#பா_சிதம்பரம் எனும் சமுத்திரம்...
இன்னைக்கு ப.சி. குடும்பத்து மேல கைவெச்சத அவ்ளோ சாதாரண நிகழ்வா நினச்சுராதீங்க. ப.சி.யோட கைநீளத்தபத்தி தெரிஞ்சவங்களுக்கு, இது எவ்ளோ பெரிய வரலாற்று சம்பவம்னு தெரியும்.
ரா.ஜெ.மலானி, கபில்சிபல், அபிஷேக் சிங்வி, பிரசாந்த்பூஷன், நாரிமன்னு அத்தன பேரோட மொத்த கிரிமினல் மூளையையும் தாங்குன ஒத்த உருவம்தான் பா.சி. பொருளாதாரத்துல மன்மோகன் என்ற குருவை மிஞ்சிய சிஷ்யன். கிட்டத்தட்ட 3/4 சுப்ரமணிய சுவாமி. எனக்கு தெரிஞ்சு... அரசாங்கத்த தவிர்த்து, இந்திய பிரஜைகள்ல மிகப்பெரிய பேக்ரவுன்ட் இருக்குற ஒரே தனிநபர் பா.சி.தான். (சுப்ரமணிய சுவாமியோட லெவல்வேற )
நேஷனல் ஹெரால்டு கேஸில்... சோனியாவயும் ராகுலையும் மிகச்சாதாரணமா கோர்ட்படி ஏறவைத்த... மொஸாத், சிஐஏ போன்ற சர்வதேச உளவு அமைப்புகளுக்கு, லீகல் அட்வைஸரா இருக்கக்கூடிய தகுதியுள்ள '#சுப்ரமணிய #சுவாமி' ன்ற சாணக்யனுக்கே பா.சி.யின் குட்டியை வளைக்க இவ்ளோநாள் ஆயிருக்குன்னா... பா.சி ன்ற அமைதியான சமுத்திரத்தோட ஆழம்புரியும்.
பெரும்பாலும் கிங் மேக்கராதான் இருப்பார். காங்கிரஸ் கட்சியில் என்ன பிரச்சனைனாலும், பா.சி. யின் தீர்வுதான் வேதவாக்கு. சோனியாவுக்கு இவர் மேல அபாரநம்பிக்கை. அகமதுபடேலும், பாசி.யும் சோனியாவின் இருகாதுகள். இவங்க ரெண்டுபேர் சொல்றது மட்டும்தான் அவங்க காதுல விழும். தமிழக காங் தலைவர்கள், அவங்களாவே பா.சி.யை தங்களுக்கு நிகரான ஒரு எதிரியா கற்பனபண்ணி கம்பு சுத்துவாங்க. அவரு இவங்கள மனுஷஜந்தா கூட மதிக்கமாட்டாரு. பாக்கப்போனா... "போனா போகுது, இந்தப் பயல தமிழ்நாடு காங் தலைவரா போட்டு விடுங்க. அப்பதான அந்த வீணாப்போன பயலுகள சமாளிக்க முடியும்" ன்னு பா.சி தான் தலைமைக்கு சொல்லி இருப்பாரு. மேலும் காங் கட்சியின் மேலிடத்துக்கு, பா.சிக்கு தமிழக காங் தலைவர் பதவி தர்றதுன்றது... சிற்பிய கூப்ட்டு அம்மிக்கல் கொத்தத் சொன்ன கதைதான்.
2009-பாராளுமன்ற தேர்தலில் சிவகங்கையில், பா.சி யை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் ராஜகண்ணப்பன் கிட்டத்தட்ட வெற்றி பெற்றுவிட்டார். உள்துறை அமைச்சராக இருந்த பா.சி-யும் தோல்வி முகத்தோட வீட்டுக்கு போய்டார். ஆனா ஆட்சில இருந்த, அடுத்தும் ஆட்சி அமைக்கபோகும், காங் கட்சியின் பவர்புல்லான மேலிடம், ''அமைச்சரவையில் பா.சி கட்டாயம் இடம் பெறணும். அதுக்காக என்ன வேணும்னாலும் செய்யுங்க" ன்னு உத்தரவு போட்டுச்சு. அதுக்கு அப்புறம்தான் 3,354 ஓட்டுல பா.சி வெற்றி பெற்றதா நடுராத்திரில அறிவிச்சாங்க. அப்புறம் பிரணாப் முகர்ஜி மூலம் ஜெ சமாதான படுத்தப்பட்டார். அந்த தேர்தலில் எத்தனையோ, காங் கட்சியின் மிகப்பெரிய தலைகள் வெற்றி பெற்றது, தோற்றது. ஆனால் பெரிதாக யாரையும் கண்டு கொள்ளாத, எண்ணிக்கயை மட்டும் பார்த்த காங் மேலிடம், பா.சி க்கு மட்டும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்ததுலயே, காங்கிரஸில் பா.சி.ன் பவர் என்னன்னு புரியும்.
ராஜீவ் காலத்தில் இருந்து, நேரு குடும்பத்தை பின்புலத்தில் இருந்து, பாதி இயக்குவதே பா.சி.தான். (சஞ்சய் தவிர்த்து, மொத்த இந்திரா குடும்பமும் வெந்தும் வேகாத கேஸ்தான்) வீட்டுக்கு வாங்குற காய் கறியிலிருந்து நாட்டு பட்ஜெட் கணக்கு வரைக்கும் சொந்தமூளை கணக்குதான். ஆயிரகணக்கான பக்கத்த, எந்திரன் 'சிட்டி பாபு'வ விட்டு தேடினாலும், ஒரு தப்பான கணக்க கண்டுபிடிக்க முடியாது. அத்தனை துல்லியம். இப்பகூட மகனின் குளறுபடிகள் தான் மாட்டி விட்டிருக்கு.
'சிபிஐ', 'அமலாக்கத் துறை'ன்ற அதிகார வர்க்கம் வேணும்னா.. 'கும்கி'க்களா இருக்கலாம். ஆனா... இதுவரை அந்த 'கும்கி'களுக்கு பா.சி.ன்ற காட்டுக் கொம்பன் மேல கைவெக்குற தைரியம் வந்ததில்ல. காரணம்... ஒருவேள கைவெச்சு மிஸ்ஸாகி, கொம்பன் தப்பிச்சுட்டாாா... 😮 கும்கிகளின் சோலி முடிஞ்சது. குழி தோண்டி புதைச்சுட்டுதான், கொம்பன் மறுவேல பார்க்கும். ஆனா... இப்ப கும்கி மேல உக்காந்திருக்குற, #மோடின்ற ஒத்தபாகனுக்கு ஈடு குடுக்கணும்னா... நாலஞ்சு கொம்பன் சேரணும். அதனாலதான் பா.சி. கொம்பன் அடக்கி வாசிக்குது.
எல்லா வழிகளையும் அடைச்சிட்டு, பக்காவா ஸ்கெட்ச் போட்டு காங்கிரஸோட ரெட்காயின தூக்கியாச்சி. இந்த பொன்னான நொடியிலிருந்து காங்கிரஸின் நிஜஅழிவு ஆரம்பம் !!! 😴😴😴
Courtesy
Sakthi V
Sakthi V
0 comments:
கருத்துரையிடுக