பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், ஜூன் 19

பயித்தியங்கள் நிறைந்த சென்னையும் - டமில் நாடும் ..!

படித்ததில் பிடித்தது
சென்னையில் வருடாவருடம் தண்ணீர்ப் பஞ்சம் வரும். ஜனங்கள் ப்ளாஸ்டிக் குடங்களைத் தூக்கிக் கொண்டு அலைமோதுவார்கள். டாங்கர் லாரித் தண்ணீருக்கு மல்லுக்கட்டி ரத்தம் சிந்துவார்கள். ஆட்சியாளர்களைக் கரித்துக் கொட்டுவார்கள். பிறகு மழை வந்து ஏரிகள் கொஞ்சம் நிறைந்த பின்னர் அதையெல்லாம் மறந்துவிட்டு ‘பழைய குருடி கதவத் திறடி’ என்று மீண்டும் தொலைக்காட்சி சீரியல்கள் பார்க்கவும், சினிமா பார்க்கவும், குடித்துவிட்டு சாக்கடையில் மல்லாந்து கிடக்கவும் சென்றுவிடுவார்கள் சென்னைவாசிகள்.


இன்றைக்கு நேற்றைக்கா இந்தக் கூத்து நடந்து கொண்டிருக்கிறது? ஆனால் இந்தவருடம் நிலைமை மிக மோசம் எனக் கேள்விப்படுகிறேன். குண்டி கழுவக்கூடத் தண்ணீரில்லாமல் ஜனங்கள் சிரமப்படுகிறார்கள் என்று வரும் செய்திகள் எனக்குள் ஒரு குரூர சந்தோஷத்தை ஏற்படுத்துகின்றன என்று சொல்ல எனக்கு வெட்கமாய்த்தானிருக்கிறது. இருந்தாலும் பொய் சொல்லி நான் என்னத்தைக் காணப் போகிறேன்?
ஆக்கபூர்வமாக சிந்திப்பவர்கள், செயல்படுபவர்களைத் தமிழர்கள் தேர்ந்தெடுக்காதவரை சென்னை நாறிக் கொண்டுதானிருக்கும். நீங்கள் குடிக்கத் தண்ணீரில்லாமல் சிரமப்படுவீர்கள் என மீண்டும், மீண்டும் என்னைப் போன்ற பலர் சொல்லிக் கொண்டே இருந்தாலும் அதை எவன் கேட்டான்? இருபது ரூபாய் டோக்கனுக்கும், குவார்ட்டர் பிரியாணிக்கும், பணத்திற்கும், இலவசங்களுக்கும் விலைபோய் தவறான அயோக்கியர்களுக்கு ஓட்டுப் போடும்வரை நீங்கள் இப்படித்தான் இருப்பீர்கள் என உங்களுக்கு மெய்யாகவே, மெய்யாகவே சொல்லிக் கொள்கிறேன்.,...சென்னையின் குடிதண்ணீர்ப் பிரச்சினையை ஓரளவிற்கேனும் தீர்க்க முயன்றவர் என்றால் அது ஜெயலலிதாவைத்தான் சொல்வேன். ஒரு அரசியல்வாதியாக, நிர்வாகியாக ஜெயலலிதா மீது எனக்கு எந்த மதிப்போ அல்லது மரியாதையோ இல்லையென்றாலும் அந்தப் பெண்மணி இதற்காக கொஞ்சமேனும் நடவடிக்கை எடுத்தார். வீராணம் திட்டத்தை நிறைவேற்றிய கையோடு மழை நீர் சேகரிப்புத் திட்டமும் கொண்டுவந்தார். அதனை சென்னைவாசிகள் செயல்படுத்தியிருந்தால் இன்றைக்கு சென்னை இதுபோன்ற பஞ்சங்களிலிருந்து சிறிதேனும் தப்பியிருக்கும். இனிமேலாவது இதனை சென்னைவாசிகள் செயல்படுத்துவர்களா என்றால் அதுவும் சந்தேகம்தான்.
சென்னை மாநகராட்சி என்பது ஒரு செயல்படாத, ஊழல்கள் நிறைந்த வெட்டிப்பயல்கள் நிறைந்ததொரு இடம். ஏறக்குறைய ஒருகோடி மக்களை உடைய சென்னையை நிர்வகிக்க வேண்டிய அமைப்பான சென்னை மாநகராட்சி தூர்த்தர்களால் நிறைந்து கிடக்கிறது. அவர்களின் எண்ணமெல்லாம் கொள்ளையடிப்பதேயன்றி பொதுமக்களின் நலன் அல்லவே அல்ல.
புண்ணீயவான் சத்தியமூர்த்தி சென்னை நகர மேயராக பணியாற்றிய காலத்தில் அவரது தீர்க்க தரிசனத்தால் பூண்டி நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டு அதிலிருந்து கிடைத்த தண்ணீரைக் கொண்டு எழுபதுகள் வரைக்கும் சென்னை தாக்குப் பிடித்தது. திராவிடக் கட்சிகளின் கைக்குச் சென்ற சென்னை மாநகராட்சியில் தீர்க்கதரிசனமாவது? மண்ணாவது? வெட்டிப்பயல்களின் கோட்டையல்லவா சென்னை மாநகராட்சி?
எனக்குத் தெரிந்து சென்னையில் தண்ணீர்ப்பஞ்சம் ஆரம்பமானது 1981-82-ஆம் வருடத்திலிருந்துதான். அந்தப் பஞ்சம் ஆரம்பிக்கக் காரணமான புண்ணியவான் எம்.ஜி.ஆர்.தான் என்றால் விசிலடிச்சான் குஞ்சுகள் கோவித்துக் கொள்வார்கள். அரசு அதிகாரிகளைத் தலைவரகளாகக் கொண்டு ஓரளவிற்கு நன்றாக இயங்கிக் கொண்டிருந்த சென்னைக் குடிநீர், வடிகால் அமைப்புகளைக் கலைத்து அவற்றிற்கு ‘வாரியங்கள்’ எனப் பெயரிட்டு, அதற்குத் தலைவர்களாக தனது கட்சித் தலைவர்களை என்றைக்கு எம்.ஜி.ஆர். உட்கார்த்தி வைத்தாரோ அன்றிலிருந்து சென்னையின் குடிநீர் மற்றும் வடிகால் அமைப்புகள் நாசமாகத் துவங்கின. வாரியத்தலைவர்களாக அமர்ந்த கட்சிக்காரர்கள் கொள்ளையடிப்பதில் காட்டிய ஆர்வத்தை குடிநீரில் காட்டவில்லை. இன்றைக்கும் அதே வாரியங்கள்தான்.


டாங்கர் லாரியில் தண்ணீரைக் கொண்டுவந்து வினியோகம் செய்ய ஆரம்பித்ததும் எம்.ஜி.ஆர். காலத்தில்தான். ஐம்பது பைசாவில் ஆரம்பித்து இன்றைக்கு ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்கிற பிஸினஸ் இந்த வட்டர் டாங்கர் பிஸினஸ். அதைச் செய்து கொழுத்தவன், கொழுத்துக் கொண்டிருப்பவன் இரண்டு திராவிடக் கட்சிகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் சென்னையின் குடிநீர்ப் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்க்கவே விடமாட்டார்கள். பல ஆயிரம் கோடி புரளுகிற பிஸினஸ் அது. அதை விட்டுத்தர எந்தக் கட்சிக்காரன் முன்வருவான்?
இன்னொருபுறம் தெலுங்கு கங்கைத் திட்டத்திற்காக ஏறக்குறைய ஆயிரம் கோடிகளை எம்.ஜி.ஆர். அவரது உடன்பிறவா தம்பியான என்.டி.ஆருக்குக் கொடுத்து ஏமாந்தார். அந்தப் பணத்தை வாங்கி என்.டி.ஆர். தனது மாநிலத்தை வளப்படுத்திக் கொண்டார். தெலுங்கு கங்கையில் தண்ணீர் வருகிறதா என்று தெரியவில்லை.
குறைந்தபட்சம் எம்.ஜி.ஆர். அந்த முயற்சியாவது செய்தார். மு.க. தாணுண்டு, தன் குடும்பமுண்டு, தன் கொள்ளையுண்டு என்று சீட்டைத் தேய்த்துவிட்டுப் போனார்.
இதற்கிடையே கோதாவரி நீரை தமிழகத்திற்குக் கொண்டுவர மத்திய அரசு திட்டம் தீட்டினால் அதனை எதிர்க்கப் போகிறார்களாம். சிரிப்புதான் வருகிறது.அந்தத் திட்டத்தையும் நிறுத்தித் தமிழ்நாட்டைக் குட்டிச் சுவராக்கிவிட்டு துணியைக் கிழித்துக் கொண்டு திரியுங்களேன். யாருக்கு நஷ்டம்?


0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக