பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, நவம்பர் 4

வேறு என்னத்தை சொல்ல?

அம்மாவை ஆசுபத்திரிக்கு அனுப்புங்க!
எந்த ஆசுபத்திரியா?  
மெண்டல் ஆசுபெட்டல்தான் வேறு எங்க? 


சென்னையில் குழந்தைகள் மருத்துவ மனை துவங்க வேறு இடங்களே இல்லையாம். எழும்பூரில் இருக்கும் அரசின் குழந்தைகள் மருத்துவ மனை எந்த கதியில் இருக்கிறது என்று சென்னை வாழ் மக்களுக்கு தெரியும். 
குழந்தைகள் நலன் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால் இருப்பவைகளை சீர் செய்து தரம் உயர்த்தலாமே? அதை விட்டு கருணாநிதி யின் ஆட்சியில் கட்டப்பட்டது என்ற ஒரு காரணத்திற்காக இந்த அம்மா தன் வழக்கமான தடாலடி வேலைகளை காட்டுவதும், தன்னை கேட்க யாரும் இல்லை என்ற திமிரில் ஆடுவதும் கண்டிக்கப்படவேண்டும். 



அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடம் இடம் மாற்ற சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது நல்ல ஆறுதல். சென்ற முறை ஆட்சியில் இருந்தபோது ராணி மேரி கல்லூரியை இடித்துவிட திட்டம் போட்டு, பின்னர் அணைத்து தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்களும் மாணவ மாணவியரின் போராட்டங்களும் காரணமாகி அதனை கை விட்டதும் ஏன் இந்த அம்மாவுக்கு  மறந்து போனது?


அந்த நூலகம் ஏன் ஒரு குழந்தைகள் நல மருத்துவ மனையாக மாற்றப்படவேண்டும் என்று இந்த அம்மையாரால் அல்லது அவருக்கு "ஜே" போடும் வேறு எவராவது விளக்க வேண்டும்.வெறும் அரசியல் விரோத,குரோத ,பழிவாங்கும் மனப்பான்மையால் தமிழகம் இழந்தது ஏராளம். தமிழ் நாட்டுக்கு இரட்டை சனியன்கள். இரண்டும் எப்போது விலகுமோ ? 

அநேக சமயங்களில் தான் ஒரு மன நோயாளி என்பதை இந்த அம்மா தெளிவாக நிரூபித்துள்ளார். இவர் செய்வதெல்லாம் ஏதோ மகா மக்கள் நல பணிகள் என்று எண்ணிக்கொண்டு இங்கு இணையத்தில் குத்தாட்டம் போடும் சிலரையும் கூட இந்த அம்மாவுடன் கூடவே கீழ்பாக்கம் அனுப்பித்தொலைப்போம்.


// தவிடு தின்னும் ராஜாவிற்கு முறம் பிடிப்பவனே மந்திரி. //

வேறு என்னத்தை சொல்ல? 







12 comments:

ப.கந்தசாமி சொன்னது…

// தவிடு தின்னும் ராஜாவிற்கு முறம் பிடிப்பவனே மந்திரி. //

இதுதான் உலக இயற்கை.

சார்வாகன் சொன்னது…

வணக்கம் நண்பரே
இன்னும் 5 வருடத்திற்கு இப்படித்தான்.ஆகவே நீதிமன்றமாவது இப்படி அரசுக்கு முட்டுக்கட்டை போடும் அளவில் இருக்கிறதே என்று மகிழ்வடைய வேண்டியதுதான்.
நன்றி!!!!!!!!!!!1

வெங்கட் நாகராஜ் சொன்னது…

என்னத்தைச் சொல்ல.... பதவிக்கு வந்தாலே ஆட்டம் போடுவது வாடிக்கையாகிவிட்டது....

பாலா சொன்னது…

சொல்றதெல்லாம் சொல்லிட்டு, இப்படி அழகான படத்த போட்டு மனச கெடுக்கிறீங்களே...

சக்தி கல்வி மையம் சொன்னது…

// தவிடு தின்னும் ராஜாவிற்கு முறம் பிடிப்பவனே மந்திரி. // உண்மை..

வெளங்காதவன்™ சொன்னது…

Namma kamanda kaanom...

Bharathi Raja R சொன்னது…

அடுத்த செய்தியைப் பார்த்தால் இன்னும் ஆடிப் போவீர்கள். ஆறு அமைச்சர்கள் நீக்கம். புதிதாக வந்திருக்கும் ஆறு பேரில் எனக்கு நன்றாகத் தெரிந்த ஓர் உலக மகாத் திருடன் இருக்கிறான். அவன் செய்ததெல்லாம் ஒரே ஒரு வேலைதான். தோழி குடும்பத்தில் சரியான ஆளைப் பிடித்து அள்ளி இறைத்து விட்டு வந்தான். இன்று பதவி வீடு தேடி வந்திருக்கிறது. எதில்தான் போய் முடியப் போகிறதோ இதெல்லாம்?! :(

திருடனிடம் இருந்து காப்பாற்றிய வீட்டை மெண்டல் கேசிடம் இருந்து எப்படிக் காப்பாற்றுவதோ என்று புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள் வீட்டின் உண்மையான முட்டாள் முதலாளிகள்.

settaikkaran சொன்னது…

மாற்றி மாற்றி இரண்டு கழகங்களுக்கும் ஓட்டுப் போட்டு மீண்டும் மீண்டும் இருவரிடமும் அடி வாங்குகிற மத்தளமாயிருச்சு தமிழகம்! :-(

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அம்மாவை ஆசுபத்திரிக்கு அனுப்புங்க!
எந்த ஆசுபத்திரியா?
மெண்டல் ஆசுபெட்டல்தான் வேறு எங்க?//

சரியாப்போச்சு அண்ணே உங்களுக்கு ஜெயில் கன்பார்ம் எப்பூடி...!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இவிங்க மெண்டல் ஆகுறது இருக்கட்டும் மக்களையும் மெண்டல் ஆக்காமல் இருந்தால் சரி...!!!

உணவு உலகம் சொன்னது…

தலைப்பே பல அர்த்தம் சொல்லுதுங்க. எஸ்கேப்ப்ப்ப்ப்.

பெயரில்லா சொன்னது…

அண்ணே, நீங்கள் வெளிநாட்டில் இருப்பதனால் தைரியமாக எழுதுகிறீர்கள். இதுவே நீங்கள் இங்கு இருந்தால் உங்கள் வீட்டிற்கு ஆட்டோ வரும் அல்லது உங்கள் மீது கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு வரும்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக