கள் உங்கள் கட்டுப்பாடில் இருப்பதாக எண்ணிக்கொண்டு ஆட்டம் போடாதீர்கள் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போவீர்கள்.நீங்கள இல்லாவிட்டால் யாரும் ஆட்சி செய்ய முடியாது என்ற தலைக்கணமும், திமிரும் உங்கள் அனைவரையும் செல்லா காசாக ஆக்கிவிடும். 

சிந்தித்து நடந்து கொள்ளுங்கள். 13 comments:

Madurai Saravanan சொன்னது…

THITTUVATHU PURIKIRATHU. YARAI ENRU THAAN PURIYAVILLAI. POTHUVAAKA NALLA KARUTHTHU . VAALTHTHUKKAL.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

Hope, you are all reading news papers and watching the " Idiot box'

வேலன். சொன்னது…

நானும் டவுசரும் சமீபத்தில் முதல்வரை சென்று சந்திக்கவில்லையே...நீங்கள் யாரை சொல்கின்றீர்கள்...?
வாழ்க வளமுடன்,
வேலன்.

யூர்கன் க்ருகியர் சொன்னது…

Please add follower widget in ur blog!

யூர்கன் க்ருகியர் சொன்னது…

//நானும் டவுசரும் சமீபத்தில் முதல்வரை சென்று சந்திக்கவில்லையே...நீங்கள் யாரை சொல்கின்றீர்கள்...?//

நீங்க ரெண்டு பெரும் சேந்து அவருக்கு
"திருகழுக்குன்ற ஏகவன்"
"தெருவோர வறியவர்க்கு காவலன்"
"பிரச்சினையில் காணாமல் போனவன்"

கர்மம் ....எதாவது... ஒரு விருத கொடுக்கறேன்னு சொல்லி பாருங்க ...
அடுத்த நாளே நீங்க மீட் பண்ணிடலாம் .

ஆல் தி பெஸ்ட் !

யூர்கன் க்ருகியர் சொன்னது…

//
நீங்கள் எல்லாம் யார்?
//

அதேதான் நானும் கேட்கிறேன் ...
நடிப்பதை தவிர மத்தது எல்லாம் பண்றீங்களே ..யார்ரா நீங்க .... ??

யூர்கன் க்ருகியர் சொன்னது…

நடிக்கறத பார்ட் டைம்ல பண்ணிக்கிட்டு வேண்டாத வேலையெல்லாம் புல் டைம்ல பண்ணிட்டு திரியறானுங்க

example:-

இப்பவே ஒரு ஆளு டெல்லி அரசியல்வாதியுடன் பேரம் பேசறாரு (அது ஊத்திக்கிச்சி நன்றது வேற விஷயம்)

உண்ணாவிரதத்துல பிரியாணி பொட்டலம் வீசறாரு

படத்துல அரசியல் வசனங்களை வைக்கிறாரு (உதாரணம் : தொடைய தட்டி "உங்களுக்கு தானே நான் இவ்வளவு உழைக்கிறேன் ??" ஸ்க்ரீன்ல மக்களை பார்த்து சொல்றாராமாம் !)

அரசியல்ல நுழைவதற்கே இவ்வளவு தகிடுதத்தம் பண்ற ஆளு ...உள்ளல வந்தா என்னென்ன ஜிகிடி வேலைய பண்ணுவாரு..

அண்ணாமலையான் சொன்னது…

ம்ம் நடத்துங்க...

டவுசர் பாண்டி சொன்னது…

இல்ல இன்னா கோவம் உனுக்கு நாளைக்கி உன்ன சினிமால நடிக்க வெக்க கூப்புடலாம் இன்னு இருந்தாங்கோ !! இப்பிடி பண்ணிட்டியே ? நாயமா இது ,

யாரு அவுரு , எங்க தலைவர இது மேரி சொல்றது ? ஆய் , ஆட்டோ இல்ல லாரில ஆளு வரும் சொல்டேம்பா !!

யூர்கன் க்ருகியர் சொன்னது…

//யாரு அவுரு , எங்க தலைவர இது மேரி சொல்றது ? //
உண்மைய சொன்னேன் சார் ..

//ஆய் , ஆட்டோ இல்ல லாரில ஆளு வரும் சொல்டேம்பா !!//

ஆட்டோ வரும் சரி ,,லாரி வரும் சரி ..அதென்ன ஆய் ??

இரும்புத்திரை சொன்னது…

தல ஆபிஸில் எனக்கு வராது.உங்க ப்ளாக்கை ரீடரில் சேர்த்து கொள்கிறேன்.

வேலை வெட்டி இல்லாத பசங்க.இன்னும் ஓபாமாவுக்கு தான் சொம்பு தூக்கல.வர மாட்டேன் என்று சொன்னாலும் விட மாட்டாங்க.

கவிதை காதலன் சொன்னது…

ஏங்க இவ்ளோ டென்ஷன் ஆகிட்டீங்க?

கக்கு - மாணிக்கம் சொன்னது…

இரும்புத்திரை,
கவிதைக்காதலன்
உங்கள் இருவரின் வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
எப்போதும் வாருங்கள்..

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக