பகிர்ந்து கொண்டவர்கள்!

சனி, மார்ச் 21

"கைதட்டினால் கோரோனா ஓடுமா?"

அமெரிக்காவின் சில நகரங்களிலும் ஐரோப்பாவிலும் கடும் தடை நீடிக்கின்றது, தடையின் உச்சத்தில் மக்கள் நாளெல்லாம் அடைந்து கிடக்கின்றார்கள், மாலை நேரம் கொஞ்சம் தளத்தபடுகின்றது வீட்டில் ஒரே ஒருவர் வெளிவந்து பொருள் வாங்கலாம்
அந்நேரம் மக்கள் தங்கள் வீட்டின் முற்றம் அல்லது பால்கனிக்கு வருகின்றார்கள், கைகளை தட்டி ஒருவரை ஒருவர் அழைத்து உற்சாகபடுத்துகின்றார்கள், இந்நிலை விரைவில் மாறும் என ஒருவருகொருவர் சொல்லி கொள்கின்றார்கள்
சில நாட்களாக மாலையில் இந்த கைதட்டல் கேட்கின்றது, அவர்கள் அண்டை வீட்டுகாரர்கள் ஒன்றுபோல் நடமாடி பழகியவர்கள், நினையா கொடுந்தடை அவர்களை பிரித்து வைத்ததில் மாலை நேரம் கதைட்டல் மூலம் தங்களுக்கு தாங்களே ஆசுவாசபடுத்துகின்றார்கள்
இது உளவியலாக பெரும் உற்சாகம் கொடுக்கும் விஷயம், கட்டி தழுவ முடியா இடத்தில் கைதட்டி ஆறுதலடைகின்றார்கள்
இந்தியாவில் இதைத்தான் மோடி செய்ய சொன்னார், உலகை கவனித்தவனுக்கு இது புரியும்
மாறாக முரசொலி, விடுதலை படிப்பவனும், முக ஸ்டாலின் தனிபெரும் தலைவன் என நம்பிகொண்டிருப்பவனும், ஈரோட்டு ராம்சாமியின் பகுத்தறிவினை மட்டும் கண்டவனும் "கைதட்டினால் கோரோனா ஓடுமா?" என கேட்கத்தான் செய்வான்
அவனை பரிதாபமாக பார்த்தபடி நகர வேண்டுமே தவிர, அவனிடம் விவாதம் செய்வதை விட கொரொனா கிருமியுடன் பேச்சு வார்த்தை நடத்தலாம்

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக