பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, அக்டோபர் 12

மங்கிய மாய பிம்பம்



அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் பிரிட்டனும் நரேந்திர மோடி தங்கள் நாட்டிற்க்கு வர தடை விதித்து விட்டன என்று இங்கிருக்கும் அணைத்து " மத சார்பற்ற " அமைப்புக்களும் தினமும் கொண்டாடி மகிழ்ந்தன. சைனா காரனுக்கும், ஜப்பான் காரனுக்கும் தெரிந்தது நம் நாட்டு "மத சார்பற்றவர்களுக்கு " தெரியாமல் போய்விட்டது. அதனால்தான் சைனாவும், ஜப்பானும் மோடியை தங்கள் நாட்டுக்கு வர வழைத்து பாராட்டின. இன்று  அந்த வெள்ளைகாரனே மோடியை ஏற்றுக்கொண்டு கொண்டாட ஆரம்பித்துவிட்டான். 

இதெல்லாம் தங்கள் நாடுகளின் பொருளாதாரம் சார்ந்த சுயநல ஆர்வங்கள் தான் என்றாலும், இவர்களும் இந்திய அரசியல் கட்சிகள் போலவே நாடகம் ஆடுவதில் வல்லவர்களே! அடுத்து "உலக போலீசு காரரு" அமெரிக்காவும் அதே வழியில் மோடியை நாடும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்தியாவில் காங்கிரஸ் இனி மூழ்கிக்கொண்டிருக்கும் ஒரு  கப்பல் என்பது அவர்களுக்கு நன்கு விளங்கியுள்ளது.

குஜராத் கலவரம் நிகழ்ந்து ஏறக்குறைய பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. நம்ம அணைத்து "சமய சார்பற்ற" டுபாக்கூர் அரசியல் கட்சிகள் மற்றும் பிற மதவாத அமைப்புக்களும் ஜாதி. இன அடிபடையில் கட்சி நடத்தும் கூட்டங்கள் கூட அவரை ஏதோ தீண்ட தகாதவராக, ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டுமே எதிரியாக சித்தரித்து ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தன. இந்திரா காந்தியின் படுகொலைக்கு பின்னர் அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்காரர்கள் டெல்லியில், ஜெகதீஷ் டைலர் தலைமையில் சீக்கிய இனத்தின் மீது நடத்திய  படுகொலைகளை வசதியாக மறந்துவிடுவோம்.அந்த சீக்கிய படுகொலைகளுக்கு  இன்றுவரை ராஜீவ் காந்தியை எவராவது விமர்சித்தது உண்டா?  2002 ஆண்டு நிகழ்ந்த குஜராத் கலவரங்களுக்கு காரணமே கோத்ரா ரயில் எரிப்பில் நிகழ்ந்த 59 பேரின் மரணங்களையும் வசதியாக மறந்துவிடுவோம்.குஜராத்தில்  1969 ஆம் ஆண்டு இதே போல ஒரு கலவரம் நிகழ்ந்த போது அங்கு அரசாண்டது இதே " சமய சார்பற்ற " காங்கிரஸ் தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? இனக்கலவரங்கள் இந்தியாவில் குஜராத்துக்கு முன்னர் நிகழ்வே இல்லையா என்ன??

பொருளாதார மந்த நிலை தொடர்ந்து நிலவினாலும்,இந்தியாவில் பிற மாநிலங்களை விட குஜராத் மாநிலத்தில் மட்டும் ஏற்பட்டுள்ள சீரிய வளர்ச்சி பணிகள், தொழில் துறையில் நல்ல வளர்ச்சி, மக்களின் வாழ்கை தரம் , நீண்ட வருடங்களாக  நிலவும் அமைதியான சூழல் அனைத்தும்  அவர்கள் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. இப்படி எழுதினால் இங்கு அநேகம் பேருக்கு "வயித்தால" போகும் என்பது நிச்சயம். இஸ்லாமிய அமைப்புக்கள் மோடியை பழிப்பதை நியாயமாக ஏற்றுகொள்ளலாம். ஆனால் மத வாத காங்கிரசும், காம்ரேட் தோழர்களும் மோடியை விமர்சிப்பது ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை என்ற கதைதான். அமெரிக்க அரசு மோடிக்கு விசா மறுத்து விட்டது என்று ஏதோ அமெரிக்க அரசு  விசா தரவில்லை என்றால் மோடிக்கு  இந்திய பிரஜா  உரிமையே காணாமல் போய்விட்டதாக மகிழ்ந்து போனார் பிரபல கம்யுனிஸ்ட் பிருந்தா கரத். மோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சியாளர். ஆனால் அமெரிக்கா, கம்யுனிஸ்ட் கட்சியில் உள்ள எவருக்கும் எந்த நாட்டவருக்கும் தங்கள் நாட்டுக்கு வர விசா தருவதில்லையே அது ஏனாம்?


மேலைநாடுகள் வரவேற்றாலும், மறுத்தாலும் அவைகளை பற்றி எல்லாம் கவலைபடாமல் தம் மாநில மக்களின் நலன் மட்டுமே  மோடியின் குறிக்கோளாய் இருப்பதை இன்றும் நிறைய பேர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்  "பம்மாத்து சமய சார்பற்ற " அரசியல் கட்சிகள்  மோடியை ஒரு மோசமான மதவாதியாக மட்டுமே சித்தரித்தன ஆனால் அவைகள் எல்லாம் வெறும் மாய பிம்பங்கள் தான் என்று இப்போது தெளிவாயிற்று.குஜராத்தில் வாழும் இஸ்லாமியர்களுக்கும், பிற மாநில இஸ்லாமியர்களுக்கும் உள்ள வேறுபாடே இதுதான். குஜராத் வாழ் இஸ்லாமியர்கள் இதனை உனர்துள்ளனர். மோடி இஸ்லாமியர்களின் எதிரி என்றால் ஏன் இன்றும் குஜராத்தில் அம்மத தலைவர்கள்,பிரமுகர்கள் மோடியை சந்தித்து வாழ்த்துகின்றனர்?அவர்கள் இஸ்லாமியர்கள் இல்லையா என்ன? 

காங்கிரஸ் ஆட்சி செய்யும் அஸ்ஸாமில் மதக்கலவரம் நிகழ்ந்ததே? அதை ஏன் மறந்துவிடுகிறீர்கள்? அதற்க்கு  காங்கிரஸ் பொறுப்பு இல்லையா? இதற்க்கு சோனியாவை எவரும் குறை கூற தயாரா? இல்லை அந்த மாநிலத்தில் ஆட்சி நடத்தும் காங்கிரஸ் தலைவரை குறைகூருவீர்களா .ஹரியானாவில் இன்றும் தொடர்ந்து பழங்குடி பெண்களுக்கு கற்பழிப்புக்கள் நடக்கிறதே அங்கு யார் ஆட்சி செய்கிறர்ர்கள்? காங்கிரஸ் தானே!

மத சார்பின்மை என்ற ஒரு வார்த்தையே எத்தகைய போலித்தனமானது என்பது நமது இஸ்லாமிய அன்பர்களுக்கு நன்கு தெரியும்தான். அவர்களின் மார்க்க  நூலில் அத்தகைய ஒரு ஆட்சி முறையை ஏற்றுக்கொள்ளவில்லை. மக்களாட்சி ,ஜனநாயகம் இதெல்லாம் கூட அவர்களுக்கு மாறானது. இதனை அவர்கள் வெளிபடையாக ஒத்துக்கொள்ளமாட்டார்கள் . ஆனால் அவர்களின் சட்டம் மதம் சார்த்த ஷரியத் மட்டுமே. இப்படி இருக்க அணைத்து அரசியல் கட்சிகளும் மதம், ஜாதி. இன அடிபடையில்  தங்களை நிலை நிலை நிறுத்திக்கொண்டு ஒட்டு வாங்குவதில் குறியாக இருப்பதில் எவருக்கும் வெட்கம் இல்லை. ஆனால் நரேந்திர மோடியை மட்டும் வசை பாடவும், ஒரு இனத்தின் எதிரியாகவும் காட்ட மட்டும் எல்லாரும் ஒன்று  கூடி விடுவார்கள்.  இந்தியாவில் "மத சார்பற்ற " என்ற சொல்லுக்கு "இந்துகளுக்கு எதிரான " என்று பொருள்தரும் படிதான் இன்று வரை அணைத்து அரசியல் கட்சிகளும் பேசி செய்யல பட்டு வருகின்றன. இது இன்னமும் எத்தனை நாட்களுக்கு செல்லுபடியாகும்? 


சிறுபான்மையோர் முன்னேற்றம் , சிறுபான்மையோர்களின் பாதுகாவலன்  என்று சொல்லி சொல்லியே ஒவ்வொரு தேர்தலிலும் அவர்களின் வாக்குகளை பெற்று பொதுவான இந்திய மக்கள் என்ற கூட்டத்திலிருந்து  இஸ்லாமியர்களை பிரித்து அவர்களை ஒதுக்கி வைத்துள்ளது இந்த பொய்யான மத சார்பற்ற அரசியல் கட்சிகளே. காரணம் அவர்களுக்கு ஒட்டு வேண்டும்.அவ்வளவுதான். ஒசாமா பின் லாடனை  காங்கிரஸ் கட்சியின் தலைகளில் ஒன்றான டிக்கி விஜய சிங்க்  ( இது வாயை திறந்து வாங்கி கட்டிக்கொள்ளும் கேசு) ஒரு பேட்டியில் "ஒசாமா பின் லாடன் ஜி " என்று பேசி பெருமை பட்டு கொண்டதன் காரணம்? அவர் என்ன காந்திஜி, நேருஜி போன்ற இந்நாட்டு தேசிய தலைவரா? அவ்வாறு பின்லாடனை கொண்டாடினால் இஸ்லாமியர்கள் மகிழ்ந்து போவார்கள் என்றுதானே? இவர்தான் மத சார்பு அற்ற கட்சியின் தலைவர். இதைதான் இஸ்லாமியர்களும் நம்புகின்றனர். மத சார்பற்ற நிலை என்றால் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்களை கேவலப்படுத்துதல் என்ற நடை முறையில் மட்டுமே நம்பிக்கை கொண்ட கட்சிகள் இங்கு அதிகம். இன்று நாடு உள்ள நிலையில்  நரேந்திர மோடி போன்ற செயல்திறனும், ஆற்றலும், துணிச்சலும், தேச, மக்கள் பற்றும் கொண்ட ஒருவரே நமக்கு தேவை. மோடி இந்த நாட்டின் பிரதமராக பொறுப்பேற்று செயல் பட வேண்டும். அவர் ஒரு போராளி. இந்தியாவிற்கு இனி இதுபோன்ற ஆற்றல் மிக்கவர்களே தேவை. ஓட்டுக்காக "சம்ச்சா" அடித்து,காக்காய் பிடித்து, ஜால்ரா அடித்து ஆட்சியை பிடிக்கும் கட்சிகள் களைஎடுக்கப்படவேண்டும். அன்னியரின் ஆட்சியையும் அவர்களுக்கு பல்லக்கு தூக்கி பிழைக்கும் அணைத்து கட்சிகளும் நிராகரிக்கப்படுவார்கள் என்பது நிச்சயம். நான் மட்டுமல்ல,  என் நண்பர்கள் அநேகம் பேர்கள் (தி.மு.க.வில்) மோடி போன்றவர்தான் இந்திய பிரதமராக வரவேண்டும் என்று "ஆசைபடுகின்றனர் " நல்ல மாற்றம்தான். 



9 comments:

Madhavan Srinivasagopalan சொன்னது…

Nice article..

I lived in GJ for over 12 years.. out of which almost 9 years it was under Modi's Governance... Now, I am transfered and living outside GJ

To say shortly "I miss GJ"

பொன் மாலை பொழுது சொன்னது…

Thanks for your kind comments Dear Mr.Madhavan Srinivasagopalan. I understood that you are from Rajasthan now :))

Madhavan Srinivasagopalan சொன்னது…

No.. not in Rajastan..
But, similar 'state' of governance. :-)

எல் கே சொன்னது…

JI, but i dont think modi will be next pm. i feel somehow congress will come back to the powr

Unknown சொன்னது…

எனக்கு தெரிந்து மதவாதக் கட்சி என்று முத்திரை குத்தப்பட்ட பி.ஜே.பி ஆட்சியில்தான் இந்தியா பல மாற்றங்களை கண்டது...!நாற்கரச் சாலை, திறந்த வணிகம்...!சிறந்த கட்டுரை!

பொன் மாலை பொழுது சொன்னது…

Dear L.K. My expectation is that "Modi" like capable people can alone save India here after. They may be from any political party. Off course it will take time to come in to reality not immediately.

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கு நன்றி வீடு சுரேஷ் குமார்.

அஞ்சா சிங்கம் சொன்னது…

நல்ல அலசல் மோடி பிரதமர் ஆவது காலத்தின் கட்டாயம் .
நான் சென்ற ஆண்டு எழுதிய இடுகை நேரம் இருப்பின் பார்க்கவும் .
http://anjaasingam.blogspot.com/2011/09/blog-post.html

பொன் மாலை பொழுது சொன்னது…

நன்றி அஞ்சா சிங்கம் உங்களின் ஆக்கத்தை படிக்கசெல்கிறேன்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக