பகிர்ந்து கொண்டவர்கள்!

ஞாயிறு, ஆகஸ்ட் 2

மாரிதாஸ் வீட்டில் காவல்துறை

மாரிதாஸ் வீட்டில் காவல்துறை சோதனை என செய்திகள் வந்தன, சட்டம் தன் கடமையினை செய்தது
ஆனால் மாதமிருமுறை இந்துக்களை வம்பிழுக்கும் முரசொலி அலுவலகத்துக்கோ பெரியார் திடலுக்கோ ஒரு காலமும் சட்டம் தன் கடமையினை செய்யாது, அது ஏன் என்றால் அப்படித்தான்
திராவிட பத்திரிகைகள் இந்நாட்டையும் இந்துமதத்தையும் கிழித்ததும் வஞ்சித்து பழித்ததும் கொஞ்சமல்ல, அவைகள் மேல் சட்டம் என்றாவது கடமையினை செய்ததா?
இதில் ஒரு விஷயம் கொஞ்சம் நோக்கதக்கது'
இந்தியாவில் தமிழ்நாடு சுயாட்சி பகுதி போலவும் அதை திமுகவும் அதிமுகவும் குத்தகைக்கு எடுத்திருப்பது போலவும் காட்சிகள் நடப்பது சரியல்ல‌
இந்த திமுகவும் அதிமுகவும் ஒருமாதிரி புரிதலில் இருப்பவை. இதில் திமுக என்பது பாம்பு, அதிமுக என்பது பாம்பை காட்டி பிழைக்கும் நரி
இதுதான் 1970ல் இருந்து இங்கு நடக்கும் நாடகம்
தேசபிரிவினை இந்து எதிர்பு என ஒருமாதிரி அரசியல் நாடகம் நடத்தும் திமுக, அய்யயோ இந்த அராஜக கும்பலிடம் இருந்து உங்களை காப்போர் நாமே என வரும் அதிமுக‌
இந்த நாடகத்தில் ஆட்சி இருவரிடமும் மாறி மாறி இருக்கும். இவர்கள் ஆட்சியில் அவர்கள் தொழில் நடக்கும், இவர்கள் ஆட்சியில் அவர்கள் தொழில் தடையின்றி நடக்கும்
ஜெயா மேலான வழக்குகள் கூட திமுக பாய்ச்சவில்லை, வழக்கினை தொடுத்தவர் சுப்பிரமணியன் சாமி எனும் தேசியவாதி
பின் திமுக அதைபயன்படுத்தி ஜெயலலிதாவினை பலவீனபடுத்தபார்த்ததே அன்றி, ஒழிக்க நினைக்கவில்லை, ஏன்?
அதுதான் 1980களில் நடந்த சம்பவம், திமுகவினை விட அதிமுக எவ்வளவு மோசமானது என்பதை உலகுக்கு சொன்ன விடயம்
ஆம், பிஜூ பட்நாயக் திமுகவினையும் அதிமுகவினையும் இணைக்க விரும்பினார். கருணாநிதி என்பவர் அதற்கு ஒப்பும் கொண்டார்
கருணாநிதி பதவியில் ராம்சந்தர் இருக்கட்டும் கட்சி என்னிடம் இருக்கட்டும் கொள்கை முக்கியம் அதாவது தமிழகம் உருப்படாமல் போகவேண்டும் இந்தியாவோடு ஒட்ட கூடாது, இங்கு தேசியம் வளர கூடாது எனும் ஒரே நினைப்பில் இருந்தார்
அப்படி அவர் ஒரே சிந்தனையாய் இறங்கி வந்தபொழுது அதில் இருந்த ஆபத்தினை ராம்சந்தரே சுட்டிகாட்டினார்
ஆம் திமுகவும் அதிமுகவும் ஒன்றாக இணைந்தால் எதிர்கட்சியாக தேசிய கட்சியான காங்கிரஸ் வளரும் ஆபத்து இருந்தது, அந்த வெற்றிடத்தில் தேசியம் வளரும்
இதை ராம்சந்தர் சுட்டிகாட்டியபொழுது அலறி ஓடி பின்வாங்கினார் கருணாநிதி
அன்று இந்திரா இன்று மோடி அவ்வளவுதான் வித்தியாசம் மற்றபடி இன்று ராம்சந்தர் பழனிச்சாமி கோஷ்டி வடிவிலும் கருணாநிதி ஸ்டாலின் கோஷ்டி வடிவிலும் அப்படியே இருக்கின்றார்கள்
இங்கு தேசியம் வளரகூடாது என்பதற்காக மெல்லிய புரிதலில் மாரிதாஸுக்கு ஒரு எச்சரிக்கை கொடுக்கபடுகின்றது
நாம் ஆச்சரியபடுவது ஒன்றே ஒன்றுதான்
அதாவது சோ ராமசாமி முன்பு எவ்வளவோ எழுதினார், ஜெயகாந்தனும் எழுதினார்
ஜெயகாந்தனுக்கு கம்யூனிஸ்ட் எனும் அடையாளம் இருந்தது, அகில இந்திய அளவில் கம்யூனிஸ்டுகள் வலுவாக இருந்ததால் அவர்மேல் கைவைக்க மாநில அரசு தயங்கியது
சோ ராமசாமி பார்ப்பான் என்பதால் கைவைக்கவில்லை என அடிக்கடி சொல்வார் கருணாநிதி, ஆனால் கருணாநிதியும் துக்ளக் அலுவலகம் மேல் என்ன நடவடிக்கை எடுத்தார் என்றால் ஒன்றுமில்லை
ஆனால் இன்று மாரிதாஸ் மேல் ரெய்டு நடந்திருக்கின்றது, இதிலிருந்து என்ன தெரிகின்றது?
திமுகவும் அதிமுகவும் ஒரே அணிக்கு வந்ததும், மாரிதாஸ் என்பவரை எல்லா தரப்பும் கைவிட்டதும் தெரிகின்றது
ஆம் தமிழகம் இந்தியாவின் சுயாட்சி பகுதி அதை அதிமுகவும் திமுகவும் குத்தகைக்கு எடுத்தாயிற்று, அவர்களை மீறி யார் பேசினாலும் விடமாட்டார்கள், தொலைத்துவிடுவார்கள்
சுயாட்சி என்பதால் டெல்லியும் தலையிடாது, இங்குள்ள தலைவிதி அது
மாரிதாஸ் மட்டும் துக்ளக் நிரூபராக இருந்து இந்த வீடியோவினை வெளியிட்டால் ஏதும் நடந்திருக்கும்? நிச்சயம் நடந்திருக்காது
ஆரிய பார்பானிய சதி என்பதை இதுகாலம் நம்பவில்லை, இனி கொஞ்சம் நம்பத்தான் வேண்டியிருக்கின்றது
ஆனாலும் மாரிதாஸுக்கு மக்களின் ஆத்மபலம் இருக்கின்றது, அப்பலம் அவரை நிச்சயம் மீட்டெடுக்கும்
ஸ்டான்லி ராஜன் 


0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக