பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், மார்ச் 21

"பெரியார் மண்ணு .!!!"

கே: கழக அடிமைகள் எத்தனை வகைப்படுவர் ?
ப : கழக அடிமைகள் மூன்று வகைப்படுவர்..
முதலாவது முப்போக அடிமைகள்..
இவர்கள் நேரு, அண்ணா காலத்திலிருந்தே கழகத்தில் இருக்கிறோம்., எங்கள் தாத்தாதான் பெரியாருக்கு மூத்திர வாளி தூக்கினார், எங்க நைனா , மாமா எல்லாம் அண்ணாத்துரை இறுதி ஊர்வலத்திற்கு ரயில் கூரை மீது ஏறிப்போய் மேம்பால ஆர்ச்சில் மண்டை இடிபடாமல் உயிருடன் கலந்து கொண்டு அந்த ஊர்வலத்தில் 148 வது வரிசையில் 23வது ஆளாய் நடந்தவர்கள். அந்த வீடியோல பார்த்தா தெரியும்பாங்க.. பாடைலேர்ந்தே தலைவர் பார்த்து கையசைத்தார் ம்பாங்க..
சரிப்பா நீ எதுக்கு கச்சில இருக்கன்னு கேட்டால் தலைவர் கலைஞரின் ஆணைக்கு கட்டுப்பட்டு தளபதி இசுடாலின் ஆசிப்படி உதயநிதியின் வாரிசுக்கு டையபர் மாற்றும் கடமையை செய்ய பின்னால் அணி வகுக்கோம்னுவாங்ய..
இரண்டாம் வகை அடிமைகள் எம்ஜிஆர், எஸ்.எஸ்.ஆர். ஜெயலலிதா ஆகியோரின் நடிப்பாலும் கருணாநிதியின் சினிமா வசனங்களாலும், தீப்பொறி ஆறுமுகம், வெற்றி கொண்டான் போன்ற அறிஞர்களின் பசுமையான மேடைப்பேச்சாலும் கவரப்பட்டு கழகத்திற்கு தன்னை உடல், மூளை, பிருஷ்டம், கேசம்
அனைத்தயையும் அர்ப்பணித்தவர்கள்.


தலைவனின் இமை முடி அசைவைக் கண்டு தீக்குளித்து தன் உயிரை மாய்த்துக் கொள்ளவும் பெண்டாட்டி புள்ளைகளை நடுத்தெருவில் நிறுத்தவும் தயங்காத தியாகி வகையினர். கழகம் உடைந்த போதும் இவர்களில் ஒரு பிரிவினர் இடம் பெயர்ந்து தீக்குளிப்பு, சாணியடிப்பு, போஸ்டர் கிழிப்பு, பஸ் உடைப்பு என்று அடகு வைத்த மூளையை திரும்ப மீட்கும் எண்ணமே இல்லாதவர்கள்..
மூன்றாவது வகை அடிமைகள் நவீனமானவர்கள்.. இணையத்தின் நுணுக்கங்களும் பணம் சம்பாதிக்கும் வழிகளும் நன்கறிந்தவர்கள்..
முகநூலில் ஒரு பதிவு போட ரூபாய் 200 வாங்கவும் , கழக கூட்டங்கள், மாநாடுகளில் பங்கு கொள்ள லாரிகளில் கேரளத்திற்கு அனுப்பப்படும் அடிமாடு போல் பயணிக்கவும் தயங்காதவர்கள்.. தங்கள் மூதாதையர் போல் சிங்கிள் டீ குடித்து விட்டு ஊரான் வீட்டு சுவர்களில் உதய சூரியன் வரையும் இளிச்சவாய்த்தனம் இவர்களுக்கு கிடையாது.
ஊர்வலம் போகவும் கோஷம் போடவும் கறாராக வசூலித்து விடுவார்கள் காசும் குவாட்டரும் பிரியாணியும்.
இந்த மூன்று தலைமுறைக்கும் உள்ள ஒற்றுமை, தாங்கள் ஏதோ ஒரு யுகப் புரட்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் தமிழ் நாட்டையும் தமிழ் மொழியையும் அழிக்க வரும் ஆபத்திற்கெதிரான நிரந்தர போரில் தாங்கள் வாளேந்தி போரிட்டுக் கொண்டிருப்பதாகவும் , யாரால் அந்த ஆபத்து என்று தன் தலைமை சொல்கிறதோ அதே சக்திகளுடன் தன் தலைமை மாற்றி மாற்றி கூட்டணி வைப்பதும் போர் சார்ந்த ராஜதந்திரத்தின் ஒரு பகுதி என்றும், சகஜமாக பல்லாயிரம் கோடி கொள்ளை அடிப்பதும் , ஊழல் என்பதும் இந்த போருக்கு தலைமை தாங்கி வழி நடத்துவதற்காக தம் தலைவர்கள் எடுத்துக் கொள்ளும் நியாயமான கூலி என்றும் அதன் ஒரு சிறு துளி தன்னை வந்து அடையாமல் போகாது என்றும் திடமாய் நம்புபவர்கள். அந்தக் கொள்ளை அடிக்கப்படுவது சுரண்டப்படுவது தன்னிடமிருந்துதான் என்பதை இவர்கள் ஒப்புக்கொள்வதில்லை.
எடுக்கப்படுவது மூன்று தலைமுறையாய் தம் தலைவர்கள் எதிர்த்து வரும் குறிப்பிட்ட ஜாதியினரிடமிருந்துதான் என்பதும் இவர்கள் நம்பிக்கை. அந்த ஜாதியினரிடம் இவ்வளவு சொத்தா இருந்தது, இருக்கிறது என்று கேட்டால் அக்கேள்வி புறக்கணிக்கக்தக்கது என்பார்கள்.
இவர்களிலும் படித்து, தகுதி, திறமை மூலமோ, இட ஒதுக்கீடு மூலமோ தலைமையின் சிபாரிசு மூலமோ தலைமைக்கே கையூட்டு கொடுத்தோ அரசுப் பணியிலோ ஆசிரியர் பணியிலோ இடம் பெற்றவர்கள் பாலின, வயது, பதவி வித்தியாசமில்லாமல் காட்டும் விசுவாசம் அளவிடற்கறியது.. வியக்கத்தக்கது.
தேர்தல்கள் வந்தால் இந்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போன்ற பிரச்சாரகர்கள் உலகில் வேறெந்த கட்சிக்கும் கிடைக்காத பொக்கிஷம் போன்றவர்கள்..
இந்த அனைவரையும் இணைக்கும் ஒரே கயிறு, ஓரளவுக்கு மேல் சிந்திக்கக் கூடாது தாம் சொல்வது தவிர வேறு எதுவும் கருத்தில் ஏறிவிடக் கூடாது என்று இவர்களின் தலைவர்கள் மூளையில் ஆழமாய் அழுத்தமாய் பதியனிட்டுவிட்ட ஆட்டு மந்தைத்தனம்.
கழகக் குடும்பத்திற்கு அடிமை சேவகம் செய்தது போக நேரு வழி வந்த இத்தாலிய காங்கிரசு வாரிசுகளுக்கும் சேவகம் செய்வது தனிச்சிறப்பு. ஒரு அடிமையை இன்னொரு அடிமை எப்படி காப்பாற்ற முடியும் என்ற கேள்வியுடன் தம் தலைவனால் நேர்ந்துவிடப்பட்ட இவர்கள் உழைப்பாளிகள், திறமைசாலிகள், தம் குடும்பம்,சுற்றம் அளவில் புத்திசாலிகள்....
ஆனால் பேச்சுதான் காது வரை கிழியும் தம் தலைவர்கள் போலவே..
இன்னும் அடுத்த நூறு தலைமுறைகளுக்கும் தங்கள் தலைமுறைகளை அர்ப்பணிக்க இவர்கள் தயார்.
ஏனென்றால் இவர்கள் தலையில் இருப்பது யார் மண் தெரியுமா ?? இவர்களுக்கு சொறி, புண் ஏதாவது இருந்தால் அதை பார்த்து அது என்ன புண்? என்று கேட்டால் அதில் இருக்கும் மண்ணைத் தட்டிவிட்டு சொல்வார்கள் : "பெரியார் மண்ணு .!!!"

1 comments:

NARAYANAN சொன்னது…

அருமை. தமிழனின் ஏமாளித்தனத்தை அழகாக படம் பிடித்துள்ளீர். இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக