பகிர்ந்து கொண்டவர்கள்!

ஞாயிறு, ஜூலை 12

மூடர் கூட்டம்






கறுப்பர் கூட்டம் என்றொரு கோஷ்டி இந்துமதத்தை பழிக்க தொடங்கியிருக்கின்றது, இது சரியானதல்ல‌
திக திமுக என கடவுள் இல்லா கோஷ்டி சீண்டினாலே விடமுடியாது, இதில் வேற்றுமதத்தவர் இந்துமதத்தை சீண்டுதல் என்பது மிகபெரிய விளைவுகளை ஏற்படுத்தும்
பெரும்பான்மை சமூகம் அமைதியாய் இருக்கும்வரைதான் தமிழ்நாடு அமைதியாய் இருக்கும், மாறாக இன்னொரு மதம் இந்துமதத்தை மட்டமாக சீண்டினால் காலம் தன் கடமையினை செய்யும்.
இந்துமதம் என்பது சாதுதான், ஆனால் சாது மிரண்டால் காடு தாங்காது, நாடு தாங்காது..
சிறு நரி கூட்டம் யானையினை சீண்டி அந்த யானை முழுபலத்தோடு நரி கூட்டத்தை மிதித்து நசுக்க விதி இருந்தால் அதனை யார் மாற்றமுடியும்?
அழியதொடங்கும் அதர்மம் கொஞ்சம் வேகமாக ஆடும், அணைய போகும் விளக்கு கொஞ்சம் ஆடித்தான் அணையும்
அப்படித்தான் சில கூட்டம் கிளம்பியிருக்கின்றது, இதுவரை அட்டகாசம் செய்தவர் எப்படி அழிந்தாரோ அப்படி அழிய தயாராகின்றார்கள் அவ்வளவுதான்..
இந்தியாவில் ஒரு காலமும் நிற பாகுபாடு இல்லை, தொழில் அடிப்படையில் பிரிவுகள் இருந்தன.
இங்கு ராமனும் கறுப்பு, கண்ணனும் கறுப்பு, சோழனும் கறுப்பு, பாண்டியனும் கறுப்பு
சாமியினையே கறுப்பு என வணங்கிய சமூகம் இது, அது ஒரு காலமும் நிறத்தை கொண்டாடியதுமில்லை பழித்ததுமில்லை
கறுப்பு சமூகம் என்ற வார்த்தையினை இங்கு அறிமுகபடுத்தியது பரங்கியன் , அவனே தன் கோட்டை அருகில் இருந்த அடிமை உழைப்பாளிகளுக்கு கறுப்பர் பகுதி என பெயரிட்டான்
அந்த அடிமை கூட்டம் தனக்கு பெயர் சூட்டியவன் யார் என தெரியாமலே கறுப்பர் என சொல்லி திரிவது மடமையின் உச்சம்..
கறுப்பன் என பெயர் சூட்டிய வெள்ளையனை விட்டுவிட்டு, இன்றும் அமெரிக்காவில் கறுப்பு சமூகம் என ஆப்ரிக்கனையும் ஆசியனையும் கொன்றுகுவிக்கும் வெள்ளையனை கண்டுகொள்ளாது
அவன் எந்த நோக்கத்துடன் இங்கு கறுப்பன் என பெயர் சூட்டி இங்கு பிரிவினைவாதம் வளர திட்டமிட்டானோ அதை செய்ய நினைக்கும் மடையர்களை கண்டால் பரிதாபமே மிஞ்சுகின்றது
இந்த ஞான பூமி கறுப்பை கொண்டாடியது, அதை கடவுளாக்கியது, கறுமேகம் முதல் கரிய மண் வரை தெய்வம் தெய்வம் என உச்சத்தில் வைத்து வணங்கியது
கடவுளை கூட கருங்கல்லில் செய்து அதுதான் நிலையானது உறுதியானது என போற்றிய சமூகம் இது
அச்சமூகத்தை, அந்த தர்மத்தை நிறத்தின் பெயரால் பழிப்பது என்பது மடமையின் உச்சம், அந்த இம்சைகள் இந்நாட்டின் சாபக்கேடுகள், அந்த அடிமுட்டாள்கள் இந்த ஞான மரபின் மகத்துவம் தெரியா மடடையர்கள்
அது கறுப்பர் கூட்டம் அல்ல மாறாக மூடர் கூட்டம்

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக