பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, ஜனவரி 1

எங்கள் வள்ளுவன் காவியே ..!

 

நம் பிள்ளைகளிடம் இந்த கட்டுரையை படித்துக்காட்டுங்கள், எல்லாஇடங்களிலும் இக்கருத்துக்களை வையுங்கள்.

 /// ஆழ சிந்தியுங்கள் வள்ளுவன் ஒரு இந்து என்பது முழுக்க புலனாகும், திராவிடமும் அதன் கள்ள காதலியான இந்து விரோத சக்திகளும் இங்கு செய்திக்கும் குழப்பம் மிக பெரிது///

 இதுதான் ஆண்டாண்டுகாலமாக  இருந்துவரும் அவலம் நாமாவது முயன்று 

நம்முடையவைகளை அடையாளப்படுத்துவோம். 

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


இயேசு எங்காவது தான் ஒரு யூதன் எனவும், ஜகோவாவின் மதம் எனவும் சொன்னாரா? இல்லை காரணம் அந்த யூதேயாவில் அது சிக்கல் இல்லை, இயேசு யூதேயாவினை தாண்டியதுமில்லை
யூதநாட்டில் ஒருவனை யூதன் என சொல்ல அவசியமே இல்லை.
அரிஸ்டாட்டில் எங்காவது தான் கிரேக்கமதத்தான் என சொன்னாரா இல்லை, காரணம் அவர் கிரேக்கத்தை தாண்டியதில்லை
ஹோமர் எனும் பெரும் கிரேக்க புலவனுக்கு தான் கிரேக்க மொழி மற்றும் மதத்தான் என நிறுவ அவசியமே இல்லாதவாறு இலியட்டும் ஒடிசியும் நிற்கின்றது
காளிதாசனுக்கு தான் இந்து எனவும் சமஸ்கிருத வித்வான் எனவும் நிறுவும் அவசியமில்லை
எங்கு இன்னொருவனிடம் தான் இந்த மதம், இந்த இனம் என சொல்லவேண்டிய அவசியமில்லையோ அங்கு தன் அடையாளத்தை சுமந்து திரியும் அவசியமில்லை
தமிழ்நாட்டை தாண்டித்தான் நாம் தமிழன் என சொல்லவேண்டியிருக்கின்றது, அடுத்த நாட்டில் சென்றுதான் நான் இந்தியன் என சொல்லவேண்டியிருக்கின்றது
வள்ளுவனுக்கு எல்லை தாண்டிய அவசியம் இல்லாததால் தன் குறளில் ஒரு இடத்திலும் அவன் தன்னை தமிழன் என்று சொல்ல அவசியமில்லை, வள்ளுவன் என்ன? இத்தனையாயிரம் தமிழ் புலவரில் தமிழன் தமிழன் என தன்னை அடித்துகொண்டவன் எவன்?
எவனுமில்லை
வள்ளுவன் எப்படி தமிழனோ அப்படியே மறுக்கமுடியா விஷயம் அவன் ஒர் இந்து
வள்ளுவன் இந்துவா இல்லையா என்ற சர்ச்சை இன்று வந்ததல்ல, இம்மண்ணை நாசமாக்க என்று திராவிட ஒப்பாரி எழும்பியதோ அப்பொழுதே தொடங்கிற்று, தமிழறிஞர்களும் சைவ சித்தாந்தவாதிகளும் வள்ளுவன் ஓர் இந்து என்பதை நிரூபித்தனர்
பெரியார் எனும் ராமசாமியும் அதை ஒப்புகொண்டு வள்ளுவன் ஓர் பார்ப்பானிய அடிமை என ஒப்புகொண்டார்
பின்பு கருணாநிதியும் அண்ணாதுரையும் வள்ளுவனை பிடித்து தொங்கியதெல்லாம் அரசியல் நாடகம்
வள்ளுவன் சொன்ன "இந்திரனே" எனும் இந்து வார்த்தைக்கு கூட புரியா விளக்கம் சொல்லி குழப்பியவர் கருணாநிதி
வள்ளுவன் இந்து இல்லை என்பவனிடம் அவன் தமிழ் என ஒருவரியிலும் சொல்லவில்லையே அவன் தமிழனுமல்ல அல்லவா? என்றால் ஓடிவிடுவார்கள்.
மோடி தமிழகத்துக்கும் தமிழுக்கும் குறளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் இவர்களுக்கு பொறுக்கவில்லை, அடிமடியில் தீபட்ட கும்பல் போல் அலறுகின்றார்கள்
சாணக்கியன் ஓர் இந்து என்பது எவ்வளவு உறுதியோ அவ்வளவு உறுதி வள்ளுவன் ஓர் இந்து என்பது
வள்ளுவன் இந்து அல்ல, சமண கவிஞன் என சிலர் கிளம்பி இருக்கின்றார்கள், சிலர் தோமா காலத்து கிறிஸ்தவர் என்று கூட சத்தம்
வள்ளுவன் ஒரு தூய்மையான இந்து என்பதற்கு சில எடுத்துகாட்டுகளை காணலாம்
முதலாவதாக இறைவன் எனும் சொல் தமிழருடையது, அதுவும் இந்துக்கள் மட்டுமே இறைவன் என்ற வார்த்தையினை பயன்படுத்தினர், மற்ற மதத்தவருக்குகு இல்லாத அந்த அடையாளம் இந்துக்கள் பாடல்களில் மட்டும் வருகின்றது
சமணரோ, புத்தரோ, கிறிஸ்தவரோ இறைவன் என்ற வார்த்தையினை பயன்படுத்தவில்லை, அவர்களின் சொல் கடவுள் அல்லது வேறு பெயர்கள்
இந்துக்களின் சொல்லை வள்ளுவன் அப்படியே வைத்திருக்கின்றான்
அப்படியே தெய்வம் என்பதும் இந்துக்கள் பெயரே, தமிழ் இந்துக்கள் வணங்க பயன்படுத்திய பெயர். "வானுறையும் தெய்வத்துள் வைக்கபடும்" என இந்துக்கள் அடையாளத்தை வைக்கின்றான் வள்ளுவன்
முத்தாய்பாக ஐம்புலன்களை கட்டுபடுத்தாவன் நிலைக்கு "இந்திரனே சாலுங் கரி" என ஆணித்தரமாக சொல்கின்றான்
பெண்ணாசையால் இந்திரன் பட்டபாடுகளை சொல்லும் குறள் அது, இந்திரன் கதை இந்துமதம் தவிர எந்த மதத்தில் இருந்தத்?
அடுத்ததாக அட்டகாசமாக கடவுளின் 8 குணங்களை குறித்து
"கோளில் பொறியியற் குணமிலவே எண்குனத்தான்" என்கின்றான் வள்ளுவன் அதாவது கடவுளுக்கு 8 குணம் உண்டாம்
இதையே அப்பரும் "எட்டு வான் குணத்து ஈசன்" என அழகாக குறிப்பிடுகின்றார், ஆக வள்ளுவன் இந்துக்களின் நம்பிக்கையினை குறளில் வைத்திருக்கின்றான்
பிறவிபெருங்கடல் என வாழ்வினை சொல்வது இந்துக்களே வள்ளுவன் அதனை குறளில் வைத்திருக்கின்றான்
இன்னும் மலர்மிசை ஏகினான் என மிக அழகாக இந்து கடவுள்களை குறிக்கின்றான்
வேறு எந்த மதத்து தெய்வம் மலர்மிசை ஏகிற்று?
தானமும் தவமும் என இந்துக்களின் நம்பிக்கையினையே வள்ளுவன் சொல்கின்றான்
இந்துக்களின் தர்மத்தையே துறவு முதல் பல இடங்களில் அவனால் குறளாக வைக்க முடிந்தது
அறம் பொருள் இன்பம் வீடு என இந்துமதம் சொல்லும் விஷயங்களை, வீடும் அறமும் முதல் பாலாகவும் இன்பம் மற்றும் பொருளை மற்ற இரு பிரிவுகளாகவும் பாடினான் வள்ளுவன்
கடவுள் வாழ்த்து என அவன் பாடுவது எந்த தெய்வங்களைபற்றியவது? பகவன் என தெய்வத்தை எம்மதம் சொல்லிற்று?
ஆதிமூலம் என்பதே ஆதிபகவன் அல்லவா?
மறுபிறவி கொள்கையினை இந்துமதம் தவிர எம்மதம் சொல்லிற்று? ஏழுமையும் ஏமா புடைத்து என எம்மதம் சொல்லிற்று?
நன்றாக ஆய்ந்து படித்து பாருங்கள், வள்ளுவன் ஒரு இந்து என்பதும், இந்துக்களின் நம்பிக்கையினையும் தத்துவத்தையும் அவன் குறளாக வைத்திருகின்றான் என்பதும் புரியும்
குறள் இந்துக்களின் நூலாகவே 1930 வரை சைவ சிந்தாந்த கழகம் , ஆதீனங்கள் என எல்லாவற்றாலும் கருதபட்டது
தொடக்க கால வெள்ளையர்கள் கூட இந்து நூலாகவே கருதினர், உண்மையும் அதுவே
வள்ளுவனை திருவள்ளுவன் என அக்காலா சமூகம் சொல்லவில்லை, 1930ம் வருடம் வரை அவன் பெயர் வள்ளுவ நாயனார்
ஆம், வள்ளுவ நாயனார் என்றுதான் இச்சமூகம் அவனை கொண்டாடியது
குறள் இந்துக்கள் அடையாளம் அல்ல என்பது 1930களுக்கு பின் வந்த திராவிட புரட்சி, கடவுள் மறுப்பு காலங்களில் செய்யபட்ட கட்டுகதையே அன்றி வேறல்ல
திராவிட இம்சைகள் பின்பு தமிழ் புலவர்களுக்கு சிலை வடிக்கும் பொழுது கம்பனை கவனமாக ஷேவ் செய்த முகத்தோடு நிறுத்தின‌
கம்பன் இந்து என்பதை அவன் படத்திலும் சிலையிலும் மறைத்தனர், ராம காதை பாடிய கம்பன் நாமம் போடாமலா இருந்திருப்பான்? குறைந்தபட்சம் குங்குமம் வைத்திருக்க மாட்டானா?
திராவிடர் கண்ட அவ்வையாருக்கும் திருநீறு கிடையாது, முருகனையும் பிள்ளையாரையும் பாடியவள் நீறு இல்லாமலா இருந்திருப்பாள்
இவ்வளவிற்கும் நீறில்லா நெற்றிபாழ் என பாடியவள்
அப்படி தமிழரின் பிராதன பிம்பங்களின் இந்து அடையாளங்கள் எல்லாம் மறைக்கபட்டன‌
ஆனால் வள்ளுவன் சிலையும் வடிவமும் கலெக்டர் எல்லீஸ் காலத்திலே வழக்குக்கு வந்தன‌
அது தாடியும் கொண்டையுமாக இந்து சாமியார் அடையாளத்தோடு இருந்தன, எல்லீஸ் எனும் குறளில் கரைந்த வெள்ளையன் வள்ளுவன் ஒரு இந்து என்பதில் சரியாக இருந்தான், இதனால் இந்து அடையாளங்களை சரியாக செய்தான்
ஆம் சமண துறவிக்கு தாடி கிடையாது, கிறிஸ்தவனுக்கு கொண்டை கிடையாது
அட பாரதியினையே குங்குமம் இல்லாமல் நிறுத்திய கும்பல் வள்ளுவனை விடுமா?
வள்ளுவன் சிலை என எல்லீஸ் ஏற்றுகொண்டது ஒரு இந்து சாமியாரின் சிலையே, வள்ளுவன் இந்து என எப்பொழுதோ உறுதியாயிற்று
இதனால்தான் தாடி கொண்டை வைத்த வள்ளுவர் கிடைத்தார், இல்லாவிட்டால் கம்பனை போல் ஷேவ் செய்து நிறுத்தியிருப்பார்கள்.
வள்ளுவன் ஒரு இந்து, அதை சொல்ல ஆயிரம் ஆதாரம் குறளில் இருந்தாலும் மிக மிக முக்கியமானது காமத்து பால் எனும் அத்தியாயம்
சமணருக்கும், புத்தருக்கும், மார்ட்டின் லுத்தருக்கு முந்தைய கிறிஸ்தவத்துக்கும் காமம் என்பது துறவிகள் கட்டாயம் அறுத்துவிட வேண்டிய விஷயம்
அதை மிக கட்டாயமாக தவிர்த்து விரதமிருந்தார்கள்
ஆனால் இந்துக்களுக்கு அது அவசியமில்லை என்றது அவர்கள் ஏற்பாடு. வாழ்வோடு கலந்து கடவுளை கொண்டாட சொன்னது, வாழ்விலே கடவுளை உணர சொன்னது
இதனாலே இங்கு கடவுளுக்கும் முனிவர்களுக்கும் மனைவியர் வந்தனர், வள்ளுவனும் அதை தெளிவாக தன் குறளில் வைத்தான்
சமணமோ கிறிஸ்தவமோ பின்பற்றினால் வள்ளுவனால் அதை தொட்டிருக்க முடியுமா?
ஆழ சிந்தியுங்கள் வள்ளுவன் ஒரு இந்து என்பது முழுக்க புலனாகும், திராவிடமும் அதன் கள்ள காதலியான இந்து விரோத சக்திகளும் இங்கு செய்திக்கும் குழப்பம் மிக பெரிது
எல்லாமே குழப்பி வைத்தார்கள், நாம் தான் சிந்தித்து சிந்தித்து தெளியவேண்டும், சிந்தியுங்கள் வள்ளுவனுக்கு நீங்களே காவி உடுத்தி நீறு பூசுவீர்கள்



0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக