பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், அக்டோபர் 9

யார் இந்த மாப்பிள்ளை ?




இன்று இந்தியாவின் மீடியாக்களில் அல்லோலகல்லோலபடும் இந்த ராபர்ட் வாத்ரா பிறந்தது உத்தர் பிரதேசத்தில் உள்ள மொரதாபாத் என்ற ஊரில்.அப்பா ராஜேந்திரா அம்மா மௌரீன் வாத்ரா. அம்மா ஒரு ஸ்காட்லான்ட் நாட்டு பிரஜை.இவரின் முன்னாள் பெயர் மெக் டோனக் ( Mc Donagh ) அப்பா ராஜேந்திர மொராதாபாத் ஊரில் பித்தளை மற்றும் மர வேலைப்பாடுகளால் ஆனா கை வினை பொருட்களின் கடை ஒன்றை நடத்திவந்தார். பழைய உடைந்த, பாழான உலோக பொருள்களை வாங்கி அவைகளை விற்கும் "காயலாங்கடை" வேலையும் நடக்குமாம். படிக்கும் நாட்களில் பள்ளிக்கு பணம் கட்ட முடியாமல் கூட கஷ்டத்தில் வாழ்ந்த குடும்பமாம். அப்பாவின் தொழிலில் வாத்ராவும் சேர்ந்துகொண்டார் சற்று லாபம் வர ஆரம்பித்தது பணக்கார பிள்ளைகளின் நட்பும் கிடைத்தது. பெரிய இடங்களின் நட்பும் கிடைத்தது. சோனியாவின் பெண் பிரியங்காவும் இவரும் காதலிக்க, சோனியாவின் ஆதரவுடன் கல்யாணம் நடந்தது. அப்போது தொழில் செய்ய உதவியாக ரூபாய் சுமார் ஐம்பது லட்சம் கிடைக்க , தக்க ஆதரவும், அரசாங்க அரவணைப்பும் பக்கபலமாக இருக்க, கலைபொருட்கள் ஏற்றுமதி தொழிலில் முன்னேறினார்.

உண்மையில் இவர்கள் பாகிஸ்தானில் உள்ள சியால் கோட் நகரில் வசித்தவர்கள். பிரிவினையின் போது இந்தியா வந்துவிட்டார்கள். வாத்ராவுக்கு ரிச்சர்ட் என்ற ஒரு சகோதரரும், மைகளே  என்ற சகோதரியும் உண்டுதான்.
வாத்ரா - பிரியங்கா கல்யாணத்திற்கு பிறகு அதை பிடிக்காமல் ரிச்சர்ட்  அந்த குடும்பத்தை விட்டு பிரிந்துவிட்டார். கல்யாணத்திற்கு பிறகு இவரது வாழ்கை பாதையில் நிறைய திருப்பங்கள் ஏற்பட்டன. 2001 ஆம் வருடம் வாத்ரா ஒரு விளம்பரம் செய்தார். "தன் தந்தையார் மற்றும் சகோதரர் ரிச்சர்ட் இவர்களிடம் எவரும் தொடர்பு கொண்டு ஏமாற வேண்டாம்  என்றும், இருவரும் பணம் வாங்கிகொண்டு உத்தர் பிரதேச காங்கிரஸ் கமிட்டியில் வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றியுள்ளனர் " என்று பகிரங்கமாக அறிவித்தார்..தந்தையார் ராஜேந்திர தன் பிள்ளை வாத்ரா மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன் என்று கூட அறிவித்தார்.

அதெல்லாம் சரி.......................... மெயின் பாய்ண்டில் கைவைத்தால் ஷாக் அல்லவா அடிக்கிறது!
  • வாத்ராவின்  தந்தை மர்மமான முறையில் டெல்லியில் "தற்கொலை செய்துகொண்டு" இறந்துபோனார்.

  • வாத்ராவின்  சகோதரர் ரிச்சர்ட்  இவரும் தங்களின் டெல்லி வீட்டில் "மர்மமான" முறையில் இறந்து போனார்.

  • வாத்ராவின் சகோதரி மைக்கேல்  "மர்மமான" முறையில் ஒரு வாகன விபத்தில் இறந்து போனார்.

  • இந்த செய்திகள் இந்திய ஊடகங்களில் வராமல் கவனித்துக்கொள்ளபட்டன. 

  • இந்தியாவின் முக்கியமான ஷாப்பிங் மால் களில் எல்லாம் வாத்ராவுக்கு  பங்குகள் உள்ளன. 

  • DLF  ரியல் எஸ்டேட் கம்பெனியில் இவருக்கு பங்குகள்  உள்ளன.

  • DLF - IPL இவைகளிலும் பங்குகள் உண்டு.

  • புது டெல்லியில் நடந்த காமன் வெல்த் விளையாட்டு களில் அதன் நிர்மாண, கட்டுமான பணிகளில் DLF கம்பெனிக்கு அதிக பங்கு வதேரா மூலமாகவே இருந்தது. இந்த கம்பெனி இந்த நிகழ்வின் போது நல்ல லாபம் பார்த்தது உண்மைதான்.

  • காமன்வெல்த் ஊழல் புகழ் (மகாபாவி)  சுரேஷ்   கல்லுமாடி இந்த DLF நிர்மாண கம்பெனிகளுக்கு நிறைய சாதகங்கள் செய்துள்ளார்  காரணம் வாத்ரா  வின் வர்த்தக பரிவர்த்தனைகள் நேரடி தொடர்பு இந்த கம்பெனிகளில் இருந்தது.

  • வாத்ராவுக்கு  பல நட்சத்திர ஹில்டன் ஹோட்டல்கள் சொந்தம். டெல்லியில் உள்ள ஹில்டன் கார்டனும் இதில் அடங்கும்.

  • கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இவரின் பங்கு வெளியில் ஊடகங்களுக்கு தெரியாமல் வைக்கப்பட்டது.

  • புகழ் பெற்ற டூ ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் முக்கிய பங்குதாரரான Unitech நிறுவனத்தில் வாத்ராவின்  வர்த்தக பங்குகள் 20% ஆகும்.அதனால்தான் பலிகடாக்களாக ஏ. ராசா போன்றோரை மாட்டி விட்டு பின்னர் வெளியில் விட்டனர்.உண்மையில் பெரிய திமிலங்கள் இன்னும் மாட்டவே இல்லையாம்.
  • டூ.ஜி. ஊழலில் அதிக லாபம் அடித்தவர்கள் இந்த  Unitech பங்குதாரர்கள் தான்.பின்னாளில் இதுதான் uninor ஆனது.

  • வாத்ராவின் வர்த்தக ஈடுபாட்டால்தான் டூ. ஜி. ஊழல்கள் பெயரளவில் விசாரிகப்ட்டு பின்னர் "ஊற்றி மூடப்பட்டன."
  • உள்நாட்டிலும்  நாட்டிலும் வெளிநாட்டிலும் இவருக்கு நிறைய  அசையா சொத்துக்கள் (நிலம்/ வீடுகள்) உள்ளன. 
  • இந்தியாவின் எந்த விமான நிலையங்களிலும் இவரை சோதனை செய்யமாட்டார்கள்.
  • He owns a substantial stake in the parent company of IndiGo airlines along with Priyanka Gandhi.
  • He owns, Artex, a small company specialising in jewellery and handicraft exports.
  • His companies have received unsecured loans from DLF Limited, India's largest real estate conglomerate.
  • Sky Light Hospitality Pvt Ltd (owned by Vadra and his mother Maureen Vadra), is a partner in a firm that owns Hilton Garden Inn in the South Delhi business district Saket. DLF Hotel Holdings is another partner in this firm.
  • Blue Breeze Trading Pvt Ltd (aircraft chartering)
  • North India IT Parks Pvt Ltd
  • Real Earth Estates Pvt Ltd
  • Sky Light Realty Pvt Ltd.
  • India Today weekly has reported that he has a partnership and wide-ranging transactions with the country's biggest realty firm, DLF Limited.

பெரிய இடத்து மாப்பிளை என்றால் இதெல்லாம் இருக்கும் தானே. இந்த கேஜ்ரி வாளுக்கு இதெல்லாம் தெரிவதே இல்லை.நமக்கும்தான்.








4 comments:

Madhavan Srinivasagopalan சொன்னது…

Adengappaa..

பட்டிகாட்டான் Jey சொன்னது…

ஆஆஆஆஆஆஆ......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ப.கந்தசாமி சொன்னது…

உலகத்தில என்னென்ன சமாசாரமெல்லாம் நடக்குது, நமக்கு ஒண்ணுமே தெரியமாட்டேங்குதே?

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

திரைமறைவில் இருக்கும் தாதாக்கள் போல அல்லவா இந்த அநியாயம் நடந்துருக்கு அண்ணே...?!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக