சென்ற செப்டெம்பர் மாதம் மும்பையில் நிகழ்ந்தது இது. அசீம் திரிவேதி என்ற கார்டூனிஸ்ட், அன்னா ஹசாரே குழுவில் இருந்தவர். தீவிர லோக் பால் மசோதா ஆதரவாளர், நம் நாட்டு மேதகு அரசியல் வாதிகளின் ஊழல். லஞ்சம் இவைகளின் தீவிர எதிர்பாளர்.கார்டூன் வெளியிடவே இவர் தனி வெப் சைட் வைத்துள்ளார்.
இவர் வரைந்த கார்டூன்களில் சில
இவைகள் அனைத்தும் வலையில் கொட்டிக்கிடக்கின்றன.
இந்திய பாராளுமன்றத்தையே அவமதிப்பு செய்துள்ளது மற்றும் இந்திய அரசின் தேசிய சின்னமான மூன்று சிங்கங்களையும் இவர் அவமதிப்பு செய்தார் என்று இவர் மேல் வழக்குகள் போடப்பட்டு கைதாகி பின்னர் கிளர்ந்த எதிர்பால் வெளியில் வந்தவர்.
சரி,
இரண்டு நாட்களுக்கு முன்பு பாண்டிசேரியில் இருக்கும் சீனிவாசன் என்ற சிறுதொழில் நிறுவனர் ஒருவர் மத்திய அமைச்சர் ப. சிதம்பரனார் அவர்களின் திருக்குமாரர் கார்த்திக் சிதம்பரனார் பற்றி ட்விட்டரில் எழுதினார் என்று CBCID காவலர்களால் விடியல் காலை நேரம் அவரது வீட்டில் கைது செய்யபடுகிறார்,
:சீனிவாசன் தன் ட்வீடரில் ”கார்த்திக் சிதம்பரம் ராபர்ட் வாத்ராவை விட நிறைய சொத்து சேர்த்துட்டார் என்று செய்திகள் வருகின்றன”என்று குறிப்பிட்டுள்ளார்.
சீனிவாசன் கெஜ்ரிவாலின் ’ஊழலுக்கு எதிரான இந்தியா’ என்ற அமைப்பில் ஆர்வமுள்ளவர். ’பத்திரிகைகளில் வந்த செய்தியை நான் டிவிட்டினேன். இதில் அவமதிப்பு எங்கே என்று தெரியவில்லை’ என்கிறார்.
மேலே உள்ள படம் மதுரையில் சில மாதங்களுக்கு முன்பு காணப்பட்ட ஒரு போஸ்டர். சோனியாவின் மைந்தர் ராகுல் ஒரு சிங்கம், ப. சிதம்பரம் அவர்கள் ஒரு சிங்கம், மற்றும் அவரின் மைந்தர் கார்த்திக் சிதம்பரம் மூன்றாவது சிங்கம் என வர்ணித்து போஸ்டர் ஒட்டி அழகு பார்த்தார்களே இது குற்றமில்லையா?
இந்திய தேசிய சின்னமான மூன்று சிங்க அமைப்பை இவர்கள் சிறுமை படுத்தவில்லையா?
இது தேசிய சின்னத்தினை அவமானப்படுத்தியது ஆகாதா?
இவர்களுக்கு இந்த நாட்டு சட்டம் செல்லாதா?
மந்திரிகளுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் ஒரு சட்டம் நம் போன்ற பொது மக்களுக்கு வேறு ஒரு சட்டமா?
பதவியும், பணமும் அதிகாரமும் இவர்களிடம் இருப்பதால் இவர்கள் எதையும் செய்ய இந்த நாட்டு சட்டம் அனுமதிக்கிறதா?
இது அதிகார துஷ்ப்ரயோகம் இல்லையா?
என்ன செய்யப்போகிறோம்?
டைம்ஸ் நவ் வில் வந்த விபரங்கள்
யாராவது சட்ட நுணுக்கங்கள் அறிந்த நல்லவர்கள்தான் இத்தகைய கயமைத்தனங்களுக்கு சட்டத்தின் மூலம் தீர்வு காண முன்வரவேண்டும்.
2 comments:
சட்டம் ஒரு இருட்டறை- கேப்டன் நடிச்ச சினிமாவைச் சொல்லலை; பேரறிஞர் அண்ணா சொன்னதைச் சொன்னேன்!
வேடிக்கைதான். வேதனைதான் வேறென்ன சொல்ல.....
கருத்துரையிடுக