பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், டிசம்பர் 24

இன்னும் யாரெல்லாம் வந்தார்கள்...

 

அந்த மனிதன் மேல் அவ்வளவு அபிமானம் ஒரு காலமும் இல்லை , எப்படியோ சினிமாவில் நுழைந்து தமிழரை மயக்கி திராவிட அரசியலை ஆட்சிக்கு கொண்டுவந்தார் என்பது உண்மை
சினிமாவிலும் அரசியலும் தன்னை நிலைநிறுத்த பலரை பலிகொடுத்தார் என்பதும், மிகபெரிய தந்திரங்களையெல்லாம் செய்தார் என்பதும் உண்மை, அவரின் தந்திரம் முன்னால் கருணாநிதி காலளவு கூட வரமுடியாது.
ஆனால் அந்த மனிதருக்கு தெய்வத்தின் வரம் இருந்ததை உணரமுடிகின்றது, கர்ணன் போல் இருந்த இடம் தவறாக இருந்தாலும் ஒரு ஆசீர்வாதமும் தெய்வத்தின் சரியான கணக்கும் அவரிடம் இருந்ததை புரிந்து கொள்ள முடிகின்றது.
ஏதோ ஒரு நோக்கத்துக்காக அவர் வந்தார், வென்றார் ஆண்டார் என்பதை இப்பொழுது தெளிவாக பார்க்க முடிகின்றது
இப்பொழுதெல்லாம் அந்த மனிதரின் வாழ்வினை நோக்கும் பொழுது சிந்தனை மாறுகின்றது. அவரை தெய்வம் நடத்தியிருப்பது புரிகின்றது
இலங்கையில் பிறந்து வறுமையில் சிக்கி அவர் இங்கு வரவும், இங்கும் படிக்க வழியின்றி நாடக கூட்டம் செல்லவும் விதி இழுத்து வந்திருக்கின்றது
வசதி இருந்தால் இலங்கையிலே இருந்திருப்பார், தமிழகத்தில் வாய்பிருந்தால் படிக்க சென்றிருப்பார், அவர் வாழ்வில் வறுமை விதியாக செயல்பட்டு மிக சரியாக இழுத்து சென்றிருக்கின்றது
அட அப்பொழுதும் தானாக வென்றிருந்தால் அவரோ அவரின் அரசியலோ இல்லை. தமிழகத்தில் நாத்திக மேகங்கள் சூழ்ந்த பொழுது அவர் சினிமாவில் போராடிகொண்டிருந்தார்
பாடவும் வராமல் வசனம் பேசவும் வராமல் விரக்தியாய் அவர் கழுத்தில் ருத்ராட்சமும் நெற்றியில் விபூதியுமாக முருகனிடம் அழுவதும் கதறுவதுமாய் இருந்தார், அப்படியும் ஒரு காலம் அவருக்கு இருந்தது
அவர் தொட்டதெல்லாம் தோல்வி, ஒரு பக்கம் சொந்த சிக்கல்களும் உறவு சரிவுகளும் ஏராளம்.
கருணாநிதியுடன் அவரை தெய்வமே சேர்த்தது, மறுப்பதற்கில்லை ஆரம்பகால ராமசந்திரனுக்கு கருணாநிதியின் வசனங்கள் கைகொடுத்தன. அந்த நட்பே அவரை திமுகவுக்கும் இழுத்து சென்றது
அங்கும் அவர் கூட்டத்தில் ஒருவராய் இருந்தாரே தவிர நாத்திகம் பேசவில்லை
கருணாநிதி அரசியலில் தீவிரமாய் இருந்த காலத்தில் வசன உலகைவிட்டு விலகிய காலத்திலும் ராம்சந்தர் தொழிலில் கவனமாய் இருந்தார்
அந்த தொழிலிலும் ஒரு நேர்மை இருந்தது, அவர் புரட்சிகட்சி அபிமானி என்றாலும் புரட்சி நடிகர் என்றாலும் மக்களுக்கு தவறான கருத்தை ஒரு இடத்திலும் போதிக்கவில்லை
தமிழக மக்கள் தன்னை உற்று பார்க்கின்றார்கள் கவனிக்கின்றார்கள் என்றவுடன் நல்ல விஷயங்களை சொல்லத்தான் விரும்பினார், கடவுள் மறுப்போ குடியோ சிகரெட்டோ தன் படங்களில் வராமல் பார்த்துகொண்டார், பிரிவினைவாதமோ குதர்க்கமோ காங்கிரஸ் எதிர்ப்போ அவர் படங்களில் செய்யவில்லை
அதை தெய்வமும் பார்த்துகொண்டே இருந்தது
சந்தேகமில்லை அவர் திமுகவில்தான் வளர்ந்தார், ஆம் அர்ஜூனனும் துரியனும் ஒன்றாகத்தான் கங்கை கரையில் வளர்ந்தார்கள்
ராமசந்திரன் மக்களின் அபிமான நடிகர் என உயரத்தில் மின்னினார், சிவாஜியோ யாரோ எதுவோ அவரை அசைக்க முடியவில்லை, அவரின் தர்மம் அவரை உயர்த்திகொண்டே இருந்தது
அவரை எதிர்த்தவர்களெல்லாம் தோற்கும் படி அவருக்கு ஒரு ஜாதகமும் அமைந்திருந்தது.
பின் விதி எம்.ஆர் ராதா துப்பாக்கிவடிவில் வந்தாலும் தெய்வம் அதிலும் அவரை காத்தது, ஆம் அதுகாலம் அவரை அந்த இடத்துக்கு இழுத்து வந்த தெய்வம் அவருக்கு கடமை மிச்சம் இருக்க இரண்டாம் வாழ்வு கொடுத்தது
திமுக ஆட்சிக்கு வந்ததும் அதன் உண்மை முகத்தை உணர்ந்தார் ராமசந்திரன்
அவர் மட்டும் இல்லையென்றால் தமிழகத்தில் ஏது திமுகவுக்கு எதிர்ப்பு? யார் எதிர்சக்தி?
ராமசந்திரன் இல்லையென்றால் தமிழகம் இப்பொழுது குட்டி ஆப்கன்? குட்டி பாகிஸ்தான்? குட்டி முல்லைதீவு ஆயிருக்காதா என்றால் நிச்சயம் ஆகியிருக்கும்
குறைந்தபட்சம் மேற்கு வங்கம் போல் நாசமாயிருக்கும், கருணாநிதி 50 ஆண்டுகால முதல்வராக இருந்திருப்பார், தமிழகத்தில் காஷ்மீரிய தீவிரவாத இயக்கம் போல அவர் குடும்பமே ஏரியாவுக்கு ஒன்றாக ஆண்டு கொண்டிருக்கும், அதில் இந்து மதமும் ஆலயங்களும் சரிந்திருக்கும், நசுங்கியிருக்கும்
அதை தமிழ் தமிழகம் திராவிடம் என மிக சரியாக மறைப்பார் கருணாநிதி‌
நாத்திகமும் போலி தமிழும் அப்பட்டமான இந்தி மற்றும் இந்திய எதிர்ப்பும் கொண்ட திமுக தமிழ்நாட்டை நாசத்திலும் நாசம் செய்திருக்கும்
உரிய நேரத்துக்காக தெய்வம் அவரை திமுகவிலே ஒளித்து வைத்திருந்தது, ஆண்டவனின் விளையாட்டு அர்ஜூனன் வாழ்விலும் அப்படியே, ராமசந்திரன் வாழ்விலும் அப்படியே
தன் பலம் தெரியா அனுமன் போல அடங்கிகிடந்த ராமசந்திரனுக்கு அவர் பலத்தை தெரியவைத்தது இந்திரா காந்தி
அதன் பின் விஸ்வரூபம் எடுத்தார் ராம்சந்தர்
ஒரு விஷயம் நிச்சயம் சொல்லமுடியும், ராமசந்திரன் பக்திமானாய் இருந்தார். கடவுள் மறுப்பு நாத்திகம் இந்து மதத்தாரை புண்படுத்துதல் அவரிடம் இல்லை
இந்து ஆலயங்கள் புணரமைக்க உதவினார். திருவரங்க ஆலயம் முதல் தென்காசி ஆலயம் வரை அவரால் நடந்த திருப்பணிகள் ஏராளம்
அள்ளி கொடுத்ததில் அவருக்கு நிகர் அவரே, அதை அவரின் எதிரியும் மறுக்கமுடியாது
அவரின் வாழ்வினை கூர்ந்து பார்த்தால் ஒரு கட்டத்துக்கு பின் ஒரு சித்தனின் மனநிலை இருந்திருக்கின்றது
சொந்தவாழ்வினை அவர் பெரிதாக நினைக்கவில்லை, கொடுமதியாளனான‌ கணவனை ஜாணகி அடைக்கலம் தேடியபொழுது கொடுத்தார், தன் தொடக்ககால படங்களின் நாயகி எனும் ஒரு இரக்கம் இருந்தது
முடிந்துபோன சொந்தவாழ்வில் இனி யார் வந்தால் என்ன? போனால் என்ன? என்ற ஒரு விரக்தி இருந்தது
ஜெயலலிதாவுக்கும் அவருக்கும் இருந்த உறவு எத்தகையது எனபதை ஜெயலலிதா சொல்கின்றார்
"அவருக்கு என் மேல் இரக்கமே இருந்தது , ஒரு புத்திசாலி பெண் விதிவசத்தால் சினிமாவில் சிக்கிகொண்டாளே எனும் அனுதாபம் இருந்தது
சினிமா தொழிலில் இருந்ததால், அந்த உலகை முழுக்க அறிந்ததால் என்னை காக்கும் கவனத்தில் இருந்தார்
நான் ஒருமுறை வீட்டில் விழுந்து காயமுற்றபொழுது எல்லோரும் என் வீட்டுசாயினை அதாவது பணமிருக்கும் பீரோசாவியினை தேடியபொழுது என்னை மருத்துவமனையில் சேர்த்து சொந்தங்களிடம் கவனமாயிரு அவர்கள் உன் சொத்தில் குறியாய் இருக்கின்றார்கள் என எச்சரித்தது அவர்தான்
அந்த சினிமா உலகில் அவரே எனக்கு பாதுகாப்பும் வழிகாட்டியுமாயிருந்தார், அந்த பலத்தில்தான் நான் நடித்தேன், அப்படியே அவரை தொடர்ந்து அரசியலுக்கும் வந்தேன்"
ஆம், ராமசந்திரனின் வாழ்வின் பல இடங்களில் இதை பார்க்கலாம், பெண்கள் மேல் அவருக்கொரு இரக்கம் இருந்திருக்கின்றது, அதுவும் சினிமா பெண்கள் என்றால் பரிதாபம் மேலோங்கியிருக்கின்றது
சரோஜா தேவியின் கணவர் இறந்தபொழுது அவரை எம்பி ஆக்க கூட முயன்றிருக்கின்றார்
என்னவும் எண்ணிகொள்ளுங்கள், ஆனால் பழையவர்களை மறக்கா ஒரு குணம் அவரிடம் இருந்திருக்கின்றது
பழகியவர்கள், உதவியர்கள் என எல்லோரையும் தேடி சென்று உதவினார், நன்றி எனும் குணம் அவரிடம் இருந்தது.
பத்திரிகையாளர் தொழிலதிபர் முதல் எத்தனையோ பேர் வறுமையுற்றால் ஓடிசென்று உதவியிருகின்றார், வாழ்ந்தவன் கெட கூடாது என்பது அவரின் கொள்கையாய் இருந்திருக்கின்றது
தனக்கு ஒருவன் விசுவாசமாயிருந்தால் தன்னை நம்பினால் அவனை உச்சத்தில் தூக்கி வைக்கும் குணம் அவரிடம் இருந்திருக்கின்றது
அது ஜேப்பியாராக இருந்தாலும் சரி, வலம்புரி ஜாணாக இருந்தாலும் சரி, பிரபாகரனாக இருந்தாலும் சரி, நம்பிவிட்டானா சரி காப்பாற்றிவிடலாம்
இதை சரியாக கவனித்த தமிழகமே எத்தனையோ கட்டுகதைகளை தாண்டி, பொய் புரட்டை தாண்டி அவரை கொண்டாடியது
மக்களின் பசி முதல் ஒவ்வொரு வேதனையும் அனுபவபூர்வமாக அறிந்தவர் என்றமுறையில் மக்களோடு எளிதில் ஒட்டினார்
நிச்சயம் தனிகட்சி அவரின் விருப்பம் அல்ல, காமராஜரோடு ஒட்டவே விரும்பினார் ஆனால் அவரை சேர்க்காமல் காமராஜர் செய்த தவறே இங்கு காங்கிரஸ் காலாவதியாக பெரும் காரணம்
வேறு வழியின்றிதான் தனிகட்சி கண்டார் ராமசந்திரன்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வரம் அமையும்.
பேச்சு, எழுத்து, நடிப்பு, அரசியல், ஓவியம் தொழில் என எதுவோ இறைவனால் கொடுக்கபடும். அதில் அவன் புகழ்பெறுவதை ஆண்டவன் பார்த்துகொண்டே இருப்பான்
உச்சத்தில் இருக்கும் ஒருவன், ஏராளமானோர் தன்னை கவனிக்கும் நிலையில் இருக்கும் ஒருவன் என்ன செய்கின்றான் என கவனமாய் அவன் நோக்கிகொண்டே இருப்பான்
ராமசந்திரனுக்கும் அந்த வாய்ப்பினை அவர் முகம் மூலம் , தொழில் மூலம் ஆண்டவன் வழங்கினான்
அதில் ராமசந்திரன் நல்ல கருத்துக்களை சொன்னதில் ஆண்டவன் மகிழ்ந்தான், அந்த செந்நாய் கூட்டத்தில் ராமசந்திரன் மட்டும் கோவில் யானையாக கடவுளுக்கு அடங்கி நாத்திகம் பேசாமல் இருந்ததில் அவனுக்கு மகிழ்ச்சி
தாயினை மதிப்பது, குடி போன்ற சமூக தீமைகளை தவிர்ப்பது ,ஏழைகளுக்கு இறங்குவது போன்ற நல்ல கருத்துக்களை அவன் சொல்ல சொல்ல ஆண்டவன் மகிழ்ந்தான்
பாடலிலும் படத்திலும் சமூகத்தினை தவறாக திசை திருப்பும் ஒரு வார்த்தையோ காட்சியோ அவன் அனுமதிக்கவில்லை என்பதில் தன் வரம் மிக சரியாக பயன்படுவதை ஆண்டவன் கண்டான்
இந்த பண்புகளால் மென்மேலும் ஆசீர்வாதம் குவிந்தது
சினிமாவில் வசனகாலம் மாறியது, ராமசந்திரன் நின்றார்
வாள்சண்டை காலம் மாறியது , ராமசந்தரன் நின்றார்
நீண்ட பாகவதர் கொண்டை காலம் மாறி மார்டன் படங்கள் வந்தன, ராம்சந்தரின் நின்றார்.
சிவாஜிகணேசன் உட்பட யாரெல்லாமோ வந்தார்கள், கண்ணதாசன் வந்தார், சவால்விட்டு சந்திரபாபு வந்தார் , உதயநிதி போல முக முத்து வந்தார்
இன்னும் யாரெல்லாம் வந்தார்கள்
ஆனால் முருக பக்தரான சின்னப்பதேவர் உட்பட பலர் வந்து ராமசந்திரனை தாங்கிபிடித்தபடியே இருந்தார்கள்
ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொருவர் வந்து அவரை தாங்கினார், அது தெய்வத்தின் அருள்
அந்த அருளே அண்ணாவுக்கு பின்னரான கொடும் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் அவரை தமிழகத்தின் மீட்பராகவும் மாற்றிற்று.
கொடிய நாத்திகத்துக்கும் தேசவிரோத கும்பலுக்கும் இங்கு அவராலே கடிவாளம் இடபட்டது
ராமசந்திரன் வந்திராவிட்டால் தமிழகம் நாத்திக கருப்பு சட்டையின் பிடியில் முழுக்க சிக்கி மிகபெரும் தேசவிரோத செயல்களின் கூடாரமாயிருந்திருக்கும்
முள்ளிவாய்க்கால் போல அடிக்கடி இங்கு மொத்தமாய் ரத்த ஆறு ஓடியிருக்கும், சண்டாள நாத்திக கோஷ்டி காஷ்மீர் போல இங்கும் மாற்றியிருக்கும்
அதை தடுக்க முருகபெருமானால் அனுப்பிவைக்கபட்ட ஒரு அருள்பெற்ற நபர் ராமசந்திரன்
அவர் முருகபக்தர் , காண்பவரை எல்லாம் "ஆண்டவனே.." என்றே அழைப்பார்
நடந்தவைகளை நாம் நினைத்து பார்த்து ராமசந்திரன் இங்கு வந்ததும் நடித்ததும் கட்சி தொடங்கியதும் தமிழகத்தை காக்க தெய்வத்தின் அருளால் அனுப்பட்டவர் என உணர்ந்தை அன்றே ஒருவர் உணர்ந்திருக்கின்றார்
அவரும் முருகபெருமானின் அடியாரே
ஆம் அந்த கிருபானந்தவாரியின் ஞானகண்களுக்கு இந்த காட்சிகள் என்றோ தெரிந்திருக்கின்றன‌
இதனால்தான் "பொன்மனசெம்மல்" என பட்டம் அருளி மனமார வாழ்த்தியிருக்கின்றார்
அம்மாதிரி நல்லவர்களின் வாழ்த்துதான் ராம்சந்திரன் இன்றளவு பழனிச்சாமி உருவில் அமர்ந்து திமுகவுக்கு தண்ணிகாட்ட முடிகின்றது
நம்புகின்றீர்களோ இல்லையோ, திமுக எனும் நாத்திக தேசபிரிவினைவாத இம்சை கட்சி இருக்குமளவும் இங்கு ராமசந்திரன் வாழ்வார், அந்த கோஷ்டிக்கு கடிவாளம் இட்டுகொண்டே ஓட அடிப்பார்
இது தெய்வத்தின் விளையாட்டு, ஆழ கவனித்தால் புரியும்
ஆம் கட்சிக்கும் பதவிக்கும் ஆசைபட்டு தன் மனசாட்சியினை கொன்று கடவுள் மறுப்பு பேசாமல், பெரும் உயரத்தில் இருந்தும் மக்களை ஏமாற்றும் சொல்லை சொல்லாமல் , முடிந்தவரை உதவி, பசிபோக்கி, தனக்கு பின்னும் எல்லா சொத்தையும் ஏழைகளுக்கு விட்டு சென்ற அந்த நல்மனதை ஆண்டவனுக்கு பிடித்திருந்தது
அதனாலே அவன் மூலமே இங்கு நாத்திகத்தை ஓட அடித்து இப்பூமியினை ஓரளவு காத்தும் கொண்டது தெய்வம்
திமுக இருக்கும் காலம் வரை அதிமுகவும் இருக்கும். திமுகவின் தேசவிரோத இந்துவிரோத ஆட்டத்துக்கு அது பதிலடி கொடுத்து ஓட அடித்துகொண்டே இருக்கும்
அதில் ராமசந்திரன் தமிழகத்தை காத்து கொண்டே இருப்பார், திமுக அழியும் வரை அவரும் இங்கே வாழ்ந்து கொண்டேதான் இருப்பார்.



0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக