பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், மே 21

கத்தி இன்றி ரத்தமின்றி -- இன்னா ஜிகினா வேலை !

ஒருவனுக்கு காந்தியை பிடிக்காமல் போவதற்கு அவன் நாதுராம்_கோட்சேவை ஆதரிப்பவனாகதான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை... 15 points
1. அவன் பகத்சிங்கை தூக்கிலிடுவதை எதிர்க்காமல் காந்தி கள்ள மெளனம் சாதித்ததை அறிந்தவனாக இருக்கலாம். (1/15)
2. நேதாஜியை கட்சியை விட்டு தனது ஒத்துழையாமையால் ஒதுக்கியதை தெரிந்தவனாக இருக்கலாம் (2/15)
3. அவரது வெள்ளையனே வெளியேறு போராட்டம் உட்பட அனைத்து ஒத்துழையாமை இயக்க போராட்டமும் தோல்வியில் முடிந்ததை அறிந்தவனாக இருக்கலாம் (3/15)
4. நவகாளி கொலைகளை காந்தி அணுகிய விதத்தை தெரிந்தவனாக இருக்கலாம் (4/15)
5. ஒரு முஸ்லிம் கொல்ல வந்தால் இந்துக்கள் மரணத்தை ஏற்று கொள்ள வேண்டும் திருப்பி தாக்க கூடாது என்ற காந்தியின் இந்துக்களுக்கு எதிரான அஹிம்சை தத்துவத்தை அறிந்தவனாக இருக்கலாம். (5/15)
6. இஸ்லாமிய பிரிவினைவாதம் எனும் சிறு செடியை நீர் ஊற்றி மரமாக வளர்த்த கதையை தெரிந்தவனாக இருக்கலாம்.(6/15)
7. பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இந்துக்களை,சீக்கியர்களை பற்றி ஒரு நொடி கூட சிந்திக்காமல் பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்ததனை அறிந்தவனாக இருக்கலாம் (7/15)
8. பிரிவினையின் போது கொல்லப்பட்ட மக்களின் மரண ஓலங்கள் இன்னமும் தனது காதால் கேட்பவனாக இருக்கலாம் (8/15)
9. சுதந்திரத்துக்கு காந்தி ஒரு காரணமே அல்ல ஆனால் பிரிவினைக்கு அவர் முக்கிய காரணம் என்பதை தெரிந்தவனாக இருக்கலாம்.(9/15)
10. சர்தார்_வல்லபாய்_படேலுக்கு போக வேண்டிய பிரதமர் பதவியை தனது சூழ்ச்சியால் நேருவிற்கு கொடுத்த வரலாறு அறிந்தவனாக இருக்கலாம் (10/15)
11. சுதந்திரத்துக்கு உண்மையான காரணமான நேதாஜியை நேசிப்பவனாக இருக்கலாம் (11/15)
12. வஉசி செக்கிழுக்க, நேதாஜி தேடப்படும் குற்றவாளி ஆக என தனக்கு உடன்படாத பல தலைவர்களை ஆங்கிலேயனை கொண்டே அழித்த குயுக்தியாக இருக்கலாம் (12/15)
13. ஆங்கிலேயே ஆட்சியை நீக்கிவிட்டு கிறித்தவ மத அமைப்புகளின் மேலாதிக்கத்தை ஆதரித்ததாக இருக்கலாம். (13/15)
14. நிர்வாகத்துக்கு வெளியே இருந்துகொண்டு தன்னை முன்னிலைப்படுத்தும் நிர்வாக முறையை (தற்போதைய இங்கிலாந்து மன்னர் குடும்பம் போன்ற) உருவாக்க முயன்றதாக இருக்கலாம் (14/15)
15. தன்னைத்தவிர வேறு தலைவர்கள் உருவாகிவிடக்கூடாது என்பதில் கண்ணும்கருத்துமாக செயல்பட்டதை அறிந்தவனாக இருக்கலாம் (15/15)
காந்தி மீதான மனக்கசப்புக்கு... கோட்சே ஆதரவு தன்மைதான் காரணம் என்பது...
இந்திய சுதந்திரம் கத்தியின்றி ரத்தமின்றி கிடைத்தது என்பதைவிட அபத்தமானது...
Ramachandra Sharma. WhatsApp Message

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக