பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், ஜூன் 19

தமிழ் நாட்டு ஊடகங்கள் - நாசமாகப்போகும் தமிழ் மண்

Maridhas M

கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தொடர்பில் உள்ள முக்கிய நபர்கள் கைது , அத்தோடு இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையவராகச் சிலர் கைது என்று தொடர்ந்து நான்கு நாட்களாகத் தமிழகத்தில் மிக முக்கியமான பிரச்சனை நடந்து கொண்டிருக்க இதை எந்த செய்தி நிறுவனமும் விவாதம் எடுத்து கொள்ளவில்லை.
ஒரு வேலை தமிழகத்தில் தொடர் குண்டு வெடிப்பு நடந்து 100 பேர் இறந்தாலும் - நடந்தாலும் பக்குவமாக தீவிரவாததிற்கு மதம் காரணம் இல்லை என்று பேச வருவார்களே ஒழிய அங்கே ஏன் குறிப்பிட்ட மததின் இளையவர்கள் இப்படி தவறாக யார் வழி நடத்துகிறார்கள். உலகம் முழுவதும் பரவும் இந்த வகாபிச சிந்தனையை எப்படி முறியடிக்க வேண்டும் என்ற எந்த விவாதமும் தமிழக ஊடகங்கள் செய்யாது.
கடந்த 7 நாட்கள் மேலாக நானும் இதைச் சின்ன விவாதம் இல்லை ஒரு ஆவணமாகப் போட்டு முக்கியமான தவறான வழியில் செல்லும் இஸ்லாமிய மாணவர்கள் , இளைஞர்களை நல்வழிப் படுத்த முயல்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன் ஒரு ஊடகமும் ஒரு ஊடகவியாளாளர்களும் முயலவில்லை. அது புதிய தலைமுறை ஆரம்பித்து நியுஸ் 7 தொட்டு ஆனந்த விகடன் வரை தந்திரமாக இந்த செய்தியைக் கடந்து செல்லும் அளவிற்கு மிக கச்சிதமாக 3 ,4 நிமிட செய்தியாக சொல்லிவிட்டு முடித்துக் கொண்டார்கள் அவர்கள் கடமையை.
பாசிச பாஜக என்று ஒருவர் விமானத்தில் கூச்சல் போட்டத்தை இரண்டு நாள் விவாதம் ஆக்கினார்கள் நமது செய்தி ஊடகங்கள். இது முக்கியமாக தெரிந்த இவர்களுக்கு தீவிரவாதிகள் முக்கியமாக தெரியவில்லை????
ஆக இதற்குப் பெயர் என்ன ??? இந்த ஊடக தந்திரத்திற்குப் பெயர் என்ன???


பயம் ???? இந்து மதம் என்றால் வாய் கிழியக் கிழிய வசனம் பேசிய இங்கே இருக்கும் ஊடகத்துறை என்று சொல்லிக்கொள்ளும் எந்த கீழ்த்தரமான ஓநாய்களும் இதை பேசாததன் காரணம் ஒன்று பயம் இல்லை தந்திரம். இதில் எதாவது ஒன்று என்றாலும் இவர்கள் ஊடகத்தில் வேலை செய்யவும் எந்த விசயத்தையும் விவாதம் செய்யவும் தகுதி இல்லாதவர்கள்.
நான் உறுதியாக கூறுகிறேன் இதே நிலை நீடிக்கும் என்றால் இந்துக்கள் விவகாரம் என்றால் மட்டும் குதித்துக் கொண்டு நியாயம் வாய் கிழியப் பேசுவார்கள் , இஸ்லாம் சார்ந்த விசயம் என்றால் ஓடி ஒளிந்து கொள்வார்கள் என்றால் - இந்துக்களையும் தீவிரவாதிகளாகத் தூண்டுவது இவர்களுடைய அயோக்கியத்தனமான குணமாகத் தான் இருக்கும். ஏன் என்றால் நாளை ஒவ்வொரு இந்துவும் "நம் மீது மட்டும் இவ்வளவு பெரிய தாக்குதலை நடத்தக் காரணம் அவர்கள் மீது உள்ள பயம் நம்மீது இவர்களுக்கு இல்லை என்பது தானே தவிர வேறு இல்லை எனவே நாமும் அதன் வழியே நம் நம்பிக்கையைக் காப்பாற்ற முயற்சிகளாம் இங்கே வேறு வழி கிடையாது" என்று முடிவுக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.
அப்படி அமைதியாக இயற்கையாக அனைவரையும் அனைத்து வாழும் குணம் கொண்ட இந்துக்கள் ஒரு நாள் தீவிரவாதிகளாக வெகுண்டு எழுவார்கள் என்றால் அதற்குக் காரணம் திமுக திக போன்ற பச்சையாகத் துரோகம் செய்யும் கட்சிகளும் , ஊடகங்களும் தான் அன்றி வேறு எதுவும் காரணமாக இருக்காது.
ஊடகங்கள் இந்த விவகாரத்தை விவாதம் ஆக்கவில்லை என்றால் மக்கள் ஒன்று கூடி பெரும் விவாதம் ஆக்குங்கள். ஒவ்வொரு செய்தி ஊடகத்தினரின் முகத்திலும் இதை தூக்கி எறிந்து கேள்வி எழுப்புங்கள். இந்த நாட்டின் சாபம் போலி மதசார்பின்மை , அதை தந்திரமாக துக்கிபிடிக்கும்செய்தி ஊடகங்கள்.
-மாரிதாஸ்

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக