பகிர்ந்து கொண்டவர்கள்!

ஞாயிறு, டிசம்பர் 22

தடம்மாறி கிடப்பது கண்டு நாடே சிரிக்கின்றது

மத்தியில் கூட்டாட்சி மாநில சுயாட்சி என்பது திமுகவின் தாரக மற்றும் அரசியல் மந்திரம், மாநில உரிமைகள் காக்கபட வேண்டும் என்பது அந்த அண்ணாதுரை காலத்தில் இருந்து கருணாநிதி காலம் வரையான நிலைப்பாடு
இந்த அடிப்படையில் தான் மாநில கட்சிகளுடன் எல்லாம் கை குலுக்குவார்கள், இந்த மாநில கட்சி அணியுடன் காங்கிரஸை இழுத்துபோட்டு ஆட்சிக்கு வருவது திமுகவின் தந்திரம்
அந்த மாநில உரிமை கொள்கை இப்பொழுது பல்லிளிக்கின்றது
ஆம் குடியுரிமை கொள்கை எதிர்பார்த்தபடியே சலசலப்பினை ஏற்படுத்துகின்றது, மிக பெரும் நச்சுமரத்தை வெட்டும்பொழுது நாகங்கள் ஓடும், பைசாசங்கள் அலறும். அப்படித்தான் மரண ஓலம் கேட்கின்றது
இந்த ஓலத்தில் ஒரு விஷயத்தை ஒரு மாநில உரிமையினை திமுக உபிக்கள் மறக்கின்றன‌
ஆம் அசாம் அந்த எச்சரிக்கையினை விடுகின்றது, வங்கபோர் காலத்தில் இருந்தே குடியேறிகளுக்கும் அவர்களுக்கும் பொருந்தாது. அன்றில் இருந்தே வந்தேறிகளை வெளியேற்று மாநில உரிமையினை காப்பாற்று என்ற குரல் அங்கு அதிகம்
அந்த குரலில்தான் பிரபல்ல குமார் மகந்தா எனும் இருபத்தெட்டு வயது முதலமைச்சர் எல்லாம் அன்று அங்கு அமர்ந்தார்கள், கருணாநிதியின் கூட்டாளி ஆனார்கள்
இன்று அசாம் அதில் தீவிரமாக இருக்கின்றது, மாநில உரிமை முக்கியம் என கூக்குரலிடுகின்றது
ஆனால் திமுக மாநில உரிமையினை மண்ணுக்குள் புதைத்துவிட்டு தேசிய கட்சிபோல் அனைவருக்கும் குடியுரிமை என கத்திகொண்டிருக்கின்றது
திமுகவின் மாபெரும் சறுக்கல் இது, இனி மாநில உரிமை பற்றி பேசும் அருகதையினை தகுதியினை திமுக இழந்தே விட்டது
திமுகவின் கொள்கை தடம்மாறி கிடப்பது கண்டு நாடே சிரிக்கின்றது
மாநில உரிமை மாநில சுயாட்சி என்பது அந்நிய நாட்டில் இருந்து இந்திய மாநிலம் ஒன்றில் குடியேரிகளை அமர்த்துவதா? இதை மாநில உரிமை கட்சி சொல்லலாமா? என எழும் கேள்விகளுக்கு திமுகவிடம் பதிலே இல்லை
அது தலைகுனிந்து நிற்கின்றது
ஆக என்ன்னாயிற்று
பதவியில் இருந்தால் மத்தியில் கூட்டாட்சி, பதவி இல்லாவிட்டால் மாநிலத்தில் சுயாட்சி , இரண்டுமே இல்லாவிட்டால் அந்நியரை பிடித்து அண்டைமாநிலத்தில் அமர்ந்த்தும் காமெடி ஆட்சி என திமுக நேரத்துக்கொரு கொள்கையில் தடுமாறுவது தெரிகின்றது
திமுகவின் மாலுமி அக்கப்பலை கொள்கை ரீதியாக மாபெரும் சுழலுக்குள் இறக்கிவிட்டார், இனி டைட்டாணிக் கதைதான்.
இனி மாபெரும் கேள்விகளையும் கிண்டல்களையும் திமுக எதிர்கொள்ளும் அது அவர்களின் அடிப்படையினையும் நம்பகதன்மையுமே இந்திய அளவில் தகர்க்கும்

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக