பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, ஆகஸ்ட் 23

பட்டர்பிளை எபெக்ட் (Butterfly Effect)

பட்டர்பிளை எபெக்ட் (Butterfly Effect) அப்படீனா சம்பந்தமே இல்லாத ஒரு சிறிய நிகழ்வு எங்கேயோ நடந்த ஒரு பெரிய பூதாகாரமான சம்பவத்தை வெளி கொணர காரணமாக இருத்தல்.
ஒரு ப்ரபலமானவர் வீட்டில் ஒரு ட்ரைவர் ரொம்ப நாளா வேலை செஞ்சிண்டிருக்கான். அவன் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு பாத்திரமாக உள்ளான். மனுஷன்னா கொஞ்சம் அப்படி இப்படி இருப்பது சகஜம் தானே. அது போலத்தான் இந்த ட்ரைவர் கொஞ்சம் தண்ணி பார்ட்டி, அவ்வளவு தான்.
பட்டர்பிளை எபெக்ட் எப்படி தொடங்குதுன்னு பாப்போம். இந்த தண்ணி பார்ட்டி ட்ரைவர் ஒரு இரவில் சரக்கு அடித்துவிட்டு காரை ஒரு மரத்தில் மோதி தானும் மயக்கமாகி விடுகிறான். அந்த பக்கம் வந்த போலீஸ் அதிகாரி இந்த ட்ரைவரை காப்பாற்றி மருத்துவ உதவி செய்து, ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்துகிறார். அப்போது அந்த ட்ரைவர் தான் ப்ரபலமான அந்த வீட்டில் ட்ரைவராக வேலை செய்வதாக கூறுகிறார் இன்னும் போதை தெளியாத நிலையில்.
இதுல விஷயம் என்னவென்றால், இந்த சம்பவம் நடக்கும் சில நாட்கள் முன்னர் தான் அந்த வீட்டு வேலையிலிருந்து அவன் துரத்தப்பட்டிருக்கிறான். ப்ரபலமானவர் வீட்ல வேலை ன்னு சொன்னா தனக்கு தண்டனை கிடைக்காது என்று நினைத்து சொல்றான், பாவம் அவனுக்கு தெரியாது போலீஸ் குறுக்கு விசாரணை செய்வார் என்று.
போலீஸ் அந்த வீட்டிற்கு போன் செய்து இந்த ட்ரைவரை தெரியுமா? உங்க வீட்ல தான் வேலை செய்வதாக கூறுகிறார் என்று கேட்க, அதற்கு அந்த ட்ரைவர் யார் என்றே தெரியாது என்று பதில் வருகிறது. இங்க தான் ஆரம்பிக்குது ஆமாங்க நம்ம பட்டர்பிளை எபெக்ட்..
நம்ம எவ்வளவு பெரிய விஷயம் எல்லாம் செய்து கொடுத்திருக்கோம், இந்த சின்ன விஷயத்துக்கு நம்மள தெரியாதுன்னு சொல்லிட்டாங்களேன்னு ட்ரைவருக்கு கோபம். பாவம் ட்ரைவருக்கு தெரியாது போலீஸ் கார் மோதியதை பற்றி கேட்கவில்லை என்று.
இங்க தான் ட்விஸ்ட். கார் மோதியதை பற்றி கேட்டிருந்தால் கூட அந்த வீட்டிலிருந்து, ட்ரைவரை தெரியும்னு பதில் வந்திருக்கலாம்.. யார் கண்டது ஏன்னா அவங்க வேற ஏதோ பெரிய விஷயமாக இருக்கும்னு நினைச்சது தான் காரணம். இந்த மொத்த பட்டர்பிளை எபெக்ட்.க்கு இந்த இடம் தான் மையப்புள்ளி, இங்கிருந்து தான் பறக்க ஆரம்பிக்கிறது. எப்படி.. போலீஸ் சாதாரணமாக தான் விசாரித்தார். அவருக்கு கார் மோதியதை பற்றி கேட்க கூடாது என்பதில்லை ஏதோ தோனவில்லை.. சும்மா ட்ரைவரை தெரியுமான்னு மட்டும் கேட்டுட்டு விட்டுட்டாரு. இங்க தான் குடி போதையில இருக்கும் ட்ரைவருக்கு அவர்களை பற்றிய உண்மையை சொல்லனும்னு தோன்றிய தருணம்.
கோபம் மேலோங்க நான் அவங்களுக்கு எவ்வளவு பெரிய விஷயம் செய்திருக்கிறேன் என்று சொல்லி உண்மையை கக்குகிறான்.
ஆம் அது ஒரு கொலை சம்பவத்தை பற்றியது. பாதி எரிந்த ஒரு பெண் சடலத்தை பற்றி தான் பேச ஆரம்பித்தான். அது தான் அந்நாட்களில் ஹாட் டாப்பிக்கும் கூட. அந்த கேஸை கண்டு பிடிக்க முடியாம தான் போலீஸ் திணறிக் கொண்டிருந்தார்கள்.
எலி தானாக வந்து பொரியில் மாட்டிக்கிச்சு. மொத்த விஷயத்தையும் கேட்ட போலீஸ் களத்தில் இறங்குகிறார். ஆம் நேராக அந்த ப்ரபலமானவர் வீட்டிற்கு செல்கிறார்.
அங்கு சென்று இயல்பான விசாரணை நடத்துகிறார். கார் மோதியதை பற்றியும் அதற்காக தான் முன்பு போனில் பேசியதாக கூறிவிட்டு இப்போது வந்தது வேற விஷயத்திற்காக என்று சொல்லி கொலை விஷயத்தை ஆரம்பிக்கிறார்.


ப்ரபலமானவரின் மைண்ட் வாய்ஸ்.. “நம்மளாவே பெரிய விஷயம்னு நினைத்து ட்ரைவரை தெரியாது என்று சொன்னது தப்பா போச்சே" சுதாரித்து கொண்டு இவன் ஒரு குடிகாரன், வேலைய சரியா செய்யாததனாலும், ஊரு முழுக்க கடன் வாங்கி திரிவதாலும்.. இப்ப பாருங்க தேவையில்லாமல் சம்பந்தமே இல்லாத தன் பேரை கெடுப்பதாலும் இவனை வேலைய விட்டு நீக்கியதாகவும், இவனை தெரியாது என்று சொன்னதாக கூறுகிறார்.
எப்படியோ ப்ரபலமானவர் சொன்ன முதல் விஷயமே பொய்யா போனதால போலீஸிற்கு இன்னும் சந்தேகம் வரவே பிடியை இறுக்குகிறார். ட்ரைவர் சொன்ன விஷயத்தை குறுக்கு விசாரணை செய்து அவர்கள் வீட்டு பெண் காணாமல் போனதை ஊர்ஜிதம் செய்து கொண்டு சம்பவ இடத்திற்கு ட்ரைவர் மற்றும் ப்ரபலமானவர் இருவரையும் அழைத்துச் செல்கிறார்.
ட்ரைவர் சொன்ன இடத்தில் சொன்னது போல தடயங்கள் கிடைக்க, சாட்சியங்களும் ஒத்துப் போக கைதாகிறார் ப்ரபலமானவர். ஆமாம் ப்ரபலமானவர் ஒரு பெண்மணி அவர் தன் பெண்ணையே கொலை செய்து எரித்து சாட்சியத்தை அழித்தார் எனபது தான் கேஸ்.
ஏன் அவர் ப்ரபலமானவர்ன்னா, அவர் ஒரு ந்யூஸ் சேனல் ஓனரின் மனைவி. இப்போது ந்யூஸ் சேனல் ஓனரும் அதாங்க புருஷனும் விசாரணைக்கு உட்படுத்த படுகிறார். அப்போது மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிறது. அது என்ன..
அந்த மனைவின்னு சொல்லப்பட்டவங்க தன் மனைவியே இல்லை என்றும் அவருக்கு மூன்று திருமணம் நடந்திருப்பதாகவும், அவருடைய பெண் என்னுடைய மகனை காதலித்ததாகவும் அது அந்த பெண்மணிக்கு பிடிக்கவில்லை என்றும் கூறி முடிக்கிறார்
இப்படியாக கொலை விஷயம் ஊர்ஜிதம் ஆகியதால், விசாரணை வேறு கோணத்தை நோக்கி பயணிக்கிறது. அதான் நிர்வாகம்.. பணப்பட்டுவாடா அதற்கான அக்கௌன்ட்ஸ, பேங் ஸ்டேட்மென்ட்ன்னு நீண்டு கொண்டே போன விசாரணை பல பூதங்களை வெளி கொணர்ந்தது.
இவர்களுடைய கணக்கு மொத்தமும் தப்பு கணக்கு மற்றும் தில்லாலங்கடி வேலைகள் நிகழ்த்தப்பட்டதும் தெரிய வருகிறது. பெரிய கையின் உதவி இல்லாமல் இவ்வளவு நடக்க முடியாதேன்னு விசாரணை சூடு பிடிக்க, மாட்டுகிறார் ஒரு கன்சல்டன்ட் என்னும் முன்னாள் மத்திய மந்திரியின் மகன்.
வால் நீண்டு இப்போது சட்டத்தின் கரமானது முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் அவருடைய மகனையும் உள்ளே தள்ள அதாங்க சிறையில் தள்ள காத்திருக்கிறது.
பார்த்தீங்களா பட்டர்பிளை எபெக்ட்டை.
ஒரு ட்ரைவர் உள்ளே போகவேண்டிய இடத்தில் சம்பந்தமே இல்லாத ஒரு கொலை, ப்ரபலமானவர் கைது இப்போ முன்னாள் மத்திய அமைச்சர் கம்பிய எண்ணப் போறாரு. தல சுத்துது இல்லை எனக்கும் தான். வாங்க பட்டர்பிளை பார்க்கலாம்.
Kicha Kicha
இதை கேயாஸ் தியரி என்றும் சொல்லலாம்
இப்ப தெரிகிறதா ஏன் ஜாமீன் கிடைக்கவில்லை என்று
இப்ப நடக்கும் கதை இவ்வளவு தாங்க
எங்கேயோ வடக்கில் பறந்த
பட்டர்பிளை காரைக்குடியில் சுனாமியாக அடித்த கதை

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக