பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், மே 21

Sathya GP
சில வருடங்களுக்கு முன்பாக பத்திரிகைகளில் :
“தண்டனை விதிக்கப்பட்டவர்கள் எல்லாம் தமிழர்களாம். நாங்கள் மட்டுமென்ன ஜப்பானியர்களா? இவர்கள் கொலை செய்து கொண்டே இருப்பார்கள்; நாங்கள் மன்னித்துக்கொண்டே இருக்க வேண்டுமா? தந்தையை இழந்து, நாங்கள் அனாதையாக நடுத்தெருவில் நின்றோமே. எங்களுக்கெல்லாம் குடும்பம் இல்லையா? அவர்களுக்கு மட்டும் தான் இருக்கிறதா? இந்தக் கொலையாளிகளுக்கு விரைவாக தண்டனை கொடுக்க வேண்டும் என கேட்காதது தான் நாங்கள் செய்த குற்றமா?” என கொதித்தெழுந்தவர், தன் வீட்டுக்கு பத்திரிகையாளர்களை அழைத்துச் செல்லத் தயங்கினார்.
என்ன காரணம்?
”அப்பாவின் மரணம் பற்றி பேசினாலே அம்மா கதறத் தொடங்கிவிடுகிறார், எங்கள் குடும்பத்துக்கு நடந்த, “துன்பவியல் சம்பவம்” கொலையாளிகள் குடும்பத்துக்கு ஏன் நடக்கக் கூடாது?” என அவர் கேள்வி எழுப்பினார்.
அவர் : ஜாவித் இக்பால்
தந்தை பெயர் : முகமது இக்பால்
முகமது இக்பால் தமிழக காவல்துறையில் எஸ்.பியாகப் பணியாற்றியவர், 27 வருடங்களுக்கு முன்பாக மே மாதம் 21 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் பாதுகாப்பு பணியில் இருந்த போது ஒரு “துன்பவியல்” சம்பவத்தின் காரணமாக பல தமிழர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். அதில் சிறுபான்மை சமூகம் என சொல்லப்படும் தமிழரான இவரும் கொடூரமான முறையில் அந்த துன்பவியல் சம்பவத்தால் உயிரிழந்தார்.
என் சிற்றறிவுக்கு எட்டியவரை யாருமே அந்த அப்பாவித் தமிழர்கள் (முகமது இக்பால் உட்பட) கொல்லப்பட்டதற்கு கண்ணீர் அஞ்சலியோ நினைவேந்தலோ வீர வணக்கமோ செலுத்தியதில்லை.
முகமது இக்பால் அவர்கள் செய்த ஒரே தவறு. நம் தேசப் பாதுகாப்புப் பணியில் கடமை தவறாமல் ஈடுபட்டது. நாம் அறியாத சிரியா, பாலஸ்தீனம், ஈராக் போன்ற தேசத்தில் பிறக்காமல் இந்தியராக அதுவும் தமிழராகப் பிறந்தது!

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக