பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, ஜனவரி 1

தோமாவும் வரவில்லை ஈட்டியும் தூக்கவில்லை. கிருஸ்துவ பொய்கள்

 / பைபிளின் எந்த இடத்திலும் தோமா ஈட்டி தூக்கிய செய்தி இல்லை, அவன் இயேசுவின் ஈட்டி எறியும் படையிலும் இல்லை //

தொட்டதெற்கெல்லாம் ஆதாரம்கேட்கும் கும்பல்கள் இதற்கு பதில் சொல்லுமா.? தோமா தமிழ் நாட்டுக்கு வந்ததாக வாழ்ந்தாக பரப்பப்பட்ட பொய்களுக்கு ஆதாரம் உண்டா..? பேசவே மாட்டார்கள் மாறாக திட்டித்தீர்ப்பார்கள் டுமீல் திராவிட திக கள்ளக்காதல் கும்பல்ஸ்  
Favorites 7tahSpmanonsored 
தோமா எனும் தாமஸ் இந்தியாவுக்கு வந்தார் எனும் ஆதாரம் எதுவும் உறுதியாக இல்லை,
பைபிளில் இயேசுவுக்கு பின் சீடர்களுக்கு பரிசுத்த ஆவி வந்து அவர்கள் யூதரல்லா மக்களுக்கு இயேசுவினை போதிக்க தொடங்கும் பொழுது அந்த ஆவி அவர்களை மேற்கு நோக்கித்தான் ஏவிற்று
இதை அப்போஸ்தலர் நடபடிகள் எனும் புத்தகம் தெளிவாக சொல்கின்றது, ஆக ஒரு அப்போஸ்தலனும் முதலாம் நூற்றாண்டில் இந்தியா பக்கமே வரவில்லை
கிறிஸ்துவின் சீடர்களில் தோமா வித்தியாசமான பேர்வழியாக இருந்திருக்கின்றான், எதையுமே வித்தியாசமாக நோக்கும் சிந்தனை அவனுடையது, இயேசு உயிர்த்ததை நம்பாத அளவு பகுத்தறிவாளனாக இருந்திருக்கின்றான், பின் இயேசுவந்து அவனை நம்ப வைத்திருக்கின்றார்
தோமா எழுதிய நற்செய்தி ஒன்று உண்டு, அது வில்லங்கமானது என்பதால் மறைத்துவிட்டார்கள்
அந்த தோமா ஒரு சீட கூட்டத்தை வைத்திருந்தான், அது தோமா வழி கிறிஸ்தவமானது. கேரளாவுக்கும் அரேபியாவுக்கும் எக்காலமும் தொடர்பு என்பதால் அன்றே தோமாவழி கிறிஸ்தவம் கேரளாவுக்கு வந்தது
இயேசுவுக்கு பின் கிட்டதட்ட 300 ஆண்டுகளுக்கு பின் இவை கேரளாவுக்கு வந்தன‌
சிரிய கிறிஸ்தவம், தோமாவழி கிறிஸ்தவம் எல்லாம் கேரளாவுக்கு வந்தன, யூதர் கேரளாவில் வசித்தது போல அவர்களும் மிக மிக குறைந்த எண்ணிக்கையில் சத்தமின்றி இருந்தார்கள்
ஆம் யூதர் கிபி 70ம் ஆண்டில் ஜெருசலேம் ஆலயம் இடிக்கபட்ட கலவரத்தில் கொச்சிக்கு வந்தார்கள், இன்றும் அவர்கள் பரம்பரையும் அடையாளமும் கொச்சியில் உண்டு
அரேபிய கேரள தொடர்புகள் அப்படியாவனை பின்பு இஸ்லாமும் அப்படியே 7ம் நூற்றாண்டில் வந்தது, பாரத கண்டத்தில் இஸ்லாம் கால்வைத்த முதல் இடம் கேரளமே, ஆனால் சிறிய அளவில்தான் அது இருந்தது
வாஸ்கோடகாமா எனும் போர்த்துகீசியன் 15ம் நூற்றாண்டில் கேரளாவின் கள்ளிகோட்டையில் கால்வைத்ததில் இருந்து இங்கு கிறிஸ்தவ காலணியாக்கமும் மதமாற்றமும் தொடங்கியது,
கேரளாவில் கள்ளிகோட்டை பக்கம் அதை போர்த்துகீசியர் செய்ய, வாஸ்கோடகாமா கடும் எதிர்ப்பினை சம்பாதித்து கள்ளிகோட்டையில் கொல்லவும் பட்டான்
வாஸ்கோடகாமா கொல்லபட்டபின்பு போர்த்துகீசியர் கோவா பக்கம் சென்றனர் அங்கிருந்து மங்களூர்வரை தங்கள் சாம்ராஜ்யத்தை நீட்டிக்க போராடினர், போர்த்துகீசியர் வாள்முனை துப்பாக்கி முனையில் கடும் மதமாற்றம் செய்த சாட்சிகள் வரலாற்றில் உண்டு, அவை அவுரங்கசீப் காலத்தை விட பயங்கரமான ரத்த சரித்திரம்
பிரான்சிஸ் சவேரியார் வந்ததெல்லாம் அப்பொழுதுதான், வடக்கே நிலமை சிக்கலாக அவர் தன் ஜாகையினை தென்னகதிற்கும் இலங்கைக்கும் கிழக்காசியாவுக்கும் மாற்றி கொண்டார்
ஆம் வடக்கே எதிர்ப்பு அப்படி இருந்திருக்கின்றது, போர்த்துகீசிய மதமாற்ற கொடுமைகளும் ஆக்கிரமிப்பும் மகா கொடியதாக இருந்திருக்கின்றது
நம்ம ஊர் வேலுநாச்சியர் போல மங்களூர் பக்கம் அப்பாக்கா என்பவள் 15ம் நூற்றாண்டிலே அவர்களை ஓட அடித்திருக்கின்றாள்
பெரும் எதிர்ப்பு வந்தபின் போர்த்துகீசிய கோஷ்டி அடங்கியது, இதன் பின் சில இடங்களில் மட்டும் துறைமுகம் பக்கம் சமத்தாக வியாபாரம் பார்த்திருக்கின்றது போர்த்துகீசிய கோஷ்டி, அன்று பிரான்ஸ், பிரிட்டன், டச்சு கம்பெனி எல்லாம் இந்தியாவுக்கு வரவில்லை
தென்னகத்தில் ஆளில்லா கடற்கரை பகுதியில் சிறிய கோட்டையும் வியாபாரமும் செய்தபடி சில இடங்களில் அது கால்பதித்தது, அப்படி சென்னை பக்கமும் வந்தது
கோவாவுக்கு அடுத்தபடியாக சென்னை அவர்களின் முக்கிய கேந்திரமாக இருந்தது, அன்று அது சென்னை அல்ல மாறாக போர்த்துகீசியரான மெட்ரூஸ் என்பவன் சமாதி இருந்த இடத்தை மெட்ராஸ் என அழைத்தனர்
அப்பொழுது கிறிஸ்தவம் போர்த்துகீசிய பகுதியான மெட்ராஸுக்கு கோவா போலவே ஊடுருவிற்று, அதில் தோமா வழி கிறிஸ்தவர்களும் உள்ளே வந்தார்கள்
கோவாவில் போர்த்துகீசியர் கிறிஸ்தவமதம் பரப்ப செய்த வெறியாட்டம் மகா கொடுமையானது, எனினும் அவர்களுக்கு முழு வெற்றியில்லை
அப்படி சென்னையிலும் சில முயற்சிகள் நடந்தன, அப்பொழுது ஒரு தோமாவழி கிறிஸ்தவ துறவி கொல்லபட்டு அவன் உடல் சென்னை கடற்கரையில் அடக்கம் செய்யபட்டிருக்கலம்
அதை தூய ஆலயம் என அடையாளமிட்டு, போர்த்துகீசிய மொழியில் சாந்தோ ஆக்கியிருக்கலாம் என்பார்கள்
செயின்ட் எனும் ஆங்கில சொல் போர்த்துகீசிய மொழியில் சாந்தோ என மாறும், செயின்ட் நிக்கோலஸ் சாந்தா கிளாஸ் ஆனது, செயின்ட் குரூஸ் சாந்தா குருஸ் ஆனது போல செயின்ட் ஆலயம் சாந்தா ஆலயம் ஆனது
பின்பு சாந்தோம் ஆனது
இவை எல்லாம் 15ம் நூற்றாண்டு சம்பவங்கள், இதனால் சென்னை பரங்கிமலை ஆலயம் சென்னை சாந்தோமின் பழமை 500 ஆண்டுகளை தாண்டாது
இப்படி மெட்ராஸ் பக்கம் நடமாடிய போர்த்துகீசியர் கொழும்பு மலாக்கா என ரவுண்ட் அடித்தனர், அப்படி ஒரு நேரம் பயணிக்கும்பொழுதுதான் வேளாங்கண்ணி பக்கம் ஒதுங்கி அங்கு ஆலயம் அமைத்தனர்
இப்படியாக அவர்கள் தென் கடற்கரை எல்லாம் ஆடிபாடி திரிந்து ஆலயம் கட்டுவதும் மகிழ்வதுமாக இருந்தனர், இன்றும் தென்னக கடற்கரை கிறிஸ்தவ பெயர்கள் போர்த்துகீசிய பெயர்களாகவே இருக்கும்
நெல்லை மாவட்ட வடக்கன்குளம் ஆலயம் கூட போர்த்துகீஸ் காலத்தில் தொடங்கபட்டதே
பின்பு 16ம் நூற்றாண்டில் பிரிட்டானியர் வந்து போர்த்துகீசியரை மெட்ராஸில் இருந்து அடித்துவிரட்டி ஜார்ஜ் கோட்டையினை கட்டி வலுவாக காலூன்றினர், அதன் பின் தமிழகத்தில் இருந்து விடைபெற்ற போர்த்துகீசிய கோஷ்டி கோவாவிலே அடைக்கலமானது
அங்கு அவர்கள் மேலும் ராஜ்யத்தை விரிக்க எண்ணினர், மாவீரர் சிவாஜி அவர்களை அடக்கி ஒடுக்கி வைத்திருந்தான் பின்னாளில் அவன் வீழ்ச்சிக்கு பின் பிரிட்டானியர் போர்த்துகீசியரை முழங்காலில் நிறுத்தினர்
சுதந்திர இந்தியாவில் பட்டேல் கோவாவினை இணைக்க முயன்றபொழுது நேரு தடுத்தார், ஆம் கோவா இங்கு கத்தோலிக்க தலமை பீடமாக இருக்க ஐரோப்பா விரும்பியது, நேரு அதை மனமுவந்து செய்தார்
பின் 1962ல் சீன யுத்தின் பொழுது எழுந்த அதிருப்திகாரணமாகவே கோவா இந்தியாவோடு இணைக்கபட்டது, அதுவும் நேருவின் அரைகுறை மனதோடு.
இதுதான் போர்த்துகீசியர் இந்தியாவில் ஆண்ட வரலாறு
அவர்கள் சென்னையினையும் கொஞ்சகாலம் ஆண்டனர், அப்பொழுதுதான் பரங்கிமலை, சின்னமலை , சாந்தோம் எல்லாம் உருவாயின‌
கோவா போல மதராஸையும் முழு கிறிஸ்தவ பூமியாக்க அவர்கள் விரும்பினர், அதற்கு சில வலுவான ஆதாரங்களை உருவாக்க தோமையார் பரங்கிமலையில் மரித்து சாந்தோமில் அடக்கம் செய்யபட்டார் என கதை கிளப்பினர்
அந்த புரட்டுகதை இக்காலம் வரை நிலைத்திருக்கின்றது.
ஆனால் கோவா போல் சென்னை முழுவதும் மாறவில்லை அதற்கு ஏகபட்ட காரணங்கள் உண்டு. முதல் காரணம் சென்னையில் அடையாளமிட்டு இருந்த இந்து ஆலயங்கள்,
ஆம் கிராமங்களும் சிறிய நகரங்களுமாக இருந்த அன்றைய சென்னையில் இருந்த பெரும் ஆலயங்கள் சென்னையின் தன்மையினை அன்று காத்தன.
இரண்டாம் காரணம் வியாபாரத்தை மட்டும் கவனித்த பிரிட்டிஷ்காரன், அதாவது கிழக்கிந்திய கம்பெனி பிரிட்டிஷ்காரன்,
(மிஷனரி குழப்பமெல்லாம் பிரிட்டன் அரசிடம் இந்தியா சென்றபின்புதான் தலைவிரித்து போட்டு ஆட தொடங்கின, அது நேருவின் புண்ணியத்தால் இன்னும் ஆடிகொண்டிருக்கின்றது விரைவில் அடக்கம் செய்யபடும்)
இதனால் சொல்கின்றோம் செயின்ட் தாமஸ் மலை, சாந்தோம் ஆலயம் எல்லாம் தோமாவின் அடையாளமே அல்ல, அவன் இந்தியா வரவே இல்லை
பைபிளில் பரிசுத்த ஆவி அப்போஸ்தர் கிழக்கே செல்ல கூடாது மேற்கேதான் செல்ல வேண்டும் என பவுல் என்பவனுக்கு உத்தரவிட்ட பின் அனைத்து அப்போஸ்தலரும் மேற்கேதான் சென்றனர்
இதில் தோமா மட்டும் எப்படி கிழக்கே வந்திருக்க முடியும்? அப்படி வந்தால் அவன் பரிசுத்த ஆவியின் கட்டளையினை மீறியவன் இல்லையா?
இதை இப்படி நோக்கலாம்
இயேசு பிறந்தபொழுது கிழக்கே இருந்துதா ஞானிகள் சென்றார்கள், ஆம் இங்கு ஞானமும் அறிவும் தெளிவும் தத்துவமும் சனாதன‌ மதமுமான நல்ல‌ மார்க்கமும் இருந்தது.
இதனால் கிழக்கே கிறிஸ்தவ போதகர்கள் வர பரிசுத்த ஆவி அனுமதிக்கவில்லை. ஐரோப்பா எனும் அன்றைய காட்டுமிராண்டி தேசத்துக்கே சில விஷயங்கள் தேவைபட்டன‌
வாழும் பொழுது இயேசு தன் போதனையிலே சொன்னார் "மருத்துவன் நோய் அற்றவனுக்கு அன்று, நோய் உற்றவனுக்கே தேவை"
இதனால் கிறிஸ்தவ அப்போஸ்தலர்களை அந்த தெய்வம் ஐரோப்பாவுக்கு அனுப்பியது
ஆம் இந்துமதத்தின் ஒரு பாதிப்பு கிறிஸ்துவில் தெரிந்தது, இயேசு ஒரு சித்தரின் சாயல். அதுதான் ஐரோப்பாவுக்கு அவர் வழி செல்ல தெய்வம் வழிகாட்டியது.
பின் அவர்கள் நமக்கே வந்து "ஹூ இஸ் காட்" என்பதெல்லாம் காலத்தின் கோலம்
இயேசு பிறந்தபொழுது நட்சத்திரம் கணித்து சென்று பார்க்கும் அளவு அன்றே இத்தேசம் மிகபெரும் அறிவில் இருந்தது, இதனால்தான் பரிசுத்த ஆவி அப்போஸ்தலரை கிழக்கே அனுப்பாமல் மேற்கே அனுப்பியது.
இதனால் தோமா இந்தியா வந்தார். சைவம் வைணவம் அவர் வழி, திருகுறள் அவர் சொன்னது என எவனும் சொன்னால் அவனிடம் பேசாதீர்கள்
இயேசுவுக்கு முன்பே "அன்பே சிவம்" என உரக்க சொன்ன பூமி இது, அதைத்தான் அன்பே கடவுள் என போதித்தார் இயேசு
இதனால் உறுதியாக சொல்லலாம், விஷயம் இங்கிருந்து அங்கு சென்றதே தவிர, அங்கிருந்தெல்லாம் இங்கு வரவில்லை.
இந்துமதத்தின் அடி நாதம் மேற்கே பரவி அது யூதேயாவில் உருமாறி ஐரோப்பாவுக்கு சென்று, பின் இந்தியாவுக்கே புதிய லேபலில் கிறிஸ்தவம் என வந்தது,.
அவ்வளவுதான் விஷயம்.
(பைபிளின் எந்த இடத்திலும் தோமா ஈட்டி தூக்கிய செய்தி இல்லை, அவன் இயேசுவின் ஈட்டி எறியும் படையிலும் இல்லை
இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் மட்டும் அவன் ஈட்டி ஏந்தி நிற்பதெல்லாம் சந்தி சிரிக்கும் காமெடி, ஆனால் தமிழன் தலையில் மிளகாய் அரைப்பது எளிது என போர்த்துகீசியனுக்கு தெரிந்து அழகாய் அரைத்தான்
அதை அவனின் அடிபொடிகள் இன்றுவரை அரைத்துகொண்டிருக்கின்றன, இனி அந்த மிளகாயினை எடுத்து அவர்கள் கண்களில் பூசும் திருபணியினை நாம் செய்ய வேண்டும்)


0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக