பகிர்ந்து கொண்டவர்கள்!

ஞாயிறு, ஏப்ரல் 20


Sunday, April 20, 2014

நாங்கள் தருகிறோம் இலவசமாய் உங்களுக்கு ஆட்சியை!!

தமிழக வாக்காளப் பெரு மக்களே,
உங்களில் ஒருவனாகிய சாமானியனின்  குரல்

இங்கு நம் தமிழகத்தின் 38 (மொத்தம்-534) தொகுதியிலும் மூன்று அணிகள் பங்கேற்கின்றன.

மத்தியில் ஆட்சியமைக்க தேவைப்படும்  273 இலக்கை அடைந்து விட்டல் இங்கு பாஜக  தவிர்த்து போட்டியிடும் கழகங்களில் யார் வெற்றி பெற்றாலும் அது மத்திய ஆட்சியை அதிகம்  பாதிக்காது. ஆனால் தேசிய கட்சிகள் 250 இலக்கில் சிக்கிக் கொண்டல் இங்குள்ள கழக வேட்பாளர்கள் பந்தய குதிரைகளாக மாற்றபட்டுவார்கள். அதை  நம்பி தான்  களம் இறங்கி இறுக்கிறார்கள் தம்பிகளும், அடிமைகளும் கோடி கோடியாய் தேர்தலில் கொட்டி காத்திருக்கிறாகள்.

நாம் திமுகவிற்கு வாக்களித்தல், அது யார் மத்திய ஆட்சிக்கு வருகிறார்களோ அவர்களிடம்  2G , BSNL நிலக்கரி போன்ற ஊழலை மறைக்க பேரம் பேசும், அதே TR பாலு, ஆ.ராஜா, தயாநிதிமாறன், கனி மொழி ஆகியோரை மந்திரியாக்கும்.
 அதிமுகவுக்கு எனில் அது பெங்கலூரு சொத்து வழக்கு, வருமானவரி  வழக்கு பற்றி விவாதிக்கும்...நான் சொன்னேன், சொல்கிறேன், சொல்வேன் என்று ஜெயாடீவி கூவிக் கொண்டே இருக்கும்.






(They will use our support as a SHIELD to protect their CRIMINAL FACE from facing the Rule of Law. Never allow your valuable VOTES to be misused for the Criminals, by the criminals in any form.)

அதையும்  தாண்டி நம், "தமிழக  அரசியலில்" இன்று  மூன்றம் நிலையில் இருக்கும் திமுக கணிசமான எம்பி எண்ணிக்கையை பெற்றால், அதை ஸ்டாலினின் வெற்றி என காட்டி  அவர்க்கு மகுடம் சூட்துவர்கள். திமுக மத்தியிலும், மாநிலத்திலும் செய்த அத்தனை  (2G உண்ணவிரதம், ஊழல், நில, மணல், கிரனைட்  கொள்ளை, ஊடக (சினிமா, டீவி ) அரக்கத்தனம், மீத்தேன் திட்டம்.. Etc,) தவறுகளையும்  நாம் சரி என்று  ஒத்துக் கொண்டதாய் ஆகிவிடும்.  மத்திய அரசில் அவர்கள் மீண்டும்  இணைந்தால் தமிழகம்  அழிவுக்கு செல்வதை தவிர வேறு வழி  இல்லை.

அதிமுக அந்த நிலைக்கு வந்தால், அதன் வழக்குகள் இன்னும் 14 ஆண்டுகள் திரும்பவும் காட்டுக்கு போய்விடும். அம்மையாரின் டாஸ்மாக் கிளைகள், அம்மா குடிநீர், அம்மா சிற்றுண்டி பரவும், மீண்டும் இருள்  கவிழ தொடங்கும். அடுத்த இரண்டரை ஆண்டுகளில் நடத்தும் இதே அறிவிப்பு ஆட்சியே நடக்கும். பாரதி சொன்ன "பிணம் தின்னும் சாத்திரம்:  தான் செய்வார்கள். காவல்துறை அராஜகம் தான் அரங்கேறும். சட்டம் ஒழுங்கு தர தட்டி கிடக்கும். கமிஷன் சதவீதம் இன்னும்  வளர்ந்து இந்த கட் அவுட் விளம்பர ஆட்சி தான் மேலும் தொடரும் . இந்த திருந்ததாத கட்டைகளிடம், மட்டைகளிடமும் மாட்டிக் கொண்டு 'தமிழக மகாம  குளம்',  சாக்கடை கலந்த  குட்டையாகிவிடும்.

இன்றைய தேர்தல், தமிழகத்தில்  இந்த 47 ஆண்டுகால கழக இருண்ட ஆட்சியின் மீதும். பத்தாண்டுகால காங்கிரசின் ஊழல்  ஆட்சியின் மீதும் உள்ள நம், வேதனையை,  வருத்தத்தை, கோபத்தை, தார்மீக உணர்வை காட்டக்  கிடைத்த அருமையான, நல்ல சந்தர்ப்பம். நழுவ விடாமல், இவர்களுக்கு எதிராக பாஜக அணிகளுக்கு வாக்களித்து தலைநகருக்கு அனுப்பினால், மொத்த இந்திய நாடே  தமிழகத்தை பார்த்து  தலை தாழ்த்தி நம்மை வணங்கும், நம்மின் அரசியல் முதிர்ச்சியை  அகிலம் அறியும்.(எமெர்ஜென்சிக்கு பிறக்கான தேர்தலில், மற்ற மாநிலங்கள் இந்திராவிற்கு எதிர்ப்பை காட்ட, நாம் மாநில அளவில் சிந்தித்து கோட்டை விட்டோம்). 

பிஜேபி கூட்டணிக்கு வாக்களியுங்கள்

ஆண்டவருக்கும், ஆளபவர்களுக்கும் ஒரு சரியான பாடம் கற்பிக்கப்போம். இலவசங்களை கொடுத்து ஏமாற்றும் கேவலம் மறைந்து தொலையும், மிட்டாய் கொடுத்து குழந்தைகளின் கம்மல் திருடும் இந்த வழக்கம் ஒழியும். தமிழன் தலை  நிமிர்ந்து, இன்றைய கூன்பண்டிய மந்திரிகளுக்கு யார் எஜமான் என்று பாடம் புகட்டலாம்.  மக்கள் விழித்து  விட்டார்கள் என்ற  அறிகுறி தோன்றிவிட்டால், நல்ல பாதைக்கு ஆள்பவர்கள் திருந்தி / திரும்பி வருவார்கள்.

விழித்து கொண்டோரெல்லாம் பிழைத்துக்  கொண்டார்
வீணில் ஏமாற்றுவோரல்லம் "கோட்டையை"  விட்டார் ...
செங்கோட்டை வழியாக செயிண்ட்  ஜார்ஸ் கோட்டைக்கு ஒரு புது ரத்தம் பாய்ச்சுவோம்.
வாக்களீப்போம் இந்த கழகங்களை தவிர்த்து பாஜக கூட்டணிக்கு.
மக்கள் தான் நாட்டின் எஜமானர்கள்.


நாங்கள் தருகிறோம்  இலவசமாய்   உங்களுக்கு ஆட்சியை
நீங்கள் தர வேண்டாம் எங்களுக்கு இலவசம்.
தாருங்கள்  எங்கள் அடிப்படை உரிமையை உடனடியாய்..

2 comments:

சென்னை பித்தன் சொன்னது…

39 தொகுதிகள் கக்கு!
செய்வார்களா மக்கள்?
நம்பிக்கையுடன் காத்திருப்போம்!

Unknown சொன்னது…

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக