முந்தைய காங்கிரஸ் கட்சியில், (காமராஜர் காலத்தில் ) சிறந்த தமிழ் பற்றாளர்கள் சொற்பொழிவாளர்கள் இருந்தனர். உண்மை. திருக்குறளார் முனுசாமி என்பவர் காங்கிரஸ் கட்சியில் சிறந்த பேச்சாளர்.திருக்குறளை மக்களிடம் மிக அதிகமா கொண்டு சென்றவர் இவர். வெறும் மேடை பேச்சுக்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்தி திருக்குறளை அன்றைய தமிழ் சமூகத்திற்கு கொண்டுன்சென்றவர். அந்த காலங்களிலேயே திருக்குரலை பொதுவெளிகளில் பேசி மக்களிடம் சேர்த்தவர். திருக்குறள் தமிழர்களின் அன்றாட வாழ்வில் பங்குபெறவேண்டும் என்ற அளவிற்கு குரள் மீது இவருக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தது. அவர் காலத்தில் வாழ்ந்த அத்தனை தமிழ் மூதறிஞ்சர்களின் நட்பில் இருந்தவர். இவரின் திருக்குறள் பற்றி உரைகள் அவ்வப்போது வானொலியில் கேட்கலாம். மிகுந்த நகைசுவை உணர்வுடன்தான் பேசுவார். கட்சி பாகு பாடின்றி இவரது சொற்பொழிவுகள் அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்பட்டது. அன்றெல்லாம் அப்படித்தான்.
இந்த திருட்டு திராவிட ஆட்சி அமைந்து, பின்னர் கருணாநிதி நாள் தோறும் ஒவ்வொரு ஊரிலும் அண்ணாதுரையின் சிலைகைளை அவரின் பெயரை பள்ளிகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், பாலங்கள் பூங்காக்கள் எந்த சகலத்துக்கும் அண்ணாதுரையின் பெயரையே சூட்டுவதை வாழ்வியல் முறையாக கொண்டது.
அந்த கால கட்டத்தில் திருக்குறளார் முனுசாமி தன் உரையில், கண்ட கண்ட இடங்களிலும் சிலை வைக்கும் திராவிடபழக்கத்தை மொத்தி எடுத்தார்.
துணிகளை வெளுக்கும் முன்பாக துணியின் சொந்தக்காரரின் பெயரின் முதல் எழுத்தை கடுக்காய் போன்ற இயற்கையான சாயங்கள் மூலமாக சிறிய ஊசி கொண்டு வேட்டியின் எங்கோ மூலையில் சிறிதாக அடியாளமிடுவார்கள். வண்ணான் குறி என்றே இது வழக்கப்பட்டது.
// தங்களின் துணிதான் என்று தெரிய ஒரு இடத்தில வண்ணான் குறி இட்டால் போதாதா. ? வேட்டியின் முழுமைக்கும் எல்லா பரப்பிலுமா தங்களின் குறியீட்டை எழுதுவார்கள்?? அதுதான் இப்போது நடந்துகொண்டுள்ளது //
என்று கிண்டலாக ஆனாலும் உண்மையை சொல்வார்.
அதைத்தானே இந்த திமுக, அஇஅதிமுங்க அரசுகள் செய்துகொண்டுள்ளது. வெள்ளை வேட்டியின் முழுப்பரப்பிலும் வண்ணான் குறி இட்டது போல, நாட்டின் இண்டு இடுக்குகளில் எல்லாம் அண்ணாதுரை , ஈவேராமசாமி, அம்பேத்கார், என்றில்லாமல் இப்போது எம்ஜிஆர், செயலலிதா என்று அதே திராவிடகுறிகள் நாட்டில் மலிந்து போய்விட்டன.
தமிழ் மக்களின் பகுத்தறிவற்ற சிறுமையான மனோபாவமே இதற்கெல்லாம் காரணமாகிவிட்டது.
எங்கெங்கு காணினும் சிலைகளடா!
https://www.dinamalar.com/news_detail.asp?id=2690858
0 comments:
கருத்துரையிடுக