சோனியாவின் மருமக பிள்ளை ராபர்ட் வதேர மீது ஊழல் புகார்கள் வந்தாலும் வந்தது. அவரிடம் டீலிங் வைத்திருந்த DLF கம்பெனியின் பங்குகள் இன்று மட மடவென சரியாய் ஆரம்பித்துவிட்டன.
ஊழலுக்கு எதிரான இந்தியர்கள் ( I A C - India Against Corruption ) - கட்சியின் சார்பில் அண்ணாதே அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் சட்டத்துறை வல்லுநர் பிரஷாந்த் பூஷன் இவர்கள் தன் மீது சுமத்திய ஊழல் குற்ற சாட்டுகளுக்கு பதில் சொல்லும் முகமாக சோனியாவின் மருமகன் முக புத்தகத்தில் பதில் எழுத ஆரம்பித்து அது அவருக்கே வினையாய் போனது பயங்கர காமெடி!
அடிமாடு விலையில் அதாவது சலுகையில் DLF ரியல் எஸ்டேட் காரர்களிடம் இடம் பெற்றுக்கொண்டு அவைகளை மிக அதிக விலைக்கு விற்று ஆதாயம் அடித்ததாக குற்ற சாட்டு.
இதனை வதேராவும் அந்த கம்பெனியும் மறுத்துள்ளபோதிலும் ஆதாரமாக உண்மைகளை சொல்ல வழி இல்லாமல் போகவே பங்குசந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகளின் விலையும் சரிய ஆரம்பித்தன.
அதோடு இல்லாமல் முக புத்தகத்தில் இவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுகளுக்கு பதில் தரும் விதமாக எழுதிய கருத்துக்கள் இவர்மீதே திரும்பவும் வந்து விழும் கற்கலாகிவிட்டன
// Vadra wrote on his Facebook page: "Mango people in banana republic." //
இதற்கு பதில் தரும் விதமாக IAC இயக்கத்தின் உறுபினர்களில் ஒருவரான குமார் விஷ்வாஸ் என்பவர் வதேரா மேற்கண்டபடி இந்திய ஜன நாயகத்தை கிண்டலடித்து "வாழைபழ ஜனநாயகம் " என்று குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டி அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளார்.
சோனியாவின் மாப்பிளைக்காக வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் குதித்த காங்கிரஸ் சிரோன்மணிகள் இதற்கு என்ன பதில் சொல்வார்கள்?
0 comments:
கருத்துரையிடுக