நீண்ட நாட்களாகவே இதனை எழுத யோசித்ததுண்டு. இன்று அதற்கான சந்தர்பம் கிடைத்துவிட்டது. மேலும் இங்கு ரமலான் முடிந்து சில நாட்கள் விடுமுறையும் வந்ததால் நேரம் கிடைத்தால் இந்த நெடு நாள் நினவு எழுத்தாக வருகிறது.
மாஸ்ட்ரோ இளைய ராஜாவின் தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன் என்பது என் வலைப்பதிவின் பக்கம் வந்தாலே தெரிந்து விடும். ராஜா அவர்களின் வரவுக்கு முன்னாலும் நிறைய இசை மேதைகள் தமிழ் திரையுலகில் அரசாண்டனர். அவர்களில் குறுகிய காலத்திற்கு மட்டுமே அறியப்படவரே இந்த இசை மாமேதை எம்.பி. சீனிவாசன்.
ஒரு தமிழ் பிராமணர் குடும்பத்தில், ஆந்திரா, சித்தூரில் பிறந்தாலும் அவரது ஆரம்ப பள்ளி படிப்பு சென்னை மயிலை,மந்தைவெளி P .S ஹைஸ்கூல் மற்றும் சென்னை மாநில கல்லூரியிலும் பயின்றவர்தான். அந்நாளைய பொது உடைமை கொள்கைகளினால் கவரப்பட்டு மெட்ராஸ் ஸ்டுடன்ஸ் ஆர்கனைசேஷன் என்ற இயக்கத்தில் சேர்ந்தார்.
நிமாய் கோஷ் என்ற அந்நாளைய பிரபல பெங்காலி இயக்குனரால் திரைப்பட உலகுக்கு வந்தவர். நமது " சொல்லேர் உழவர் " திரு .த .ஜெயகாந்தன் அவர்கள் மற்றும் நடிகர் வி .கோபாலகிருஷ்ணன் போன்ற பல பிரபலங்கள் எல்லோரும் ஒரு குழுவாக இருந்து செயல் பட்ட காலம்அது. Indian People Theater Association (IPTA) என்று ஒரு குழுமத்தை ஆரம்பித்து அதில் முக்கிய பங்காற்றியவர் . பின்னாளில் 1970 களில் Madras youth Choir என ஒரு இசை அமைப்பை நிறுவி அனைவரும் சேர்ந்து பாடல்கள் முழுமையும் ஒரு சேர பாடும் ஒரு முறைய எம்.பி. சீனுவாசன் அறிமுகபடுத்தினார். முதன் முதலில் இசை அமைத்த படம் 1960 இல் வெளிவந்த " பாதை தெரியுது பார் " என்ற படம் தான். கே.விஜயன், நாட்டிய தாரகை எல் .விஜய லெஷ்மி போன்றோர் நடித்துள்ளனர்.பின்னாளில் கே .விஜயன் நிறைய படங்களில் போலீஸ் அதிகாரியாவும்.டாக்டராகவும் வருவார். பாலாஜி இந்தியில் வெற்றி கரமான படங்களை எல்லாம் தமிழில் தயாரித்தார் அவைகளை பெரும்பாலும் டைரக்ட் செய்தது இந்த விஜயனே. எல் .விஜய லஷ்மி பற்றி இந்நாளில் அதிகம் தெரியாது. அடிபடையில் இவர் பரதம் சிறப்பாக பயின்றவர் ஆதாலால் பரத நாட்டியம் காட்சிகளில் இவரது புகழ் பேசுவார்கள் அப்போது. மிக அழகானவர். எம்.ஜி .ஆர். சிவாஜி,ஜெய்சங்கர் போன்ற வர்களுடன் ஜோடியா நடித்துள்ளார்.
மிக பிரபலமான ஒரு பாடல் இந்த படத்தில் உள்ளது. அந்த பாடலை எழதியவர் திரு ஜெயகாந்தன் அவர்களே. " தென்னங் கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் சோலையிலே " மறைத்த பாடகர் அமரர் P .B. ஸ்ரீனிவாஸ் மற்றும்
S.ஜானகி இவர்களின் அந்நாளைய இளமையான குரலில் அந்த கானம் மிக அற்புதமாக இருக்கும். ஆர்ப்பாட்டம் இல்லாத இசை கோவைகள், பாடலில் ஒவ்வொரு வரியும் மிக தெளிவாக வெளிவந்து கேட்பவர்களை மெய் மறக்க செய்யும் மிக உயர்ந்த இசை அமைப்பு. பாதை தெரியுது பார் படத்தில் இருக்கும் பாடல்கள் அனைத்தும் நான் அரை ட்ராயர் வயதில் கேட்டவை. அப்போதெல்லாம் எங்களுக்கு வானொலிதான் கதி. அதுவும் திருச்சி ஆல் இந்திய ரேடியோ நிலையத்தில் வரும் நிகழ்சிகள் மட்டுமே தெளிவாக இருக்கும்.ஆனால் இலங்கை வானொலியில் தமிழ் வர்த்தக ஒலி பரப்பில் மட்டும் தான் எங்களின் இசை கேள்வி ஞானம் வளர்ந்தது என்னோவோ உண்மை.
S.ஜானகி இவர்களின் அந்நாளைய இளமையான குரலில் அந்த கானம் மிக அற்புதமாக இருக்கும். ஆர்ப்பாட்டம் இல்லாத இசை கோவைகள், பாடலில் ஒவ்வொரு வரியும் மிக தெளிவாக வெளிவந்து கேட்பவர்களை மெய் மறக்க செய்யும் மிக உயர்ந்த இசை அமைப்பு. பாதை தெரியுது பார் படத்தில் இருக்கும் பாடல்கள் அனைத்தும் நான் அரை ட்ராயர் வயதில் கேட்டவை. அப்போதெல்லாம் எங்களுக்கு வானொலிதான் கதி. அதுவும் திருச்சி ஆல் இந்திய ரேடியோ நிலையத்தில் வரும் நிகழ்சிகள் மட்டுமே தெளிவாக இருக்கும்.ஆனால் இலங்கை வானொலியில் தமிழ் வர்த்தக ஒலி பரப்பில் மட்டும் தான் எங்களின் இசை கேள்வி ஞானம் வளர்ந்தது என்னோவோ உண்மை.
சென்னை , திருச்சி வானொலி நிலையங்களில் கேட்க இயலாத அல்லது ஒலி பரப்பு செய்யாத நிறைய பாடல்கள் அந்நாளில் எங்களுக்கு இலங்கை வானொலி கேட்பதன் மூலமே கிடைத்தன. இந்த படத்தின் பாடல்களை அவ்வாறு நிறைய தடவைகள் கேட்டதுண்டு.
என் கல்லூரி காலங்களில் 1976 இல் மதன மாளிகை என்று ஒரு படம் வெளியானது. சிவகுமார் மற்றும் அல்கா என்ற ஒரு வட இந்திய நடிகை நடித்திருப்பாள். ஸ்ரீகாந்த், சுருளி ராஜன், மனோரமா, பிரமீளா அணைவரும் நடித்தபடம்.அந்த படத்துக்கு இசை அமைத்தவர் எம்.பி. சீனுவாசன்.இந்த படத்தின் பாடல்களையும் இலங்கை வானொலி தினமும் ஒரு முறையாவது கேட்க வைத்துவிடுவார்கள் அந்நாட்களில்.
எம்.பி. சீனுவாசன் தமிழில் முதல் முயற்சியாக ஒரு ஆர்ட் பிலிம் என்ற வகையில் வந்த அக்ரகாரத்தில் கழுதை படத்தில் நடித்ததுண்டு. நிறைய மலையாள திரைப்படங்களுக்கு இசை அமைத்தார். அம்மாநில விருதுகளையும் பெற்றார். ஆனால் தமிழ் திரையில் இவரை சரியாக பயன் படுத்திக்கொள்ளாமல் இருந்து விட்டனர் என்ன காரணமென்றே தெரியவில்லை.
எழுபது, எண்பதுகளில் இவர் அகிலஇந்திய சென்னை வானொலியில் நிலைய இசை அமைப்பாளராக பணியாற்றினார். அந்நாட்களில் " சேர்ந்திசை " என்ற ஒரு கோரஸ் இசை நிகழ்ச்சி தினமும் இருக்கும். பாடல் குழுவினர் பல குழுக்களாக பிரிந்து பாடுவதும் பின்னர் ஒரு சேர பாடுவதும் கேட்க மிக அற்புதமாக இருக்கும். அந்த நாட்களில் இருந்த பிரபலமான நிகழ்சிகளில் அதுவும் ஒன்று. சென்னை தொலைகாட்சிகளில் கூட இவரது பாடல் குழுக்கள் நிறைய இசை நிகழ்சிகள் நடத்தியுள்ளனர்.1988 இல் இவர் அமரத்துவம் அடைந்தார்.
அவரது இசையின் இனிமையில் கொஞ்சம் இளைப்பாற அனைவரையும் அழைகின்றேன். திரைபடம் கிடைக்கவில்லை. நல்ல வேலையாக புண்ணியவான்கள் இந்த பாடல்களை பதிவேற்றம் செய்து வைத்துள்ளனர்.
அவர்களுக்கு நன்றி.
ஜானகிஅம்மாவின் அந்நாளைய இளமையான குரலில் இந்த தேவார பதிகம் கேட்க மிக அருமை.
"தென்னங் கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் சோலையிலே"
ஆர்பாட்டம் இரைச்சல் இல்லாமல் தெளிந்த நீரோடையில் வீசும் குளிர் தென்றல் போல.
சின்ன சின்ன மூக்குத்தியாம் ...
டி.எம். எஸ். இன் வாலிபமான குரலில் இந்த தென்மாங்கு பாடல்.
திரைப்படம் கிடைக்காதால் ஸ்லைட் ஷோ பண்ணியிருகிரார்கள் .
எ .எல் ராகவன் பாடியுள்ள " இட்டிலியே ஏன் இளைத்து போனாய் நீ எந்த பய மீது காதலானாய் " என்ற ஒரு காமெடி பாடலும் கூட உண்டு பதிவின் நீளம் கருதி அதனை தவிர்த்தேன்.
மதன மாளிகை
ஒரு சின்ன பறவை அன்னையை தேடி
சனல் நார் முடியுடன் சிவகுமார்.
பிடரி வழிய மயிரும்,கன்னங்களில் நீண்ட கிருதாவும், கழுதை காது போல நீண்ட காலர் உள்ள சட்டையும் , பெல் பாட்டம் பேன்ட்டும் அந்நாளைய பாஷன், நான் உள்பட.
மதன மாளிகை
ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
மதன் மாளிகை பாடல் காட்சிகள் சற்று திராவயாக இருக்கும்
ஆனால் பாடலும் இசையும் வேறு தலத்தில் இருக்கும்.
தமிழர் தம் இசையினை இன்று உலகமெல்லாம் கொண்டு செல்லும் நம் இசை ஞானி இளைய ராஜா அவர்களுக்கு இந்த பதிவினை சமர்பிக்கின்றேன்.
10 comments:
great musician and idealist MBS. he was a committed communist, who earned a living creatings advertisement jingles. never made it big in the film world. his thennangeetru is among the top 10 tamil songs of all times. one can never tire of hearing it. he married a kashmiri muslim lady. died very young.
புதிய தலைமுறையினர் அறியாத பல தகவல்கள், பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.. :)
மறக்க முடியாத ஒரு இசை மேதை எம்.பி.சீனிவாசன்.பாதை தெரியுது பார் படப் பாடல் இன்னிஊம் காதில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது
very nice article
i am searching for the A.I.R ORIGINAL SAERNDHISAI
songs for a very long time
if anybody knows where i can buy this, please let me know
thanks for sharing the melodious songs
s.kirubas
Mr. Skirubas:
Thanks for your visit and comments.
You can access the AIR Chennai/ DDI Chennai,
there you can retrieve the collections if they allowed.
Central Public Information Officer
Name : Mr. M. Anandan.
Designation : Deputy Director General (Engg)
Address : Room No.104, Doordarshan Kendra,
Swami Sivananda Salai,
Chennai – 600005.
Telefax : 044 – 25362902
Best of Luck
Hope, The AIR and DDI Chennai opened an out let to sell their old collections to the public in the form of CDs and DVDs.
Nice one Kakku... A lot of rare information... Thanks.
அடடா..பதிவைப் போட்டாச்சாண்ணே?..
எங்களுக்கெல்லாம் இசையமைப்பாளர்னா இளையராஜா, எம்.எஸ்.வி மட்டும் தான் தெரியுது. நீங்க சொன்ன அப்புறம் தான் இந்த மேதை பற்றி அறிந்துகொண்டோம். நன்றிண்ணே!
thanks Mr.Manickam Sattanathan, for your immediate response
we visit the A.I.R and DD stalls in the Book Fair and ask about this saerndhisai every year and they regularly say till date they have not published this[we tried this year too]
hope we succeed in the near future
thanks again
skirubas
நல்ல இசைத் தொகுப்பு ...அருமை
கருத்துரையிடுக