பெட்ரோலியம் அமைச்சர் ஜெயபால் ரெட்டி எரிவாயு சிலிண்டர்களின் பயன்பாடு பற்றி ஒரு வலைத்தளம் ஆரம்பிக்க போக. அது பிள்ளையார் பிடிக்க குரங்காய் போன கதையாக முடிந்தது. உள்ளே உள்ள சகல விபரங்களும் வெளியில் வந்து சிரிப்பாய் சிரிகிறது.
காங்கிரஸ் எம் .பி யும் தொழில் அதிபருமான நவீன் ஜிண்டால் பயன்படுத்திய மானிய விலை சிலிண்டர்கள் சென்ற ஒரு வருடத்துக்கு மட்டும்
சத்தியமாக 369 சிலிண்டர்கள்.
துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி 170 சிலிண்டர்கள்.
உத்திர பிரதேசம் மாயாவதி 91 மானிய விலை சிலிண்டர்கள் பயன்படுத்தியுள்ளார் சென்ற ஒரு வருடம் மட்டும் அதனால் அரசுக்கு இழப்பு Rs 31,318
முன்னாள் பஞ்சாப் DGP KPS கில் - 79 சிலிண்டர்கள். மானிய விலையின் மூலம் அரசுக்கு இழப்பு Rs 27,189
வெளி உறவு துறை அமைச்சர் ப்ரநீத் கவுர் 77 சிலிண்டர்கள். மானிய விலையின் மூலம் அரசுக்கு இழப்பு Rs 26,501.
spectrum புகழ் அ.ராசா திகார் ஜெயிலில் இருந்தபோது மட்டுமே அவரது வீட்டில் 77 சிலிண்டர்கள்.
சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் 60 சிலிண்டர்கள்.
ஆனால் கேபினட் அமைச்சர்கள் சிலர் மிதமாகவே பயன்படுத்தியுள்ளனர்.
பிரபுல் படேல் 41 சிலிண்டர்கள் மட்டும்.
சரத் பவார் வெறும் 33 சிலிண்டர்கள் மட்டுமே.
சல்மான் குர்ஷித் 62 சிலிண்டர்கள்.
பி.ஜே.பி. நிதின் கத்காரி 35 சிலிண்டர்கள்.
வெங்கைய்யா நாயுடு 33 சிலிண்டர்கள்.
காசு கொழிக்கும் கார்பொரெட் நிறுவன தலைவர்கள் மட்டும் விட்டு வைப்பார்களா?
ரான் பாக்க்ஷி மருந்து நிறுவன தலைவர் பாய் மோகன் சிங் 52 சிலிண்டர்கள்.
பென்னட் கோல்மன் நிறுவனத்தலைவர் சமீர் ஜெயின் 39 சிலிண்டர்கள்.
பாரதி ஏர் டெல் சுனில் மிட்டல் 27 சிலிண்டர்கள்.
உண்மையில் இன்னமும் நிறைய பெரும் புள்ளிகள், அவர்களின் உபயோகங்கள் மயாமாய் மறைந்துவிட்டன.
சாதரணமாக ஒரு சிலிண்டர் பெற்ற பின்னர் அடுத்த 21 நாட்கள் ஆனா பிறகே மறு சிலண்டர் கேட்டு விண்ணப்பிக்க இயலும்.அப்படி கணக்கிட்டால் ஒரு வருடத்துக்கு நீங்களோ அல்லது நானோ வெறும் 18 சிலிண்டர்கள் மட்டுமே அதிக பட்சம் வாங்க முடியும்.
பெட்ரோலியம் அமைச்சரகம் இந்த விஷயத்தில் விதிகள் ஒன்றும் மீறப்படவில்லை என அப்பட்டமாக புளுகி தள்ளுகிறது. யாரோ எப்போதோ ஆரம்பித்து வாய்த்த வி.ஐ.பி. கலாச்சாரம் தான் இது போன்ற அல்ப தனங்கள் வளர்ந்து பெருக ஆதாரம்.
எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இருபதாக சொல்லி சொல்லியே மாதா மாதம் டீஸல், பெட்ரோல் மற்றும் எரி வாயு விலைகளை உயர்த்தி வரும் மத்திய அரசுக்கு, பொருளாதார மேதை - மன்மோகன் சிங் அவர்களுக்கும் கூட மேற்கண்ட இந்த உண்மைகள் மட்டும் தெரியாது என்று நாம் அனைவரும் நம்பலாம்.
4 comments:
now they are going to increase it to 10
எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இருபதாக சொல்லி சொல்லியே மாதா மாதம் டீஸல், பெட்ரோல் மற்றும் எரி வாயு விலைகளை உயர்த்தியே மக்களை கஷ்டபடுத்துகிறாகள்................
நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
சரியா சொன்னீங்க .
தகவலுக்கு நன்றி.
எப்போது திருந்துவார்கள்
கருத்துரையிடுக