சென்ற மார்ச் மாதம்தான் நான் மோட்டார் பைக் ஓட்ட கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.கற்றுக்கொண்டு பின்னர் மே மாதம் ஓட்டுனர் உரிமமும் பெற்றேன். வண்டி ஒட்டிபழக நான் வாங்கியது ஒரு கவசாகி பஜாஜி பாக்ஸர், 2004 ஆண்டு மாடல்.அந்த வண்டியை முதன் முதலில் என் அன்பு நண்பர் KT சேகர் பார்க்க நேர்ந்தபோது அடித்த கமென்ட்
"உலுத்துப்போன ஆளுக்கு உலுத்துப்போன வண்டி''
உள்ளுக்குள் எனக்கு சிரிப்பாய் வந்தாலும் அடக்கிக்கொண்டு அவரை முறைத்தேன். அப்போதே மனதில் ஒரு வைராக்கியம். அடுத்து ஒரு அல்ட்ரா மாடர்ன் புது வண்டி தான் வாங்க வேண்டுமென்று.லைசன்ஸ் கிடைத்ததும் அந்த பழைய வண்டியை கொடுத்துவிட்டு புதிதாக ஹோண்டா ட்ரீம் யுகா வாங்க ஆசை வந்துவிட்டது. ஆனாலும் அந்த பழைய பாக்ஸர் வண்டியில் கிடைத்த மைலேஜ் 73 km / Liter. சென்னை கிண்டி எஸ்ட்டே வளாகம் தான் எனக்கு வண்டி ஓட்டிபழக கிடைத்த அருமையான இடம். தென் சென்னையில் எனக்கு தெரிந்து அந்த இடமே ஏற்றது.
காலை வேளைகளில் நெரிசல்கள் அற்ற அந்த இடம் என் போன்ற கத்துக்குட்டிகளுக்கு ஏற்றது. சிவப்பு நிறத்தில் " L " ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு அந்த காலை நேரங்களில் கார்கள் பழகவும், மற்றும் என்னை போல இரு சக்கர வாகனங்கள் பழகவும் தேர்ந்தெடுப்பது அந்த எஸ்ட்டே வளாகமே. ஒரு நாள் காலையில் குறுக்காக சாலையை கடந்து போக எத்தனித்து, சரியாக நடுவில் வண்டி நின்று போய்விட,டென்ஷன் ஆகி உதைக்க ஆரம்பித்து, தூரத்தில் வந்துகொண்டிருந்த D - 70 மாநகர பேருந்து அருகில் வந்துவிட, இனி உதைத்து பலனில்லை என்று நினைத்துக்கொண்டு வண்டியை உருட்டிக்கொண்டு சென்று விடலாம் என்ற நினைப்பில் முயற்சிக்க, சாலையில் வந்த பேருந்து சரியாக எனஅருகில் வந்து நிற்க டென்ஷன் மேலும் அதிகமாகி வண்டியை தள்ள, பேருந்தில் இருந்த ஓட்டுனர் என்னை பார்த்து சிரித்துக்கொண்டு
" கிளர்ச்சை பிடித்துக்கொண்டு நகத்துங்க " என்று சொல்ல, அவ்வாறு செய்து மீதம் உள்ள சாலையை கடந்து சென்று அசடு வழிந்ததும் உண்டு.
" கிளர்ச்சை பிடித்துக்கொண்டு நகத்துங்க " என்று சொல்ல, அவ்வாறு செய்து மீதம் உள்ள சாலையை கடந்து சென்று அசடு வழிந்ததும் உண்டு.
ஓட்டுனர் உரிமம் பெரும் முன்னரே என்ன வண்டி இனிமேல் வாங்க வேண்டும் என்ற திட்டமும் தயாரானது. அப்போது ஹோண்டா - ட்ரீம் யுகா நம் ஊரில் விற்பனைக்கு வர வில்லை.வட மாநிலங்களில் மட்டுமே கிடைத்தது.சில மாத இடை வெளிகளில், சென்ற ஜூலை மாதம் சென்னையில் அந்த மாடல் அறிமுகம் ஆனது.அன்றே தென் சென்னையில் உள்ள ஹோண்டா ஷோ ரூம்களை சுற்ற ஆரம்பித்து Test Driving என சொல்லிக்கொண்டு யுகாவை ஓசியில் ஓட்டி பார்த்து அதன் பவர் ஸ்டார்ட் எளிமையில் தேனை நக்கிய கரடியாகிப்போனேன். அந்த வண்டியின் அழகில் மயங்கி அதைதான் வாங்க வேண்டும் என்ற பிடிவாதமும் வளர நண்பரோ வேறு பல மாடல்களை சொல்ல, எனக்கும் அவருக்கும் விவாதங்கள் தொடரும். அவரிடம் இப்போது உள்ளது ஹீரோ ஹோண்டா பாஷன் ப்ரோ சிவப்பு நிறம் . ஹோண்டா வின் வலைதளத்தில் இருக்கும் அத்தனை தயாரிப்புகளையும் பார்த்து பார்த்து ஷைன் அல்லது யூனிகார்ன் என்றார் நண்பர்.யூனிகார்ன் அதிக எடை மற்றும் அதிக திறன்-CC உள்ளது உள்ளது நம்மால் சமாளிக்க ஆகாது சாமி என்று பின் வாங்கினேன். மேலும் பெங்களூருவில் உள்ள நம்ம மாப்ஸ் யூர்கன் கூட "நானும் யூனிகார்ன் தான் வைத்துள்ளேன், வண்டியில் மைலேஜி குறைவாக இருக்கு மச்சீ " ஏன்தான் அதை வாங்கினோம் என்று நினைப்பதாக கூறி என்னை ஏற்றி விட, டிரீம் யுகாவே இறுதி செய்யப்பட்டது.
எனக்கு சென்னை மண்டை நோகும் ட்ராபிக் நெரிசலில் சென்று வர ஏற்ற ஒரு வண்டி இருந்தால் போதும் என்ற நிலைதான் அன்றி வயது பிள்ளைகள் போல ரோடில் சாகசம் செய்து பார்க்கும் எண்ணமெல்லாம் இல்லை.அதற்க்கு இந்த டிரீம் யுகா வே போதும் என்ற நிலையில் அதுவே இறுதி செய்யப்பட்டு உண்மையில் யுகாவின் வடிவம் என்னை அதிகம் கவர்ந்த ஒன்று. எளிமையான அதேசமயம் ஒரு கம்பீரமான அதன் தேற்றம் மிகவும் பிடித்துவிட, வண்டியின் நிறத்தை தேர்ந்தெடுப்பதில் மீண்டும் ஒரு குழப்பம்.
சென்னை அசோக் நகரில் உள்ளது அந்த ஹோண்டா ஷோ ரூமிற்கு சென்றபோது ட்ரீம் யுகா சிவப்பு, பழுப்பு, மான்சூன் கிரே, சில்வர் மெட்டாலிக் மற்றும் கருப்பு நிறங்களில் நின்று கொண்டு என்னை பித்தனாக்கியது. எல்லா நிற வண்டிகளையும் பார்த்து விட்டு நண்பர் சேகர் "கருப்பு" என்றார். ஆனால் இனைய தலத்தில் பல முறை கண்டுவிட்டு முன்னரே நான் தேர்வு செய்தது "மான்சூன் கிரே " ட்ரீம் யுகா அதன் எல்லா நிறங்களிலும் மனதை கவர்ந்தாலும் இறுதியில் நானும் கருப்புக்கு மாற, கவுண்டரில் சேகர் என்சார்பாக முழு தொகையையும் செலுத்த ஒருவாரம் கழித்து வண்டி தயாரானது. விநாயகர் சதுர்த்தி அன்று வண்டி கிடைக்கும் என்று ஷோ ரூம் காரர்கள் புளுகினார்கள். அன்று கிடைக்கவில்லை.
ஒருவழியாக இன்றுதான் வண்டி தயார் என்று போன் வந்தது என்று காசி தியேட்டரின் எதிரில் அமைந்துள்ள அந்த ஹோண்டா ஷோ ரூமுக்குள் நுழைந்த போதே ஷைன், யூனிகார்ன், ஆக்டிவா என வித விதமான வண்டிகளுக்கு இடையில் எனக்கான வண்டியின் பின் புறத்தில் என் பெயர் எழுதி புதிதாக வந்துள்ள பதிவு எண்ணையும் எழுதி வைத்து நிறைய அழுக்கும் மண்ணுமாக அந்த வண்டி நின்று கொண்டிருந்தது.
கேட் பாஸ் வாங்கிகொண்டு வந்துவிடுங்கள் சார் உங்கள் வண்டியினை தயார் செய்து விடுகிறோம் என்றார் எனக்கு அறிமுகமான அந்த சேல்ஸ் மேன். எல்லாம் முடிந்து வண்டியினை எடுத்து, நெறுக்கி தள்ளும் அந்த ட்ராபிக் ரோட்டில் இறக்கித்தந்தார். லேசாக பயத்துடன் அமர்ந்து இயக்க ஆரம்பித்து நிதானத்துடன் ஒரு சுற்று சுற்றி வந்தேன். பயம் விலகி மனம் லேசாகிவிட்டது.
அப்புறம் என்ன? வீட்டிற்க்கு வந்து மாலையில், அருகில் இருக்கும் ஆஞ்சிநேயர் கோவிலின் சன்னதியின் எதிரில் வைத்து ஒரு அர்ச்சனை, செவ்வந்தி மாலையை அணிந்து கொண்டு ட்ரீம் யுகா புது பெண் போல ஒரு பக்கம் தலை சாய்த்து நின்ற அழகே அழகு. கஸ்தூரி ஸ்வீட் ஸ்டாலில் ஐநூறு பழுத்தது.
பின்னர் அசோக் நகர், சைதை, கிண்டி, வேளச்சேரி என ஒரே கும்மாளம்தான். பிள்ளைகள் எனக்கு முன்னரே லைசென்ஸ் எடுத்த புண்ணியவான்கள். பத்து மணிக்கு மேல் ஆள் அரவம் குறைந்த ரோட்டில் ஓட்டிப்பார்த்து மகிழ்ந்தனர்.
சென்னையில் மைலேஜ் இனி மேல்தான் .....
ஹோண்டா ட்ரீம் யுகா முழு விபரங்கள்:
Honda Dream Yuga Specifications
* Engine: 109 cc, Air Cooled, 4-Stroke, SI engine
* Power: 8.5 BHP @ 7500 RPM
* Torque: 8.91 Nm @ 5500 RPM
* Transmission: 4-speed manual
* Top Speed: 80 km/h
* Fuel Type: Petrol
* Suspension: Telescopic Fork (Front), Tube Type (Rear)
* Tires: 80/100/18 Tubeless
* Brakes: 130 mm Drum (Front), 130 mm Drum (Rear)
* Power: 8.5 BHP @ 7500 RPM
* Torque: 8.91 Nm @ 5500 RPM
* Transmission: 4-speed manual
* Top Speed: 80 km/h
* Fuel Type: Petrol
* Suspension: Telescopic Fork (Front), Tube Type (Rear)
* Tires: 80/100/18 Tubeless
* Brakes: 130 mm Drum (Front), 130 mm Drum (Rear)
Honda Dream Yuga Dimensions
* Overall length x width x height: 2022 mm X 733 mm X 1095 mm
* Wheelbase: 1285 mm
* Ground clearance: 161 mm
* Fuel Tank Capacity: 8-litres
* Kerb Weight: 108 kgs
* Wheelbase: 1285 mm
* Ground clearance: 161 mm
* Fuel Tank Capacity: 8-litres
* Kerb Weight: 108 kgs
10 comments:
ஒய்.... வண்டி நம்பர் சொல்லவே இல்ல ... ???
சென்னைக்கு ஆக்டிவா மாதிரி வண்டிதான் சரி. கியர் மாற்றும் இம்சை இல்லாமல் ஓட்டலாம்
மொபைல் டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே மக்கர் பண்ணுது, சரியானவுடன் போட்டோ எடுக்கலாம் வண்டி நம்பருடன் மாப்ஸ்.
நீங்க சொல்வது சரிதான் எல். கே.
மவுன்ட் ரோடில் ஆக்டிவாவில் செல்வதே சுகமானதுதான்.எவ்வளவு கூட்டம் இருந்தாலும் டென்ஷன் இல்லாமல் வளைய வரலாம். ஆனால் அதன் உயரம் குறைவாக இருப்பதால் எனக்கு சரிபட்டு வரவில்லை.
தேவையான தகவல்
// " கிளர்ச்சை பிடித்துக்கொண்டு நகத்துங்க" //
வண்டி பழகுற ஆரம்பகாலத்துல எல்லாருக்கும் இந்த அனுபவம் இருக்கும்போல... :-)))
நானும் அதே காசி தியேட்டர் ஆபோசிட் கடைலதான் வண்டி எடுத்தேன். “சூப்பர் ஸ்பிலெண்டர்” செம மைலேஜ்!!! 35 கி.மீ / அவர், ஆனா வண்டி சூப்பர்.
இப்ப 5 மாசமா கோண்டா ஏவியேட்டர்ல செட்டில ஆயிடேன் அதான் ட்ராபிக்ல நலா இருக்கு.
அண்ணே உங்க பதிவு படிச்சி பின்னூட்டம் போட்டு 2 வருசம் கிட்ட ஆயிடுச்சி...நலமா இருக்கீங்களாண்ணே????
நன்றி நண்பர் முனைவர்.இரா.குணசீலன் அவர்களே.
// அண்ணே உங்க பதிவு படிச்சி பின்னூட்டம் போட்டு 2 வருசம் கிட்ட ஆயிடுச்சி...நலமா இருக்கீங்களாண்ணே????//
---------------- பட்டிகாட்டான் Jey
நலமாகவே இருக்கிறேன். உங்கள் அன்புக்கு நன்றி,
உண்மையில் நிறைய நண்பர்களின் தொடர்புகளை இழந்த சோகம்தான் எனக்கும்.
இனி தொடர்ந்து தொடர்பில் இருக்கவே முயற்சிக்கிறேன்.
அதுசரிதான்,நானும் சூப்பர் ஸ்ப்ளண்டர் மாடலைத்தான் தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன்.அப்புறம் அது மாறிப்போனது.
ஹோண்டா ட்ரீம் யுகா 70 - 100 KM/L தருவதாக நிறைய பேர்கள் எழுதுகின்றனர். இனிமேல்தான் பார்க்கவேண்டும்.
வருகைக்கு நன்றி.
ஊருக்கு ஒரு விலை சொல்றானுங்களே எவ்வளவு குடுத்தீங்க பாஸ் :-)
//ஊருக்கு ஒரு விலை சொல்றானுங்களே எவ்வளவு குடுத்தீங்க பாஸ் :-)//
ஜெய்லானி.
ஆஹா, வாரும் பிள்ளாய்.
மூன்று ஆப்ஷன்கள் உள்ளன. நெட்டில் பாருங்கள் அதிக விபரம் தெரியும் ஜெய்லா.
Chennai Dream Yuga (Kick-Drum-Alloy) 49080 * 54481
Dream Yuga (Kick-Drum-Spoke) 47561 * 52824
Dream Yuga (Self-Drum-Alloy) 51106 * 56692
Registration, insurance, extra fittings என எனக்கு ஆகியது 58825 ருபாய்.
கருத்துரையிடுக