பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், ஆகஸ்ட் 6

டான்ஸ் ஆடும் நம்ம மாஸ்ட்ரோ ராஜா.இந்த பதிவை எத்தனை ஆர்வத்துடன் எழுதி பதிவிடுகிறேன் என்று எனக்கும் என் அன்பு நண்பர் மற்றும் பதிவர் திரு. ஆம்பூர் எட்வின் அவர்களுக்கு மட்டுமே தெரியும். லண்டனில் அவருக்கு வேலை. விடுமுறையில் தற்போது நாடு திரும்பி குடும்பத்துடன் மகிழ்வாக இருக்கிறார். சில நிமிடங்களுக்கு முன்பு இருவரும் முக நூலில் அரட்டை அடிக்க எதிபாராத விதமாக  என்று திரும்புகிறீர்கள் என கேட்க, வரும் இருபதாம் தேதி அன்று எப்படியாவது லண்டன் திரும்ப வேண்டும் என்ற நிர்பந்தம் என்றார். என்ன காரணம் என நான் வினவிய போதுதான் விஷயமே வெளியில் வந்தது. நமது மாஸ்ட்ரோ இளைய ராஜாவை பற்றி குறிப்பிட்டு  வரும் இருபத்தி நான்காம் நாள் லண்டனில் அவரின் இசை நிகழ்ச்சி நடப்பதாகவும், அவரின் உற்ற நண்பர் நமது கமல ஹாசன்  தலமையில் மேகா திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழ நடக்க இருபதாகவும் அந்த நிகழ்சியை தவறாமல் சென்று தொகுத்து வெளியிட வேண்டும் என கூறிய போது எனக்கே எழுந்து ஆடலாம் போன்ற உற்சாகம். கம்போஸ் செய்யும்போது இசைக்கு ஏற்ப சிரித்துக்கொண்டே இயல்பாக ஆடுவதை யூ டியுபில் இருக்கும் இணைப்பை தந்து காண செய்தார். மகன் யுவன் சங்கரின் இசையில் "செல்லம் கொஞ்சும் பூவே " என்ற பாடலுக்கு அப்பா நடனம் ஆடுவதை பார்க்க அனைவரும் கீழே உள்ள இணைப்பை நாடுங்கள் தோழர்களே!
இசை நிகழ்ச்சியின் தொகுப்பை நண்பர் எட்வின் தொகுத்து வலையில் இடுவார் காத்திருங்கள். 


8 comments:

சென்னை பித்தன் சொன்னது…

ராஜா ராஜாதான்!

அதிரடி சொர்ணாக்கா சொன்னது…

"மகன் யுவன் சங்கரின் இசையில் "செல்லம் கொஞ்சும் பூவே " என்ற பாடலுக்கு அப்பா நடனம் ஆடுவதை "

இல்லை. அந்த பாடலுக்கு ராஜா தான் இசை அமைப்பு. பாடியவர் யுவன்

http://cinema.dinamalar.com/tamil-news/12802/cinema/Kollywood/Yuvan-sings-in-Ilayaraja-music.htm

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ஆர்வத்துடன் பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..!

Manickam sattanathan சொன்னது…

அதிரடி சொர்ணாக்கா
நீங்கள் குறிப்பிட்டது, சரிதான் நன்றிக்கா

Manickam sattanathan சொன்னது…

ராஜ ராஜேஸ்வரி அவர்களே
பாரட்டுக்கும் வருகைக்கும் நன்றி

S.Menaga சொன்னது…

ராஜா ராஜா தான்..இப்பவும் நான் விரும்பி கேட்பது ராஜா இசையமைத்த பாடல்கள் தான்..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பாடல்..... ரசித்தேன்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஆஹா ஆஹா அருமையாக இருக்கிறது இசை ஞானியின் நடனம்....

பொதுவாகவே இசை அமைக்கும் போது அந்த கலைஞர்கள் தங்களையும் அறியாமல் ஆடுவது உண்டு.

நாங்களும் ஆர்கன் வாசிக்குற ஆளுங்கதான் அண்ணே. பஹ்ரைன் வந்து உருப்படியா கத்துகிட்ட கலை அது...!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக