பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, டிசம்பர் 13

ப. சிதம்பரம் அவர்களின் பினை உத்தரவை ரத்து செய்ய கோரி கோரிக்கை

ப. சிதம்பரம் அவர்களின் பினை உத்தரவை ரத்து செய்ய கோரி கோரிக்கை / புகார் மனு.
கோரிக்கை / புகார் மனு
தேதி : _________
பெறுநர்,
மாண்பமை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள், உச்சநீதி மன்றம், புதுதில்லி.
மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள், புதுதில்லி.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், தலைமைச் செயலகம், சென்னை.
வழி : அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்.
மாண்பமை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களுக்கு வணக்கம்! மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கு வணக்கம்! மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம்!
பொருள் : ப. சிதம்பரம் அவர்களின் பினை உத்தரவை ரத்து செய்ய கோரி கோரிக்கை / புகார் மனு.
ஐ.என்.எக்ஸ். மோசடி வழக்கில் கைதாகி ஜாமீன் பெற்றுள்ள ப.சிதம்பரம் நீதிமன்ற உத்தரவுகளை மீறி பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்து வருகிறார். நீதிமன்ற உத்தரவுப்படி பினையில் வருவதற்கான ஜாமீன் நிபந்தனைகளை மீறி சிதம்பரம் அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்திப்பது மற்றும் சாட்சிகளை சீர்குலைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பதும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. அந்த உத்தரவின் நகலை இப்பொழுது இந்து மக்கள் கட்சி வெளியிடுகிறது.
ப.சிதம்பரம் அவர்கள் புதுடெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போதும் சரி அதன் பிறகு சென்னையில் நிருபர்களை சந்தித்த போதும் சரி திருச்சியிலே விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்த போதும் சரி அப்பட்டமாக நீதிமன்றத்தை அவமதித்து இருக்கிறார். நீதிமன்றத்தின் நிபந்தனைகளுக்கு கட்டுப்படாமல் தான்தோன்றித் தனமாக செயல்பட்டிருக்கிறார். எனவே சம்பந்தப்பட்ட புலனாய்வு அமைப்பும் மத்திய மாநில அரசுகளும் இணைந்து உடனடியாக இது சம்பந்தமாக நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவித்து நீதிமன்றத்தின் நிபந்தனைகளை பின்பற்ற மறுக்கும், நீதிமன்றத்தை அவமதிக்கும் சிதம்பரத்தை மீண்டும் உடனடியாக கைது செய்ய வேண்டும். அவருடைய பிணையை ரத்து செய்ய வேண்டும்.
ப.சிதம்பரம் தான் ஏதோ சுதந்திரப் போராட்ட வீரராக ஜெயிலுக்கு சென்று திரும்பி வந்தது போல ஒரு தோற்றத்தை கட்டமைத்துக் கொண்டு இருக்கிறார். தன்னை திலகரோடும் தென்னாட்டுத் திலகர் வ.உ.சிதம்பரனாரோடும், காமராஜரோடும் ஒப்பிட்டு பேசி இருக்கிறார். இவர்களெல்லாம் சுதந்திர போராட்ட வீரர்கள், தியாகிகள் எந்த காலத்திலும் இவர்கள் ஊழல் நடவடிக்கைகளை ஈடுபட்டதில்லை. ஆனால் ப.சிதம்பரம் முழுக்க முழுக்க ஊழல் நடவடிக்கைகளை ஈடுபட்டவர் அவர் மந்திரியாக இருந்த காலத்தில், சக்தி வாய்ந்த மனிதராக இருந்த காலத்திலே பல நேரங்களில் தேசத்தின் நலனுக்கு விரோதமான முடிவுகளை எடுத்தவர்.
ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழல் வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டு அதன் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டு குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருக்கிற காரணத்தினால் அவர் சிறையில் அடைக்கப்பட்டு 100 நாட்களை சிறையில் கழித்து அதன் பின்னர் அவர் நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். ஏதோ நாட்டுக்காக நாட்டு மக்களுக்காக சிறை சென்றது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார். கங்கையில் குளிக்க போவதில்லை என்று சொல்லியிருக்கிறார் கங்கையிலே குளிக்காமல் போனால் கங்கைக்கு தான் மிகவும் நல்லது. ப.சிதம்பரம் போன்றவர்கள் போய் குளித்தால் இவர்கள் செய்திருக்கின்ற பாவம் கங்கையிலும் தொலைந்து போகாது. மேலும் கங்கை நதியின் தூய்மை இவர் போய் குளித்தால் கெட்டுவிடும்.
ப.சிதம்பரத்தின் உடைய மூதாதையர்களும் தமிழர்களும் கங்கை நதியின் புனிதம் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளவர்கள். ஆனால் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு சிதம்பரம் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியை விமர்சனம் செய்வதாக நினைத்துக் கொண்டு நம்முடைய புனிதமான கங்கை நதியை அவமானப் படுத்தி இருக்கிறார். ப.சிதம்பரம் சிறைவாசத்தில் இருந்தபோது தான் தலையணை இல்லாமல் கட்டிலில் படுத்து இருந்ததாகவும் அதன் காரணமாக தனக்கு கழுத்து வலி சரியாகி விட்டதாகவும் சொல்கிறார். இந்த நாட்டில் சுமார் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் பஞ்சுமெத்தை படுக்கை வசதி இல்லாமல் கட்டில் மற்றும் தலையணை இல்லாமல் தரையில்தான் படுக்கிறார்கள். ஆகவே தான் அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். ஆனால் ப.சிதம்பரம் போன்றவர்கள் சிறைச்சாலையில் கிடைக்கும் அனைத்து வசதிகளையும் அனுபவித்துவிட்டு தொடர்ந்து தான் ஏதோ சிறையிலே கஷ்டப்பட்டது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.
ப.சிதம்பரம் பேசுகின்ற பேச்சுக்கு காமராஜரின் சீடர்கள் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய தொண்டர்களும் சிலர் கை தட்டிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் ப.சிதம்பரம் அவர்கள் காமராஜரையும் திலகரையும், வ.உ.சி. சிதம்பரனாரையும் அவமதித்திருக்கிறார். தொடர்ந்து இத்தகைய நடவடிக்கைகளை ப.சிதம்பரம் ஈடுபட்டால் தமிழ்நாடு முழுக்க இந்து மக்கள் கட்சியின் சார்பில் அவருடைய பிணையை ரத்து செய்யக் கோரியும் இத்தகைய கருத்துக்களை வெளிப்படுத்துகின்ற சிதம்பரத்தை கைது செய்யக்கோரியும் இந்து மக்கள் கட்சி ஜனநாயகப் போராட்டங்களில் ஈடுபடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இது சம்மப்ந்தமாக உச்ச நீதி மன்ற கவனத்திற்கும் எடுத்துச்செல்ல உள்ளோம் என்பதை தெரிவிக்கிறோம்.
நன்றி!
இப்படிக்கு,
என்றும் தேசப்பணியில்,

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக