பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், ஜூன் 20

வருகிறது போராட்டம் - டீம்க கயவாளிகளின் தந்திரம்

திமுக அடுத்த போராட்டம் நடத்த, மக்கள் தூண்ட தயார் ஆகிவிட்டார்கள். இப்போது மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது :
ஒரு நாளைக்கு 2.1 லட்சம் முதல் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் வரை எடுத்துப் பயன்படுத்தும் திமுக ஆதரவாளர்கள் நிர்வாகிகள் நடத்தும் எந்த சாராய உற்பத்தி நிறுவனங்களைப் பற்றிப் பேசாதா திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் ,
அந்த நிறுவனங்களால் சென்னையும் காஞ்சிபுரமும் வேலூர் போன்ற மாவட்டங்களும் நிலத்தடி நீர் நாசமானதைத் திசை திருப்ப முயற்சிக்கும் தந்திரமான அரசியலைச் செய்யும் திமுக அரசியல் எவ்வளவு கீழ்த்தரமானது என்பதை மக்கள் உணருங்கள்.
சென்னை மக்கள் முதலில் எதிர்க்க வேண்டியது திமுக என்ற கட்சியைத் தான். அவர்கள் சாராய நிறுவனங்கள் தான் உங்கள் நிலைக்கு முக்கிய காரணம். அத்தோடு நீங்களும் காரணம் என்பதை மறக்க வேண்டாம்.
எவர் போராட்டம் செய்யத் தூண்டுவதை விட ஆரோக்கியமாக அரசியல் களத்தில் வேலை செய்தாரோ அவரே நிச்சயமான மாற்று. அந்த விதத்தில் மார்ச் மாதமே பருவகால மழைக்கும் முந்தைய மழை பொழிவு குறைவாகக் கிடைக்கிறது என்றதும் - அதனால் தண்ணீர் எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை என்றதும் களத்தில் தண்ணீர் கொண்டு சேர்த்த ரஜினி மக்கள் மன்ற தொண்டர்கள் தவிர எவருக்கும் இங்கே எனக்குத் தெரிந்து பேசத் தகுதி கிடையாது.
அதிகம் நதிகள் இணைப்பு சார்ந்து ஆர்வம் காட்டுவதும் ஆரோக்கியமான தீர்வுகளைத் தேடுவதும் எனக்குத் தெரிந்து தமிழகத்தில் ரஜினி என்ற மனிதர் மட்டுமே.
22 திமுக போராட்டம் - அதைத் தொடர்ந்து என் காணொளி வெளியாகும். திமுக போடும் வேசம் வெட்டவெளிச்சமாக்கப்பட வேண்டும்.
-மாரிதாஸ்

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக