பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், மார்ச் 30

இவ்வளவு உண்மையாக வேண்டாம். ஆனால் ஆகிவிட்டது.

நமது சந்தேகம் இவ்வளவு உண்மையாக வேண்டாம். ஆனால் ஆகிவிட்டது.
சைனா இப்படியெல்லாம் செய்யுமா என்று எவ்வளவு கேவலமாக வேண்டுமானாலும் சந்தேகப்படுங்கள். கடைசியில் அது உண்மையாக இருக்கும்.
உயிர், இரத்தம், மனிதம் இதெல்லாமே பொருளற்ற சொற்கள். அந்த ஒளிபெற்ற சிறுவர் சொன்னாரே அது போல இது ஒரு போர்தான். இதில் அமெரிக்கா அடி வாங்கும். ஆனால் கடுமையாக சைநாவை எதிர்த்தே ஆகவேண்டும்.
அடுத்த அமெரிக்கா தேர்தலின் கோஷமே சீன எதிர்ப்புதான். அமெரிக்க பொருளாதார ஏற்றம்தான்.
சபாஷ் மீனா என்னும் சிவாஜி கணேசனின் பழைய காமெடிப் படம். அதில் சிவாஜியும் நகைச்சுவை நடிகர் குலதெய்வம் ராஜகோபாலும் செட்டப்பாக ஒரு திட்டம் போடுவார்கள். ராஜகோபால் சில வீடுகளைக் குறிவைத்து கல்லெறிந்து கண்ணாடிகளை உடைப்பார். சிவாஜி தற்செயலாக கண்ணாடி மாற்றித் தருபவராக வந்து சரிசெய்து தருவார். சீன விவகாரம் அது போல இருக்கிறது.

படத்தில் ராஜகோபால் ஒரு வீட்டில் கல்லெறிவதை கொஞ்சம் லேட்டாக்கி விடுவார். சிவாஜி கண்ணாடி உடைந்திருக்கும் என்று நினைத்துப் போகும் போது அப்போதுதான் கல்விழும். கையும் மெய்யுமாக மாட்டுவார். சீனா எப்போது மாட்டும்.

இனி உலகமயமாக்கல் வேலைக்காகாது. ஸ்வதேசி பொருளாதாரத்தை எல்லா நாடுகளும் தற்காப்புக்காகக் கடைப்பிடிக்க ஆரம்பிக்க வேண்டி வரலாம்.


0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக