பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, மார்ச் 22

எந்த மத நம்பிக்கைகளுக்கும் எதிராக இவர் பேசியதில்லை.

மதவாதிகள்...
மோடியை
மதவாதி என்றார்கள்...
மதவெறியர்கள்...
மோடியை
மதவெறியன் என்றார்கள்...
மத கொலைகாரர்கள்...
மோடியை
மத கொலைகாரன் என்றார்கள்...
ஆனால்
மோடி இதுவரை
எந்த மதத்தையும் பழித்ததில்லை...
இருந்தால் சொல்லுங்கள்...
மோடி இதுவரை
எந்த மத பண்டிகை கலாச்சாரங்களையும்
இகழ்ந்ததில்லை...
இருந்தால் சொல்லுங்கள்...
மோடி இதுவரை
எந்த மதத்தினரையும்
புறக்கணித்ததில்லை...
இருந்தால் சொல்லுங்கள்...
இருந்தாலும்
நீங்கள்
மோடியை
சகிப்புதன்மையற்றவன் என்பீர்...
இந்துக்களின்
விபூதி குங்குமத்தை
அழித்துக்கொண்டே...
இருந்தாலும்
நீங்கள்
மோடியை
மனிதநேயமற்றவர் என்பீர்...
மாற்று மதத்தினரிடையே
இந்துக்களின்
திருமண ஆச்சாரங்களை
பழித்துக்கொண்டே...
இருந்தாலும்
நீங்கள்
மோடியை
பாஸிசவாதி என்பீர்...
சனதான தர்மத்தை
வேரறுத்து வீழ்த்துவோம்
கூவிக்கொண்டே....
நீங்கள்
இந்து மதத்தை வெறுத்தாலும்...
இந்துக்கள் உங்களை நேசிப்பர்...
உங்களை போல்
மோடி
மாற்று மதங்களை வெறுத்திருந்தால்..
இந்துக்கள்
மோடியை வெறுத்திருப்பர்...
தன் மதம் போல
பிறர் மதங்களையும் நேசிப்பதாலே
நம் தேசம்
மோடியை சுவாசிக்கிறது...
இந்திய கடவுள்கள்
தன்னை நேசிக்க சொல்வதில்லை...
சக மனிதனை
நேசிக்க சொல்லுகிறார்கள்..
இந்து மதம்
தன்னை வளர்க்க சொல்வதில்லை...
அன்பை சிவமென விதைக்க சொல்கிறது...

1 comments:

நான் சொன்னது…

//தன் மதம் போல பிறர் மதங்களையும் நேசிப்பதாலே நம் தேசம் மோடியை சுவாசிக்கிறது...//

'மோடியை சுவாசிக்கிறது'...அருமை.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக