பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், டிசம்பர் 23

திராவிடம் வளர்த்த தமிழ்

சூத்திரன் என்றால் இழிவானவன் எனபது தமிழே அறியாத, தமிழ் செய்யுள் அறியாத அந்த ஈரோட்டு ராம்சாமி கிளப்பிவிட்ட கட்டுகதையும், அவனிடம் அடிவருடியாய் நின்ற அண்ணா என்பவன் ஊதிவிட்ட பொய்யுமாகும்
இதோ பெரிய புராணம் சூத்திரன் என்பதற்கு விளக்கம் தருகின்றது இப்படியாக
"அம்பொன் நீடிய அம்பலத்தினில்
ஆடு வார்அடி சூடுவார்
தம்பி ரானடி மைத்தி றத்துயர்
சால்பின் மேன்மைத ரித்துளார்
நம்பு வாய்மையில் நீடு சூத்திர
நற்கு லஞ்செய்த வத்தினால்
இம்பர் ஞாலம் விளக்கி னார்இளை"
இது தமிழ்பாடல்தான், ஆனால் விளங்கும் அளவுக்கா தமிழனுக்கு தமிழ் அறிவு இருக்கின்றது? திராவிடம் வளர்த்த தமிழ் அந்த லட்சணத்தில் இருக்கின்றது என்பதால் நாமே விளக்கம் சொல்கின்றோம்
அதாவது நிலை பெற்ற சிறப்புடைய திருமயிலாபுரி என்னும் பெருநகரத்தில், இத்தகைய பழைமையால் நீண்ட சூத்திரர் என்னும் வேளாளரின் பழங்குலமானது, நன்மைகள் எல்லாவற்றுள்ளும் சிறந்த நன்மை அடையுமாறு, உயர்ந்த சீலமும் புண்ணியமும் உடைய வாயிலார் என்னும் பெயரையுடைய தவப் பேற்றினர் வந்து தோன்றினார்.
கவனித்தீர்களா?
ஆக, “சூத்திரர்” என்றால், கீழ் கண்ட பொருள் பெறப்படுகிறது:
“சூத்ரா சுத்த குலோ தீபவா” என்பது சிவாகமம், இம்மரபினர் தூய்மையும், உயர்வும் உடையவர் என்பது பொருள்
“தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல நன்மை சான்ற நலம்” எனும்போது, சூத்திரர் என்ற குலம், மிக்கத் தொன்மை வாய்ந்தது, நீண்டகாலமாக இருக்கிறது என்பது பொருள்
சூத்திரர் என்றால் ஆட்டுவிப்பவர், இவ்வுலகை உணவானும், அதன் வழியில் நற்பண்பாட்டானுமெலாம் இயக்குபவர் என்பது பொருள்
மிக உயர்வாக சொல்லபட்ட சூத்திரன் அதாவது சமூகம் இயங்க அடிப்படை சூத்திரதாரி என அந்நாளில் சொல்லபட்ட வார்த்தையினை திராவிட கும்பல் எப்படி தமிழருக்கு சொல்லி கொடுத்தது கண்டீர்களா?
இதே பொய்யினைத்தான் இன்றுவரை குடியுரிமை சட்டம் வரை சொல்லிகொண்டிருக்கின்றார்கள், ஒரு காலமும் அவர்கள் திருந்த போவதில்லை

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக