பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், பிப்ரவரி 26

எந்த கொம்பன்கள் என்ன கதறினாலும் இதுவே எதார்த்தம்

Stanley Rajan
உலகை உற்று பார்கின்றோம்
இந்தியாவில் இந்திய‌ இஸ்லாமியருக்கு ஒரு நெருக்கடியுமில்லை எனினும் வங்கதேச , ரொஹிங்கிய இஸ்லாமியரை அவர்கள் நாட்டுக்கு அனுப்பும் முடிவில் அல்லது அவர்களை முறைபடுத்தும் முடிவில் இருகின்றது இந்தியா.
எனினும் இந்தியாவில் இருந்து இஸ்லாமியர் விரட்டபடுகின்றனர் என்பது போன்ற ஒப்பாரி இந்திய எதிர்கட்சிகளால் பொறுப்பற்றதனமாக கட்டவிழ்த்துவிட படுகின்றது
ஆனால் ஒரு இஸ்லாமிய நாடாவது இந்தியாவில் இருந்து இஸ்லாமியர் வெளியேறினால் அடைக்கலம் கொடுக்க நாங்கள் தயார் என சொல்லவில்லை
பணக்க்கார இஸ்லாமிய நாடுமுதல் பஞ்சத்தில் அடிபடும் நாடுவரை ஒரு நாடும் மூச் இல்லை
இஸ்லாமிய சாம்ராஜ்யங்கள் எதுவும் இந்திய முஸ்லீம்களுக்கு குடியுரிமை வழங்கி நாட்டில் வாழவிடாது, வாய்ப்பே இல்லை
பாகிஸ்தான் பதுங்கி கிடக்கின்றது, எங்கே ஏதும் சொன்னால் நம் தலையில் கட்டிவிடுவார்களோ என கதவை சாத்தி மூலையில் கிடக்கின்றது
ஆக இந்திய இஸ்லாமியரே, உங்களை யாரும் வெளியே தள்ளபோவது இல்லை, நீங்களாக கிளம்பினாலும் ஒரு பயலும் உங்களை ஏற்கவும் தயாராக இல்லை
இன்றைய உலகின் யதார்த்தம் இது
இதை உணர்ந்து அமைதியாக வாழ முயற்சியுங்கள் மீறி ஏதும் செய்தால் உங்களுக்கும் உங்களால் நாட்டின் அமைதிக்கும் சிக்கலே தவிர வேறு ஒன்றும் நடக்காது
எவ்வளவு கத்தினாலும் அழுதாலும் ஒரு பயலும் உங்களை கண்டுகொள்ள போவதில்லை, பாலஸ்தீன சிரிய லிபிய ஏமன் ஆப்கன் மக்களை கண்டுகொள்ளா உலகம் உங்களை கண்டுகொள்ளும் என்பதெல்லாம் ஒரு நாளும் நடக்காது
இத்தேசமே உங்களுக்கான அடையாளம் மற்றும் அடைக்கலம் , வாழ்வு. இங்கு அமைதியாய் வாழபாருங்கள், உங்களுக்கான வாழ்வு உங்கள் கையில்தான் இருக்கின்றது
இது இந்திய கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும்
நீங்கள் அல்லேலூயா என கத்துவதால் ஐரோப்பாவில் அடைக்கலம் கொடுக்கமாட்டார்கள், அமெரிக்காவில் கேட் திறக்கமாட்டார்கள்
இந்தியாவில் குழப்பம் உங்களால் ஏற்பட்டால் ரசிப்பார்களே தவிர உங்களை காக்க ஒருநாளும் வரமாட்டார்கள்
போப்பும் வரமாட்டார், ஆங்கிலிக்கன், மெதடிஸ்ட் தலைவர்களும் வரமாட்டார்கள், ஐரோப்பிய நாட்டு தலைவர்களும் உங்களை அழைத்து அவர்கள் நாட்டில் வாழவைக்க மாட்டார்கள்
மதம் வேறு, நாடுவேறு அடுத்தநாட்டு மக்கள் வேறு நம் நாட்டு மக்கள் வேறு என்பதில் மிக சரியாய் இருப்பார்கள் அவர்கள்
ஐரோப்பிய நாட்டு மக்களே உள்ளே வர தடுக்கும் பிரிட்டன் , கிறிஸ்தவர் என்பதால் இந்திய கிறிஸ்தவர்களுக்கு வாழ்வு கொடுக்காது.
அதனால் இல்லா குழப்பத்தை பெரிதுபடுத்தி வன்முறையாக்கி நாட்டை நாசமாக்காமல் அமைதியாய் வாழபாருங்கள், அதுதான் உங்களுக்கு நல்லது
எந்த கொம்பன்கள் என்ன கதறினாலும் இதுவே  எதார்த்தம் ... ஆனால் இதெல்லாம் அவர்களுக்கு  புரியாது.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக