கிருஸ்துவையும் இந்துத்துவத்தையும் வஞ்சனை காழ்ப்புணர்வு எதுவும் இன்றி உள்வாங்கிய ஒருவரால் தான் இப்படி நிஜங்களை பேசமுடியும். ஸ்டான்லி ராஜன் வட்டத்தில் யாரும் கிருஸ்தவ அன்பர்கள் இருந்தால் இவருக்க ஸ்தோத்திரம் சொல்லி இவரின் நல் வாழ்விற்கு ஜெபிக்கலாம். இருபத்தி ஓராம் நுற்றாண்டில் இந்தியாவில் வாழும் மார்ட்டின் லூதர் கிங்.
#############################################################################
பண்டிகைகள் மதத்தை தாண்டி தேசிய உணர்வினையும் ஒற்றுமையினையும் வளர்க்கும் வாய்புகளில் ஒன்று, இதில் இந்து பண்டிகைகளின் பொழுது ஒரு விசித்திரத்தை எம்மால் உணரமுடியும்
ஒரு கிறிஸ்தவ சமூகத்தில் பிறந்ததால் அதை சரியாக உணர்ந்திருக்கின்றேன், கிறிஸ்தவரில் சில கடும்போக்கு கும்பல் இந்துக்கள் தரும் தீபாவளி பலகாரம் முதல் பலவற்றை உண்ணாது
"அதெல்லாம் பைபிளில் சொன்ன்படி தப்பு, விக்கிரகம் எனும் சிலைக்கு படைப்பதை உண்ண கூடாது" என சொல்லியிருப்பதாக சொல்லி முறைப்பார்கள்
இது மிக பைத்தியகார கிறுக்கு கிறிஸ்தவ குழப்பமான கொள்கை, இது கிறிஸ்தவ அறமும் அல்ல தர்மமும் அல்ல
இதற்கு முதலில் பைபிளின் முழு விஷயத்தையும் தெளிந்து பார்க்க வேண்டும்
பைபிளின் பழைய ஏற்பாடு முழுக்க யூதனுக்கானது, யூதன் என்று கூட சொல்லமுடியாது ஆபிரகாமின் 12 சந்ததிக்கானது
12 சந்ததியில் ஒன்றுதான் யூத இனம். மீதி 11 இனம் உண்டு என்றாலும் அவர்களை பற்றிய அதிக தகவல் இல்லை
(அன்றைய இஸ்ரேலில் 12 இனங்களுக்கும் பாகபாத்தியம் நடந்திருந்தது. யூதேயா என்பது யூதர் பூமி அது போக 11 நாடுகள் இருந்தன எல்லாம் சேர்ந்தே இஸ்ரேல் ஆயிற்று)
எல்லாம் யூத இனதோடே கலந்தாயிற்று , இயேசு சுத்தமான யூத வழிவந்த ஞானி
இந்த 12 கோஷ்டிக்குமான புனிதமான நூல்தான் பைபிளின் பழைய ஏற்பாடு, அதில் ஏகபட்ட சட்டதிட்டம் உண்டு
4731 சட்டம் உண்டு என்றாலும் உணவுக்கான சட்டம் இதுதான்
அதாவது பறவையில் கூரிய அலகு உள்ளவை, விலங்குகளில் நகம் உள்ளவை, குளம்பு இல்லாதவை. கடல் உயிரில் செதில் இல்லாதவை எல்லாம் உண்ண கூடாதவை
விலங்கில் கூட தலை குடல் கொழுப்பு எல்லாம் விலக்கபட்டது, சந்துபாகம் மட்டுமே உண்ண வேண்டியவை
இது இன்னும் பன்றி உண்ணாதே, நண்டு உண்ணாதே,இறால் உண்ணாதே செதில் இல்லா வஞ்சிரம் உண்ணாதே, நகம் கொண்ட விலங்கை உண்ணாதே, முயலை உண்ணாதே என இது கொக்கு, வாத்து, கழுகு என நீளும்
அந்நிய மதத்தாரோடு உண்ணாதே, பாவிகளோடு உண்ணாதே, விபசாரியோடு உண்ணதே, நோயாளியோடு உண்ணாதே என மிக நீண்டு கடைசியில்தான் அந்நிய தெய்வ சிலைக்கு படைக்கபட்டதை உண்ணாதே என முடியும்
அதாவது யூத இனத்துக்கு எது அந்நிய இனமோ அவர்களின் தெய்வங்களுக்கு படைத்ததை உண்ணாதே என்பது
இந்த பழைய ஏற்பாட்டில்தான் பத்து கட்டளை, ஜெருசலேம் கோவில், 10ல் ஒரு பாக தசம காணிக்கை எல்லாம் உண்டு
இயேசு பின்னாளில் வந்து புரட்சி செய்தார், பழைய ஏற்பாட்டினை காலில் போட்டு மிதித்தார். விபசாரிகளோடு உண்டார், பாவிகளோடு ரொட்டி சாப்பிட்டார் இன்னும் ஏராளம்
பத்து கட்டளையினை ஒரே கட்டளையில் "உன்னை போல் உன் அயனாலனையும் நேசி" என அட்க்கினார்
இயேசு சாகும் வரை இஸ்ரேல் எனப்படும் அந்த ஆபிரகாம் சந்ததி பக்கமே சுற்றினார், யூத கலப்பு என்பட்ட சமாரியா பக்கம் வந்தார்
இதை தாண்டி ஒரு அங்குலம் புற சாதி மக்களிடம் இயேசு வரவே இல்லை, ஏன் என்றால் அப்படித்தான்
ஒருவித இஸ்ரேலிய வெறி அவரிடம் இருந்தது, ஆனால் உள்ளுக்குள்ளே அவர்களின் சட்டதிட்டங்களை சாடியதில் அடித்து கொல்லபட்டார்
இயேசு இறந்த பின்னும் அவரின் அப்போஸ்தலர் கூட்டம் அந்த ஆபிரகாம் சந்ததிக்கே நற்செய்தி சொன்னது. மற்ற மக்களை மனிதராக கூட பார்க்கவில்லை
இந்நிலையில்தா இயேசுவின் தலமை சீடன் பீட்டருக்கு ஒரு காட்சி வந்து அசுத்தமான மிருகம் உள்ளிட்டவற்றை உண் என காட்டிற்று
சிலமுறை இது தொடர்ந்தபின் பரிசுத்த ஆவி இறங்கி நற்செய்தியினை அடுத்த இன மக்களுக்கும் சொல்ல அனுமதி கொடுத்தது
அந்த யூத இனம் திருந்தாது ஒரு காலமும் இயேசுவினை கடவுளாக ஏற்காது என்பது பரிசுத்த ஆவிக்கே தெரிந்திருக்கலாம்
இதன் பின் கிறிஸ்தவம் அடுத்த இனத்துக்கு சொல்லபட்டது இங்குதான் புதிய ஏற்பாடு எழுதபட்டது
புதிய ஏற்பாடு என்பது பழைய ஏற்பாடு சரியில்லை என எழுதபட்ட விவகாரம் இல்லையேல் ஏன் புதிதாக ஒன்றை எழுத வேண்டும்
இதில் இயேசுவின் போதனை அப்போஸ்தலர் நடவடிக்கை என சில பக்கம் எழுதி வைத்து கொண்டார்கள்
இப்பொழுது இங்குதான் கிறிஸ்தவருக்கே ஒரு தெளிவே இல்லை
அவர்கள் கிறிஸ்துவை பின்பற்றுவர்கள் என்றால் பழைய ஏற்பாடு தேவை இல்லை புதிய ஏற்பாடு போதும்
அதில் அன்பு அன்பு அன்பு என ஒரே ஒரு விஷயம் மட்டுமே, பழைய சட்டதிட்டம் என எதுவுமில்லை
இவர்கள் பழைய ஏற்பாடும் சேர்ப்பார்கள். அது யூதருக்கானது அல்லவா? நாமெல்லாம் புற இனம் என சொல்லி ஒதுக்கபட்டு பீட்டர் கண்ட காட்சிக்கு பின் இயேசுவழி வந்தவர் அல்லவா என்றாலும் பழைய ஏற்பாட்டை விட மாட்டார்கள்
சரி பழைய ஏற்பாட்டையாவது ஒழுங்காக பின்பற்றுவார்களா என்றால் அதில் சொல்லியிருக்கும் சுன்னத் இவர்களுக்கு கிடையாது
பன்றிமுதல் நண்டு வரை வெளுத்து வாங்குவார்கள் ஆனால் பழைய ஏற்பாட்டை கண்களில் ஒற்றிகொள்வார்கள்
சுன்னத் செய்யவேண்டும் என்பதும் பன்றி உண்ண கூடாது என்பதும் பழைய ஏற்பாட்டு விதி அல்லவா என்றால் அதெல்லாம் கிறிஸ்தவன் பின்பற்ற அவசியம் இல்லை என்பார்கள்
சரி தசம்பாக காணிக்கை ஏன் என்றால் அது பழைய ஏற்பாட்டில் சொல்லபட்டது என்பார்கள்
ஆக நன்றாக கவனியுங்கள்
இவர்கள் யூத மதத்திலே அல்ல காரணம் எவனும் யூதனாக முடியாது அது பிறப்பில் மட்டும் வரும் விஷயம். ஆனால் யூத மத கொள்கையினை எடுத்து கொள்கின்றார்கள்
கிறிஸ்துவழி என்றால் அது இன்னும் குழப்பம் கிறிஸ்து யூதனாக வாழ்ந்து யூதருக்காக செத்தார், அவர் காலத்துக்கு பின் அப்போஸ்தலர்தான் அன்னிய மக்களுக்கு இதை சொன்னார்கள்
அவ்வகையில் கிறிஸ்தவனுக்கு கிறிஸ்துவின் போதனை போதுமே தவிர பழைய ஏற்பாடு எனும் யூதநூல் தேவையே இல்லை
ஒரு சுயநல போதக கூட்டம் தங்கள் லாபத்துக்காக பழைய ஏற்பாட்டில் இருந்து சுன்னத் பன்றிகறி வஞ்சிரம் மீன் போன்றவற்றை விட்டுவிட்டு தசமபாகத்தை பிடித்து கொண்டது
அது இன்னும் நுட்பமாக கிறிஸ்தவர் அந்நிய மக்களோடு பழகி அறிவு பெற்றுவிட கூடாது மூளை சலவை செய்யபட்ட கும்பலாகவே இருக்க வேண்டும் என்பதற்காக "விக்கிரகங்களுக்கு படைத்ததை உண்ணாதே" எனும் வரியினையும் எடுத்துகொண்டது
எதெல்லாம் தங்களுக்கு சாதகமோ அதை எடுப்பார்கள், எதெல்லாம் யூதம் கடும் கட்டுப்பாடு என விதித்ததோ அதை சாய்ஸில் விட்டுவிடுவார்கள்
இந்த கூட்டம்தான் பாரத ஹிந்துமக்கள் தேச ஒற்றுமைக்காக கொடுக்கும் விருந்து உணவுகளை இப்படி சொல்லி இம்சைபடுத்துகின்றது
இது எங்களுக்கு விலக்கு என சொல்லி அவர்கள் மனதை புண்படுத்துகின்றது
ஆனால் அதே கிறிஸ்தவ கும்பலுக்கு பாய்மார்கள் பிரியாணி மட்டும் அலுக்காமல் உள்ளே சென்று கொண்டே இருக்கும் , காரணம் இரு மதமுமே மேற்காசியா இறக்குமதி
இந்த தீட்டு உணவு அதாவது கிறிஸ்தவர் விலக்கி வைக்கும் இந்துக்கள் கொடுக்கும் உணவுக்கான பதில் பைபிளிலே இருக்கின்றது
இயேசுவின் வாழ்வில் அது ஆணிதரமாக இருக்கின்றது
இயேசு பணக்காரரிடமும் சட்ட மேதைகளிடமும் ஆச்சாரமான யூதரிடமும் பழகியவர் அல்ல, அவரின் கூட்டமே பாமரர்கள், முரட்டு மீன்பிடி கோஷ்டிகள், நோயாளிகள், விபச்சாரிகள் என மிக மிக அடிதட்டில் இருந்த அப்பாவி மக்கள்
அவர்களில் சிலர் விலக்கிய பொருளை உண்டனர், சிலர் கைகழுவாமல் அதாவது யூதமுறைபடி சுத்த செய்யாமல் உண்டனர்
இதை சிலர் இயேசுவிடம் சுட்டிகாட்டி கேட்டனர் "இயேசுவே உம் சீடர்கள் யூதராயிருந்தும் தகாததை உண்கின்றார்களே கண்டிக்க கூடாதா?"
இயேசுபெருமான் தனக்கே உரித்தான ஞானத்தில் சொன்னார்
"வெளியில் இருந்து உள்ளே போகும் எதுவும் ஒரு மனிதனை தீட்டுபடுத்தாது அது காலையிலே கழிந்துவிடும்
ஆனால் மனிதன் உள்ளிருந்து வரும் வஞ்சகம், சூது, பிரிவினை, பேராசை இவைதான் ஒருவனுக்கு கேடு"
எவ்வளவு அழகான பதில்?, எவ்வளவு பொருத்தமான வார்த்தைகள்? எவ்வளவு அழகான மானிட நேயம்?
ஆம் இதுதான் கிறிஸ்தவம், இதுதான் உண்மையான கிறிஸ்தவ கொள்கை
இயேசுவே யாரும் எதையும் உண்ணலாம் மனமே முக்கியம் என சொன்னபின்பும் இங்குள்ள "அல்லேலூயா" கோஷ்டிகள் இயேசுவுக்கே பாடம் எடுகின்றன
இவர்கள் இருக்கும் வரை இயேசு இரண்டாமுறை வரபோவதே இல்லை வந்தாலும் பாதியில் ஓடிவிடுவார்
தீபாவளி உணவினை உண்ணமாட்டேன் என சொல்பவன் நல்ல இந்தியனாக இருக்க முடியாது, நல்ல கிறிஸ்தவனாகவும் இருக்க முடியாது
மாறாக அவன் என்றோ மேற்காசியாவில் இருந்த ஒரு காட்டுமிராண்டி கூட்டத்தின், உலகில் யாரோடும் ஒட்டாமல் இருந்த கூட்டத்தின் தொடர்ச்சியாக இருப்பான்
அப்படி இந்தியமோ ஹிந்து நண்பர்களோ அவனுக்கு புறசாதியினர் அல்லது புற இனத்தவர். அவன் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் வாழ்ந்த யூதனாக தன்ன நினைத்து கொள்ளும் மனவியாதி கொண்டவன்
அவன் பின்பற்றிவது கிறிஸ்தவம் அல்ல, அவன் செய்வது இந்து வெறுப்பு இந்திய வெறுப்பு இந்த தேசத்தில் ஒற்றுமையும் அமைதியும் வந்துவிட கூடாது என்ற திட்டமிட்ட சதி
அதுதான் காரணம் அது ஒன்றுதான் காரணம், இல்லாவிடில் இயேசுவே தூக்கிவீசிய பழைய யூத சட்டங்களை பிடித்து ஏன் தொங்கி கொண்டிருக்க போகின்றான்?
இந்த இடத்தில் ஒரு விஷயத்தை கவனியுங்கள்
ஒரு இந்துவால் கிறிஸ்தவன் கொடுப்பதை மகிழ்வோடு உண்ணமுடியும், அது சர்ச்சில் உள்ளதா கிறிஸ்தவன் பைபிள் மேல் உள்ளதா என அவன் கவலைபடுவதில்லை
கிறிஸ்தவன் கொடுக்கும் எதையும் அவன் மகிழ்வாய் உண்பான், கிறிஸ்தவ ஆலயம் வரவும் அவனுக்கு தயக்கமில்லை
ஆனல் கிறிஸ்தவன் இந்து ஆலயம் செல்வதோ, இந்து மக்கள் கொடுப்பதை உண்பதோ கனவிலும் நடக்காத செயல்
ஏன்?
அப்படி ஒரு நஞ்சு அவர்களுக்கு ஊட்டபட்டு ஒரு குறுகிய மனப்பான்மையில் வைக்கபட்டிருக்கின்றார்கள், கிட்டதட்ட இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் யூதனுக்கு இருந்த அதே மகா குறுகிய மனப்பான்மை
ஆனால் இந்துமதம் கடல் போன்ற மனம் கொண்டது, அதனால் எல்லாவற்றையும் எளிதாக கடக்க முடிகின்றது ஏற்க முடிகின்றது
இரு விஷயத்தையும் சீர் தூக்குங்கள் எது சால சிறந்தது என்றால் நிச்சயம் இந்து வழியே அதில் சந்தேகமில்லை
எவனாவது கிறிஸ்தவன் உள்ளன்போடு இந்து நண்பர்கள் கொடுக்கும் தீபாவளி பலகாரத்தை கிறிஸ்தவ பெயர் சொல்லி மறுத்தால் ஆச்சரியபடாதீர்கள்
அவன் அறிவு மங்கிவிவிட்டது என்பதற்காக வருந்தி கண்ணீர் விட்டுவிட்டு இயேசு சொன்னதையே சொல்லுங்கள்
"வெளியில் இருந்து உள்ளே போகும் எதுவும் ஒரு மனிதனை தீட்டுபடுத்தாது அது காலையிலே கழிந்துவிடும்
ஆனால் மனிதன் உள்ளிருந்து வரும் வஞ்சகம், சூது, பிரிவினை, பேராசை, சுயநலம் இவைதான் ஒருவனுக்கு கேடு"
0 comments:
கருத்துரையிடுக