C F L வகை பல்புகள்.
இன்றைய நாட்களில் பழய 25 W, 40 W, 60 W , 100 W ( Incandescent Bulbs) போன்ற குண்டு பல்புகளை இன்னமும் பயன்படுதுகிரீர்களா? முதலில் அவைகளை கழட்டி எறியுங்கள். தற்போது கடைகளில் கிடைக்கும் Compact fluorescent lamp என்ற C F L பல்புகளை அங்கு மாற்றுங்கள். உண்மைதான். இந்த பல்புகள் நவீனமானதும், அதிக மின் சேமிப்பை தருவதாலும் இன்று உலக நாடுகளில் எல்லா இடங்களிலும் அதிகமாக பயன்படுத்தும் நடை முறைகள் வந்துவிட்டன.
பழைய குண்டு பல்பு
ஆரம்ப விலை சற்று அதிகம் என்றாலும் இவ்வகை பல்புகளின் உபயோகம் மிக முக்கியமானது. பழைய குண்டு பல்புகள் உறிஞ்சும் மின் சக்தியை விட இவைகள் மிக குறைந்த அளவே மின்சாரத்தை உறிஞ்சுகின்றன என்பது உண்மைதான். மேலும் இதன் வாழ் நாளும் குண்டு பல்பை விட சற்று அதிகம் தான். குண்டு பல்புகள் ஒளிரும்போது அதிக வெப்பமும் அங்கு நிலவும். ஆனால் இவ்வகை பல்புகள் அதிக வெப்பத்தை வெளியேற்றுவதில்லை. கிடைக்கும் ஒளியும் குண்டு பல்பை விட அதிக பிரகாசமும் கூட. இந்தவகை பல்புகள், நாம் முன்னரே பயன் படுத்தும் குழல் விளக்கு (TUBE LIGHT ) வகையை சேர்ந்தவைதான். பயன்பாட்டின் எளிமை மற்றும் பரவலாகும் முறைகளால் இந்த வகை பல்புகள் சிறிய வடிவுகளில் செய்யப்பட்டு சந்தை படுத்தபடுகின்றன. குழல் விளக்கில் உள்ள MERCURIC OXIDE என்ற ரசாயன பூச்சு இந்த வகை பல்புகளில் பயன் படுத்தப்படுகிறது.
சாதாரணமாக ஒரு 60 W வாட் குண்டு பல்பு எறியும் போது நமக்கு எந்த அளவு வெளிச்சம் கிடைக்கிறதோ அதே வெளிச்சம் ஒரு 15 W சக்தியுள்ள
C F L வகை பல்பு எறியும் போதே கிடைத்துவிடுகிறது. எந்த அளவு மின் சக்தியை நாம் மிச்சப்படுத்தலாம் என்று நீங்களே புரிந்துகொள்ளுங்கள். குண்டு பல்புகள் ஒளிரும்போது கிடைக்கும் வெளிச்சம் மஞ்சள் அல்லது ஒருவகை சோகையுடன்தான் இருக்கும் ( அழுது வடியும் ஒளி) ஆனால் C F L வகை பல்புகள் எறியும் போது கிடைக்கும் ஒளி அதிக வெண்மையும் பிரகாசமாயும் இருக்கும். நிறங்கள் இந்த ஒளியில் இயல்பாக ,மிக அழகாக காணப்படும். வெளிப்படும் வெப்பத்தின் அளவும் மிக குறைவாக இருப்பதால் இந்த வகை C F L பல்புகள் அதிக பயன்பாட்டுக்கு வருகின்றன இந்த வகை பல்புகளின் ஒளி மென்மையான ஒளி எனப்படுகிறது (SOFT LIGHT) கீழே உள்ள அட்டவணையில் காணப்படும் வேறுபாடுகளை அறிந்துகொண்டால் எல்லோரும் குண்டு பல்பின் பயன்பாட்டை நிறுத்திவிட்டு C F L வகை பல்பிற்கே மாறுவார்கள்.
இந்தியாவெங்கும் முழுமையாக இந்த வகை பல்புகள் பயன் படுத்தப்பட்டால் நாம் செலவழிக்கும் மின் ஆற்றலை மிக கணிசமாக குறைக்க இயலும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். மின்சக்தி என்பது அரிதாகவும் விலை அதிகமாகவும் தட்டுப்பாடும் உள்ள இன்றைய கால கட்டங்களில் இது போன்ற நடவடிக்கைகள் மின் சக்தியை ஆற்றலை சேமிக்கவும், நம் பணத்தினை சேமிக்கவும் பெரிதும் உதவும். இவ்வகை பல்புகள் உத்திரவாதத்துடன்
( GUARANTEE ) கிடைப்பதால் பழுதானாலும் அவைகளை மாற்றிகொள்ளலாம்.
31 comments:
நல்ல பல்பு (பதிவு)கொடுத்த உங்களுக்கும் ,தமிழக மக்களுக்கும் நன்றி,அருமையான தகவல் நண்பரே
மின்சாரத்தை எப்படிச் சேமிப்பது என்பதற்கான விளக்கமாக இருக்கிறது இப் பதிவு, நன்றிகள் சகோ.
தலைவரே தலைப்ப பாத்துட்டு ஓடியாந்தேன்......நல்லவேல காப்பாத்திட்டீங்க......
மக்கள் தெரிஞ்சிக்க வேண்டிய அடிப்படை விஷயம்......நன்றி!
அவசியமான பகிர்வு நண்பரே. இன்னமும் நமது நாட்டில் இந்த சி.எஃப்.எல் வகை அவ்வளவாக பிரபலம் அடையவில்லை. பகிர்வுக்கு நன்றி.
டைட்டிலை பார்த்ததும் அண்ணன் யாரையோ நக்கல் அடிக்கறார்னு பார்த்தா....
எங்க வீட்ல இந்த பல்புதான். என்னையும் சேர்த்து மாணிக்கம். ;-))
நாட்டு நலனை அடிப்படையில் வைத்து சிந்தித்து மின்சார சேமிப்புக்கு வழி வகுத்து இருக்கிறீர்கள். அவசியமான பதிவு. மிக்க நன்றி.
முக்கியாமான அவசியமான பதிவு கக்கு
ஆம் . "குண்டு " பல்பு உண்மையிலேயே தீங்கானதுதான் ....
நான் CFL க்கு மாறிட்டேன்!
அவசியமான பதிவு!
பாத்ரூமில் இருந்த குண்டு பல்புகளையும் மாற்றி விட்டேன்..அருமையான யோசனை
நல்ல ஐடியா ம்ம்ம் உடனே செயல் படுத்துறேன் ஊர் போனதும்....
இன்னைக்கு எவன் வாங்கி கட்டபோரானொன்னு ஓடி வந்தேன் ம்ஹும்....
இதுக்கும் மைனஸ் ஓட்டா....???!!!!
CFL பல்பின் விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், நிறைய மின்சாரத்தை சேமித்து கணிசமான பணம் மிச்சப்படுகிறது.....உண்மையிலேயே இது பயனுள்ள பதிவுதான்
மின்சார தட்டுபாடு உள்ள இந்த தருணத்தில் தேவையான பயனுள்ள பதிவு....நன்றி...
குண்டு பல்பு பற்றி முன்பே நான் யாருக்கோ பின்னூட்டம் போட்டதா நினைவு.இது மீள் பதிவா இருந்தா அது நீங்கதான்:)
C F L வகை பல்புகள் ரொம்ப நாளைக்கு நீடித்து உழைக்கின்றன.எனது கணினி வேலைக்கு நான் இந்த மாதிரி பல்புதான் வாங்கினேன்.இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் நன்றாக உழைக்கிறது.
//குண்டு பல்பு பற்றி முன்பே நான் யாருக்கோ பின்னூட்டம் போட்டதா நினைவு.இது மீள் பதிவா இருந்தா அது நீங்கதான்:)///
---------------------------ராஜ நடராஜன்.
இல்லை அன்பரே !
பல்பை பற்றி நான் எழுதுவதே இதுதான் முதல் முறை. ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் பல்புகள் வீட்டில் மாற்றினோம். அந்த பல்பு பாக்கெட்டில் இருந்தவைகளை படித்தேன் அதனை சற்று விரிவாகி இந்த பதிவினை இட்டேன். வைகைக்கு நன்றி ராஜ நடராஜன்
அருமையான பதிவு தலைவரே, இந்த சிஎஃப்எல் பல்புகள், மின்சாரத்தை சிக்கனப்படுத்துவதும் இல்லாமல், பூமி சூடேறுவதையும் குறைக்க உதவுகின்றன!
//அருமையான பதிவு தலைவரே, இந்த சிஎஃப்எல் பல்புகள், மின்சாரத்தை சிக்கனப்படுத்துவதும் இல்லாமல், பூமி சூடேறுவதையும் குறைக்க உதவுகின்றன!//
----------------பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
இப்போ வரைக்கும் வந்ததற்கு நன்றி பன்னிகுட்டி. தனி ஆவர்த்தனம் மெயிலில் வைத்துக்கொள்கிறேன்.
பயனுள்ள பதிவு ....நன்றி...
ஆஹா என்ன ஒரு தூரப்பார்வை!இன்றைய தினம் அதிமுக ஆட்சிக்கட்டிலில் ஏறுகிறது.இனிமேல்
பவர்கட் முன்னைப்போல் இருக்காது என்பதா கட்டுரை சொல்லும் செய்தி? திமுக ஆட்சியின்போது
இது வந்திருந்தால் பின்னூட்டம் எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்தால் வேறு எதாலோ சிரிக்க
தோன்றுகிறது.
இந்த அலைன்மென்ட் பிரச்னை ரொம்ப படுத்துகிறது.பின்னூட்டத்திலேயே இப்படி என்றால் நான்
எங்கே பதிவு போட்டு கிழிப்பது?
///இந்த அலைன்மென்ட் பிரச்னை ரொம்ப படுத்துகிறது.பின்னூட்டத்திலேயே இப்படி என்றால் நான்
எங்கே பதிவு போட்டு கிழிப்பது?//
வருகைக்குன் கருத்துக்கும் நன்றி பஷீர். என்ன உங்களின் அலைன்மென்ட் பிரச்னை ? புரியும்படி சொல்லுங்கள். நீங்கள் பதிவு இட்டு நீண்ட நாட்கள் ஆகிறது என்பது எனக்கும் தெரியும். சரி, இங்கு வலை உலகில் நம் நண்பர்கள் மூலமே உங்கள் சிக்கலை தீர்துக்கொள்ளலாமே? என்னவென்று கூறுங்கள் ஆவன செய்வோம்.
kakko.sattanathan@gmail.com இதுதான்என் மெயில் id. எழுதுங்கள்.
மிக உபயோகமான, நாட்டுக்கு தேவையான விஷயம். பதிவுக்கு வாழ்த்துக்கள் மாணிக்கம் சார்!
// ஆஹா என்ன ஒரு தூரப்பார்வை!இன்றைய தினம் அதிமுக ஆட்சிக்கட்டிலில் ஏறுகிறது.இனிமேல்
பவர்கட் முன்னைப்போல் இருக்காது என்பதா கட்டுரை சொல்லும் செய்தி? திமுக ஆட்சியின்போது
இது வந்திருந்தால் பின்னூட்டம் எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்தால் வேறு எதாலோ சிரிக்க
தோன்றுகிறது.//
-----------பஷீர் சொன்னது.
எந்த கொம்பாதி கொம்பர்கள் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தாலும் இந்த பவர் கட் விஷயத்தில் அவர்கள் ஒன்றும் செய்ய முடியாது. அதற்கனா அறிவும் தொலைநோக்கும் ஒரு கொம்பனிடமும் இல்லை என்று எல்லா தமிழர்களுக்கும் தெரியுமே.
வருகைக்கு நன்றி மோகன் ஜி
நன்றி மாணிக்கம்.id கொடுத்துள்ளீர்கள்.தொடர்பு கொள்ளுகிறேன்.2007 இன் பின்னைய மாதங்களிலிருந்து
நான் பதிவுலக வாசிப்பாளன்.2008 இல் பதிவு போட ஆரம்பித்து ஏழெட்டு பதிவுகள்.எல்லாம் கடை விரித்தேன் கொள்வாரில்லை கேசுதான்.பின்னர் எனக்கே பிடிக்காததால் அனைத்தையும் அழித்துவிட்டேன்.இங்கே பதிவுலக அரசியல் கொஞ்சம் அயர்சியூட்டுகிறது.எனக்கே வடை என்று அடித்து பிடித்து பின்னூட்டம் போடுகிற வகை இல்லை நான்.மேலும் வேலைப்பளுவும் கூடுதல்.சொந்த தொழில் எனும்போது ,உங்களுக்கு புரியும்!நல்ல நட்பு உங்களுடையது.நன்றி.
அனைவருக்கும் தேவையான விழிப்புணர்வு ஊட்டும் பதிவு. எனக்கு ஒரு சந்தேகம் அண்ணே. குண்டு பல்புகளை அரசாங்கமே தடை செய்தால் அதன் உபயோகத்தை முற்றிலும் தவிர்க்கலாம் என்றே நினைக்கிறேன் ஏன் அப்படி செய்ய மாட்டேங்குறாங்க... மின்சாரதிர்க்காக கோடிக்கணக்கில் செலவழிக்கும் அரசாங்கம் இது போன்ற குழல் விளக்குகளை கிராம ஏழைகளுக்கு இலவசமாக கொடுத்தால் மின் செலவை துரிதமாக குறைக்காலாமே ஏன் செய்ய மாட்டேங்குறாங்க.
சசி உங்களின் பின்னூட்டம் கண்டு சிரிப்பாய்தான் வந்தது. இன்னமும் இவ்வளவு வெகுளியாய் இருக்கீர்களே ?
மக்களின் பிரச்சனைகளை நாம் நினைப்பதுபோல அவ்வளவு சீக்கிரம் தீர்க்க எந்த அரசியல் பிழைபவர்களும் முனைய மாட்டார்கள்.
மக்களை ஏதேனும் ஒரு சில சிக்கலில் தொடர்ந்து வாழும்படி வைத்துக்கொள்பவன் தான் நீடித்த அரசியல் செய்ய முடியும். நம் நாட்டில் தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கு இதுதான் காரணம். :)
முதலில் தடையற்ற மின்சாரம் வரட்டும். அப்புறம் பல்ப்பை பற்றி யோசிக்கலாம்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
கருத்துரையிடுக