பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், ஜூலை 22

ஸ்டான்லி ராஜனை எழுதவைப்பது தான் காலம். !

இன்று பழுமத்தின்று விட்டு கொட்டைகளை  போட்டதாக நினைத்துக்கொண்டுள்ள பல புள்ளிகளும்  மறந்துபோன  வராலாற்று செய்திகள். ஜுனியர் விகடன் எல்லாம் அன்று மாய்ந்து மாய்ந்து எழுதின. இறுதியில் ஒன்றும் ஆகவில்லை என்றுதான் எண்ணியிருந்தோம். ஆனால் செந்தில் வேலவன் மிகச்சரியாவே இவர்களையெல்லாம் கவனித்துள்ளான். இன்றைய தலைமுறை இவைகளை அறியட்டும். இதனை இவரைத்தவிர  இன்று சொல்வார் யாருமில்லை.  ஸ்டான்லி ராஜனை  எழுதவைப்பது தான் காலம். !

திருச்செந்தூர் வைரவேல் விவகாரம் என்ன ஆனது என கேட்டால், சமூக வெளியில் அதுவும் பால் கமிஷனின் ஆதாரமோ அந்த வைரவேலின் புகைபடமோ எதுவுமே வெளிவராத சூழலில் நம்மால் ஓரளவுக்குத்தான் சொல்லமுடியும்
நாம் நடந்த சம்பவங்களை முருகம்பெருமானின் சில தீர்ப்புகளோடு சொல்கின்றோம் அவ்வளவுதான்
1980களில் ராம்சந்தரும் கருணாநிதியும் ஓய்ந்து கிடந்தனர், ஈழ பிரச்சினை அப்பொழுது முளைக்கவில்லை. ராம்சந்தர் ஆட்சியும் நல்லாட்சி அல்ல‌
சிலர் ராம்சந்தரை ஏன் சீண்டுகின்றாய் என கேட்டால் எம் பதில் இதுதான், அவர்தான் தமிழகம் தமிழகமே ராம் சந்தர் எனும் நிலையில் அவர் நல்ல முடிவெடுத்து தமிழகத்தை தேசியம்பால் திருப்பியிருக்கலாம், தன்னால் எழும்பிய அதர்மத்தை அவரே முடித்திருக்கலாம்
ஆனால் அவரே கட்சி நடத்தி ஊழலுக்கு வழிவிட்டு தன் கட்சியினை அம்போ என விட்டும் சென்றுவிட்டார், அந்த சீரழிவுதான் கண்முன் நடப்பது
1980களில் திருசெந்தூர் ஆலயம் ஆதித்தன்கள் கட்டுபாட்டில் இருந்தது, மன்னார்குடி குடும்பம் போல கருணாநிதியின் குடும்பத்து "நிதி"கள் போல ஏகபட்ட ஆதித்தன்கள் உண்டு
அப்பொழுது அங்கு கணக்குபிள்ளையாக இருந்தது சுப்பிரமணியம் பிள்ளை, அறநிலையதுறை அமைச்சராக இருந்தவர் ஆர்.எம் வீரப்பன்
அப்பொழுதுதான் வைரவேல் விவகாரம் கிளம்பியது, சுப்பிரமணியம் பிள்ளை தற்கொலை செய்தார் என அவர் சடலம் தொங்கிகொண்டிருந்தது
வைரவேல் காணிக்கை வைக்கபட்டதாகவும் அது மறைந்ததாகவும் அதை கண்டித்த சுப்பிரமணியம் பிள்ளை கொல்லபட்டதாகவும் செய்திகள் பரவின‌
ஆதித்தன் குடும்பம் அன்று மகா சக்தி, தினதந்தியின் வீச்சு அப்படி இதனால் விஷயம் அமுக்கபடும் ஆபத்து இருந்தது, ஆட்சி ராம்சந்தருடையது என்பதால் களமிறங்கினார் கருணாநிதி
தான் நம்பாத கடவுளுக்காக நம்பும் அரசியலுடன் களமிறங்கி நடைபயணமெல்லாம் செய்தார், ராம்சந்தர் ஆட்சிக்கு பல்கேரியா கப்பலுக்கு அடுத்து கருணாநிதி எடுத்த பயங்கர அஸ்திரம் இது
விவகாரத்தில் ஆர்.எம் வீரப்பன் பெயர் சிக்கியது, அது என்னவோ தெரியவில்லை ஆர்.எம் வீரப்பன் அறநிலையதுறை அமைச்சராக இருந்த காலங்களில் பிரசித்திபெற்ற கோவிலிலெல்லாம் தீ விபத்து ஏற்பட்டு தேர் உருகியது, காணிக்கை கருகியது, தங்க தேர் எரிந்தது என்ற தகவலெல்லாம் சாதாரணமாக வந்தன‌
நெல்லையப்பர் கோவிலின் வெள்ளத்தேர் அப்படி எரிந்து, எரிந்த வெள்ளியும் கிடைக்கவில்லை என்பது வரலாறு.
சரி அதை விட்டுவிட்டு வைரவேலுக்கு வரலாம்
கருணாநிதி மிக திறமையாக அரசியல் செய்து ராம்சந்தரை சிக்கலில் சிக்க வைத்தார் , ராம் சந்தர் திருச்செந்தூருக்கே நேரடியாக வந்தார், ஒரு முதல்வர் நீதிபதியினை அனுப்ப வேண்டுமா? இல்லை அவர் வந்து யாரையோ மிரட்ட வேண்டுமா? என்ற கேள்விக்கெல்லாம் அன்று பதில் இல்லை
நடக்கும் கொடுமைகளை முருகன் பார்த்து கொண்டே இருந்தார்
கருணாநிதியின் நடைபயணமும் பெரும் ஆதரவும் ராம்சந்தரின் தூக்கம் கெடுத்து பின் பால் கமிஷன் அமைக்கபட்டது
இதில் ஒரு விஷயம் கவனிக்கபட வேண்டும் , ராம்சந்தர் தனி ஒருவன் தம்பிராமையா போல் இருந்தார் , ஆட்சியினை நடத்தியதெல்லாம் வீரப்பனே
பால்கமிஷன் அறிக்கை வரவே இல்லை, விசாரணை நடக்கின்றது என ராம்சந்தர் சமாளித்து கொண்டே இருக்கும் பொழுதுதான், மிக சாகசமாக அந்த அறிக்கையினை கடத்தி வந்து சட்டசபையிலே போட்டு அதிரடி காட்டினார் கருணாநிதி
ஆம், அவரின் அரசியல் அப்படி, எப்படி கடத்தினார் தெரியாது, அனால் அன்று தொடங்கிய சன்முகநாதன் உறவுதான் கருணாநிதி சாகும் பொழுது மெரினாவில்தான் முறிந்தது, அதுதான் கருணாநிதி
ஆனால் பால்கமிஷனும் சுப்பிரமணியம் பிள்ளை கொல்லபட்டார் என்பதோடு நிறுத்தினார், வைரவேல் என்ன ஆனது என்பது பற்றி தகவல் இல்லை, அதற்கு மேல் நீதிபதி பால் என்பவரை காணவே இல்லை அவர் அமெரிக்காவுக்கு ஓடியவர் திரும்பவே இல்லை
டெல்லியில் இருந்த இந்திராவுக்கு இந்துமதம் பிடித்தமானது அல்ல என்பதால் இதை கண்டுகொள்ளவே இல்லை, பாஜக அன்று இல்லை
கடைசியில் வழக்கு சுப்பிரமணியம் பிள்ளையினை கொன்றது யார்? வைரவேல் என்ன ஆனது என தெரியாமலே மறைக்கபட்டு அரசு ஆவணத்தை கடத்தினார் சன்முகநாதன் என நிறைவுபெற்றது
இவ்விவகாரம் உச்சத்தில் இருந்தபொழுதுதான் ஈழசிக்கல் நுழைந்து, அதாவது 1983 இனகலவரம் கொழும்பில் நடந்து தமிழக கவனம் திசைமாற தமிழகம் இவ்விவகாரத்தை மறந்தது
சில திரைமறைவு சமரங்களோடு கருணாநிதி பிரச்சினையினை கைவிட்டார், ஆதித்தன் குடும்பம் ஆம்.எம் வீரப்பன் கூட்டணி எல்லாவற்றையும் மறைத்தது
தமிழகம் வைரவேலையும் அந்த கொலையினையும் மறந்தது , ஆனால் முருகன் மறக்கவில்லை காட்சிகள் கடுமையாய் மாறின‌.
அன்று ஆலயத்தின் மகா முக்கிய பொறுப்பில் இருந்தவர் லாரி விபத்திலே கொல்லபட்டார்
ஆதித்தன் குடும்பம் தன் செல்வாக்கினை இழக்க தொடங்கியது, சிவந்தி ஆதித்தனின் சரிவு தொடங்கியது
இப்பக்கம் ராம்சந்தருக்கு பின் அடுத்த முதல்வர் என சர்வ சக்தியுடன் வலம் வந்த ஆர்.எம் வீரப்பனுக்கு எதிராக யாரும் நினையாதபடி ஜெயலலிதா உருவானார், அதிமுகவே அதிர்ந்தது
திருச்செந்தூர் கோவில் விவகாரத்தை கண்டுகொள்ளா இந்திரா கொல்லபட்டார்
ராம்சந்தர் நோயுற்று பின் நிரந்தர நோயாளியாக அமெரிக்கா ராமசந்திரா மருத்துவமனை என படாதபாடுபட்டார், பின் அவர் காலமும் முடிந்தது
ஆர்.எம் வீரப்பனை அடித்து விரட்டி கட்சியினை கைபற்றி ஆட்சியினையும் கைபற்றிய ஜெயலலிதா பெரும் சக்தியனார், கனவிலும் நினையாதபடி ஆர்.எம் வீரப்பன் சரிந்தார், காத்திருந்து பழி வாங்கினான் முருகன்
ஆனால் பழுத்த நரியான வீரப்பன் பாட்சா படம் மூலம் ரஜினியினை வளைத்து ஜெயலலிதாவுக்கு எதிராக கொம்பு சீவியபொழுது அசாத்தியமாக தப்பினார ரஜினி முருகன் வழிகாட்டினான்
ஆதித்தன் குடும்பம் செல்வாக்கு இழந்து அந்த பெரும் இடத்தை "வெற்றி வேல்" வைகுண்டராஜன் எனும் விவி வைகுண்டராஜன் எளிதாக கைபற்றினார். அன்று அமைதி காத்த சிவந்தி பின்னாளில் வைகுண்டராஜனிடம் பல இடங்களில் தோற்றார்
ஓட விரட்டபட்டார் சிவந்தி, நாடார் சங்கம் கூட அவரை விரட்டி அடித்தது
ஆம் வைரவேலில் சம்பவத்தில் சட்டத்தையும் அதிகாரத்தையும் கொண்டிருந்த கூட்டம் ஓட்டைகளில் தப்பியது
ஆனால் முருகனின் தீர்ப்பில் தப்பமுடியவில்லை, யாரெல்லாம் அந்த கொள்ளையிலும் கொலையிலும் பங்கெடுத்தார்களோ எல்லோருக்கும் அடி விழுந்தது
இன்று ஆர்.எம் வீரப்பன் முதிர்ந்த வயதில் பழனிச்சாமியினை ஏக்கத்தோடு பார்த்து கொண்டிருக்கின்றார், ஆம் அந்த அதிமுகவில் வீரப்பன் சகல அதிகாரத்தோடு வலம் வந்தபொழுது இந்த பழனிச்சாமி கவுன்சிலராக கூட இல்லை
அந்த முருகன் இன்று பழனிச்சாமியாக அமர்ந்து வீரப்பனின் நிம்மதியினை பறித்துவிட்டார், இதைவிட என்ன பழிவாங்கல் வேண்டும்?
சிவந்தி குடும்பம் எல்லா அதிகாரங்களையும் வைகுண்டராஜன் தரப்பினரிடம் இழந்தே விட்டது, வைகுண்டராஜன் மேல் தொழிலில் ஆயிரம் விமர்சனங்களை சொன்னாலும் கோவிலில் அவர் அத்துமீறினார் என்பதை கொடியவனும் சொல்லமுடியாது
கருணாநிதியின் மருமகளும் துணைவியும் அடிக்கடி திருச்செந்தூருக்கு வந்து புலம்புவது ஒன்றும் ரகசியமல்ல‌
அந்த வேலுக்கான நீதியினை கொடுக்க நினையா ராம்சந்தர், வஞ்சகத்துக்கு துணைபோன ராம்சந்தர் மிக மிக நொந்து , கட்சி பற்றிய கவலையோடு செத்தார்
அதை அறவே மறந்த ஜெயாவும் நிம்மதியாக சாகவில்லை
பின்னாளில் ஆர்ம்.எம் வீரப்பனோடு ரகசிய உருவில் இருந்த கருணாநிதிக்கும் நிம்மதி இல்லை, கடைசிகாலத்தில் அவர் சந்தித்த சிக்கல் ஏராளம்.
ஜெயாவினை இயக்கிய சசிகலா இன்று அதல பாதாளத்தில் தொங்குகின்றார்
இன்னும் ஆழமாக சில தரவுகள் சொன்னபடி அந்த சுப்பிரமணியன் பிள்ளைமேலும் பல குற்றசாட்டுக்கள் இருந்ததும் தெரியவந்தது, அவர் கை சுத்தமான கை அல்ல‌
இவை எல்லாம் தமிழர் படித்து சில உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறுகள், கோவிலை தொட்டோரும் அங்கு நடந்த அக்கிரமத்தை மறைத்தோரும் மறைக்க உடன்பட்டோரும் வாழமுடியாது ஆளவும் முடியாது என்பதற்கான சான்றுகள்
ஆம், மானிடன் தன் சாதுர்யத்தால் தப்புவதாக நினைத்தாலும் முருகனின் தீர்ப்பு என்பது மிக மிக சரியாக கிடைத்தே தீரும் என்பதற்கு இவை எல்லாம் சாட்சிகள்
இது எக்காலமும் நிலைபெற்றுவிட்ட சாட்சி, இன்று அரசியல் அது இது என மறைக்கபட்டாலும் அதை மீறி நிலைபெற்றுவிட்ட சாட்சி, காலம் காலத்துக்கும் நின்று பேசும் சாட்சி
ஆம் அந்த வீரப்பனும், சிவந்தியும் சரிவார்கள் என்றோ. கருணாநிதி குடும்பம் கோவிலுக்கு வரும் என்றோ யார் நினைத்து பார்த்திருக்க கூடும்?
தொட கூடாத புனிதமான சந்நிதியினை தொட்டார்கள், எழமுடியா பள்ளத்தில் விழுந்தார்கள்
சட்டத்தின் ஓட்டை, நீதிமன்ற வாதம், சாட்சிகள் குளறுபடி, வானாளாவிய அதிகாரம், அதையும் மீறிய பணபலம், ஊடகபலம் என மல்லுகட்டிய கூட்டத்தால் வாழமுடிந்ததா நிலைக்கத்தான் முடிந்ததா?
மானிட மாயை கற்பனைகளை எல்லாம் உடைத்து தீர்ப்பை கொடுத்தது தெய்வம்...
முருகபெருமான் நடத்திய மிகபெரிய விளையாட்டு இது, அக்கிரமம் செய்த ஒரு கூட்டத்தை அவன் வேல் பெயரால் வைதைத்து பின்னாளைய சாட்சிகள் மூலம் நிருபித்த வரலாறு இது.
உண்மையில் அப்படி ஒரு வேல் உண்டா இல்லையா என்பதே தெரியாது, ஆனால் அங்கு நடந்த பல ஊழல்களும் கொள்ளையும் கொலையும் வேல் பெயரால் வெளிவந்ததுதான் ஆச்சரியம்
ஆம், அகங்காரத்தின் உச்சியில் ஆடும் மானிடன் மேல் கடவுளின் கோபம் வெளிபடும் பொழுது சட்டமோ, பணமோ, அரசியலோ ஒரு மனிதனை ஒருகாலமும் காப்பாற்றாது என்பதே நிஜம், அதுதான் இங்கும் நடந்தது.
"திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்",
ஆம் அங்கு எக்காலமும் அவன் அரசாங்கமே, அதை மாற்ற நினைக்கும் யாரும் தப்பிவிட முடியாது

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக