பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், ஆகஸ்ட் 10

" என்ன சங்கி சார் முக்கியமான விசயமா... ? "

 ரோட்டில் போய்க்கிட்டிருந்த உளுத்தம் பருப்பை சங்கி கைதட்டி கூப்பிட்டார். இனி...

" என்ன சங்கி சார் முக்கியமான விசயமா... ? "

" கேவலமான விசயத்திற்கு கூட உளுத்தம் பருப்புக்களை நாங்க கூப்பிடறது இல்லை. எனக்கு டைம் பாசாகலை. அதான் என்டெர்டெயின் மென்டிற்கு உன்னை கூப்பிட்டேன். ஒரு விளையாட்டு விளையாடலாமா... ? "

" என்ன விளையாட்டு..... ? "

" உங்க கட்சி தலைவர்களை பத்தி நான் ரொம்ப ரொம்ப ஈசியான கேள்வி கேட்பேன். சரியா பதில் சொல்லிட்டா ஒவ்வொரு கேள்விக்கும் நான் உனக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பேன். பதில் தப்புன்னா நீ எனக்கு ஆயிரம் ரூபாய் தரணும். "

" கட்சி தலைவர்களை பத்தி தானே. எனக்கு அது தலைகீழாக தெரியும். ஆனால் கோசம் போட, போராட்டம் நடத்த எனக்கு கிடைக்கிற சம்பளமே தினமும் இருநூறு ரூபாய் தான். அதனால் அவ்வளவெல்லாம் என் கிட்ட பணம் இல்லை. "

"சரி, அப்ப ஒண்ணு பன்னலாம். சரியா பதில் சொன்னா உனக்கு நான் ஆயிரம் கொடுப்பேன். தப்பா பதில் சொன்னால் நீ பணம் கொடுக்க வேண்டாம். அதற்கு பதில் ஒரு அறை வாங்கிக்க... "

" இந்த டீல் எனக்கு பிடிச்சிருக்கு. சரி கேள்வியை கேளுங்க சங்கி சார். "

" கட்டுமரம் ஒரு வந்தேறியா... ? தமிழனா... ? "

" ப்பூ... இதுதான் கொஸ்டினா... ? அவர் தமிழன் தான். தமிழ்நாட்டில் தான் பொறந்து, வளர்ந்தார். "

#_பளார்.

சங்கி விட்ட அறையில் உளுத்தம்பருப்பின் இடது காதில். .....ங்ஙோய்... னு சங்கு சத்தம் கேட்டது. கன்னத்தில் கை வைச்சிக்கிட்டே உளுத்தம்பருப்பு கேட்டார்,

" ஏன் சங்கி சார் அறைஞ்சிங்க... ? அவர் தமிழ்நாட்டில் தான் பிறந்து வளர்ந்தார். "

" கட்டுமரம் எப்ப பொறந்தார்... ? "

" 1924 ல் பிறந்தார். "

" தமிழ்நாடுன்னு ஒன்றே கிடையாதுடா லூசு. கண்ணா துரை தான் தமிழ்நாடுன்னு 1969ல் பெயர் வைச்சார். தமிழ்நாடே 1969ல் வந்தது. அப்பறம் எப்படி நாயே அதே தமிழ்நாட்டில் 1924ல் பொறந்து வளர்ந்தார்... ? "

" ? "

" சரி, இரண்டாவது கொஸ்டின் கேட்கிறேன். உங்க தலைவர் சுடலை எந்த ஊரில் பிறந்து வளர்ந்தார்.... ? "

" சுடலை, பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை.... "

#_பளார்.

சங்கி விட்ட அறையில் இப்போது உளுத்தம்பருப்பின் ரைட் ஸ்பீக்கர் அவுட்.

" அறிவு கெட்ட உளுத்தம்பருப்பே, 1996ல் சென்னைன்னு பெயர் வைச்சதே உங்க கட்டு மரம் தான். 1996 வரை இல்லாத சென்னையில் 1953 ல் சுடலை பிறந்து வளர்ந்தாரா... ? "

" ஐயா சாமி இந்த விளையாட்டுக்கு நான் வரலை. "

" அதெல்லாம் முடியாது. மூனாவது கொஸ்டினுக்கு மட்டுமாவது பதில் சொல்லிட்டு போ. கிலைஞர், கிருணாநிதி இது இரண்டும் ஒரே ஆளா..., இல்லை இரண்டு ஆளா... ? "

" ஒரே ஆள் தான். "

#_பளார்.

" உளுத்தம் பருப்பே..., 1954 ல் வந்த மனோகரா படத்தில் தான் கிலைஞர்னு பதிவாகியிருக்கு. அதற்கு முன்னாடி வந்த படத்தில் எல்லாம் கிருணாநிதின்னு தான் டைட்டில் கார்டில் இருக்கு. இதிலிருந்து என்ன தெரியுது.... ? "

" எனக்கு நீங்க விட்ட அறையில் ங்ஙோய் சத்தமும், கண்ணுக்குள்ள நட்சத்திரங்களும் தான் தெரியுது. வேற எதுவும் தெரியலை. நீங்களே பதில் சொல்லிடுங்க சங்கி சார். "

" இதிலிருந்து என்ன தெரியுதுன்னா.... மந்திரிகுமாரி, பராசக்தி, மருத நாட்டு இளவரசி படங்கள் கதை வசனம் எழுதினதெல்லாம் கிருணாநிதி. 1954ல் மனோகராவில் இருந்து எழுதினது கிலைஞர். இரண்டும் வேற வேற ஆள். புரிஞ்சதா... ? "

" யோவ் சங்கி சார், இதெல்லாம் ரொம்ப அநியாயம். உங்களுக்கெல்லாம் கிறுக்கு பிடிச்சிட்டா... ? "

" உங்களுக்கு பிடிச்ச கிறுக்கு எங்களுக்கு பிடிச்சா இப்படித்தான் ஆகும் உளுத்தம் பருப்பே. இந்து மதம்னு ஒண்ணே கிடையாது, இந்தியான்னு ஒண்ணே கிடையாது., வெள்ளைக்காரன் வந்த பிறகு தான் இந்து மதம் வந்தது, இந்தியா வந்ததுன்னு சொல்லிக்கிட்டு திரியறீங்கல்ல... அதான் உங்க லாஜிக்படி நாங்களும் யோசிச்சா இப்படித்தான் ஆகும். "

--------------- Bommaiyah Selvarajan.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக