பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, மே 22

மோடியின் அரசு இதை நிச்சயம் செய்யும்.

நேபாள சர்ச்சை திடீரென ஏற்பட்டிருப்பதாக தமிழக ஊடகங்கள் சொல்லிகொண்டிருக்கின்றன இந்த விடயம் நேற்று நடந்ததல்ல சுமார் 1 வருடமாகவே நடக்கும் சர்ச்சை
இது பற்றி நாம் 8 மாதங்களுக்கு முன்பே சொல்லியிருந்தோம்
இப்பொழுது நேபாளத்துக்கும் இந்தியாவுக்கும் எல்லை தகறாறு முட்டி கொண்டிருக்கின்றது, இது பெரும் சிக்கலை உருவாக்குகின்றது.
இந்தியாவின் வட எல்லையாக இமயமலையில் படர்ந்திருக்கும் நாடு நேபாளம், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உலகின் ஒரே ஒரு இந்துநாடாக அது அரணாக இருந்தது, எதையுமே சரியாக செய்ய தெரியாத காங்கிரஸ் அரசு ஈழத்தில் குழப்பியது போல் நேபாளத்திலும் குழப்ப, அந்த குழப்பத்தை சீனா மிக சரியாக தன் கம்யூனிஸ்ட் அடிபொடிகள் மூலம் பயன்படுத்தி அங்கு தன் பிடியினை இறுக்கிவிட்டது
பழைய நம்பகமான இந்து நேபாளம் இப்பொழுது இல்லை கம்யூனிஸ்டுகள் எனும் குழப்பவாதிகளின் கூடாரமாகி சீனாவுக்கு ஏவல் வேலை செய்யும் தேசமாயிற்று
இப்பொழுது இந்தியா வெளியிட்டிருக்கும் வரைபடத்தில் காலா பாணி , லிம்பியாதுரா, லிபுலேக், எனும் தங்கள் பகுதி சென்றுவிட்டதாகவும் அது தங்கள பகுதி எனவும் வாளை உருவுகின்றது நேப்பாள்
அந்த இடம் திபெத்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் வரும் பகுதி, இதுகாலமும் சிக்கல் இல்லை இப்பொழுது மத்திய அரசு இந்தியாவின் புதிய வரைபடைத்தை சொல்லும் பொழுது வருகின்றார்கள்
கலாபாணி என்பது அந்த ஆறும் கிராமமும் கொண்ட பகுதி இந்தியாவின் ஜார்கண்டை ஒட்டி வரும், ஏற்கனவே மதராசிகள் தங்கள் நாட்டை அதாவது பீகார் மற்றும் உபிமக்கள் நேபாளத்தை ஆக்கிரமிக்கின்றார்கள் எனும் சர்ச்சை நடக்கும் நிலையில் இப்பொழுது நேரடியாக இந்தியா ஆக்கிரமிக்கின்றது என்கின்றது நேப்பாள்
இந்தியா அது எங்கள் பகுதிதான், தேவைபட்டால் இதுபற்றி பேசலாம் என சொல்லிவிட்டு அதன் போக்கில் இருக்கின்றது
உண்மையில் அதன் அருகில் ஒரு கணவாய் உண்டு, திங்கர் பாஸ் என்பார்கள், அதை கடந்தால் அப்பக்கம் திபெத்துக்கு அதாவது சீனாவுக்கு செல்லலாம்
இங்குதான் இப்பக்கம் இந்தியாவும் அப்பக்கம் நேபாளத்தை முன்னால் நிறுத்தி பின்னால் சைனாவும் ஆடுகின்றன
கடந்த அக்டோபரிலே இதை வைத்து சர்ச்சை செய்தது நேபாளம் பின் அடங்கிற்று, இப்பொழுது எல்லையில் இந்தியா கடும் காவலை ஏற்படுத்த, காஷ்மீர் சிக்க தீர்க்கபட்டு அக்சாய் சின் எனப்படும் சீன ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடும் மீட்பில் ஈடுபட சீனாவுக்கு பொறுக்கவில்லை
இந்தியா சில நாட்களுக்கு முன்பு சீன வீரர்களை விரட்டி பரபரப்பினை ஏற்படுத்தியதும் நினைவிருக்கலாம்
கொரோனொவால் உலக சிக்கலை சந்தித்து, உலகில் இருந்து தனித்து நிற்கின்றது சீனா, அதன் எதிர்காலம் அவ்வளவு சிறப்பாக தெரியவில்லை, கைகொடுத்த கம்பெனிகளெல்லாம் நடையினை கட்டுகின்றன‌
எதையாவது செய்துதன் ஆத்திரத்தை காட்ட நினைக்கும் சீனா, நேபாளத்தை தூண்டிவிட்டு ஆட்டம் பார்க்கின்றது
ஒரு காலத்தில் உலகில் ஒரே இந்துநாடு எனும் பெருமையோடு இந்தியாவின் வடக்கு அரணாக இருந்தது நேபாளம், இந்தியா அதை எப்பொழுதும் அரவணைத்தது
இந்தியாவில் இந்து எழுச்சி ஏற்பட்ட 1990களில் , நேபாளத்தில் கம்யூனிச எழுச்சி எழுந்தது, இந்தியா அதை திறமையாக கையாண்டு அரசரை நீட்டிக்க செய்து பூட்டான் போல நேபாளத்தையும் கையில் வைத்திருக்க வேண்டும், செய்யவில்லை
வாஜ்பாய் அரசு ஓரளவுக்கு எல்லைகளை வலுபடுத்தியது, கார்கில் மீட்பெல்லாம் அப்படித்தான். ஆனால் கூட்டணி என்பது நேபாளத்தில் அவர் கைகளை கட்டியது, இந்து நாடான நேபாளத்தில் இந்துத்த்வா வாஜ்பாய் அரசு தலையிடுவதை "மதசார்பற்ற" கூட்டணிகள் ஏற்காது என யோசித்தார்
வெளியில் தெரியபடாமல் செய்யபட்ட பல ஆப்பரேஷன்கள் சொதப்பின, 2001ல் நடந்த நேப்பாள் அரச குடும்ப கொலையோடு எல்லாம் மாறிற்று.
இப்பொழுது சீனாவின் அடிப்பொடி நாடு நேப்பாளம், மாவோயிஸ்டுகள் ஆட்டம் நடக்கின்றது அதனால் இப்படித்தான் நடக்கும், ஆனால் மக்கள் இந்துக்கள், ஒரு மத எழுச்சி ஏற்படும் நேரம் எல்லாம் சரியாகும்
ஏன் இப்படி அஞ்சுகின்றது சீனா?
மோடி அரசு 70 ஆண்டுகளில் வட எல்லைகளில் இந்தியா செய்யாத பல சீர்திருத்தங்களை செய்கின்றது, யுத்தம் என வந்தால் 2 மணிநேரத்தில் டெல்லியினை பிடிப்போம் என சீனா சவால்விடும் அளவு வட எல்லை பலவீனமாய் இருந்தது
இப்பொழுது மோடி அரசு லடாக்கில் மிகபெரும் ராணுவதளம் , சிக்கிமில் கடும் காவல் என பலபடுத்துகின்றது


இந்த சர்ச்சையினை தொடங்கி வைத்தது யாரென்றால் சாட்சாத் இந்தியாதான், ஆம் காங்கிரஸ் அட்சியின் வரைபடத்தில் இந்த கலபாணி,லிம்பியாதுரா, லிபுலேக் பகுதிகளை ஏனோ விட்டுவிட்டார்கள், நேபாளம் அது தங்களுக்கு என்றது
கடந்தவருடம் இந்தியா வெளியிட்ட வரைபடத்தில் இவைகளை இந்திய பகுதிகளாக அறிவித்தது, உண்மையும் அதுதான்
மன்மோகன் அரசு செய்யா திருத்ததை துணிச்சலாக செய்தார் மோடி,.
அதிலிருந்து வெடித்த சர்ச்சை அவ்வப்போது கிளம்பும், இப்பொழுதும் கிளம்புகின்றது. இந்தியா இதற்கெல்லாம் அஞ்சாது, அது தன் எல்லையினையும் தன் மண்ணையும் பாதுகாக்கும்
மோடியின் அரசு இதை நிச்சயம் செய்யும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
யார் எக்கேடு கேட்டாலும், நாட்டின் மண்ணை எவன் ஆக்கிரமித்தாலும் எதையும் கண்டுகொள்ளாது, இத்தாலிக்கும்பல் மன்மோகன் என்ற பொம்மையை வைத்துக்கொண்டு சிதம்பரம்  போன்ற தேச துரோகிகளின்  வழியாக  நாட்டை சுரண்டியதில் மட்டும் கண்ணும் கருத்தாய் இருந்துள்ளது இதன்பின்னணி என்பதும் உண்மை. 

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக