பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், ஜூலை 29

மீண்டும் வந்து........ஒரு மொக்கை

 

 

அணைவருக்கும்  வணக்கம்.

சென்ற வருடம் டிசம்பரில் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் பற்றின ஒரு பதிவை இட்டு அடுத்த நாளே சென்னையிலிருந்து குவைத் வந்து சேரும்படி ஆகிவிட்டது.  இங்கு வந்து சேர்ந்து வேலையில் வேலையில்  முழு மூச்சாக கவனம் செலுத்தி  கவனிக்க வேண்டிய கட்டாயம் . ஏர்போர்ட்டில் இருந்து கம்பெனியின் அலுவலகத்துக்குள் நுழைந்தவுடன்  பிரமாதமாக  வரவேற்று கையில் ஒரு புதிய செல் போனையும் திணித்து விட்டுத்தான் இருப்பிடத்துக்கு அழைத்து சென்றனர். அந்த மொபைல் அலுவலகம் மற்றும் உள்ளூர் வேலைகளுக்கு மட்டுமே. நான் வேலை செய்ய வேண்டிய தொழில்சாலையில் நெட்டும் இல்லை ஸ்க்ருவும் இல்லை. சரி சில தினங்களில் கிடைக்கலாம் என்று இருந்த எனக்கு  பல்பு தான் கிடைத்தது. வெளி உலக  தொடர்புகள் சுத்தமாக அற்று போனது.

 சென்னையில் வீட்டுக்கு பேச வேண்டும் என்றால் கூட வழி இல்லை.மெயில் அனுபவும் சுத்தமாக வழி இல்லை, பிரதான அலுவலகத்தில் அனைத்தும்  இருக்கிறது . அனால் இங்கிருந்து அங்கு செல்ல கார் வேண்டும்.அங்கு  சென்றாலும் எல்லோரும் கால்களில் வெந்நீரை  கொட்டிக்கொண்டு அலறுவது போல அனைவரும்  கிரி கிரி என்று பேசிக்கொண்டே  இருப்பார்கள்.இதற்காகவே அங்கு செல்லுவதை தவிர்த்தேன். சென்ற ஏழு மாத காலம் பதிவுலகிலிருந்து நான் அம்பேல் ஆகிவிட்டேன். 

பல முறை இன்டர் நெட் இணைப்புக்கு முயன்றும் பலனில்லை. அருகில் ஒரு பிரவ்சிங் செண்டர் இருப்பதை கேள்விப்பட்டு பலநாள் பசித்து கிடந்தவனுக்கு சட்டியில் நிறைய பழைய சாதம் கிடைத்தால்  உண்டாகும் சந்தோஷம் போல அங்கு சென்றால்  எங்கும் அரபி எதிலும் அரபி என்ற  இந்  நாட்டவரின் மரபு படி ஒரு ஜீவனுக்கும் நான் எதற்கு வந்துள்ளேன் என்று சொன்னால் புரியவில்லை.அவர்கள் அரபியில் மட்டுமே பேசுகிறார்கள் . ஆங்கிலம் ஒரு அட்சரம் கூட புரிவதில்லை. இந்தியும் இங்கு எடுபடாது .எப்படியோ வந்த நோக்கத்தை புரியவைத்தபின்  எனக்கு ஒரு மெஷினையும் காட்டினார்கள் சிரித்துக்கொண்டே.    அரை  இருட்டில் உட்கார்ந்து அதனை இயக்கி ஒரு மெயில் அனுப்ப எனக்கு நாக்கு தள்ளியது தள்ளியது உண்மை. அணைத்தும் அரபிய மொழியில்தான், கூகிள் ஆண்டவரும், யாகுவும் முழுக்க முழுக்க அரபியமொழியில்தான் இருக்கின்றன. ஆங்கிலத்தில் மாற்றிக்கொண்டு  நம் வேலையை ஆரம்பிக்க, போதும்  என்றாகிவிட்டது.

அது ஒரு காஸ்மோபொலிடன்  கிளப் என்பதால் பில்லியர்ஸ்  விளையாட நிறைய அராபிய இளைஞர்கள் கூட்டம். கீ போர்டில் சுத்தமாக எழுத்துக்கள் இருக்காது, சரிதான் போகட்டும் என்று சமாளித்தால்  இன்னொரு சவால், பத்து வருடங்களுக்கு முன்பு தயாரித்த மௌஸ் போலும் அது,   உரித்த தேங்காய் சைசில் கைக்கு அடங்காமல் என்னை படுத்தி எடுக்க, கோழி  முட்டை சைசில் பவுசை பயன்படுத்திவிட்டு தேங்காய் சைசில் உள்ள மவுசை பயன் படுத்தி ஒருவழியாக சில மெயில்கள்   அனுப்பிவிட்டு பதிவுலகம் வந்தால் அரை குறை  வெளிச்சத்தில் டைப் செய்யவே அவஸ்தை.போதும் என்று வந்துவிடுவேன்.

இங்கு குவைத்தில் விசா தயாராகி பின்னர் சிவில் ஐ . டி. என ஒரு கார்டு தருவார்கள். அது இருந்தால் மட்டுமே நாம் தனியாக சிம் கார்ட் மற்றும் நெட் இணைப்பும் பெற இயலும். ஐக்கிய அரபு எமிரேட்டில் இது போன்ற வேலைகள் விரைவில் முடித்து விடும். சென்று இறங்கியவுடன் இறங்கிய வுடன் நம் பாஸ்போர்ட் பிரதி ஒன்றை கொடுத்தால் போதும், சிம் கார்டும், நெட் இணைப்பும் கிடைத்துவிடும்.ஏழு மாதங்கள் ஆகியும் இன்னமும் எனக்கு விசா வேலைகள் முடியவில்லை,எப்போது சிவில் ஐ .டி. கிடைக்கும் என்று யாருக்கும் தெரியாது.இந்த  கூத்தில் நான் நெட் இணைப்புக்கு எங்கே போவது. நான் செல்லும் அந்த ப்ரொவ்சிங் சென்டருக்கு ஒரு நாள் மாலை நேரம் சென்ற போது கணனிகள் இருந்த அந்த சென்டரை சுத்தமாக துடைத்து எடுத்து விட்டு கம்பளங்கள் விரித்து நிறைய திவான் இடப்பட்டு அரபியர்கள் இருந்துகொண்டு ஹூக்கா பிடித்துக்கொண்டு டெலிவிஷன் பார்த்துக்கொண்டிருக்க, சத்தம் இல்லாமல் திரும்பி விட்டேன்.உள்ளதும் போச்சுடா........

ஒருவழியாக நம் நண்பர் ஒருவர் (திரு.சரவணன்) உடன் வேலை செய்கிறார் .
பெருந்தன்மையுடன் தனது சிவில் ஐ.டி. காட்டி எனக்கு இந்த நெட் இணைப்பை இணைப்பை பெற்று தந்தார்.சென்ற 25 ஆம் தேதியன்று இரவு ரூமிற்கு வந்து இணைப்பை ஏற்படுத்தி பதிவுலகம் வந்த பின்னர்தான் எனக்கு புதிதாய் பிறந்து வந்தது போல ஒரு உணர்வு. படங்கள் வழக்கம் போல கூகிளாண்டவர் திருவருள்தான்.நான் இன்னமும் வெளியில் சுற்ற இயலவில்லை.இதில் எங்கே இருந்து படம் எடுப்பது.

ஆரஞ்சு பழத்தை கம்பியில் குத்து நட்டு வைத்தது போல உள்ள படம் மற்றும் தவளைபானை யை சொருகி வைத்தால் போல உள்ள அந்த டவரும் இங்கு உள்ள சிறப்பான கட்டிட அமைபபுக்கலாம். இந்த டவரை நான்
//தவளைபானை  டவர் // என்றுதான் பேசும்போதும்  குறிப்பிடுவேன். 


 ஆரஞ்சு பழத்தை கம்பியில் குத்தி....




தவளைபானை டவர் ??

குவைத் திரு நாட்டில் இருக்கும் நம் பதிவர்களை தொடர்பு  கொள்ள வேண்டும் இனிமேல்.  அப்பாடா .......................... ஏழு மாசமாக காத்திருந்து ஒரு மொக்கை பதிவு போட்டாகிவிட்டது. இனிமேல் கும்மி அடித்து  கொண்டாட வேண்டியது உங்கள் அனைவரின் தலை எழுத்து . மீண்டும் சந்திப்போமாக .

32 comments:

Avargal Unmaigal சொன்னது…

மாணிக்கம் வாங்க வாங்க...

எங்கடா இந்த ஆள் போனான் என்று நினைத்து இருந்தேன். வந்தீட்டிங்க.

பழைய பதிவர்கள் எல்லாம் திரும்ப வர ஆரம்பிச்சுட்டாங்க போல

வாழ்க வளமுடன்

பெயரில்லா சொன்னது…

நீண்ட இடைவெளிக்கு பிறகு வலைப்பக்கம் வந்துள்ள அண்ணனுக்கு வணக்கங்கள். குவைத் அனுபவம் சூப்பர். இன்னும் விரிவான பல கட்டுரைகள் எதிர்பார்க்கிறேன்.

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கு நன்றி Avargal Unmaigal

பொன் மாலை பொழுது சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கு நன்றி ஆரூர் முணா செந்தில்

உணவு உலகம் சொன்னது…

மறு பிரவேசம். வாழ்த்துக்கள் சார்..

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கு நன்றி ஆபீசர் :))

ப.கந்தசாமி சொன்னது…

பரவாயில்லை. எப்படியோ மூச்சு விட நேரம் கிடைத்து விட்டது. தனிமைச்சிறை மிகவும் கொடிது.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

என்கிட்டே போன்ல பேசுனது ஒன்னுவிடாம இங்கே எழுதிட்டீங்களே அண்ணே...! இன்டர்நெட் உலகம் இப்போ நமக்கு ரெண்டு கைபோல ஆகிடுச்சு, வேலையில் கவனம் செலுத்திவிட்டு, அப்புறமா இங்கே வாருங்கள் அண்ணே.

செங்கோவி சொன்னது…

ஹா..ஹா..வெல்கம் டூ குவைத்!!!

செங்கோவி சொன்னது…

எனக்கு மெயில் அனுப்புங்கண்ணே..முடிந்தால் நேரில் சந்திப்போம்.

ananthako சொன்னது…

கடமை முதலில். பிறகு மொக்கை. இடுகை இடுவதும்
ஒரு வகை குடிப்பழக்கம் போல. அந்த நேரம் கை பர பரக்கும். வலைப்பதிவு நேரம் நீங்கள் துடித்தது எப்படி?
நினைத்தாலே உங்கள் நிலை என் முன் நிழலாடுகிறது.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வருக... வருக...

வாழ்த்துக்கள்...

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கு நன்றி திரு பழனி . கந்தசாமி அய்யா அவர்களே.
தாங்கள் மீண்டும் என்னை நினைவில் வைத்து வந்தது எனக்கு
மகிழ்சியை தருகிறது.

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கு நன்றி மனோ. போனில் பேசும் பொது மனம் நிறைத்தேன்

பொன் மாலை பொழுது சொன்னது…

நன்றி செங்கோவி அவர்களே . சந்திப்போம் ஒரு நாள்
மெயில் வருகிறது.:))))

பொன் மாலை பொழுது சொன்னது…

தங்களின் வருகைக்கு மிகக நன்றி திரு Sethuraman Anandakrishnan அவர்களே.
முதன் முதலாக வருவதால் எனக்கு பெருமை.
அறிவுரைப்படி கவனமாகவே இருப்பேன். தொடர்ந்து வர வேண்டுகிறேன்.

பொன் மாலை பொழுது சொன்னது…

நன்றி தனபாலன் ,தாங்களும் இங்குதான் உள்ளீர்கள் என் அறிந்து மிக மகிழ்ச்சி.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

வருக .... வருக ....

வாழ்த்துக்கள்.

பொன் மாலை பொழுது சொன்னது…

நன்றி அன்பர் ராஜ சேகர் அவர்களே

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களது பதிவு.... மிக்க மகிழ்ச்சி.... தொடர்ந்து சந்திப்போம்....

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கு மிக்க நன்றி அன்பர் வெங்கட் நாகராஜ் தொடருவோம்

சென்னை பித்தன் சொன்னது…

பதிவுலகம் புத்துயிர் பெற்றது!வாங்க கக்கு,கலக்குங்க!

பொன் மாலை பொழுது சொன்னது…

இப்படியும் "வாரி விட " தாங்கள் இருப்பது எனக்கு மகிழ்ச்சியே
வருகைக்கு நன்றி

Menaga Sathia சொன்னது…

வாங்க சகோ நலமா??,நீண்ட இடைவெளிக்குபின் தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி..இனி தொடர்ந்து கலக்குங்க..

இராஜராஜேஸ்வரி சொன்னது…


இனிய வாழ்த்துக்கள்.

பொன் மாலை பொழுது சொன்னது…

மிக்க நன்றி மேனகா உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் இருக்கும் மகிழ்ச்சிக்கு இணை இல்லை

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கு மிக்க நன்றி ராஜேஸ்வரி அவர்களே

Unknown சொன்னது…

சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா?

பொன் மாலை பொழுது சொன்னது…

நிச்சயம் இல்லை சக்கரைக்கட்டி,
வருகைக்கு நன்றி.

தனிமரம் சொன்னது…

வாங்க வாங்க குவைத் அனுபவத்தை குதுகலமாக கொட்டுங்க:)))

ஜெய்லானி சொன்னது…

பக்கத்து வீட்டில இருக்கும் போதே பார்க்க முடியல :-(. இதுல பக்கத்து ஊரா ...அவ்வ்வ்வ்வ் ...!!!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக