கடவுள் இல்லை என்பது தமிழகத்தில் மிக சமீபத்தில்தான் வந்தது, இது 18ம் நூற்றாண்டின் உலக பாணி, 19ம் நூற்றாண்டில் நாத்திகவாதம் ரஷ்யாவில் தொடங்கி சீனாவில் பரவி பல நாடுகளில் பரவிற்று
இந்தியாவிலும் அது பரவியது, முதலில் ராம்சாமிக்கு அதில் விருப்பமில்லை காரணம் ராம்சாமிக்கு நிறைய சொத்து இருந்தது, தன் சொத்துக்காக 90 வயதில் திருமணம் செய்த அந்த நல்லமனதுக்காரரா சொத்துக்களை விட்டு கொடுப்பார்?
அப்படி பெரும் பணக்காரரான அவருக்கு காங்கிரஸிலும் சபையிலும் படிக்காதவர் என்பதால் இடமில்லை, அதுதான் அடிப்படை வன்மமாயிற்று
தன் மேலான குறையினை மறைக்க மேடையில் இருப்பவனெல்லாம் பார்ப்பான், இந்துமதம் பார்ப்பானிய மதம் என ஒப்பாரியினை தொடங்கினார்.
கடவுள் மறுப்பை பேசினாரே தவிர சிகப்பு சட்டை போட அவருக்கு இரு தயக்கம் இருந்தது, ஒன்று அவருக்கு இருந்த ஏகபட்ட சொத்து, இன்னொன்று கம்யூனிசம் பேசினால் தூக்கிபோட்டு மிதிக்கும் வெள்ளையன்
இதனால் கம்யூனிசத்தை தமிழக ஸ்டைலில் இந்து எதிர்ப்பு, சாதி ஒழிப்பு ஆக்கினார்
செஞ்சட்டையினை கருப்பு கொடி ஆக்கினார் தீர்ந்தது விஷயம்
அன்று ஹிட்லர் யூதர் எனும் அறிவாளி சிறுபான்மை சமூகத்தை சாடி பெரும்பான்மை சமூகத்தை வளைத்து அரசியல் செய்தது இவருக்கு தலையில் பல்ப் எறிய வைத்தது
பிராமண எதிர்ப்பு, இந்து எதிர்ப்பு சமூக குழப்பத்தால் ராம்சாமி அரசால் ஏற்படும் நெருக்கடிகளை தவிர்த்தார் , திராவிட நாடு அது இது என சொல்லிகொண்டிருந்ததால் வெள்ளையனுக்கும் ஜின்னா போல ராம்சாமி மனதிற்குள் மகிழ்வானார்
ரஷ்யாவிலும் ஐரோப்பாவிலும் கிறிஸ்தவ சபைக்கு எதிராக கேட்கபட்ட கேள்விகள் எல்லாம், கட்டுரைகள் எல்லாம் அண்ணாவின் ஆங்கில புலமையால் தமிழுக்கு வந்தது
அது பெரியாரின் பகுத்தறிவு சுய அறிவு என அவர் கும்பலால் கொண்டாடபட்டது
மார்க்ஸும், இங்கர்சாலும் கேட்ட கேள்விகள் எல்லாம் ராம்சாமியின் சிந்தனையாக இங்கு கொண்டாடபட்டது
திருச்சபை இருக்கும் இடத்தில் இந்துமதத்தையும், கிறிஸ்தவ துறவிகள் இருக்க்கும் இடத்தில் பிரமாணரையும் வைப்பது மிக எளிதாயிற்று
பகுத்தறிவு பொங்கிய கதை இதுதான், ரஷ்ய பொதுவுடமை இங்கு இட ஒதுக்கீடு என சுருங்கியது
ஆனால் வெளிதெரியாமல் பார்த்துகொண்டார்கள் என்பதுதான் சாமார்த்தியம்
இது எதில் முடிந்தது?
கேரளாவில் ஏற்பட்ட கம்யூனிச வளர்ச்சி போல் இங்கும் அக்கட்சி வளர்ந்திருக்க வேண்டும், ஆனால் பாட்டாளிகள் வர்க்கமோ பெரியார் கும்பலால் வளைக்கபட்டு கம்யூனிஸ்டுக்கு பதில் இங்கு திராவிடம் வளர்ந்தது
பின் என்னாகும்? திராவிட தலைவர்கள் எல்லாம் கோடீஸ்வரர்களாக உயர்ந்தார்கள், சமூகம் உயரவில்லை
இன்று ராம்சாமியின் சொத்துக்களை பாதுகாக்க வீரமணிக்கு பெரியாரும், திரண்டுவிட்ட சொத்துக்களையும் சுவைத்துவிட்ட அதிகாரத்தையும் பாதுகாக்க அந்த திராவிட கொள்கைகள் தேவைபடுகின்றன வேறொன்றுமில்லை
உலகெல்லாம் கம்யூனிசம் துடைக்கபட்டது காலத்தின் விதி , அப்படியே இங்கும் அதனால் ஏற்பட்ட அதிர்வுகளும் ஒரு காலத்தில் நடக்கத்தான் செய்யும்
ராம்சாமி என்றாவது கூலி தொழிலாளிகளுக்கு சம்பள உயர்வு கேட்டு போராடினார் என வரலாற்றில் பார்க்கவே முடியாது, ஆம் அதிகார வர்க்கத்துக்கு எந்நாளும் துணையாய் இருந்தார், பணக்கார அகம்பாவம் அவரிடம் இருந்தது
பெரியார் கல்வி வளர்த்தார் என்பதெல்லாம் அப்பட்டமான பொய்
பெரியார் இல்லாவிட்டால் நீ ஆடுமேய்ப்பாய், மீன் பிடிப்பாய், தக்காளி பறிப்பாய், படிப்பே பெரியார் கொடுத்தது என்பதெல்லாம் மாபெரும் பொய்கள்
இங்கு நவீன கல்வியினை தொடங்கி வைத்தது கிறிஸ்தவ மெஷினரிகள் 1700களிலே நாயக்க மன்னர்களிடம் அனுமதி பெற்று அவர்கள் கல்வி கொடுத்தார்கள்
முதலில் கொடுத்தது கத்தோலிக்கர்கள் குறிப்பாக இயேசு சபை துறவிகள், அதன் பின் பிரிவினை கிறிஸ்தவர்களும் தொடங்கினர்
சந்தேகமில்லை, அந்த கல்வியும் அதன் பின் மக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு தாவுவதும் நடந்தது
இந்தியா இலங்கை என்ற இரு நாடுகளிலும் இது நடக்க சுதாரித்த இந்துக்கள் அன்றே அதாவது 1800களிலே கல்வி நிலையங்கள் தொடங்கினர்
இந்து பள்ளிகள், இந்து கல்லூரிகள் இப்படித்தான் தொடங்கின
ஆதீனங்களும் இன்னும் பல பெரும் இந்து தொழிலதிபரளும் அப்படி அள்ளி கொடுத்தனர்
நெல்லையில் பாரதி பணியாற்றிய இந்து கல்லூரி அன்றே இருந்தது, பெரியாரிடம் வரும் முன் அண்ணா படித்த பச்சையப்பா கல்லூரி அன்றே இருந்தது
இன்னும் ஏராளம்
வெள்ளையர் பள்ளி கல்வியில் நிற்க இந்துக்களோ பல்கலைகழகம் கல்லூரி என சென்றனர், பின்னர் மிஷினரிகளும் கல்லூரி தொடங்கினர்
சேவியர்ஸ், லயோலா என்ற கல்லூரிகள் இப்படி முளைத்தன
செட்டியார்களும், ஆதீனங்களும் கல்வி பணிக்கு அள்ளி கொடுத்தது கொஞ்சமல்ல..
அண்ணாமலை செட்டி, அழகப்ப செட்டி போன்றோரும், மதுரை, திருவாடுதுறை ஆதீனம் எல்லாம் அதில் முக்கியமானவை
இஸ்லாமியரில் பலரும் முன்வந்து கல்வி நிலையம் தொடங்கினர், வடக்கே அலிகார் முதல் இங்கும் ஏகபட்ட இஸ்லாமிய கல்வி நிலையங்கள் உருவாகின
இப்படி கிறிஸ்தவ மெஷினரிகளும், இந்து அமைப்பினரும் , இஸ்லாமியரில் பலரும்கல்வி கொடுத்தபொழுது பெரியார் பிறக்கவே இல்லை
பள்ளி கல்லூரி பெருகி கொண்டிருந்த காலத்தில் பெரியார் மஞ்சள் மண்டியில் கணக்கு எழுதிகொண்டு சம்பாதித்தார்
நீதிகட்சி பெரியாருக்கும் மூத்தது , அந்த நீதிகட்சியிலே தாழ்தத்தபட்டவன் பன்னீர்செல்வம் வழக்கறிஞராக இருந்து லண்டன் மாநாட்டில் பேசிய காட்சி எல்லாம் வரலாற்றில் இருக்கின்றது
பெரியாரா பன்னீர்செல்வம், பிட்டி தியாகராஜர், பனகல் அரசரை எல்லாம் படிக்க வைத்தார்?
அன்றே பள்ளிகள் இருந்தன
நெல்லையில் மட்டும் 150 ஆண்டுக்கு முந்தைய பள்ளிகள் ஏராளம, சிறிய கிராமான வடக்கன் குளத்திலே இருக்கின்றது
பச்சையப்பா கல்லூரி, யாழ்ப்பாண இந்து கல்லூரி இன்னும் இந்தியாவின் பல இந்து கல்லூரிகளுக்கு வயது பெரியாரை விட அதிகம்
இதெல்லாம் கடந்து சுதந்திர இந்தியாவில் கிராமம் எல்லாம் பள்ளி தொடங்கியவன் காமராஜர்
பெரியார் இல்லை என்றால் நான் படித்திருக்க முடியாது என சொல்லும் பதர்கள் எல்லாவற்றிற்கும் ஒன்றை சொல்ல விரும்புகின்றேன்
நான் படித்த நிறுவணம் எல்லாம் பெரியார் மஞ்சள் மண்டியில் கணக்கு எழுதி, காசியில் சுற்றிய காலத்திலே தொடங்கபட்டவை
பெரியாருக்கு முன்பே இங்கு கல்வி இருந்தது
சும்மா ராஜாஜி குலகல்வி அதை பெரியார் தடுத்தார் என்பதெல்லாம் வாக்கு அரசியல்., அரசியல் குப்பை பொய்கள்
ராம்சாமிய்டம் வரும்பொழுதே அண்ணா இரு எம்.ஏ முடித்திருந்தார். ராம்சாமி படிக்க வைத்தாரா?
இன்னும் நீதிகட்சி பன்னீர்செல்வம் போல ஏகபட்ட தாழ்த்தபட்டவர்கள் பெரும் பிம்பமாக உருவானார்கள்
கருணாநிதி 7ம் வகுப்பில் பெயிலாகி ராம்சாமியிடம் ஓடியவர், அவர் படித்திருந்தால் நிச்சயம் படித்திருக்கலாம்
ஏன் கலாம் படிக்கவில்லையா? பெரியார்தான் படிக்க வைத்தாரா?
இங்கு திறமையும் தகுதியும் உள்ள தாழ்த்தபட்டவன் மேலே வர கல்வியும் இன்னபிற வாய்ப்பும அன்றே இருந்தன
அருள் எனும் தாழ்த்தபட்டவன் அன்றே ஐ.ஜி ஆகவில்லையா?
கலைதுறையில் தாழ்த்தபட்ட என்.எஸ்.கே , கருணாநிதி எல்லாம் சம்பாதிக்கவில்லையா? சாதி தடுத்ததா?
சும்மா ராம்சாமி இல்லாவிட்டால் மரமேறுவோம் , மீன்பிடிப்போம், கோழிமேய்ப்பொம் என்பவன் எல்லாம் வறட்டு கற்பனை
ராம்சாமி பெண் விடுதலை என்பதும் மகா பொய், அன்றே ஐரோப்பாவில் பெண்கள் வேலை செய்யும் அவசியம் வந்தபொழுதுதான் பெண் விடுதலை எனும் குரலே வந்தது
இங்கு பெண் எதை செய்யவில்லை வயலில் களை எடுப்பது, வீட்டில் மாடு வளர்ப்பது என அன்றே ஆணுடன் உழைத்தவள்தான் பெண், எதில் பின் தங்கினாள்?
அவளின் பாதுகாப்புக்காக சமூகம் செய்ததை இவர்கள் அடிமைதனம் என்றார்கள்
ராம்சாமி என்ன செய்தார்?
மணியம்மையினை அன்றே அமெரிக்காவுக்கு அனுப்பி 14 பிஎச்டி பட்டங்களை வாங்க உதவினாரா?
பெரியாருக்கு மட்டும் சோறுபொங்கவும், ஊட்டிவிடவும் வீடுவாசல் பராமரிக்கவும் ஒரு பெண் வேண்டும், அதே வேலையினை மற்ற வீட்டு பெண்கள் செய்தால் அதன் பெயர் பெண் அடிமைத்தனம்..
மணியம்மை, ராணி அண்ணாத்துரை , தயாளு, ராசாத்தி எல்லாம் படிக்கமாட்டார்கள் மாறாக ஒழுங்காக வீட்டை பார்த்து பிள்ளைகளை வளர்த்து வாசல்படி தாண்டாமல் குடும்பம் நடத்துவார்கள்
ஆனால் ஊரான் வீட்டு பெண்கள் எல்லாம் புரட்சி செய்ய வேண்டும்
அதுவும் ஒரு மனைவிகட்டி வீட்டில் வைத்தாலே அடிமைதனமாம், அந்த கோஷ்டி செய்தது இரண்டும் மூன்று உலகறிந்த திருமணம், தனி கணக்கு வேறு
ஆக பெண் அடிமைத்தனம் எங்கே இருக்கின்றது? நிச்சயம் அங்கேதான் இருக்கின்றது
ராம்சாமி எவ்வளவுக்கு ஆபத்தான சக்தியாக இருந்தார் என்றால் பாகிஸ்தான் போல் இங்கொரு திராவிட தனிநாடு அமையும் என சொல்லி கொண்டிருந்தார், ஆனால் ஜின்னா இவரை மதிக்கவே இல்லை
பின்னும் கம்யூனிச அலையில் சீனாவோ ரஷ்யாவோ இங்கு தனிநாடு அமைக்கும் என நம்பினார், இவர்களுக்கு தோதாக சீன மாவோவும் உறுமிகொண்டுதான் இருந்தான், ஆனால் காலம் தமிழகத்தை காத்தது
ராம்சாமி ஒரு இந்திய தேசவிரோதி, அவரின் கொள்கைகளும் போதனையும் தனிநாடு ஒன்றாலே சாத்தியம்
ஆனால் அதையும் கேட்காமல் இந்தியாவுடன் தமிழக மக்களை இணையவும் விடாமல் அதே நேரம் தான் மட்டும் சரியாக சம்பாதித்து கொண்டிருந்தது திமுக கோஷ்டி
திமுக அழிந்தால் ராம்சாமி தானாக அழிவார், அதுதான் நிஜம்
உலகில் லெனின் தனி பேரரசு அமைத்தான், மாவோ சீன வரலற்றை மாற்றினான், காஸ்ட்ரோ கூட தனி நாடு கண்டான்
உலகிலே ஒரு புல்லும் புடுங்காமல் புரட்சியாளன் என பெயரெடுத்த ஒரே நபர் ராம்சாமிதான், அவர் அரசிலும் இருந்ததில்லை, ஒரு மாபெரும் திருப்பமும் அவர் செய்ததில்லை
ராம்சாமியினை புரட்சியாளர் என சொன்னது அவர் வீட்டில் கஞ்சி குடித்த ஒரு திண்ணை கோஷ்டிகள், கால கோலத்தில் அதை ஊரெல்லாம் சிலை வைத்தும் சொல்லி கொண்டன
ஆழ சிந்தியுங்கள், ராம்சாமி ஒன்றையும் உருப்படியாக செய்தவரும் அல்ல, பேசியவரும் அல்ல, சாதித்தவரும் அல்ல
எல்லாம் வெறும் மாயை, உருவாக்கபட்ட பெரும்பிம்பம், தேச விரோதத்துக்கும் தமிழர் இந்துவாகவும் இந்தியராகவும் இருந்துவிட கூடாது என உருவாக்கபட்ட பிம்பம்
0 comments:
கருத்துரையிடுக