பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், நவம்பர் 11

இந்தியா நொறுங்கி சரியும்.......

உலகம் ஆச்சரியத்திலும் ஒருவிதமான அதிசயமாகவும் இந்தியாவினை நோக்கி கொண்டிருக்கின்றது..

கடந்த சனிகிழமை கொடுக்கபட்ட தீர்ப்பு இந்தியாவில் பெரும் கலவரத்தை உருவாக்கும் என்றும், இத்தோடு இந்தியா நொறுங்கி சரியும் என்றெல்லாம் பல வெளிநாட்டு ஊடகங்கள் எழுதிகொண்டிருந்தன, மிகபெரும் உலகளாவிய சிக்கலை இந்தியா எதிர்கொள்ளும் என்றெல்லாம் கலக்கமான செய்திகள் வந்துகொண்டிருந்தன.

அனைத்தையும் பொய்யாக்கியிருக்கின்றது இந்தியா, அதன் மேலிடமும் அதைவிட முக்கியமாக இந்திய மக்களும் அந்த மாபெரும் அதிசயத்தை செய்திருக்கின்றார்கள்

ரஞ்சன் கோகாயின் நீதிபதிகள் குழு ஒருவார்த்தையினை நோக்கியும் விரலை நீட்டமுடியாதபடி மகா நுணுக்கமான நியாயமான தீர்ப்பினை வழங்கியிருந்தார்கள், மிக நுட்பமான தீர்ப்பு அது. இந்திய வரலாற்றில் மிக முக்கிய தீர்ப்பு

அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை மிக சரியாக முன்னெச்செரிக்கையாக செய்திருந்தது, மக்களும் அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியிருந்தார்கள்

ஒரு வகையில் அரசு மிக மிக தேர்ந்த ஆட்டத்தை ஆடியது, மிக அழகான ராஜதந்திரம் அது

முதலில் தொண்டு நிறுவணங்களை முடக்கினார்கள், கருப்பு பணத்தை ஒழிக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள், இதன் மூலம் தேசத்தின் கருப்பு சக்திகளுக்கான நிதிமூலம் உடைக்கபட்டது

ஐ.என்.ஏ சட்டத்திருத்ததை செய்து அரசின் பார்வை இனி கூர்மையாய் இருக்கும் என எச்சரித்தார்கள்

ராமர்கோவில் தீர்ப்புக்கு முன் ஒரு ஆட்டம் ஆடிபார்க்கத்தான் 370ம் பிரிவினை ரத்து செய்தார்கள், உள்நாடு முதல் வெளிநாடுவரை யாரெல்லாம் ஆடுவார்கள், எப்படி எல்லாம் அடக்க வேண்டும் என பயிற்சி எடுத்தார்கள்

அது அட்டகாசமான பயிற்சியாய் பல அனுபவங்களை கொடுப்பதாய் இருந்தது

எந்த மீடியாவினை எப்படி ஒடுக்க வேண்டும், எந்த கிளர்ச்சி கும்பலை எப்படி கலைக்க வேண்டும், எங்கே பிடுங்கினால் எங்கே கொதிப்பு அடங்கும் என்பதை மகா துல்லியமாக திட்டமிட்டார்கள்

இப்படியாக முழுக்க தயாரான பின் தீர்ப்பினை எதிர்கொண்டார்கள், தீர்ப்புக்கு பின் அமைதியினை நிலைநாட்டுவதில் மிக மிக கவனமாய் பாடுபடுகின்றார்கள்

தீர்ப்புக்கு முன்பும் பின்பும் மோடி நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரை மகா கவனத்துக்குரியது

இதில் மகா மகா முக்கிய பாத்திரம் வகிப்பவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால்

காஷ்மீர் சிக்கலை திறமையாய் கையாண்ட அவர், நேற்று அனைத்து மத தலைவர்களையும் சந்தித்து அரசின் நிலைபாட்டை விளக்கி, நாட்டின் அமைப்புக்கும் வளப்பத்திற்கும் ஒவ்வொரு மத தலைவரும் ஆற்றவேண்டிய பொறுப்பான கடமையினை விளக்கி ஆலோசனையும் பெற்றார்.

யாரும் அஞ்ச வேண்டாம் எல்லா மக்களையும் காக்கும் கடப்பாடு இந்த அரசுக்கு உண்டு என்பதை தெளிவுபடுத்தியிருக்கின்றார்

அஜித் தோவால் இந்தியாவின் தேசிய நாயகனானக உருபெற்றிருக்கும் நேரமிது



பட்டேல், கலாம், கரியப்பா, வங்க போரின் மானெக்ஷா, உளவுதுறையின் ராமன் போன்ற பெரும் பிம்பங்களில் ஒருவராகிவிட்டார்

நாம் இந்த இரு தினமாக யோசித்து யோசித்து பார்ப்பது ஒன்றுதான்

ஒரு பலமிக்க அரசு நினைத்தால் எல்லாமே சாத்தியம், இதோ இந்த அரசு செய்திருக்கின்றது, ஆனால் காங்கிரஸ் ஏன் செய்யவில்லை?

370 நீக்கமோ இல்லை இந்த ஜென்மபூமி சிக்கலோ நிச்சயம் பெரும் சிக்கலாக இருந்திருக்கவில்லை, அவை ஊதிபெருக்கபட்ட பிம்பமாய் இருந்திருக்கின்றன, நினைத்தால் அன்றே காங்கிரஸ் அரசு முடித்திருக்கலாம்

ஆனால் அரசியல் , வாக்கு, கூட்டணி இன்னபிற ஏக கணக்குகளில் அதை நீட்டிகொண்டே சென்று அரசியல் செய்திருக்கின்றார்கள், அதை தனக்கு சாதகமாக திருப்பிய பாஜக காட்சிகளை மாற்றிவிட்டது

உலகமே இந்திய அரசையும் இந்திய மக்களையும் ஆச்சரியமாகவும் பெருமையாகவும் பார்த்துகொண்டிருக்கின்றது.

மிக மிக பதற்றமான தருணத்தை தேசம் கடந்துவிட்டது, எல்லா இந்தியரும் அதை மிக நிதானமாக பொறுப்பாக கடந்திருக்கின்றோம்

இந்த இடத்தில் இஸ்லாமிய மக்களின் உண்மையான தியாகமும் மற்றும் நாட்டுபற்றும் நோக்க கூடியது, நீதிமன்ற தீர்ப்பினை ஏற்றுகொண்டார்கள். இந்தியராய் ஒருங்கிணைந்திருக்கின்றார்கள், அவர்களால் ஆம் அவர்களால் மட்டுமே இந்த அமைதி சாத்தியம்

இந்த அமைதியும் ஒற்றுமையும் நிலைக்கட்டும், தேசம் எல்லா சிக்கலையும் இப்படி விரைவாக தீர்த்துவிட்டு புதுவழியில் நடந்து பெரும் எதிர்காலத்தை உலகில் படைக்கட்டும்

நன்றி Stanley Rajan

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக