பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, மே 6

சிறப்புத்தொழுகயாம்!


///அமெரிக்கப் படையால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடனுக்காக சென்னையில் உள்ள மசூதியில் இன்று சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள மெக்கா மசூதியில் இந்த சிறப்புத் தொழுகை இன்று நடந்தது.மசூதியின் இமாம் மெளலானா சம்சுதீன் தலைமையில் நடந்த இந்த சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

தொழுகையின்போது பின்லேடனைக் கொன்று கடலில் வீசிய அமெரிக்காவின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் இஸ்லாமிய நெறிப்படி பின்லேடன் உடல் அடக்கம் செய்யப்படவில்லை என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.///


அட கேவலமான துரோகிகளே! நீங்கள் தின்பது இந்திய உப்பு, குடிப்பது தமிழ் நாட்டு தண்ணீர். உங்களுக்கு கொஞ்சமும் சூடு சொரனையே கிடையாதா? பல ஆயிரம் அப்பாவி உயிர்களை இஸ்லாத்தின் பேரில் சாகடித்த, அதற்கு காரணமான ஒரு காட்டு மிராண்டிக்கு இங்கு தமிழ் நாட்டில் சிறப்பு தொழுகை தேவையா? முகமது நபியை கொண்டாடும் எந்த முஸ்லிமும் இந்த ஒசாமா பின் லாடனை கொண்டாட மாட்டார்களே! இவனை இங்கு இந்தியாவில், தமிழ் நாட்டில் நீங்கள் கொண்டாட என்ன காரணம்? நீங்கள் செய்வது சரி என்றால் குஜராத்தின் மோடியும், அத்வானியும் இனிமேல் சரிதான் மூடர்களே! 
நீங்கள் இவ்வாறு செய்வீர்கள் என்று முன்னமே தெரிந்திருந்தால் "கத்தி எடுத்தவன் கத்தியாலேயே சாவான் " என்று இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு புது மொழியில் தாத்தாவும் அறிக்கை விட்டிருக்க மாட்டார். உங்களின் கூட்டம் தனக்கு வேண்டும் என்ற நோக்கத்தில் வாயை மூடிக்கொண்டு இருந்திருப்பார். அவரையும் வாரி விட்டீர்களே!

இத்தனை வருடம் அவனை உள்ளே வைத்துக்கொண்டு அமெரிக்காவிடம், ஒரு கை தேர்ந்த விபச்சாரியை போல இருந்துகொண்டு அவனை பிடிப்பதாக 'உடான்ஸ்" காட்டி மில்லியன் கணக்கில் அமரிக்க டாலர்கள் காசு கல்லா கட்டிய பாகிஸ்தான் காரனே பின் லேடன் இருந்த அந்த வீட்டை தரை மட்டமாக்குகிறான். அவன் வீட்டில் கஞ்சா செடிகள் வளர்ந்த கதைகளை இன்று ஊடகங்கள் படம் போட்டு காட்டுகின்றன. அவனை நீங்கள் இங்கு கொண்டாடும் காரணம் என்ன நய வஞ்சக நரிகளே. ஆட்சியையும் அரசும் உங்களுக்கு ஆதரவாகக இருபதாக கனவு காணாதீர்கள்.  
நாளை ஒரு வேலை இந்திய துரோகி தாவு இப்ராகிம் அல்லது இந்திய பாராளு மன்ற தாக்குதலின் காரணமான தூக்கு தண்டனை கைதி அப்சல் குரு அல்லது மும்பை தாக்குதலில் பிடிபட்டு தூக்கு கயிறுக்கு காத்திருக்கும் பாகிஸ்தானிய கசாப் இவர்கள் இறந்தால் கூட இதேபோல் தானே சிறப்பு தொழுகை நடத்துவீர்கள் ?? 





தான் சார்ந்த மதம் பாராட்டாத உண்மையான மனிதம் கொண்டவர்களும் கூட உங்களது இந்த கேவலமான, ஈனமான செய்கையினால் மனம் நொந்து போயுள்ளனர் என்பது நினைவில் வையுங்கள்.


103 comments:

GEETHA ACHAL சொன்னது…

ஒன்றும் சொல்வதற்கு கிடையாது...ரொம்பவும் ஒவராக இருக்காங்க ஜனங்க...

UMARILLAM சொன்னது…

அட நாயே ஒசாமாவை பற்றி உனக்கு என்ன தெரியும் இவ்வளு கேவலம்ஹா எழுதி இருக்கே முதலில் ஒருவருடைய அடிப்பாடைகளை தெரிந்து கொண்டு எழுத்தை ஆரம்பி

Shab சொன்னது…

http://www.youtube.com/watch?v=Odp1FO0Vmuw

Shab சொன்னது…

dey abusaud,
u r not different from this kakku manickam. kakku manickam talks as if he is US president. and u r talking as if u spend all your time with osama.. nobody knows what is the fact..

எல் கே சொன்னது…

ஒன்னும் சொல்றதுக்கு இல்லை அண்ணாச்சி

பொன் மாலை பொழுது சொன்னது…

// அட நாயே ஒசாமாவை பற்றி உனக்கு என்ன தெரியும் இவ்வளு கேவலம்ஹா எழுதி இருக்கே முதலில் ஒருவருடைய அடிப்பாடைகளை தெரிந்து கொண்டு எழுத்தை ஆரம்பி //

abusaud சொன்னது…

முதலில் நீ ஒழுங்காக தமிழில் டைப் அடிக்க கற்றுக்கொள் முண்டமே. ஒசாமாவை பற்றி நீயே தெரிந்து கொள். நீயே அவனை வழிபடு. எனக்கு தேவை இல்லை. வேண்டுமென்றால் ஒன்று செய். 72 கன்னிகளையும் கடலுக்கு அடியில் அனுப்பி வை. அவர்களும் போதாது என்றால் 10 அழகான சிறுவர்களையும் அனுப்பி வை மத வெறியனே!

THE UFO சொன்னது…

தங்கள் மீது அமைதி நிலவட்டுமாக . சகோதரர் கக்கு மாணிக்கம்...!



ஒன்றை அறிந்து கொள்ளுங்கள். உயிருடன் இருக்கும் ஒசாமாவை வீட்டுக்கு கூட்டி வந்து சோறு போட்டு இருந்தால் நானும் உங்களுடன் சேர்ந்து கண்டிச்சு இருப்பேன்.



அமெரிக்க என்கவுடரில் செத்ததாக அறிந்த பின்னர் ஒரு பிணத்துக்கு செய்யப்படும் இஸ்லாமிய மரியாதையை செய்து இருக்கிறார்கள். அதாவது ஒசாமாவுக்கான இறுதி பாவமன்னிப்பு பிரார்த்தனை தொழுகையை தொழுது இருக்கிறார்கள். அவ்வளவுதான்.



ஹிட்லர் ஆகட்டும், மெச்சிகன் பென் ஆகட்டும், மோடி ஆகட்டும், ராஜபக்சே ஆகட்டும், இடி அமீன் ஆகட்டும்... அவர்கள் செய்த கொலை பாதக செயலுக்கு ஒரு கோர்ட்டால் மரண தண்டனைதான் தரமுடியும். அப்படி தந்த பின்னர் செத்த உடலுக்கு அவரவர் மத அடிப்படையில் இறுதி காரியம் நிறைவேற்றுவது அவரை சார்ந்த அவரவர் மதகாரர்களின் விஷயம்.



தீயோர் மீது கோபப்படுவது அறிவு. அவர்கள் தண்டனை பெற்ற பின்னர் அவர்களின் பிணத்தின் மீது கோபப்படுவது அறிவீனம்.



ராஜபக்சே பிரபாகரன் மீது செய்ததாக சொல்வதும் இதுதான்.

ஒபாமா ஒசாமா மீது செய்தாதாக சொல்வதும் இதுதான்.

இந்த ஒசாமா அன்று ஆப்கன் அதிபர் நஜிபுல்லா மீது செய்ததும் இதுதான்.



நாவரசை கண்டந்துண்டமாக வெட்டி எறிந்த கொலைக்குற்றத்துக்கு ஜான் டேவிட்டை தூக்கில் போடுவது தண்டனை. பின்னர் ஜான் டேவிட் பிணத்தை அதேபோல கண்டந்துடமாக வெட்டி மெட்ராஸ் முதல் கன்னியாகுமரி வரை அம்பது அம்பது கிராமாக எறியவேண்டும் என்பது தண்டனையா..? முட்டாள்த்தனமா?



///
தான் சார்ந்த மதம் பாராட்டாத உண்மையான மனிதம் கொண்டவர்களும் கூட உங்களது இந்த கேவலமான, ஈனமான செய்கையினால் மனம் நொந்து போயுள்ளனர் என்பது நினைவில் வையுங்கள். நீங்கள் எவரும் இன்னமும் ஏன் இந்த நாட்டில் இந்த மண்ணில் இருக்கவேண்டும்? பிள்ளைகுட்டி பெண்டாட்டிகளுடன் மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு ஓடுங்கள் பாகிஸ்தானுக்கு அல்லது பின் லேடன் பிறந்த சவூதி அரேபியாவுக்கு.
////



// முஸ்லிம்களுக்கு மூளை தலையில் இல்லை, முழங்காலில் //


உங்கள் கூற்றுப்படி முஸ்லிம்களுக்கு முழங்காலில் மூளை இருப்பதாகவே இருக்கட்டும். அது கூட பரவாயில்லையே. இப்பதிவை எழுதியவருக்கு அப்படி ஒரு வஸ்து அவர் உடலில் எங்குமே இருப்பதாக தெரியவில்லையே..!

Chittoor Murugesan சொன்னது…

இஸ்லாமின் சிறப்பு இது. சகோதரத்துவத்தின் சின்னம் இது. கசப்,அப்சல் குருவும் கூட இஸ்லாமிய சமூகத்தின் உறுப்பினர்களே.

பொன் மாலை பொழுது சொன்னது…

//இந்த ஒசாமா அன்று ஆப்கன் அதிபர் நஜிபுல்லா மீது செய்ததும் இதுதான்.//

---------------------------The U F O சொன்னது.

பின் லாடனும் இதே வரிசயில்தானே வருகிறான்?
பின்னர் எந்த கருமத்திற்கு லாடனுக்காக தொழுகை?
வெறும் மத அடிபடையில் மட்டும்தானே பின் லாடனுக்கு தொழுகை நடத்தினீர்கள்?
உங்கள் உடல் எல்லாம் மூளையாகவே இருக்கட்டும். ஆனாலும் அதனால் ஒன்றும் நல்ல காரியங்ககள் அக்க பூர்வமாக பிறருக்கு பயன்படும் எதுவும் செய்ய இயலாது உங்களால் . மதம்,மார்க்கம் என்று வெறியுடன் அலையும் கூட்டமே நீங்கள்.

ஒசை சொன்னது…

வாழும் போது - பின்லோடன் யாருக்கும் தராத மரியாதையை, செத்த பின்பும் பின்லோடனுக்கு தர வேண்டுமாம். மோடியை ஹீரோவாக்குவது இவர்களே.

பாலா சொன்னது…

//முகமது நபியை கொண்டாடும் எந்த முஸ்லிமும் இந்த ஒசாமா பின் லாடனை கொண்டாட மாட்டார்களே/உண்மை தான் .
மனித உயிரை எடுக்கும் யாரையும் எந்த மதமும் கொண்டாட தேவையில்லை .

saarvaakan சொன்னது…

ஒசாமாவிற்கு ஈமக் கிரியைகளை அமெரிக்கா செய்யவில்லை என்றால்,அதற்கு தொழுகை செய்தால் சரியாகிவிடும்(?) என்றால் அவருடைய குடும்பத்தினர் மட்டும் செய்தால் சரிதான்.
http://www.deccanherald.com/content/158542/bin-ladens-family-mourning-his.html
அவருடைய மதம் சார்ந்த அனைவருமே செய்வது என்பது வேறு ஏதோ சொல்வது போல் உள்ளது.

ஷர்புதீன் சொன்னது…

கக்கு., இந்த தொழுகை என்பது கூடியதுதான் , இஸ்லாமிய வழக்கப்படிஓகே தான், ஆனால் எனக்கு இங்கே வருகின்ற டவ்ட் வேற.,
உசாமாவுக்கு தொழுகை வைத்தது போல் இன்னும் எத்தனையோ மனிதர்கள் படுகொலை
செய்யபடுகிறார்கள், கொலை செய்து சிதைக்க படுகிறார்கள், அவர்களுக்கு மொத்தமாக
தொழுகை செய்ய படுகிறதா.,?

அப்புறம் உசாமாவுக்கு மரண தொழுகை செய்யப்படும் பொழுது அங்கே காணபடுகின்ற ஒரு மாதிரியான தன இனம் சார்ந்த உணர்ச்சி எங்கிருந்து வருகிறது? (

அமெரிக்காவின் அதிகார துச்பிரயோகத்தை யாருமே இங்கே ஆதரிக்கவில்லை, ஆனால் அவர்களின் ஆதிக்க மனோபாவன் அரசியல் ரீதியானது., அதனை அதே வழியில் சென்று அடிக்க வேண்டுமே தவிர, தீவிர வாதத்தால் alla., ,

முஸ்லிம்களின் ஒற்றுமையை பற்றி நான் கேட்ட்கும் கேள்விகளுக்கு இஸ்லாமிய நண்பர்கள் பதில் தருவார்களா., சொல்லுங்கள், கேள்விகளை கேட்கிறேன் எனது வலைதளத்தில்

Unknown சொன்னது…

தலைவரே பகிர்வுக்கு நன்றி!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

\\நாளை ஒரு வேலை இந்திய துரோகி தாவு இப்ராகிம் அல்லது இந்திய பாராளு மன்ற தாக்குதலின் காரணமான தூக்கு தண்டனை கைதி அப்சல் குரு அல்லது மும்பை தாக்குதலில் பிடிபட்டு தூக்கு கயிறுக்கு காத்திருக்கும் பாகிஸ்தானிய கசாப் இவர்கள் இறந்தால் கூட இதேபோல் தானே சிறப்பு தொழுகை நடத்துவீர்கள் ??\\

---நாளை ஒரு வேளை இந்திய துரோகிகள் மோடி,அத்வானி,தாக்கரே,பஜ்ரங்கி,அசிமானந்தா, பிரக்யாசிங் அல்லது அசோக் சிங்கால் என எவராவது மனம் திருந்தி பகிரங்கமாக முஸ்லிம் ஆகிவிட்டு மறுநாள் மரணித்தால் கூட, அவர்களுக்கான--அதாவது அந்த இறந்த உடல்களுக்கான-- குளிப்பாட்டி சுத்தப்படுத்துதல், துணியால் மூடி 'கஃபநிடுதல்', 'ஜனாஸா' தொழுகை, நல்லடக்கம் செய்தல்--போன்ற செயல்கள் அங்குள்ள மற்ற முஸ்லிம்கள் மீது கடமை.

ஒருவேளை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தொழுகை நடத்தப்படாமல் விடப்பட்டுவிட்டால்... எங்கோ தூர இருப்பவர்கள் அந்த தொழுகையை மட்டும் தொழுது அவர்களுக்காக பாவமன்னிப்பு வேண்டி பிரார்த்திக்க இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதி உண்டு.

அதுமட்டுமல்ல...

முஸ்லிம்களுக்கு பிணத்துக்கும் மனிதனுக்கும் உள்ள வித்தியாசம் தெரிந்திருக்கிறது...! அதுவும் சுமார் 1425 வருடங்களுக்கு முன்பாகவே..!

முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் அரபுலக ராஜாங்க ஆட்சியாளர். தான் வரும்போது அமர்ந்திருக்கும் யாரும் எழுந்து நின்றால் கடிந்து கொள்வார்கள். அதனை வன்மையாக தடுத்தார்கள்.

ஆனால், தன்னை கொல்ல துடித்துக்கொண்டு இருக்கும் யூத கூட்டத்தினர், அவர்களில் இறந்த ஒருவரின் சடலத்தை இடுகாடு நோக்கி, தன் வீடு/மசூதி இருக்கும் வழியே தூக்கிச்சென்று கொண்டு இருக்கையிலே... அங்கே அமர்ந்து இருந்த மன்னர் நபி (ஸல்)அவர்கள் அமைதியாக எழுந்து நின்றதோடு மட்டுமல்லாது மற்றவர்களையும் அப்படி நிற்க பணித்தார்கள்.

காரணம்... எதிரிகளின் இறந்த உடலுக்கு மரியாதை தந்தாக வேண்டும் என்பது முஸ்லிம்கள் மீது அப்போதிருந்து கட்டாயம்.

இப்படிப்பட்ட இஸ்லாம் மீது எப்போதுமே ஒரு வெறித்தனமான எதிர்ப்பை, அறிவற்ற தீ வார்த்தைகள் கொண்டு கக்கி வரும் சகோ.மாணிக்கம் அவர்களே!

நீண்ட காலமாகவே நான் உங்களை கவனித்து வருகிறேன்.

நீங்கள் ஒசாமாவை பற்றி என்ன வேண்டுமானாலும் கேவலமாக எழுதிக்கொள்ளுங்கள். ஜார்ஜ் புஷ் சொன்னதை மட்டும் நம்பி 9/11 -ஐ எப்படி வேண்டுமானாலும் புரிந்து அமெரிக்காவின் அடிமையாக இருந்து கொள்ளுங்கள். அது உங்கள் உரிமை.

//பிள்ளைகுட்டி(?!) பெண்டாட்டிகளுடன்(?!) மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு ஓடுங்கள் பாகிஸ்தானுக்கு(??) அல்லது பின் லேடன் பிறந்த சவூதி அரேபியாவுக்கு.(??)//--இதை சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கிறதா..?

மேலும், // முஸ்லிம்களுக்கு மூளை தலையில் இல்லை, முழங்காலில்(!?) //--என்பது போன்ற அறிவற்ற வார்த்தைகளுக்கு வன்மையாக கண்டனம் தெரிவிக்கிறேன்.

பொன் மாலை பொழுது சொன்னது…

-///--நாளை ஒரு வேளை இந்திய துரோகிகள் மோடி,அத்வானி,தாக்கரே,பஜ்ரங்கி,அசிமானந்தா, பிரக்யாசிங் அல்லது அசோக் சிங்கால் என எவராவது மனம் திருந்தி பகிரங்கமாக முஸ்லிம் ஆகிவிட்டு மறுநாள் மரணித்தால் கூட, அவர்களுக்கான--அதாவது அந்த இறந்த உடல்களுக்கான-- குளிப்பாட்டி சுத்தப்படுத்துதல், துணியால் மூடி 'கஃபநிடுதல்', 'ஜனாஸா' தொழுகை, நல்லடக்கம் செய்தல்--போன்ற செயல்கள் அங்குள்ள மற்ற முஸ்லிம்கள் மீது கடமை.///

முஹம்மத் ஆஷிக் 'Citizen_of_World' சொன்னது…


சரி அப்படியே நடத்துங்கள், மேல உள்ளவர்களை முஸ்லிம்களாக மதம் மாற்றி பின்னர் அவர்கள் இறந்த பின்னர் உங்கள் வழக்கப்படி செய்யுங்கள்.ஆனால் நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை உங்களிடம்

\\நாளை ஒரு வேலை இந்திய துரோகி தாவு இப்ராகிம் அல்லது இந்திய பாராளு மன்ற தாக்குதலின் காரணமான தூக்கு தண்டனை கைதி அப்சல் குரு அல்லது மும்பை தாக்குதலில் பிடிபட்டு தூக்கு கயிறுக்கு காத்திருக்கும் பாகிஸ்தானிய கசாப் இவர்கள் இறந்தால் கூட இதேபோல் தானே சிறப்பு தொழுகை நடத்துவீர்கள் ??\\

இவர்கள் எல்லாம் இயல்பாகவே முஸ்லிம்கள்தான். இவர்கள் இறந்தாலும் இதுபோலத்தான் தொழுகை நடத்துவீர்களா??

ஆம் அல்லது என்று நேரிடையாக பதில் இருந்தால் சொல்லுங்கள். வீணான சப்பை கட்டுகள் வேண்டாம்.

நான் மதம்பிடித்து அலையும் கூடத்தினான் அல்ல. எம் மதம் மீதும் எனக்கு துவேஷமோ வெறுப்போ இல்லை. உண்மைகளை கூறும் பொது உங்களைபோன்றவர்களுக்கு பிடிக்காதுதான். வலையிலும், வெளியிலும் முஸ்லிம் நண்பர்கள் எனக்கு மிக அதிகம் என்பது என்னை புரிந்துகொண்டவர்களுக்கு தெரியும்.
உம் போன்ற மத பற்றாளர்களின் சான்றிதழ் எனக்கு வேண்டாம். இந்திய நாட்டை அழிக்க என்னும், அதன் மக்களை கொன்று போடதுடிக்கும் ஒரு கூடத்துக்கு நீங்கள் எல்லாம் ஏன் வால் பிடிக்க வேண்டும் இங்கிருந்துகொண்டு? இதனை வேறு யார் சொல்வார்கள்? எனக்கு சொல்ல முழு உரிமை உண்டு. என்னைபோன்ற கோடான கோடி இந்தியர்களுக்கும் இந்த உரிமை உண்டு.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

@சர்புதீன்///முஸ்லிம்களின் ஒற்றுமையை பற்றி நான் கேட்ட்கும் கேள்விகளுக்கு இஸ்லாமிய நண்பர்கள் பதில் தருவார்களா., சொல்லுங்கள், கேள்விகளை கேட்கிறேன் எனது வலைதளத்தில்///---முதலில் உங்கள் தளத்தில் நீங்கள் வீசி எறியும் சமூக அக்கறை இன்றி சினிமா, டைம்பாஸ், மொக்கைகள் மற்றும் இஸ்லாத்திற்கு எதிரான( சாம்பிளுக்கு உங்களின் ஒரு குப்பை: "கடவுள் இல்லை என்பதற்கு கிரிக்கெட்டே சாட்சி!" )
பற்றி எல்லாம் முஸ்லிம் பதிவர்கள் எல்லாரும் வந்து கேள்வி கேட்பது இல்லையே, இது ஏன்..!?

நீங்கள் கேள்வி கேட்டு போடப்போகும் அப்பதிவில், 'இந்த ஒற்றுமையை' பற்றி முதல் கேள்வி கேளுங்கள் சகோ.சரப்புதின்.!

பெயரில்லா சொன்னது…

ஒசாமா ஆயிரக்கணக்கான மக்களை கொன்ற தீவிரவாதி.நிச்சயம் அவருக்கு கடவுள் தண்டனை தருவார்.அப்படி இருக்கும்போது அவனுக்காக பாவ மன்னிப்பு கேட்ட முஸ்லீம்கள் செயல் முரணானது..மற்றபடி அவர்கள் மத சம்பிரதாயத்தை மதிக்கிறோம்...ஆனால் ஒசாமா செயலை நியாயப்படுத்தினால் கண்டிக்கிறொம்.இரட்டை கோபுர குண்டுவெடிப்பில் ஆயிரக்கணக்கான உடல்கள் கூழ் ஆனதே..எரிந்து சாமபல் ஆனதே.அதற்கு மத சடங்கு செய்ய முடியாமல் ஒசாமா செய்துவிட்டானே..அதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்..முஸ்லீம்..சகோதரர்களே..?அவனுக்கு வக்காலத்து வாங்கினால் நீங்களும் கறை படுவீர்கள்.அமெரிக்க அரசு ஒசாம உடலை ஒப்படைக்க வேண்டும் என நீங்களோ..உங்கள் தலைவர்களோ போய் கேட்டிருந்தால் தந்திருப்பார்களே..அப்புறம் விரும்பியபடி மத சடங்கு செய்திருக்கலாமே..ஏன் கேட்கவில்லை..?தமிழ்நாட்டில் இருந்து எதற்கு கண்டனம் தெரிவிக்கிறீர்கள்..?

பொன் மாலை பொழுது சொன்னது…

//அப்புறம் உசாமாவுக்கு மரண தொழுகை செய்யப்படும் பொழுது அங்கே காணபடுகின்ற ஒரு மாதிரியான தன இனம் சார்ந்த உணர்ச்சி எங்கிருந்து வருகிறது?//

------ஷர்புதீன் சொன்னது.

இதைத்தானே நானும் வேறு வழியில் கேட்டேன்? இவ்வளவுக்கும் பின் லேடன் இந்தியன் கூட இல்ல. வெறும் முஸ்லிம் ஆக இருந்தாலே போதும்.தான் தன், மதம் என்ற உணர்வுகளை இவர்மட்டும் போற்றி வளர்ப்பார்கள். அப்படி செய்வதே தங்களின் மத தர்மம் எனவும் வாதிடுவார்கள். அனால் இதனையே பிற மதத்தினர் செய்தால் வந்தது மோசம் என கூக்குரல் இடுவார்கள். இவர்கள் மட்டும் மதமும் மதம் சார்ந்தவர்களாக இருப்பார்கள் மற்றவர்கள் எல்லாம் ஒன்றுமிலாமல் இருக்கவேண்டும் என எதிர் பார்கிறார்கள்.

வருகைக்கு நன்றி ஷர்புதீன். நீங்கள் கேட்டதையே தான் நானும் என் பாணியில் கேட்டுள்ளேன். அன்றி எவரையும் கேவலபடுத்தும் எண்ணம் இல்லை

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

இதுல என்ன சொல்றதுன்னே தெரியல மாணிக்கம்!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

நேற்று

அஜ்மல் கசாப் எனும் கொலைகாரனுக்கு தூக்குத்தண்டனை.

இன்று,

அந்த பிணத்தை என்ன செய்வது?

பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டுமா? அவர்கள் வாங்கிக்கொள்ளா விட்டால் என்ன செய்வது?
அந்த பிணத்தை முஸ்லிம் மதப்படி அடக்க வேண்டுமா..? ஹிந்து மதப்படி எரிக்க வேண்டுமா..?

நாளை,

பிரக்யா சிங் தாகூர், அசிமானந்தா, இந்திறேஷ்குமார், பாதிரியார் குடும்பத்தை எரித்த ரானா, மோடி, அத்வானி, பஜ்ரங்கி, தாக்கரே, அசோக் சிஞ்கால் இவர்கள் எல்லாரும் ஹிந்துக்களாகவே செத்தால் அவர்கள் பிணத்தை என்ன செய்வீர்கள் சகோ.கக்கு..?

ஐயரை கூப்பிட்டு மந்திரம் ஓதி, சுற்றி வந்து சிதைக்கு தீமூட்டி, பிண்டம் வைத்து அஸ்தியை 'புனித' கங்கையில் ஹிந்து மத அடிப்படையில் யாரையேனும் கரைக்க அனுமதிப்பீர்களா சகோ.கக்கு..?

சரி,

ஒரு ஹிந்துவான மல்டி கொலைகாரன் ஆட்டோ சங்கர் பிணத்தை என்ன/எப்படி செய்தீர்கள்..?

விடுதலைப்புலி பயங்கரவாதி தாணு, சிவராசன் பிணத்தை என்ன/எப்படி செய்தீர்கள்..?

தேசத்தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற ஆர் எஸ் எஸ் பயங்கரவாதி கோட்சே பிணத்தை என்ன/எப்படி செய்தீர்கள்..?

வெடிகுண்டு வைத்து அப்பாவி மக்களை கொன்ற ஆர் எஸ் எஸ் பயங்கரவாதி ஜோஷியின் பிணத்தை என்ன/எப்படி செய்தீர்கள்..?

\\\\\நீங்கள் கேட்டதையே தான் நானும் என் பாணியில் கேட்டுள்ளேன்.\\\\

அடடா...! உங்கள் பாணி மிகவும் அசிங்கமாகவும் அருவருப்பாகவும் உள்ளதே சகோ..?

\\\\ அன்றி எவரையும் கேவலபடுத்தும் எண்ணம் இல்லை\\\\--?????

// முஸ்லிம்களுக்கு மூளை தலையில் இல்லை, முழங்காலில் // --இது என்ன..?

//பிள்ளைகுட்டி(?!) பெண்டாட்டிகளுடன்(?!) மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு ஓடுங்கள் பாகிஸ்தானுக்கு(??) அல்லது பின் லேடன் பிறந்த சவூதி அரேபியாவுக்கு.(??)//---குடும்பத்தோடு கேவலப்படுத்தவில்லையா?

சக இந்தியரை குடும்பத்தோடு நாட்டை விட்டு போகச்சொல்ல என்ன உரிமை உங்களுக்கு..?

சக இந்தியரை குடும்பத்தோடு நாட்டை விட்டு போகச்சொல்ல என்ன உரிமை உங்களுக்கு..?

சக இந்தியரை குடும்பத்தோடு நாட்டை விட்டு போகச்சொல்ல என்ன உரிமை உங்களுக்கு..?

இங்கே நான் ஒசாமாவுக்காக குரல் கொடுக்க வில்லை..?

ஏன் சக இந்தியர்களுக்காக குரல் கொடுக்கிறேன்.

சக இந்தியர்களின் மத நல்லிணக்கத்துக்கு எதிராக பதிவு எழுதும் உங்களை போன்ற பதிவுலக பயங்கரவாதியை நாட்டை விட்டு போகச்சொல்ல எனக்கு உரிமை இருக்கிறதா..?

சொல்லுங்கள். தெரிந்து கொள்கிறேன்..!

இனியும் உங்களோடு பேசி பயனில்லை..!

சொல்ல வந்த விசயத்தை விட்டுவிட்டு உங்கள் பதிவில் வரும் அறிவற்ற காட்டுமிராண்டி வார்த்தைகள் communal harmony-ஐ ஒரேடியாய் சவக்குழியை நோக்கி அனுப்புகிறது..!


தட்ஸ்ஆல் 'பிரதர்'..! பை.. பை..!

அஞ்சா சிங்கம் சொன்னது…

// முஸ்லிம்களுக்கு மூளை தலையில் இல்லை, முழங்காலில் //

என் நண்பன் அதற்க்கு சற்று மேலே பின்புறத்தில் உள்ளது என்று சொல்லுவான் ............

அஞ்சா சிங்கம் சொன்னது…

காரணம்... எதிரிகளின் இறந்த உடலுக்கு மரியாதை தந்தாக வேண்டும் என்பது முஸ்லிம்கள் மீது அப்போதிருந்து கட்டாயம்.............../////////////////

ஆனால் உயிர்ரோடு இருக்கும் யாரையும் மதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்கிறதா? பெண்கள் குழந்தைகள் முஸ்லீம் முஸ்லீம் அல்லாதவர் என்று யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம் தப்பில்லை அதற்க்கு ஜிஹாத் என்று பெயர் வைத்துவிட்டால் போதும் அல்லா மன்னித்து விடுவார் என்று தவறான போதனைகளை செய்து இன்று முஸ்லீம்கள் என்றால் உலகின் மற்ற மதத்தினர் அனைவரும் வெறுக்கும் அளவிற்கு உங்கள் மதத்தின் பெயரை கெடுத்த ஒரு அயோக்கியனுக்கு வக்காலத்து வாங்கி மேலும் கரை பட்டு கொள்ளாதீர்கள் .....................

பொன் மாலை பொழுது சொன்னது…

/// சொல்ல வந்த விசயத்தை விட்டுவிட்டு உங்கள் பதிவில் வரும் அறிவற்ற காட்டுமிராண்டி வார்த்தைகள் communal harmony-ஐ ஒரேடியாய் சவக்குழியை நோக்கி அனுப்புகிறது..!////

------முஹம்மத் ஆஷிக் 'Citizen_of_World' சொன்னது…


இந்திய நாட்டை அழிக்க துடித்த கூட்டங்களுக்கு அவர்கள் உங்களின் மதம் சார்ந்த ஒரே காரணத்துக்காக சிறப்பு தொழுகை நடத்திக்காட்டுவீர்கள் . இதில் முஸ்லிம் அல்லாதவர்கள் மட்டும் communal harmony -ஐ வைத்துகொண்டு உங்களை போன்ற மத பற்றாளர்களுக்கு காவடி எடுக்க வேண்டும் என எதிர்பார்கிறீர்கள். பயங்கர வாதிகளை மதத்தை அடிபடையாக வைத்து அவர்களை கொண்டாடாதீர்கள் என்பதே என் பதிவில் நோக்கம். என் பதிவில் என்ன பயங்கர வாதத்தை கண்டீர்கள்?
நீங்கள் இன்னமும் என் கேள்விக்கு பதில் சொல்லாமல் வீணாக பிதற்றி இங்கு தொடர்பற்ற செய்திகளை எழுதி நீங்கள் உண்மையில் யார் என்பதை பிறருக்கு காட்டுகிறீர்கள். போதும் நிறுத்துங்கள். நானும் இனி உம்முடன் பேச தயார் இல்லை.

ஷர்புதீன் சொன்னது…

நான் ஏதோ கேட்க போகிறேன் என்றதுக்கு., "என்ன கேளுங்கள் பார்போம்" என்ற சொல் வரவில்லை, எனது ப்ளாக்கை வைத்து என்னை எடைபோடுகிறார் நண்பர், அப்புறம் உசாமை வைத்து முஸ்லிம்களை எடை போடும் பொழுதுமட்டும் கோபம் வரும்., இவைதான் எனது கேள்விகளின் ஆதார சுருதி! கேட்கட்டுமா?

G u l a m சொன்னது…

நம் அனைவரின் மீதும் ஓரிறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
சகோதர் மாணிக்கம்., பொதுவாக, முஸ்லிம்கள் ஒருவருக்காக தொழுகையோ, இரங்கலோ தெரிவிக்க எவரது அனுமதியும் வாங்க தேவையில்லை...அப்படி இறந்த ஒருவருக்கு தொழுகை நடத்துவதால் சமுகம் அடைந்த ... குறிப்பாக இந்திய தேசம் அடைந்த நட்டம் என்ன .... குறிப்பிடுங்கள்.,
உங்கள் வார்த்தையில் அளவிற்கதிகமான முஸ்லிம்கள் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியே.. புரிந்துக்கொள்ள முடிகிறது., சகோதரரே முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் இந்த உஸாமா மட்டுமல்ல... உங்கள் வீட்டின் பின்புறம் கடை வைத்திருக்கும் அப்துல்லாவாக இருந்தாலும்... அவரும் இஸ்லாமில் சகோதரரே.. முஸ்லிம்கள் செய்வதெல்லாம் இஸ்லாம் ஆகாது, ஆக இஸ்லாத்தை புரிந்துக்கொள்ள முயற்சியுங்கள் பின் முஸ்லிம்கள் மீது குற்றச்சாட்டை வைக்கலாம்...
இங்கு பிறந்ததால் என் இந்திய தேசம்...என் இந்திய தேசம் என மூச்சுக்கு மூவாயிரம் முறை அன்பு பாரட்டும் நீங்கள் (உங்களைப்போன்றோர்) ஏதேனும் ஒரு பிரச்சனை என வரும்போது, தனது மாநிலம், தனது மாவட்டம், தனது ஊர், தனது வீடு என ஒரு குறுகிய வட்டத்திற்குள் செல்வது ஏனோ...?
இப்படிப்பட்ட குறுகிய எண்ணத்திற்குள் செல்வது தான் உங்கள் சிந்தையில் பரந்த தேசப்பக்தியோ..........
இப்படிப்பட்ட போலி தேசப்பக்தியை இஸ்லாம் ஆதாரிக்கவில்லை..முஸ்லிம்களுக்கு அப்படி காட்டிக்கொள்ள வேண்டும் என்ற அவசியமுமில்லை ஆக இஸ்லாம் மனிதர்களுக்கு மனிதன் ஏற்படுத்திய வரையறையான எல்லைக்கோடுகளை களைந்து அது உலகளாவிய சகோதரத்தை வலியுறுத்துகிறது. எனவே தான் பாலஸ்தீனத்திலும்,ஆப்கானிலும், ஏன் அண்டார்டிகாவிலும் உள்ளவர்களை எங்களால் சகோதரர்களாக ஏற்றுக்கொள்ள முடிகிறது... எதையும் நடு நிலையோடு அணுகுங்கள் அப்போது தான்
ஐயா, இந்த பின்னூட்டத்திற்கும் எதாவது // கொட்டேஷன் // இட்டு
ஏய் இந்திய துரோகியே.... இந்தியாவை விட்டு போடா வெளியே.. னு எழுதுங்க...
அதை பாராட்டி நிறைய பின்னூட்டம் தொடரும்.
// முஸ்லிம்களுக்கு மூளை தலையில் இல்லை, முழங்காலில் //
சரிதான்..சகோதரரே அதனால் தான் என்னவோ முஸ்லிம்கள் இவ்வளவு பொறுமையாக பின்னூட்டமிட்டு கொண்டிருக்கின்றார்களோ....

Ibnu Halima சொன்னது…

ஏக இறையின் அருளும் கருணையும் நம் அனைவர் மீதும் நிலவட்டுமாக
நான் ஒசாமா பின் லாடனை ஆதரிப்பவனல்ல. தீவிரவாதத்தினால் ஒரு பலனும் இல்லை என்று நம்புகிறவன். தான் சார்ந்த சமூகத்திற்கு அதிக கெடுதல்களையே இந்த தீவிரவாதிகள் பரிசாக தருகிறார்கள் என்ற கொள்கையையுடைய்வன். அது எந்த மதம் சார்ந்த தீவிரவாதியாக இருந்தாலும் சரியே. ஒசாமாவால் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு ஒசாமாவின் இந்த மரணத்தால் ஓரளவிற்கேனும் நீதி வழங்கப்பட்டிருப்பதாக நம்புவன். ஆனால் ஒசாமாவை உருவாக்கிய பெரிய தீவிரவாதிகளான அமெரிக்க ஆட்சியாளர்களுக்கு இதுவரை ஒரு தண்டனையும் கிடைக்கவில்லையே என்ற வருத்தத்தை கொண்டிருப்பவன்.

Ibnu Halima சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Ibnu Halima சொன்னது…

மேலும் சகோதரர் முஹம்மத் ஆஷிக் சொல்வது போன்று உயிரோடு இருக்கும்வரை தான் ஒசாமா பின் லாடன். இறந்து விட்டால் எங்களை பொறுத்தவரை அது மய்யித் (அதாவது பிணம்). எனவே அதற்குரிய சடங்கை செய்து புதைப்பது தான் மனிதத்தன்மையுள்ள செயல். ஆனால் தங்கள் பதிவு ஒசாமாவை கண்டிப்பது என்ற விதத்திலும் தாண்டி முஸ்லிம்களை இலக்காக வைத்து செல்கிறது. அதனால் தான் பாகிஸ்தானுக்கோ அல்லது சவுதிக்கோ ஓடுங்கள் என்ற துவேசத்தை வெளிப்படுத்தி இருக்குறீர்கள். அதற்கு காரணமாக அப்பாவி மக்களை ஒசாமா பின் லாடன் கொன்றதை சொல்கிறீர்கள். மத துவேசமேல்லாம் இல்லை என்று வேறு ஆங்காங்கே சொல்கிறீர்கள். எனக்கு முஸ்லிம் பெயர்தாங்கிகளும் நண்பர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லுகிறீர்கள்.

Ibnu Halima சொன்னது…

ஆனால் இப்போது உங்கள் மனசாட்சியிடம் நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி இது தான். இலங்கையை சேர்ந்த பிரபாகரன் என்னும் நபரால் எந்த அப்பாவியும் இறக்க வில்லை என்று உங்களால் அடித்து கூற முடியுமா? அவரை இலங்கை இராணுவம் கொன்று கடலில் தூக்கி வீசி எறிந்த போது இங்கே தமிழகம் முழுக்க இரங்கல் கூட்டங்களும் கண்டனக்கூட்டங்களும் நடந்ததே. அப்போது என்னவிதமாக நீங்கள் எழுதினீர்கள். பிரபாகரனுக்கு ஆதரவு தெரிவித்து இரங்கல் கூட்டம் போடுபவனெல்லாம் யாழ்ப்பணத்திற்கு ஓடுங்கள் என்றா சொன்னீர்கள்? பிரபாகரன் இந்தியால் தேடப்படும் ஒரு குற்றவாளி. இந்தியாவின் பிரதமரை தமிழக மண்ணில் வைத்து படுகொலை செய்தவர். உடனே ராஜிவை பற்றி எழுத ஆரம்பித்து விடாதீர்கள். என்னுடைய கேள்வி ரொம்ப சிம்பிள். அதாவது பிரபாகரனால் ஒரு அப்பாவியும் இறக்கவில்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? ஏனெனில் அவர் இயக்கத்தினரால் சிங்கள இராணுவத்தினர்கள் இறந்தாலும் பல அப்பாவிகளும் இறந்திருக்கிறார்கள். அதே போன்று தான் ஒசாமாவின் இயக்கத்தினர்களால் அமெரிக்க சிப்பாய்கள் இறந்தாலும் பல அப்பாவிகள் இறந்திருக்கிறார்கள். ஆனால் பிரபாகரனுக்கு ஒரு நீதி. ஒசாமாவுக்கு ஒரு நீதி என்ற உங்களின் நேர்மையும் நாணயமும் என்னை புல்லரிக்க வைக்கின்றது கக்கு மாணிக்கம். இந்த கேள்விக்கு நிதானமாக அறிவார்ந்த நிலையில் மூளையை கசக்கி யோசித்து பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன்.

பொன் மாலை பொழுது சொன்னது…

///நேற்று

அஜ்மல் கசாப் எனும் கொலைகாரனுக்கு தூக்குத்தண்டனை.

இன்று,

அந்த பிணத்தை என்ன செய்வது?

பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டுமா? அவர்கள் வாங்கிக்கொள்ளா விட்டால் என்ன செய்வது?
அந்த பிணத்தை முஸ்லிம் மதப்படி அடக்க வேண்டுமா..? ஹிந்து மதப்படி எரிக்க வேண்டுமா..?//

முஹம்மத் ஆஷிக் 'Citizen_of_World' சொன்னது…



உம்மிடம் பேசவேண்டாம் என்றாலும் இந்த பொதுத்தளத்தில் வந்தாகிவிட்டது. பேசியே ஆகவேண்டும். நான் கேட்டது, ஒரு வேலை இந்திய அரசு தூக்கில் இட்டால் கூட அவன் முஸ்லிம் என்ற காரணத்துக்காக அவனுக்கும் கூட சிறப்பு தொழுகை நடத்துவீர்களா இல்லையா?

//அந்த பிணத்தை என்ன செய்வது?
அந்த பிணத்தை முஸ்லிம் மதப்படி அடக்க வேண்டுமா..? ஹிந்து மதப்படி எரிக்க வேண்டுமா..?//

இந்த கேள்விகளை நீர்தான் கேட்டுள்ளீர் அன்றி நான் கேட்ட கேள்விக்கு பதில் இது இல்லையே .
பிணத்தை முஸ்லிம் முறைப்படி சடங்குகள் செய்து புதைத்துவிட்டார்கள் என்றே வைத்துக்கொள்வோம்.

இதன் பிறகு அடுத்து வரும் வெள்ளிக்கிழமை அன்று நீங்கள் அனைவரும் இதே போன்ற ஒரு தொழுகையை அவனுக்காக,, இறந்த கசாப் க்காக நடத்துவீர்களா? மாட்டீர்களா??

இதற்கு பதில் சொல்ல திடம் இருக்கிறதா உங்களிடம்? இதனை விட்டு வீணாக உம் தலையில் உள்ள உளுத்துப்போன சரக்கை எல்லாம் இங்கே கொட்டி என் வலைதளத்தை அசிங்கப்படுத்ததே நண்பனே.

ஷர்புதீன் சொன்னது…

//சென்னை அண்ணாசாலையில் உள்ள மஸ்ஜிதில் சம்சுதீன் காசிமி என்ற விளம்பரப்பிரியர் நடத்திய இந்த தொழுகை தேவையற்றது. அவர் தனது சுய விளம்பரத்திற்கு இந்த நிகழ்வை பயன்படுத்தியிருக்கிறார் என்பதே என் ஐயம். ஏன் எனில் ஏற்கெனவே ஒசாமாவின் ஜனாஸாவுக்கு பாக்கிஸ்தானில் ஒரு இடத்தில் வைத்து தொழுகை நடத்தி விட்டதை ஊடகங்களின் வழியாக எல்லோரும் அறிந்திருக்கிறார்கள். இறுதி சடங்கான ஜனாஸா தொழுகையை ஒரு தடவை நடத்தினாலே போதுமானது. மேலும் மேலும் நடத்த தேவையில்லை. பொதுவாக வெள்ளிக்கிழமை மஸ்ஜிதிற்கு அனைத்து முஸ்லிம்களும் தொழுகை நடத்த செல்வார்கள். எனவே வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வந்த கூட்டத்தை ஒசாமாவிற்கு வந்த கூட்டம் போல காட்டி விட்டார் சம்சுதீன் காசிமி. ஒசாமா கொல்லப்பட்டதாக அறிவித்த அன்றே அல்லது அடுத்த நாளோ இவர் இந்த தொழுகையை ஏற்பாடு செய்திருந்தால் இருபது நபர்களுக்கு மேல் வந்திருப்பார்களா என்பது சந்தேகமே. எனவே ஒருவரின் விளம்பர மோகம் மீண்டும் இந்த சமுதாயத்தை கண்ட கழிசடை நாய்களிடமிருந்தும் ஏச்சு பேச்சுக்களை வாங்க வைத்திருக்கிறது. //

above the statement are one of my quesitons, good ibnu halimaa., actually ihave this kind of questions much., but muslim people are dont like to critise another muslim, always and most of tamil muslim people are short tempered.

Ibnu Halima சொன்னது…

சகோதரர் கக்கு மாணிக்கம் என்னுடைய கேள்விக்கு கண்டிப்பாக பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு உண்மையிலேயே அப்பாவிகள் இறந்ததை பற்றிய வருத்தமும் கோபமும் இருந்தால் என்னுடைய கேள்விக்கு நேர்மையான பதிலை தருவீர்கள் என்று நம்புகிறேன்.

rafi சொன்னது…

பின்லேடனை அமெரிக்கா கொன்றது ஆனால் தாவூத்தை நம்மால் அழிக்க முடியாது: ப.சிதம்பரம்
[ புதன்கிழமை, 04 மே 2011, 12:02.16 PM GMT +05:30 ]
ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கொன்றது போல நம்மால் பாகிஸ்தானுக்குள் போய் தாவூத் இப்ராகிமை அழிக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
அமெரிக்காவால் பாகிஸ்தானுக்குள் புகுந்து உலகப் பெரும் தீவிரவாதியான பின்லேடனை சுட்டுக் கொன்றது போல இந்தியாவும் ஏன் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தாவூத் இப்ராகிம் போன்ற தீவிரவாதிகளை அழிக்கக் கூடாது, அழிக்க முடியாது என்ற கேள்வி இந்தியர்கள் மனதில் எழுந்துள்ளது.

உலகைப் பொறுத்தவரை பின்லேடன் மிகப் பெரிய தீவிரவாதியாக இருக்கலாம். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை தாவூத் இப்ராகிம்தான் இந்தியாவின் பின்லேடனாக இருக்கிறான். பின்லேடன் மேற்கத்திய நாடுகளைத்தான் குறிப்பாக அமெரிக்காவைத்தான் குறிவைத்து தாக்கி வந்தான். இந்தியா அவனது இலக்காகவே இல்லை. இந்தியாவுக்கு எதிராக அல் கொய்தா அமைப்பு பெரிய அளவில் எதையும் செய்ததில்லை.

அதேசமயம் லஷ்கர் இ தொய்பா அமைப்புதான் இந்தியாவைக் குறிவைத்துத் தொடர்ந்து தாக்கி வருகிறது. தாவூத் இப்ராகிம் போன்றவர்கள்தான் இந்தியாவை தொடர்ந்து குத்திக் குதறிக் கொண்டிருக்கின்றனர். எனவே பின்லேடனின் சாவால் இந்தியாவுக்கு லாபமோ, நஷ்டமோ கிடையாது. மாறாக தாவூத் இப்ராகிம், ஹபீஸ் சயீத் போன்றோர்தான் நமக்கு உண்மையான மிரட்டல். இன்னும் வெளிப்படையாக சொல்வதானால் இந்தியாவுக்கான தீவிரவாத அபாயம் சற்றும் குறையவில்லை அது அழிக்கப்படவும் இல்லை.

பின்லேடனின் மரணம் அமெரிக்காவுக்கு வேண்டுமானால் உற்சாகத்தைக் கொடுக்கலாம். ஆனால் இந்தியாவுக்கு இதனால் பலன் ஏதும் இல்லை. பின்லேடனைப் போலவே தாவூத் இப்ராகிமும் பாகிஸ்தானில்தான் புகலிடம் அடைந்து தங்கியுள்ளான். அவனை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐதான் தொடர்ந்து காத்து ஆதரித்து வருகிறது. பாகிஸ்தான் அரசின் ஆதரவும் அவனுக்கு உள்ளது. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல அமெரிக்காவுக்குமே கூட நன்றாகத் தெரியும்.

அதேசமயம், பின்லேடனை தூள் தூளாக்க அமெரிக்க தலைவர்கள் எடுத்த ஆணித்தரமான நடவடிக்கைகளில் ஒரு பங்கைக் கூட தாவூத்தை வீழ்த்த இந்தியத் தலைவர்கள் எடுக்கவில்லை, எடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. இந்த விஷயத்தில் இந்தியாவின் இயலாமையை ஒத்துக் கொள்ளும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்குள் அமெரிக்க ராணுவத்தால் செயல்பட முடிகிறது.

பாகிஸ்தான் அரசுக்குத் தெரிந்தே இதுபோல அவர்களால் செயல்பட முடிகிறது. அமெரிக்க உளவாளிகள் பெருமளவில் பாகிஸ்தானில் உள்ளனர். பாகிஸ்தான் அரசுக்கும் இது தெரியும். பின்லேடனை கொல்ல அமெரிக்காவால் முடிந்தது. பாகிஸ்தானுக்குள் சென்று பாகிஸ்தான் அதிகாரிகளுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ இதை செய்ய அவர்களால் முடிந்தது. ஆனால் இந்தியாவுக்கு அப்படி ஒரு நிலை பாகிஸ்தானில் இல்லை.

இந்தியப் பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தானில் செயல்படவில்லை. நமக்கு அங்கு அமெரிக்காவைப் போல பெருமளவில் உளவாளிகள் இல்லை. எனவே தாவூத் இப்ராகிமைக் கொல்வது என்பது மிகக் கடினமானது. இதுதான் உண்மை, இதை நான் ஏற்றுத்தான் ஆக வேண்டும். அமெரிக்காவால் முடிந்தது, ஆனால் நம்மால் முடியாது என்றார் ப.சிதம்பரம்.

Ibnu Halima சொன்னது…

சகோ கக்கு மாணிக்கம்,
முஸ்லிம்களின் மத வழக்கப்படி ஜனாசாவிற்கு ஒரு தடவை தொழ வைத்து அடக்கம் செய்தாலே சடங்குகள் முடிந்து விடும். வருகிற வெள்ளிக்கிழமை போகிற வெள்ளிக்கிழமை எல்லாம் தொழ வைக்க தேவையில்லை. அப்படி தொழ வைக்க போகிறேன் என்று சொல்லுபவர் விளம்பரப்பிரியராக இருக்க தான் வாய்ப்புகள் அதிகம். ஆனால் நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதிலளிக்கவில்லை சகோதரா நீங்கள்.

rafi சொன்னது…

பின்லேடனை வளர்த்து விட்டதை அமெரிக்க தான்

saarvaakan சொன்னது…

// பிரபாகரனுக்கு ஒரு நீதி. ஒசாமாவுக்கு ஒரு நீதி //
பிரபாகரனுக்காக இம்மாதிரி கோயிலில் ஒரு பிரார்த்தனை செய்தார்களா? எங்கே எப்போது?

பொன் மாலை பொழுது சொன்னது…

///ஆனால் இப்போது உங்கள் மனசாட்சியிடம் நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி இது தான். இலங்கையை சேர்ந்த பிரபாகரன் என்னும் நபரால் எந்த அப்பாவியும் இறக்க வில்லை என்று உங்களால் அடித்து கூற முடியுமா? அவரை இலங்கை இராணுவம் கொன்று கடலில் தூக்கி வீசி எறிந்த போது இங்கே தமிழகம் முழுக்க இரங்கல் கூட்டங்களும் கண்டனக்கூட்டங்களும் நடந்ததே. அப்போது என்னவிதமாக நீங்கள் எழுதினீர்கள். பிரபாகரனுக்கு ஆதரவு தெரிவித்து இரங்கல் கூட்டம் போடுபவனெல்லாம் யாழ்ப்பணத்திற்கு ஓடுங்கள் என்றா சொன்னீர்கள்? பிரபாகரன் இந்தியால் தேடப்படும் ஒரு குற்றவாளி. இந்தியாவின் பிரதமரை தமிழக மண்ணில் வைத்து படுகொலை செய்தவர். உடனே ராஜிவை பற்றி எழுத ஆரம்பித்து விடாதீர்கள். என்னுடைய கேள்வி ரொம்ப சிம்பிள். அதாவது பிரபாகரனால் ஒரு அப்பாவியும் இறக்கவில்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? ஏனெனில் அவர் இயக்கத்தினரால் சிங்கள இராணுவத்தினர்கள் இறந்தாலும் பல அப்பாவிகளும் இறந்திருக்கிறார்கள். அதே போன்று தான் ஒசாமாவின் இயக்கத்தினர்களால் அமெரிக்க சிப்பாய்கள் இறந்தாலும் பல அப்பாவிகள் இறந்திருக்கிறார்கள். ஆனால் பிரபாகரனுக்கு ஒரு நீதி. ஒசாமாவுக்கு ஒரு நீதி என்ற உங்களின் நேர்மையும் நாணயமும் என்னை புல்லரிக்க வைக்கின்றது கக்கு மாணிக்கம். இந்த கேள்விக்கு நிதானமாக அறிவார்ந்த நிலையில் மூளையை கசக்கி யோசித்து பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன்.

Ibnu Halima சொன்னது…


தங்களின் அழகான விளக்கங்களுக்கு நன்றி Ibnu Halima. என் பதிவுகள் அனைத்தும் பொதுவில்தான் உள்ளன. இலங்கை விடுதலை புலிகளை ஆதரித்தோ அல்லது பிரபாகரனின் இறப்பின் போதும் கூட அவர்களை ஆதரித்து எழுதியது இல்லை. ஏனெனில் அங்கு இலங்கையில் உள்ள தமிழர்களின் இடையே காணப்படும் மிக கேவலமான ஒற்றுமை இன்மையே இன்று வரை அவர்களின் வீழ்ச்சிக்கு காரணம் என்று எண்ணுகிறவன் நான்.

//ஆனால் பிரபாகரனுக்கு ஒரு நீதி. ஒசாமாவுக்கு ஒரு நீதி என்ற உங்களின் நேர்மையும் நாணயமும் என்னை புல்லரிக்க வைக்கின்றது கக்கு மாணிக்கம்.//

பிரபாகரன் பற்றி நான் பதிவுகளே எழுதியதில்லை. ஆனால் நிறைய பிற அன்பர்கள் எழுதுவார்கள். அந்த நினைவில் நீங்கள் இதனை என்னிடம் கேட்கிறீர்கள் போலும்.

பிரபாகனின் மரணம் அப்படி ஆகி இருக்க வேண்டாம் என்றமட்டிலுமே நான் அதனை பார்கிறேன் அன்றி என்னை பொறுத்தவரை பிற உயிர்களை மாய்க்கும் அனைவரும்
மக்களின் எதிரிகளே.தங்களின் குறிக்கோளை அடைய பிறரின் உயிரை மாய்க்கும் அனைவரும் பயங்கர வாதிகளே. இதில் மதம் அல்லது மொழி இனம் என என்ன பெரிய வேறுபாடு?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

@Ibnu Halima

மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள் சகோ.இப்னு ஹலிமா.

ஆனால், இந்த பதிவின் கடைசி பகுதிகள் என்னை நீங்கள் சொன்ன கருத்துக்களை எழுத விடாமல் செய்து விட்டன.

ஏற்கனவே நடந்து விட்டாலும், கடமை என்று இல்லாவிட்டாலும் வீண் விளம்பரத்துக்காகவும் வெட்டி பரபரபுக்காகவும் தேவையற்ற ஒரு செயல் செய்த இந்த சம்சுதீன் காசிமியையும் அவரின் இந்த காயிப் ஜனாஸா கூத்தையும் கண்டித்து நானே ஒரு பதிவு போடலாம் என்று இருந்தேன்.

ஆனால், இந்த விஷப்பதிவை படித்ததால்
'போங்கடா நீங்களும் உங்க பதிவுலகமும்'
என்றே நினைக்க வைத்து விட்டது.

இன்றில்லா விட்டாலும் ஒருநாள், பயங்கரவாதிக்கும் பயங்கரவாதியின் பிணத்துக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்வார் சகோ.கக்கு மாணிக்கம் என்றே நம்புவோம்.

////எனவே ஒருவரின் விளம்பர மோகம் மீண்டும் இந்த சமுதாயத்தை கண்ட கழிசடை நாய்களிடமிருந்தும் ஏச்சு பேச்சுக்களை வாங்க வைத்திருக்கிறது. ////

---சகோ.இப்னு ஹலிமா...

இதில், இந்த...//கண்ட கழிசடை நாய்களிடமிருந்தும்//--வார்த்தைகள் உங்கள் கண்ணியத்தை குறைக்கிறது. அதை நீங்கள் சொல்லி இருக்க கூடாது. இதை பிடித்துக்கொண்டே உங்கள் கேள்விகளை இவர் எப்போதுமே சிந்திக்க மாட்டாரோ என்று கவலைப்படுகிறேன்.

என்னை ஒருமையில் திட்ட ஆரம்பித்து விட்டார்..! இனி ஆபாச கெட்ட வார்த்தைகள் கூட வரலாம். இத்தோடு உங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.
இனி இங்கே விவாதிக்காமல் நீங்களும் உங்கள் மதிப்பை காப்பாற்றிக்கொள்ள உங்களை அன்புடன் வேண்டுகிறேன்.

Bala சொன்னது…

மும்பை தாக்குதலின்போது, மும்பை போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட 9 பாகிஸ்தானிய முஸ்லிம்களை அடக்கம் செய்யவோ, வேறு சடங்குகள் செய்யவோ மும்பையில் இருந்த முஸ்லிம் அமைப்புகள் மறுத்துவிட்டனவே. இப்பொழுது ஒசாமாவுக்கு மட்டும் சிறப்புத் தொழுகை என்றால், அந்த 9 பேருக்கும் ஏன் அடக்கம் செய்ய மறுப்பு தெரிவிக்கப்பட்டது? அவர்கள் முஸ்லிம்கள் இல்லையா? ஏன் இந்த இரட்டை வேடம்? சென்னையில் ஒசாமாவுக்கு தொழுகை நடத்திய அந்த சனியனுக்கு, அந்த 9 பேருக்கும் தொழுகை நடத்தும் தைரியம் இருக்கிறதா?

Ibnu Halima சொன்னது…

அன்பு சகோதரர் கக்கு மாணிக்கம்,
முஸ்லிம்கள் விசயத்தில் கடுமையாக நாட்டை விட்டு ஓடிப்போ என்று மனம் நோகும்படி பதிவிட்ட தாங்கள் பிரபாகரனை கொண்டாடுவோர் விசயத்தில் அப்படி ஏதும் எழுதவில்லையே? இது அப்பட்டமான இரட்டை நிலைப்பாடு அல்லவா? அப்படி எழுத வேண்டுமென்று நான் உங்களை கோரவும் மாட்டேன். எங்களை காயப்படுத்தியது போன்று அவர்களையும் காயப்படுத்து என்று சொல்லுவது மனிததன்மையல்ல என்பது என் கருத்து. என்னை பொறுத்தவரை அப்பாவிகளின் உயிரை பறித்த ஒசாமாவும் பிரபாகரனும் குற்றவாளிகளே. இதில் ஒருவர் மீது உங்களுக்கு பச்சாதாபம் ஏற்படுகிறது. இன்னொருவர் அழிவில் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறீர்கள். ஆனால் என்னை பொறுத்தவரை இரண்டு நிகழ்வுகளும் ஒரே விதமாகத்தான் இருந்தது.

மேலும் என்னுடைய அந்த வார்த்தை பிரயோகத்திற்காக .//கண்ட கழிசடை நாய்களிடமிருந்தும்// எல்லோரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நானும் மனிதன் தானே. உணர்ச்சி வேகத்தில் இவ்வாறு எழுதி விட்டேன். என்னை அனைத்து சகோதரர்களும் மன்னிக்க வேண்டுகிறேன்.

ஷர்புதீன் சொன்னது…

இங்கே எட்டு புள்ளி கோல புக்கு கிடைக்குமா?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

@ Ibnu Halima

தங்கள் மீது எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் என்றென்றும் ஏற்படட்டுமாக சகோ.இப்னு ஹலிமா..!

உங்களின் மிக அழகிய செயலால் நீங்கள் மிக மிக உயர்ந்து விட்டீர்கள் சகோ.இப்னு ஹலிமா.

'பின்னூட்டவாதி'களுக்கு தாங்கள்தான் ஒரு சிறந்த முன்னுதாரணம் சகோ.இப்னு ஹலிமா..!

மிக்க நன்றி சகோ.இப்னு ஹலிமா..!

பொன் மாலை பொழுது சொன்னது…

//பகுத்தறிவான, அறிவு பூர்வமான ஒரு வழிபாட்டு, அரசியல், வாழ்வு முறை //

இதுததான் நான் இஸ்லாத்தை புரிந்துகொண்டது.

//இங்கேயும் இப்படி இருக்கிறார்களே //

என்ற ஆதங்கமே என்னை அந்த கடைசி வரிகள் எழுத வைத்தன அன்றி வேறு நோக்கம் எனக்கில்லை. அந்த வரிகளை நீக்கி விட்டேன் நண்பர்களே.

rafi சொன்னது…

அமெரிக்காவை எதிர்க்கும் நாடுகளான வடகொரியா, ஈராக், ஈரான் போன்ற நாடுகளுக்கும் இஸ்லாமிக் ஜிஹாத், ஹமாஸ், எகிப்தில் இயங்கி வரும் ஜமாஹ் இஸ்லாமிய்யாஹ், லிபியாவின் FIS போன்ற இயக்கங்களுக்கும், தமது பூர்வீக பூமியை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீனியர்களின் போராட்டத்தையும் அமெரிக்கா பயங்கரவாதச் சாயம் பூசி தண்டிக்க முனைகிறது.

தான் இயற்றிய சட்டங்களைக் கூறி எந்த ஒரு நாட்டின் (ஈராக், லிபியா) மீதும் பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா. இதை உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்காவின் முன்னாள் வெளி உறவுச் செயலாளர் ஜோர்ஜ் சல்ட்ஷ் பின்வருமாறு ஒரு முறை கூறியிருந்தார். “தீவிரவாதிகள் முயன்று தப்பி செல்ல முடியுமேயன்றி, அவர்கள் ஒளியவோ, மறையவோ முடியாது". இவ்வாறு பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்களை வகுத்து முழு உலகையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள நினைக்கிறது அமெரிக்கா.

கம்யூனிச உலகின் வீழ்ச்சிக்கு பிறகு அமெரிக்காவின் பிரதான எதிரியாக இஸ்லாம் விளங்குவதாக அமெரிக்கா கருதுகிறது. இஸ்லாமிய உலகில் மீண்டும் இஸ்லாமிய அரசை ஏற்படுத்தும் எண்ணத்துடன் பல இயக்கங்களும், முஸ்லிம் சமூகமும் செயற்படுகின்ற வேளையில் அவர்களை உடனடியாக அடக்கி தனது மேலாதிக்கத்தை தொடர்ந்து பேண வேண்டிய தேவை அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளது. எனவே இஸ்லாமிய சிந்தனையை அடிப்படையாகக்கொண்ட ஒரு து}ய இஸ்லாமிய உலகு (கிலாபா ராஷிதா) தோற்றம் பெறுவது குறித்து அமெரிக்கா பயப்படுகிறது. இதன் விளைவாக பயங்கரவாதத்திற்கு எதிரான தனது வியூகங்களை செயற்படுத்தும் முக்கிய பிராந்தியமாக முஸ்லிம் மற்றும் அரபுலகை அமெரிக்கா தேர்ந்தெடுத்துள்ளது. இதன் விளைவாக முஸ்லிம் உலகெங்கும் போராட்டங்களையும், வன்முறைகளையும் து}ண்டி நிலையற்ற அரசியல் பொருளாதார நிலையை தோற்றுவிப்பதில் அமெரிக்கா பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றது.

இதன்படி பல இஸ்லாமிய இயக்கங்களை அமெரிக்கா “பயங்கரவாத இயக்கங்கள்" எனக் கூறி இஸ்லாமிய ஆட்சி நோக்கி அழைக்கும் எந்த ஒரு அமைப்பையும் அமெரிக்கா பயங்கரவாத அமைப்பு என்று கூறுவதன் மூலமாக அவற்றுக்கு எதிராக அதியுச்ச தடைகளை ஏற்படுத்த முனைந்துள்ளது. இதற்காக அமெரிக்கா ஏனைய நாடுகளையும், வற்புறுத்தியும், அவற்றை ஒன்று திரட்டியும் இந்த இயக்கங்களை ஒடுக்க முற்படுகிறது. இதில் பலிகடாவாக ஆக்கப்படுவது கிலாபா ஆட்சியைக் கொண்டு வர முயலும் முஸ்லீம்களே ஆவர்.

rafi சொன்னது…

ஒரு காலத்தில் அமெரிக்காவுக்குப் பெரும் சவாலாக இருந்த ஒருங்கிணைந்த கம்யூனிச சோவியத் ருஷ்யாவை வீழ்த்த, அரபுக் கோடீஸ்வரரும் விடுதலைத் தாகம் கொண்டிருந்தவருமான பின்லேடன், இதே அமெரிக்காவாலேயே ஆயுதமும் பணமும் வாரி இறைத்து வளர்க்கப்பட்டார். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர், உலகில் தன்னை எதிர்க்க யாருமில்லை என்ற அகந்தையில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த அமெரிக்கா, தான் வளர்த்தெடுத்த பின்லேடனே தனக்கு எதிராகத் தலைவேதனையாக மாறுவார் என கனவிலும் நினைத்திருக்க வாய்ப்பில்லை.

அரபுலகின் எண்ணெயின் மீது ஏகாதிபத்தியத்தை நிறுவத் துவங்கிய அமெரிக்காவுக்கு நேரடியாகவே பின்லேடன் மிரட்டல்கள் விடத்துவங்கினார்.

உலகம் முழுவதும் ஆங்காங்கே அமெரிக்கத் தூதரகங்கள் பின்லேடனின் அல்காயிதா இயக்கத்தினரால் தாக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் 2001, செப்.11 இரட்டைக் கோபுர தகர்ப்பு நிகழ்வு நடந்தது.

சந்தர்ப்பத்திற்குக் காத்திருந்த அமெரிக்கா, "தீவிரவாதத்துக்கு எதிரான போர்" என்ற அறைகூவலுடன் பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்திருந்த தாலிபான் அரசுக்கு எதிராக போரைத் துவங்கியது - அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், ஒருதலைபட்சமாக ஆப்கான்மீது அத்துமீறி போர் அறிவித்தார்.
அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தகர்ப்பு சம்பவமே அமெரிக்காவின் உள்நாட்டு தயாரிப்புதான் என்றொரு தர்க்கவாதம் LOOSE CHANGE என்ற டாக்குமெண்டரி மூலமாக இன்று உலகின் எண்ணவோட்டத்தையே மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளது கவனிக்கத் தக்க மற்றொரு விஷயம்.

Ibnu Halima சொன்னது…

அன்பு நண்பர் கக்கு மாணிக்கம் மற்றும் பிற சகோதர சகோதரிகளுக்கு,
இஸ்லாத்தை எந்தவொரு தனிமனிதரின் அல்லது ஒரு குழுவின் நடத்தையை மட்டும் வைத்து தயவு செய்து எடை போட்டு விடாதீர்கள். அதன் அடிப்படையான குர்ஆன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஹதீஸ்களை வைத்து மட்டுமே அறிந்து கொள்ளுங்கள். ஏனெனில் உங்களுடன் பழகியவர்கள் / பழகுகிறவர்கள் / சந்தித்தவர்கள் மிக மோசமான சில செயல்களை அரங்கேற்றியிருக்கலாம். அவர்களின் பெயர்கள் இஸ்லாமிய பெயர்களாக இருப்பதினால் பலர் இஸ்லாத்தையே தவறாக விளங்கி விடுகின்றனர். குறிப்பாக வளைகுடாவில் பணியாற்றும் பிற மத அன்பர்களுக்கு இத்தகைய மோசமான அனுபவங்கள் ஏராளம் என்பதை நானறிவேன். எல்லோரும் உணர்ச்சி வேகத்தில் தவறிழைக்க கூடியவர்களாகவே இருக்கிறோம். ஆனால் செய்த தவறுக்கு வருந்தி உடனே திருத்திக் கொள்வது தான் சிறந்த குணம். அந்த குணத்தை நம் அனைவருக்கும் இறைவன் தருவானாக என்ற பிரார்த்திக்கிறேன். என்னுடைய உணர்ச்சிவசப்பட்ட அந்த (மோசமான வரியுடைய) கருத்துகள் எவர் மனதையும் புண்படுத்தி இருக்குமேயானால் அதற்காக மீண்டுமொருமுறை மன்னிப்பை கோருகிறேன்.

rafi சொன்னது…

அமெரிக்காவில் சரிந்து வரும் ஒபாமாவின் பிம்பத்தை அடுத்த தேர்தலில் தூக்கி நிறுத்துவதற்கான ஒபாமாவின் உடனடித் தேவை! அதற்கு ஆதரவாக உலகளாவிய சாட்சியங்களும் தேவை - மௌன சாட்சியங்கள்!

ஆனால், அபோதாபாத்வாசிகளின் கூற்று என்னவெனில்,

"இங்கு ஒஸாமாவும் வசிக்கவில்லை; குஸாமாவும் வசிக்கவில்லை. எல்லாம் அமெரிக்கா நடத்தும் நாடகம்!"

பொன் மாலை பொழுது சொன்னது…

//இதில், இந்த...//கண்ட கழிசடை நாய்களிடமிருந்தும்//--வார்த்தைகள் உங்கள் கண்ணியத்தை குறைக்கிறது. அதை நீங்கள் சொல்லி இருக்க கூடாது. இதை பிடித்துக்கொண்டே உங்கள் கேள்விகளை இவர் எப்போதுமே சிந்திக்க மாட்டாரோ என்று கவலைப்படுகிறேன்.//

முஹம்மத் ஆஷிக் 'Citizen_of_World' சொன்னது…

இவையெல்லாம் புறம் தள்ளி கருத்துக்களை மட்டும் காணும் தன்மை என்னிடமும் இருக்கிறது.

//என்னை ஒருமையில் திட்ட ஆரம்பித்து விட்டார்..! இனி ஆபாச கெட்ட வார்த்தைகள் கூட வரலாம். இத்தோடு உங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.
இனி இங்கே விவாதிக்காமல் நீங்களும் உங்கள் மதிப்பை காப்பாற்றிக்கொள்ள உங்களை அன்புடன் வேண்டுகிறேன்.//

முஹம்மத் ஆஷிக் 'Citizen_of_World' சொன்னது…

ஒருமையில் நண்பர்களிடம் வாதிடலாமே! அது எழுதும்போது Flow வில் வந்துவிட்டது அதில் வேண்டுமென்றே செய்யவில்லை. உங்கள் கருத்துகளை விமர்சித்தேனே அன்றி உங்களை அல்ல. எவர்மீதும் எனக்கு எவ்வித கோபமோ , காழ்புணர்வோ இல்லை. திட்டவேண்டிய அவசியமும் இல்லை.

Ibnu Halima சொன்னது…

சென்னை அண்ணாசாலையில் உள்ள மஸ்ஜிதில் சம்சுதீன் காசிமி என்ற விளம்பரப்பிரியர் நடத்திய இந்த தொழுகை தேவையற்றது. அவர் தனது சுய விளம்பரத்திற்கு இந்த நிகழ்வை பயன்படுத்தியிருக்கிறார் என்பதே என் ஐயம். ஏன் எனில் ஏற்கெனவே ஒசாமாவின் ஜனாஸாவுக்கு பாக்கிஸ்தானில் ஒரு இடத்தில் வைத்து தொழுகை நடத்தி விட்டதை ஊடகங்களின் வழியாக எல்லோரும் அறிந்திருக்கிறார்கள். இறுதி சடங்கான ஜனாஸா தொழுகையை ஒரு தடவை நடத்தினாலே போதுமானது. மேலும் மேலும் நடத்த தேவையில்லை. பொதுவாக வெள்ளிக்கிழமை மஸ்ஜிதிற்கு அனைத்து முஸ்லிம்களும் தொழுகை நடத்த செல்வார்கள். எனவே வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வந்த கூட்டத்தை ஒசாமாவிற்கு வந்த கூட்டம் போல காட்டி விட்டார் சம்சுதீன் காசிமி. ஒசாமா கொல்லப்பட்டதாக அறிவித்த அன்றே அல்லது அடுத்த நாளோ இவர் இந்த தொழுகையை ஏற்பாடு செய்திருந்தால் இருபது நபர்களுக்கு மேல் வந்திருப்பார்களா என்பது சந்தேகமே.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

///அந்த வரிகளை நீக்கி விட்டேன் நண்பர்களே.///

மிக மிக மிக நன்றி சகோ.கக்கு மாணிக்கம். அழகிய ஒரு செயலை செய்திருக்கிறீர்கள்.

'வாங்கடா.. உங்களுக்காக ஒரு 'தூய(?)நாடு' உருவாகியுள்ளது என்று கூப்பிட்டபோதும்,

இலவசமாக ரயில் விட்டு 'ஓடுங்கடா பாகிஸ்தானுக்கு' என்றபோதும்,

ஓடாமல் 'நாங்கள் இந்த நாட்டினர்; இந்த நாடு எங்களுக்கும் சொந்தம்' என்று உறுதியோடு இத்தனைவருடம் இம்மண்ணில் இருந்தவர்களை...

யாரோ ஒருசிலர் செய்த கிறுக்குத்தனத்தால் ஓடச்சொன்னால்...

யாரோ முஸ்லிம்கள் பற்றி பொதுமைப்படுத்தி காமடியாக சொன்னால் அது தவறு என்று நண்பரிடம் எடுத்துச்சொல்வதை விட்டுவிட்டு...

இப்படி எல்லாம் எழுதுனா எப்படி சகோ..?

ஆனால்,

இப்போது சொல்கிறேன்... கேட்டுக்கொள்ளுங்கள் சகோ.மாணிக்கம்...

சென்னையில் நடந்த அந்த ஜனாஸா தொழுகையை நானும் உங்களுடன் சேர்ந்து என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

///தான் சார்ந்த மதம் பாராட்டாத உண்மையான மனிதம் கொண்டவர்களும் கூட உங்களது இந்த கேவலமான, ஈனமான செய்கையினால் மனம் நொந்து போயுள்ளனர் என்பது நினைவில் வையுங்கள்.///---100% வழிமொழிகிறேன்..!

நன்றி.

Unknown சொன்னது…

சகோதரர்களே

ஏன் இந்த சண்டை ?

ஒசாமாவிற்கு பரிந்து பேசினால் அது மத பற்று

பிரபாகரனுக்கு பரிந்து பேசினால் அது மொழி பற்று

இந்தியா விற்கு பரிந்து பேசினால் அது தேச பற்று


என்றைக்கு இந்த பற்றுதல்களை விடபோகின்றோம்மோ அன்றுதான் சமாதானம், சகோதரத்துவம் பற்றி பேச நமக்கு அருகதை இருக்கிறது. அது வரை இப்படி சண்டை போட வேண்டியதுதான்


உங்களுக்கு வெக்கமாய் இல்லை??
எங்கோ ஒரு கொலை காரன் இறந்ததற்கு, இங்கு இவ்வளவு துவேசம் வேண்டுமா ???

ஆக்கபூர்வமான முன்னேற்ற பணிகளில் ஈடுபடுங்கள்

பொன் மாலை பொழுது சொன்னது…

////உங்களுக்கு வெக்கமாய் இல்லை??
எங்கோ ஒரு கொலை காரன் இறந்ததற்கு, இங்கு இவ்வளவு துவேசம் வேண்டுமா ???//


------------------------markkandan unga oorkaran சொன்னது…

அந்த துவேஷ உணர்வை முதலில் வெளிக்காட்டியவர்கள் யார்?
நல்ல மனிதர்கள் எங்கும் உள்ளனர் ஜாதி மதம் இனம் பார்க்காமல் அனைவரையும் சக மனிதர்களாக நோக்கும் அத மனப்பான்மை நம்மக்கு வேண்டுமல்லவா?
இதுபோன்ற ஒரு பதிவை இடாமல் இருந்திருந்தால் கீழ் கண்ட கருத்துக்களும் வெளியில் வராமல் போயிருக்கும்.



//சென்னையில் நடந்த அந்த ஜனாஸா தொழுகையை நானும் உங்களுடன் சேர்ந்து என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்.//

///தான் சார்ந்த மதம் பாராட்டாத உண்மையான மனிதம் கொண்டவர்களும் கூட உங்களது இந்த கேவலமான, ஈனமான செய்கையினால் மனம் நொந்து போயுள்ளனர் என்பது நினைவில் வையுங்கள்.///---100% வழிமொழிகிறேன்..!

---------------முஹம்மத் ஆஷிக் 'Citizen_of_World' சொன்னது…

சிராஜ் சொன்னது…

அன்புச் சகோதரர் கக்கு மாணிக்கம் அவர்களே மற்றும் மற்ற நண்பர்களே, இது சம்பந்தமாக நான் பேச வேண்டியது உள்ளது. ஆனால் பின்னூட்டத்தில் பேச விரும்பவில்லை... இன்று அல்லது நாளை என்னுடைய வலைத்தளத்தில் இதுபற்றி எழுத உள்ளேன். தயவுசெய்து அனைவரும் பார்க்கவும். நன் எழுத நினைத்தது நீங்கள் எழுதியதால் அல்ல, 2 நாட்களாகவே எழத நினைத்தேன், சில காரணங்களால் முடியவில்லை. ஆனால் இன்று எழுதி ஆக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

மற்றபடி கண்ணியமாக விமர்சனம் செய்த கக்கு மாணிக்கம் அவர்களுக்கும், அஞ்சா சிங்கம் செல்வின் அவர்களுக்கும் நன்றிகள் பல.

சிராஜ் சொன்னது…

மன்னிக்கவும் வலைத்தள முகவரியை தர மறந்துவிட்டேன்....
www.vadaibajji.blogspot.com

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அதிரடி ஹாஜா'வின் இன்றைய பதிவு, இதையும் படிச்சு பாருங்க...

http://nkshajamydeen.blogspot.com/2011/05/blog-post_07.html?showComment=1304757393542#c8172348021204936118

Aashiq Ahamed சொன்னது…

சகோதர/சகோதரிகள் அனைவருக்கும்,

அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக)

இஸ்லாமிய எதிர்ப்பு பதிவு (வெறும்) கண்டன பதிவாக மாறிவிட்டதா? அல்ஹம்துலில்லாஹ். எடுத்து சொன்ன சகோதரர்களுக்கு நன்றி.

புரிந்து கொண்ட சகோதரர் மாணிக்கதிற்கும் நன்றி...

இஸ்லாமிற்கு எதிரான காழ்புணர்ச்சிகளை இப்படி ஒன்று சேர்ந்து எதிர்க்கும் தன்மை நம்மிடம் என்றென்றும் இருக்க வேண்டும். அதற்கு இறைவன் துணை புரிய வேண்டும்.

மக்கா பள்ளி இமாம் நடந்து கொண்ட விதம் தேவை இல்லாதது. என்னுடைய கண்டனத்தையும் தெரிவித்து கொள்கின்றேன்.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

சகோதரர்கள் பின்னூட்டத்தில் கூறியது போல....இது ஒரு விளம்பர பிரியரின் விருப்பத்திற்கு அன்று ஜும்ஆ தொழ போன எல்லா முஸ்லிம்களும் பலிகடா ஆகிவிட்டார்கள் என்றே தோனுகிறது. அதேநேரம் உங்கள் பதிவில் முஸ்லிம்களின் மீது காழ்ப்புனற்சியே அதிகமாக தெரிகிறது. தனிப்பட்ட ஒருவரின் செய்கைக்காக இஸ்லாமியர்கள் எப்படி பொறுப்பேற்க முடியும்? நீங்கள் உங்கள் பதிவில் தொழுகை நடத்தியவரை மட்டும் சாடியிருந்தால் பிரச்சினை இல்லை. மாறாக எல்லா முஸ்லிம்களையும் ஒட்டு மொத்தமாக சாடியுள்ளீர்கள். வலைப்பதிவு இருக்கும் காரணத்திற்காக வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்ற எண்ணத்தை விட்டுவிடுங்கள்..உண்மையை நடுநிலையோடு எழுதுங்கள்...உங்களைப்போன்ற பக்குவப்பட்ட பதிவர்களிடம் நான் எதிர்பார்ப்பது இதைதான்.

rafi சொன்னது…

மக்கா பள்ளி இமாம் நடந்து கொண்ட விதம் தேவை இல்லாதது. என்னுடைய கண்டனத்தையும் தெரிவித்து கொள்கின்றேன்.

சாமக்கோடங்கி சொன்னது…

கக்கு.. ஆத்திரம் கண்ணை பல சமயங்களில் மறைத்து விடும்.. நீங்கள் நல்ல நோக்கத்துடனேயே சிலவற்றைச் சொல்ல நினைத்தாலும், ஆத்திரத்தில் விழும் வரிகள் உங்கள் எண்ணங்களைக் கற்பழிப்பு செய்து விடும்..

சில தனி மனிதர்கள் செய்த தவறுக்குப் பொத்தாம் பொதுவாகப் பேசுவது பிரச்சினைகளுக்குத் தீர்வாக இன்னொரு பிரச்சினையைக் கொடுப்பது போலாகி விடும்..

முகலாயப் படையெடுப்பு, வெள்ளையன் படையெடுப்பு எல்லாம் சரித்திரம். ஆனால் இப்போது வாழும் இஸ்லாம் மக்கள், இம்மண்ணில் பிறந்தவர்களே..எனக்கு இம்மண்ணின் மீது இருக்கும் அனைத்து உரிமையும் அவரகளுடைய பிறப்புரிமையும் ஆகும். நம் நாட்டில் இருந்து கொண்டு தேசத்துரோகம் செய்யும் சில கொடிய நஞ்சுக்களைத்தான் களை எடுக்க வேண்டும்.(அது எம்மதத்தினர் ஆயினும்). வெளியே போகச்சொன்னால் அவர்கள் எங்கே போவார்கள். பாகிஸ்தான் தீவிரவாதத்தை அவிழ்த்து விடும் போதும், மற்றும் பல இக்கட்டான சூழ்நிலையிலும், இஸ்லாமியன் என்ற மத உணர்வை மீறி, இந்தியன் என்ற உணர்வோடு போராடும் நமது நண்பர்களுக்கு எப்போதும் தலை வணங்குகிறேன். ஒருவரின் மீது மற்றோவரின் கருத்துகளையும், ஆதிக்கத்தையும் , மதத்தையும் திணிக்காதவரை இந்தியாவில் எத்துனை கோடி மதத்தினர் வேண்டுமானாலும் அமைதியாக வாழலாம். அப்புறம் இந்த பின் லேடன்.. அவன் செத்து சுண்ணாம்பு ஆயிட்டான்.. அவனப் பத்திப் பேசி எதுக்கு அவன இன்னும் பெரிய ஆள் ஆக்கணும்.. ஒரு பத்து வருஷம் கழித்து நமது இந்த ஆத்திர வரிகளை திருப்பிப் பார்த்தால் நமக்கே கூட சில சமயங்களில் வேடிக்கையாகத் தோன்றலாம். நாம் அழிக்க வேண்டியது "தீவிரவாதத்தை".. தீவிரவாதிகளை அல்ல... அப்புறம் நீங்கள் தவறென உடனே உணர்ந்து சிலவரிகளை நீக்கிய கண்ணியத்திற்கு தனியாக தலை வணங்குகிறேன்..

பொன் மாலை பொழுது சொன்னது…

//இஸ்லாமிய எதிர்ப்பு பதிவு (வெறும்) கண்டன பதிவாக மாறிவிட்டதா? அல்ஹம்துலில்லாஹ். எடுத்து சொன்ன சகோதரர்களுக்கு நன்றி. //

----------------------Aashiq Ahamed சொன்னது…


நான் இந்த பதிவை வெளியிடும்போது இது // இஸ்லாமிய எதிர்ப்பு அல்லது அவர்களின் செயல்களின் கண்டனபதிவு //என்றெல்லாம் வகை படுதிகொள்ளவில்லை.

தேவையில்லாமல் இவர்கள் ஏன் இதுபோன்ற ஒரு காரியத்தை செய்யவேண்டும் என்ற கேள்வியில்தான் இதனை எழுதினேன். அதில் கடுமையும் இருந்ததை உணர்ந்துகொண்டு வீணான வார்த்தைகளையும் அகற்றிவிட்டேன்.



//பதிவில் முஸ்லிம்களின் மீது காழ்ப்புனற்சியே அதிகமாக தெரிகிறது. தனிப்பட்ட ஒருவரின் செய்கைக்காக இஸ்லாமியர்கள் எப்படி பொறுப்பேற்க முடியும்?//


----------------ரஹீம் கஸாலி சொன்னது…

பதிவின் ஆரம்பத்திலேயே அந்த தொழுகைக்கு அழைத்தவர்களை நோக்கித்தான் என் கருத்தை சென்னேன் அன்றி ஒட்டு மொத்த இனத்தையும் அல்ல. என் கேள்வி சிறப்பு தொழுகை நடத்தியர்களுக்கே அன்றி வேறு எவருக்கும் அல்ல. அனைவரையும் பொதுவாக சொல்ல எண்ணியிருந்தால் முதலிலேயே சில வார்த்தைகளை தவிர்த்திருப்பேன். சில கடுமையான வார்த்தை பிரயோகம் வந்ததின் காரணம் அவைகள் ஒரு குழுவுக்கு மட்டுமே செல்கிறது என்பதால். காழ்புணர்ச்சியும் இல்லை ஒரு கன்றாவியும் இல்லை கஸாலி. இதை நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் சரிதான்.

வேகநரி சொன்னது…

கக்கு - மாணிக்கம் அவர்களுக்கு,
பலரது மன குமுறலை வெளிப்படுத்தியுள்ளீர்கள். நன்றி.

Unknown சொன்னது…

எந்த மதத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் சரி, ஒரு பயங்கரவாதி ஒழிந்தால் அதோடு விட்டுவிடுங்கள், அதைவிட்டுவிட்டு எதற்கு பேரணி, பொதுக்கூட்டம், சிறப்பு தொழுகை எல்லாம், யாரோ ஒருவர் செய்தார் என கூறுவது சரியாக படவில்லை, எல்லா மதத்தையும் விட மனித இனம்தான் முக்கியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்

vivek kayamozhi சொன்னது…

யாரை நாம் விரும்புகிறோம் அல்லது ஆதரிக்கிறோம் என்பது தான் இங்கு விஷயமே..!

நம் முன்மாதிரி அப்துல் கலாம் ஆகவோ ஹோமி பாபா ஆகவோ இருக்கலாம்.
என்னதான் வார்த்தைகளை அளந்து அடுக்கி அழகாக எழுதினாலும் பின்லேடன் ய் ஆதரிப்பது என்பது அப்பட்டமான மத வெறியே ....நீங்கள் சொல்லும் அமெரிக்க பற்றிய அணைத்து அச்சுறுத்தல்களும் அதற்கான சப்பைகட்டுக்களே..!!! உங்களைப்போல் எனக்கும் 1000 காரணங்கள் இருக்கும் எனக்கும்... !!!

மோடி , தர சிங்க் ,, ப்ரக்ய சிங்க் ....ஆகியோரை போற்ற ....

ஹிட்லரின் யுத விரோதத்திற்கும்,,, ராஜா பக்ஷே வின் தமிழின அழிப்பு வேலைக்கும்....

தயவு செய்து இஸ்லாமிய நண்பர்களுக்கு சொல்வது என்னவென்றால் ??

இதுபோன்ற சென்சிடிவே ஆனா விஷயங்களில் நாம் எப்போதுமே நாடு நிலையில் இருப்போம்...
இதுபோன்ற சிறப்பு தொழுகைகளெல்லாம் வெறியூட்ட செய்யும் வேலைகளே...

சக மனிதனை தீங்கு செய்பவன் எப்படி நல்ல முஸ்லிம் ஆகவோ,நல்ல ஹிந்து, கிறிஸ்டியன் ஆகா இருக்க முடியும்??அப்புறம் அப்படிப்பட்டவனுக்கு வக்காலத்து வாங்குவோரும் அவ்வாரானவரே...

இவ்வாறு ஒரு சிலர் செய்வதற்கெல்லாம் மொத்த சமூகத்தையும் குற்றம் சாட்டவும் கூடாது ...எனக்கு முஸ்லிம் என்றால் நம்ம ராமேஸ்வரம் பாய் யும் , என் நண்பன் அமீர் இன் அம்மா,,பாட்டி ,,மச்சான் ஆகியோரே....

மற்றபடி நான் தாவூத் இப்ராஹீம் ஐயோ ,,ஒசாமா வையோ முஸ்லிம் ஆக
நினைப்பதில்லை...நீங்களும் கசாப் யும் , ஒசாம வையும் வேற்று நாடு தீவிரவாதிகளாக வும் தாவூத் ஐ உள்நாட்டு தீவிரவாதி யாக மட்டும் பார்த்தல் போதும்....!!!

Melvin சொன்னது…

எனது பெயர்: டே. மெல்வின் சார்லஸ் ராஜா

யாரும் ஒரு மதத்தினரின் தேசபற்று மற்றும் கொள்கைகளை கொச்சை படுத்த வேண்டாம். இதுவும் ஒரு வகையான தீவிரவாதமே. எல்லாரும் அன்புடன் வாழ இறைவனை வேண்டுவோம்.

கோவி.கண்ணன் சொன்னது…

+1

கோவி.கண்ணன் சொன்னது…

ஒசாமாவுக்கு சிறப்புப் வழிபாடு என்றால் கோட்சேவுக்கு கோவில் கட்ட நினைக்கும் ஆர் எஸ் எஸுக்கும் வாய்ப்பு வழங்கலாம்.

RAZIN ABDUL RAHMAN சொன்னது…

சகோ மாணிக்கம் அவர்களே,,

பதிவில் மேலோடும்,பொதுப்படையான இஸ்லாமிய சாடல்களுக்கு(அவை எதையும் விவாதிக்க விரும்பவில்லை/மேலும் அதை தாங்கள் திரும்ப பெற்றுக் கொண்டதாலும்...) அப்பார்ப்பட்டு,இந்த செயலுக்கு நான் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்...

முஸ்லீம்களில் பெரும்பான்மையோர்...எங்களைப்போன்றவர்கள்தாம் சகோ..அன்று தொழுகையில் பங்கேற்றவர்களும் எம்மைப் போன்றவர்கள் தான்..வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு,வைக்கப்பட்ட இத்தொழுகை,உள்நோக்கத்துடன் அனைவரையும் கலந்துகொள்ளச் செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் செய்ய்ப்பட்டதாகவே உணர்கிறேன்..

இதே பதிவை இஸ்லாமிய விரோத கருத்துக்கள் இன்றி இங்கே பதிவிட்டு இருப்பீர்களானால்..இங்கு பதிந்த கண்டனங்களில் அதிகம் முஸ்லீம்களுடையதாகவே இருந்திருக்கும்...

இந்த்ப்பதிவை பலரும் குறிப்பாக முஸ்லீம்கள் படித்திருப்பார்கள்..ஆனால் தங்களின் வார்த்தைகள் அவர்களை முகம் சுலிக்கச்செய்து திருப்பி அனுப்பியிருக்கும்...
தவிர வந்திருந்த சகோதரர்களும்,தங்களிடம் வாதிட்டது,உசாமாவுக்கு ஆதரவாக அல்ல,,இஸ்லாமிய சாடலுக்கு எதிராக....

அன்புடன்
ரஜின்

saarvaakan சொன்னது…

ஒசாமாவிற்கு ஏன் தொழுகை நடத்தினோம்?.சென்னை மதகுரு பேட்டி
http://saarvaakan.blogspot.com/2011/05/blog-post_647.html

VJR சொன்னது…

ஒரு நூறு இஸ்லாமிய தீவிரவாதிகளை வைத்து ஒட்டு மொத்த இஸ்லாமிய மதத்தை துவேசிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. முஸ்லிம்களுக்கு முழங்காலில் மூளை என்பதும் அதை ஆதரிப்பவர்களும் தொழுகையில் ஈடுபட்டவர்களை குறித்து பேசுவதாக எடுத்துக்கொள்ள எந்தக் குறிப்பும் இல்லையே?

என்னமோப் போங்க. உங்கள் எண்ணம் நியாயமாக இருந்தாலும் அவசரத்தில் சாரத்தை மிஸ் செய்துவிட்டீர்கள்.

நிதானம் நல்லது.

NKS.ஹாஜா மைதீன் சொன்னது…

உங்களின் கருத்தும் சகோதரத்துவத்தை விரும்பும் என் போன்றவர்களின் கருத்தும் ஒன்றுதான் நண்பரே....ஆனால் சில பேர்கள் செய்ததற்காக முஸ்லிம்கள் அனைவரும் பொறுப்பாக முடியாது...சில வார்த்தைகள் கடுமையாக இருந்தன....அதை நீக்கி விட்டீர்கள்....நல்லது...மற்றபடி நானும் தொழுகை நடத்தியதை கண்டித்துதான் எழுதி உள்ளேன்......

பொன் மாலை பொழுது சொன்னது…

தனித்தனியே ஒவ்வொருவருக்கும் விளக்குவதை விட அனைவருக்கும் ஒரு சிறு விளக்கம்.

நான் பதிவில் விமர்சனம் செய்துள்ளது இந்த சிறப்பு தொழுகைக்கு அழைதவர்களைத்தான்.இந்த பதிவினை எழுதும் முன்னர் டி. வி. செய்தியில் கூட இவர்களின் பேட்டியையும் காண நேர்ந்தது. பின் லேடனின் பெயர் போட்ட விளம்பர நோட்டிஸ் காட்டி அனைவரையும் தொழுகைக்கு வருமாறு அழைத்திருந்தனர். அவைகளை பார்த்த பின்னரே இந்த பதிவினை இட்டேன். நான் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தது இவர்களைத்தானே அன்றி ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் அல்ல. அந்த மாதிரி ஒரு நோக்கமே என்னிடம் இல்லை. இங்கு வந்த வாசக அன்பர்களின் அதனை பொதுவாக நினைத்து அணைத்து இஸ்லாமியர்களையும் அவை குறிப்பதாக கோபப்பட்டனர். அவர்களின் உணர்வுகளை மதித்து, மேலும் இந்த குழப்பம் வேண்டாமே என்று அவைகளை அகற்றி விட்டேன்.ஆனாலும் இதிலும் சில ஒசாமா பின் லாடன் சீடர்களும் மத வாதிகளும் இருப்பதை கண்டுகொள்ளமுடிகிறது.

நண்பர் விவேக் அவர்களின் கருத்துப்படி //நாம் யாரை ஆதரிக்கிறோம், யாரை எதிக்கிறோம் // என்ற முதன்மையான கருத்தை விட்டு விலகி ஒருவரை ஒருவர் சாடிக்கொள்வதை திட்டிகொள்வதை நான் விரும்பவே இல்லை. இல்லையென்றால் இந்த வலைதளமே நாறிப்போயிருக்கும்.

இதுபோன்ற ஒரு குழுவினரின் மத நடவடிக்கைகள் நிச்சயம் தமிழ் நாட்டின் அமைதிக்கு நல்லதல்ல. அவர்கள் எந்த மதமாக இருந்தாலும் அவைகள் நமக்கு கேடுகளையும் அழிவுகளையுமே கொண்டுதரும் என்று இந்நாளில் சொல்லித்தெரிய வேண்டுவதில்லை.

பெயரில்லா சொன்னது…

கட்டுரை எழுதியவரின் ஆதங்கம் புரிகிறது. ஆனால் மற்றொன்றையும் நண்பர் மாணிக்கம் தெளிவுபடுத்த வேண்டும். நமது நாட்டில் இதுகாறும் பதவிக்கு வந்துள்ள ஆட்சியாளர்கள் அனைவரும் காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநில மக்கள் பல்லாயிரக்கணக்கோரை கொன்று குவித்துள்ளனர். இப்போது இருக்கும் அரசு கூடுதலாக பழங்குடியின மக்களை கொன்றுகொண்டிருக்கிறது. பல பெண்களை கற்பழித்துக் கொண்டிருக்கிறது. கூடுதலாக அருகில் இருக்கும் ஈழத்திற்குச் சென்று பல பெண்களின் தாலியறுத்து பல்லாயிரம் பேரை கொல்லவும் துணை நின்றிருக்கிறது. இன்று வரையிலும் ராஜபக்‌ஷேவிற்கு அரணாக இருப்பது இந்திய அரசுதான். ஆனாலும், இந்த ஆட்சியாளர்களைத்தான் நீங்கள் மீண்டும்மீண்டும் தேர்ந்தெடுக்கின்றீர்கள். இவர்களுக்காக பிரச்சாரங்கள் செய்கின்றீர்கள். இவர்களில் எவருக்கேனும் உடல்நலம் பாதிக்கப்படும்போது கோயில், சர்ச், மசூதி என இவர்களின் உடல்நலத்திற்காக வேண்டப்படுகிறது. இந்திய அரசின் இச்செயல்பாடுகளெல்லாம் அஹிம்சை வழி என்று கூறமுடியாதெனும்போது வேறென்னவென்று அழைப்பது என்பதையும் நீங்கள் கூறவேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். இவர்கள் பயங்கரவாதிகளெனும்போது இவர்களையே நீங்கள் மீண்டும் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுப்பதை என்னவென்றழைப்பது என்பதையும் கூறவேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

பொன் மாலை பொழுது சொன்னது…

// ஒசாமாவுக்கு சிறப்புப் வழிபாடு என்றால் கோட்சேவுக்கு கோவில் கட்ட நினைக்கும் ஆர் எஸ் எஸுக்கும் வாய்ப்பு வழங்கலாம்.//

------------------கோவி.கண்ணன் சொன்னது…

இதுதான் கண்ணன் இங்கு விஷயமே.

நாளைக்கு அவர்களும் கிளம்புவார்கள். எங்காவது இரண்டு கூட்டங்களும் அடித்துக்கொண்டு,குண்டு வெடித்து பாவப்பட்டவர்கள் தான் செத்துப்போவார்கள். இவர்களை தூண்டி விட்டவர்கள் தம் கடமையை செய்த நிறைவுடன் பாதுகாப்பாக இருப்பார்கள். யாரோ சிலரின் வெறிக்கு நம் மக்கள் ஏன் கொலையாகவேண்டும்? இதுவரைக்கும் நம் நாட்டில் நிகழ்ந்த கலவரங்களால் பயன் அடித்தவர்கள் யார யார் ??

வலையுகம் சொன்னது…

நண்பர் கக்கு மணிக்கம் அவர்களுக்கு

//கக்கு.. ஆத்திரம் கண்ணை பல சமயங்களில் மறைத்து விடும்.. நீங்கள் நல்ல நோக்கத்துடனேயே சிலவற்றைச் சொல்ல நினைத்தாலும், ஆத்திரத்தில் விழும் வரிகள் உங்கள் எண்ணங்களைக் கற்பழிப்பு செய்து விடும்..

சில தனி மனிதர்கள் செய்த தவறுக்குப் பொத்தாம் பொதுவாகப் பேசுவது பிரச்சினைகளுக்குத் தீர்வாக இன்னொரு பிரச்சினையைக் கொடுப்பது போலாகி விடும்//

நண்பர் சாமக்கோடங்கி சொல்வது சரிதான்

உங்களுடைய இயல்பான குனம் அந்த மாதிரி இருக்கலாம் ஆனால் சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை சொல்ல வரும்போது பொறுப்புணர்வு வேண்டும் நண்பா

நன்றி நண்பா

பொன் மாலை பொழுது சொன்னது…

// உங்களுடைய இயல்பான குனம் அந்த மாதிரி இருக்கலாம் ஆனால் சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை சொல்ல வரும்போது பொறுப்புணர்வு வேண்டும் நண்பா//
.......ஹைதர் அலி சொன்னது…

மிஸ்டர் ஹைதர் அலி, முதலில் ஒன்றை புரிந்து கொண்டு பேசுங்கள். என் இயல்பான குணம் பற்றி நீங்கள் பேச வேண்டிய அவசியம் இங்கு இல்லை. அது எப்படிவேனாலும் இருந்து விட்டு போகட்டும். அமைதியான ஒரு சமூகத்தில் உங்களின் சமுதாய மக்கள் சிலர் இவ்வாறு மத துவேஷத்தை தூண்டி விடும் வகையில் செயல் படுவது உங்களின் மதம் நிரம்பிய கண்களுக்கு தெரியவில்லை. ஆனால் என் தனிப்பட்ட குணத்தை நொட்டை சொல்ல வந்த விட்டீர்கள் . நீங்கள் உங்களுடன் உள்ள பொறுப்பு உணர்ச்சியை சரியாக முதலில் செயல் படுத்துங்கள். உங்களைபோன்றவர்களிடம் இருந்து சமுதாய பொறுப்பு உணர்ச்சியை நான் கற்று கொள்ள வேண்டியதில்லை. வருகைக்கு நன்றி.

kumar சொன்னது…

பூனைக்குட்டி ஒருவழியாக வெளியே வந்தே விட்டது.தொடர்ந்து காங்கிரசுக்கு எதிராகவே எழுதுகிறீர்களே
பிஜேபி யின் வண்டவாளத்தையும் தண்டவாளத்தில் ஏற்றுங்களேன் என்று பின்னூட்டமிட்டேன்.(இவ்வளவுக்கும் காங்கிரஸ் ஒரு மிதவாத,மதவாத கட்சி என்று நினைப்பவன் நான்) அப்படியெல்லாம் ஒன்றுமில்லை,எழுதுவேன் பாருங்கள் என்றீர்கள்.இதோ எழுதிவிட்டீர்கள்.அடடா புல்லரிக்க வைக்கிறது
உங்கள் தேச பக்தி.ஆனால் முகலாயர்களின் வருகைக்கு முன்னாள் இந்தியா என்று ஒரு தேசமே
கிடையாதே அய்யா.
ஒபாமா,ஒசாமா நாசமா போகட்டும்.இதை சாக்காக வைத்து நீர் ஏர் விஷம் கக்க வேண்டும்?
மண்ணின் மைந்தர்களை போ என்று சொல்வதற்கு உமக்கு யார் அதிகாரம் கொடுத்தது?
தேச பக்தியை எடைபோடும் கருவி உம்மிடம் தான் உள்ளதோ? முஸ்லீம்கள் அனுமன் அல்ல நெஞ்சை திறந்து காண்பிக்க.அப்படி ஒரு அவசியமும் அவர்களுக்கு இல்லை.ஒன்று புரிகிறது.அரபுலகில் ஏதோ ஒரு நாட்டில் பணிபுரியும் நீர் யாரோ ஒரு காட்டரபியால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறீர்.அந்த வன்மம்
இவ்வாறு வெளிப்படுகிறது என்றே தோன்றுகிறது.

பொன் மாலை பொழுது சொன்னது…

//பூனைக்குட்டி ஒருவழியாக வெளியே வந்தே விட்டது.தொடர்ந்து காங்கிரசுக்கு எதிராகவே எழுதுகிறீர்களே
பிஜேபி யின் வண்டவாளத்தையும் தண்டவாளத்தில் ஏற்றுங்களேன் என்று பின்னூட்டமிட்டேன்.(இவ்வளவுக்கும் காங்கிரஸ் ஒரு மிதவாத,மதவாத கட்சி என்று நினைப்பவன் நான்) அப்படியெல்லாம் ஒன்றுமில்லை,எழுதுவேன் பாருங்கள் என்றீர்கள்.இதோ எழுதிவிட்டீர்கள்.அடடா புல்லரிக்க வைக்கிறது
உங்கள் தேச பக்தி.ஆனால் முகலாயர்களின் வருகைக்கு முன்னாள் இந்தியா என்று ஒரு தேசமே
கிடையாதே அய்யா.
ஒபாமா,ஒசாமா நாசமா போகட்டும்.இதை சாக்காக வைத்து நீர் ஏர் விஷம் கக்க வேண்டும்?
மண்ணின் மைந்தர்களை போ என்று சொல்வதற்கு உமக்கு யார் அதிகாரம் கொடுத்தது?
தேச பக்தியை எடைபோடும் கருவி உம்மிடம் தான் உள்ளதோ? முஸ்லீம்கள் அனுமன் அல்ல நெஞ்சை திறந்து காண்பிக்க.அப்படி ஒரு அவசியமும் அவர்களுக்கு இல்லை.ஒன்று புரிகிறது.அரபுலகில் ஏதோ ஒரு நாட்டில் பணிபுரியும் நீர் யாரோ ஒரு காட்டரபியால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறீர்.அந்த வன்மம்
இவ்வாறு வெளிப்படுகிறது என்றே தோன்றுகிறது.//

-------------- basheer சொன்னது…



உங்களின் பின்னூட்டம் பார்த்து என்னால் சிரிக்கத்தான் முடியும் என்னால். ஆளும் காங்கிரஸ் பற்றி விமர்சித்தால் அவன் நிச்சயம் பி.ஜெபி. காரனாகத்தான் இருப்பான் என்று முடிவெடுக்கும் உங்களின் அறிவின் திறம் கண்டு. எனக்கு நன்றாக நினைவுள்ளது, முகலாயர்கள் பற்றியோ அல்லது இஸ்லாமியர்கள் பற்றியோ தவறாக எதுவும் எழுதவில்லை. எனக்கு அவைகளில் ஆர்வமும் இல்லை. அப்படியே எங்காவது பின்னூட்டம் எழுதியிருந்தாலும் அவைகளை நான் சரித்திரத்தில் படித்திருப்பேன். அதுசரி உங்களுக்கு வேறு வேலையே கிடையாதா பஷீர் பாய்? வம்புக்கு ஏன் இப்படி ஆளாய் அலைகிறீர்கள்? ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் . உங்களுக்கு என்ன பிடிக்குமோ ,எது உங்களுக்கு சாதகமானதோ அதனை பிறரால் எழுத முடியாது. அவைகளை நீங்களே எழுதி பார்த்து ரசியுங்கள் பஷீர்.


// ஒபாமா,ஒசாமா நாசமா போகட்டும்.இதை சாக்காக வைத்து நீர் ஏர் விஷம் கக்க வேண்டும்?//

நான் என்ன விஷம் கக்கிவிட்டேன்? உங்கள் சமுதாய மத போதகர்களின் தேவையற்ற விஷம் போன்ற மதவெறியினை சுட்டிக்காட்டினேன் அன்றி வேறு என்ன என் பதிவில் நீங்கள் தவறை கண்டீர்கள்?

// முகமது நபியை கொண்டாடும் எந்த முஸ்லிமும் இந்த ஒசாமா பின் லாடனை கொண்டாட மாட்டார்களே! இவனை இங்கு இந்தியாவில், தமிழ் நாட்டில் நீங்கள் கொண்டாட என்ன காரணம்?////

இந்த வாசகங்கள் சரியா அல்லது தவாறா என்று மட்டும் சொன்னால் போதும். அதற்கு மேல் எதுவும் எவரும் இங்கு பேச தேவை இல்லை. இந்த வரிகள் தவறு என்றால்
தயவு செய்து பின்னூட்டமிடுங்கள் இது தவறு என்று.

இந்த வரிகள் எந்த இஸ்லாமிய அன்பர்களின் கண்களிலும் படவில்லை. இதனை புரிந்து கொள்ள உங்கள் எவருக்கும் பொறுமையோ திறமோ இல்லை வெறும் ஆத்திரம் கண்களை மறைக்க நான் கக்கிவிட்டதாக ஆர்பாட்டம் பண்ணுகிறீர்களே?

மதத்தின் பெயரால் நீங்கள் என்னவேனாலும் செய்வீர்கள் ஆனால் நாங்கள் மட்டும் வாய் மூடி மௌனியாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள்.

பொன் மாலை பொழுது சொன்னது…

//முஸ்லீம்கள் அனுமன் அல்ல நெஞ்சை திறந்து காண்பிக்க.அப்படி ஒரு அவசியமும் அவர்களுக்கு இல்லை.ஒன்று புரிகிறது.அரபுலகில் ஏதோ ஒரு நாட்டில் பணிபுரியும் நீர் யாரோ ஒரு காட்டரபியால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறீர்.அந்த வன்மம் இவ்வாறு வெளிப்படுகிறது என்றே தோன்றுகிறது.//

-------------------------basheer

இவைகளை மீண்டும் படித்து சிரிக்கதொன்றியது. படித்துவிட்டு சிரித்தேன். பஷீர் உங்கள் பெயரைத்தவிர வேறு ஒன்றும் எனக்கு தெரியாது. இனிமேல் தான் உங்களின் வலைத்தளம் சென்று பார்க்கவேண்டும். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் நண்பரே! நீங்கள் கற்பனை செய்து வைத்துள்ள அந்த மோசமான கக்கு-மாணிக்கம் நானல்ல. நான் வெகு இயல்பானவன். இப்போதைக்கு இது போதும் .

வசந்தவாசல் அ.சலீம்பாஷா சொன்னது…

நண்பர் கக்கு-மாணிக்கம்! ஏன் என்னாச்சு உங்களுக்கு. தேவையற்ற விவாதம் ஏன் நண்பா?

baleno சொன்னது…

Ibnu Halima சொன்னது…
இலங்கையை சேர்ந்த பிரபாகரன் என்னும் நபரால் எந்த அப்பாவியும் இறக்க வில்லை என்று உங்களால் அடித்து கூற முடியுமா? அவரை இலங்கை இராணுவம் கொன்று கடலில் தூக்கி வீசி எறிந்த போது இங்கே தமிழகம் முழுக்க இரங்கல் கூட்டங்களும் கண்டனக்கூட்டங்களும் நடந்ததே.

பிரபாகரனுக்காக தமிழகத்தில் இரங்கல் கூட்டங்கள் நடந்ததா? புதிய செய்தியாக இருக்கிறதே! பிரபாகரனை எல்லாம் இலங்கை இராணுவத்தால் கொல்ல முடியாது பிரபாகரன் பாதுகாப்பாக இருக்கிறார் தக்க சமயத்தில் தோன்றுவார் அடுத்த கட்ட போர் செய்ய போகிறார் என்று தான் தமிழகத்தில் சொல்லபட்டது.
உங்களுடைய இஸ்லாமிய மதவாதம் தமிழ் இனவெறிவாதம் இவற்றை தவிர்த்து பாருங்கள். பிரபாகரனும் பின்லேடனும் அப்பாவி மக்களை கொன்ற பயங்கரவாதிகள்.
கக்குமாணிக்கத்தின் நியாயமான பதிவு.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

// முகமது நபியை கொண்டாடும் எந்த முஸ்லிமும் இந்த ஒசாமா பின் லாடனை கொண்டாட மாட்டார்களே! //---சகோ.கக்கு மாணிக்கம் மிகவும் சரி..!

///இவனை இங்கு இந்தியாவில், தமிழ் நாட்டில் நீங்கள் கொண்டாட என்ன காரணம்?////---இதுவாக இருக்கலாம்..!

இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற உலக மகா பொய்... "ஜார்ஜ் புஷ்ஷுக்கும் உலக வர்த்தகமைய தகர்ப்புக்கும் சம்பந்தம் இல்லை" என்பது..!

இனியாவது ஜார்ஜ் புஷ் சொல்வதை நம்பாமல்... அமெரிக்க அறிவியலாளர்கள், அமெரிக்க தொழில்நுட்ப வல்லுனர்கள், அமெரிக்க கல்விமான்கள், நேரடி சாட்சியங்கள் ஆதாரபூர்வமாய் சொல்வதை நம்புங்கள்...

அதற்கு...

இந்த வீடியோவை பொறுமையாக செவிமடுத்து முழுமையாக பாருங்கள்.(200 MB file)

http://www.youtube.com/watch?v=7E3oIbO0AWE

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

9/11 அன்று ஜார்ஜ் புஷ் சொன்னதைப்போலவே.. இப்படித்தான் ஒவ்வொரு குண்டு வெடிப்புக்கு பின்னரும் சிமி, முஜாஹிதீன், லஷ்கர், அல்கைதா என்று குண்டு வெடித்த அன்றே இந்திய அரசு சொன்னதை எல்லாம் நம்பினோம். கடைசியில் என்னாச்சு..? இப்போது அனைத்திலும் ஆர் எஸ் எஸ் மாட்டவில்லையா..?

மோடி பற்றிய நம்மூர் தெஹல்கா அறிக்கையை அறிந்த அளவுகூட நம் மக்கள் இந்த 9 /11 தாக்குதல் பற்றிய மேற்படி உண்மைகளை அறியவில்லை.

ஒசாமாவுக்கு 9/11-இல் சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஆப்கனில் ரஷயாவிற்கு அதிராக அமெரிக்காவின் ஆயுதங்களை தூக்கியபோதே அல்லது அவர் அதிபர் நஜிபுல்லாவை கொன்று பிணத்தை தூக்கில் நாள்கணக்கில் நடு வீதியில் தொங்கவிட்டு செய்த அராஜகத்தின் போதே அவர் என்னைபொருத்தமட்டில் ஒசாமா பயங்கரவாதிதான்.

இவ்விஷயத்தில் மட்டும்... முற்போக்கு பிற்போக்கு, முன்நவீனத்துவம் பின்நவீனத்துவம், வலது இடது எல்லாருமே அமெரிக்காவையும் ஜார்ஜ் புஷ் சொல்வதையுமே நம்புகிறார்கள்.

அப்போதும் இபோதும் எல்லாரும் அமெரிக்காவின் அடிமைகளாய் வாய்மூடி கிடந்தார்கள். இன்னும் கிடக்கிறார்கள்.

"இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன்" என்று ஆரம்பித்து ஒசாமாவுக்கு தொழுகை வைக்க கிளம்புபி விட்டார் அந்த மசூதி இமாம். இதற்கு அவருக்கு நல்ல(?)முன்னுதாரணம் இந்தியாவால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாதி பிரபாகரனுக்கான கலைஞரின் இரங்கற்பா.

ஸ்ரீனிவாச ஐயங்கார் சொன்னது…

சித்தூர் முருகேசனின் சின்னத்தனம்
தனி மனித தூஷணைக்கு போற சாதி நானில்லே. ஆனால் என்ன பண்றது சில சாக்கடைகள் வழிஞ்சுண்டே இருந்தா ஊரு நாறிப்போகாதோ? அதனாலதான் இந்த சாக்கடைல இறங்கியிருக்கேன். என்ன சேறு வாரி இரைப்போ. இரைக்கட்டும் .வராஹ மூர்த்தி மாதிரி இந்த மலக்கடல்ல முங்கியே தீர்ரதுன்னு நிர்ணயிச்சுண்டேன். இனி பகவான் விட்ட வழி.

பிராமணன்னா பூணூல்,பஞ்ச கச்சம்,வேதம்,பொறுமை மட்டுமில்லிங்காணும். சாணக்கியன் பிராமணந்தான். ஆனால் தன்னை அவமதிச்ச நந்தர்களை நடுத்தெருவுல நிறுத்தினானோன்னோ?

இன்னைக்கு நாட்டுல உள்ள பிராமணாள் ரத்தத்துல இந்த இன்ஸ்பிரேஷன் இல்லே. அதனாலத்தான் சித்தூராரோட கதை ஆட்டைக்கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியில மனுஷாளை கடிச்ச கதையாகிப்போச்சு

உலகை உய்விக்க வந்த பெருமாள் மாதிரி தலையை சுத்தி பிரபையை காட்டிண்டு அபய ஹஸ்த முத்திரை கொடுத்த சித்தூர் முருகேசன் கடைசியில பெத்ததாயாரை கூட கேவலப்படுத்தற நிலைக்கு வந்தூட்டார். தன்னோடது பஸ்மாசுர ஹஸ்தம்னு ருசுப்படுத்திண்டார்.

தெலுங்கு வலையுலகத்துலயும் இந்த அச்சு பிச்சு இப்படித்தான் உளறி கொட்டித்து ஜோட்டால அடிச்சு வீட்டுக்கு அனுப்பிட்டா. ஏனோ தெரியலை தமிழ்ல மட்டும் இந்த பிரகிருதியை தட்டி கேட்க தயங்கறா.

சைக்காலஜி,செக்ஸாலஜியெல்லாம் மெடிக்கல்ல சேர்த்தி. நம்ம கான்ஸ்டிட்யூஷன் பிரஜைகளுக்கு பேச்சுரிமை எழுத்துரிமையெல்லாம் வாரி வழங்கியிருந்தாலும் அதுக்கும் சில கட்டுப்பாடெல்லாம் இருக்கு. மெடிக்கல் சம்பந்தப்பட்ட விஷயங்களை அதுக்குரிய படிப்பை படிக்காதவா எழுதப்படாது,பிரசுரிக்கப்படாது.

ஆனால் பாருங்கோ முந்தா நேத்து கூகுல்ல போய் செக்ஸாலஜினு தேடறேன் இந்த அபிஷ்டுவோட வலைப்பூ தான் முந்திரிக்கொட்டை மாதிரி முன்னாலே தெரியறது. மாத்ருபூதத்தோட விஷயம் கூட இதுக்கப்பாலதான் தெரியறது.

நமக்கென்ன நமக்கென்னானு இருந்தா சாக்கடை தேங்கி நம்ம வீட்டுக்குள்ளாறயும் பூந்துரும். அப்பால கிருஷ்ணான்னாலும் இல்லை கோவிந்தான்னாலும் இல்லே. படிக்கிறவா "தத் வெறும் உளறல்"னுட்டு போயிர்ரதால இந்த கெரகம் பிடிச்சது என்னென்னத்தையோ குப்பையை கொண்டு வந்து நம்ம தலைக்குள்ள கொட்டி வைக்கறது.

நானாச்சும் ஏதோ வயித்துப்பாட்டை பார்த்துண்டிருக்கிற ஹார்ட் வேர் காரன். இந்த வலையுலகத்துல எத்தனையோ அனுபவஸ்தருக, மேதாவி எல்லாம் இருக்கா. அவாள் எல்லாம் வாயை மூடிண்டு இருந்தா இந்த அல்பம் சொல்றதுதான் சத்தியமுன்னு ஆயிராதோ?

பசு வதையை ஆதரிக்கிறது, கீதை உட்டாலக்கடிங்கறதுல்லாம் பைத்தாரத்தனமோல்லியோ. ஒரு தாயார் ஒரு குழந்தைய பெத்து போட்டுட்டு பரமபதிச்சுட்டா ஒரு பசுவை வச்சு அந்த குழந்தைய வளர்த்துரலாம். அந்த பசுவையே கொல்றதை ஒரு ஜென்மா நியாயப்படுத்தறதுன்னா என்ன சொல்ல?

ஆதிசங்கராச்சாரியார்லருந்து பாலகங்காதர திலகர் வரை எத்தனையோ ஞானிகள் கீதைக்கு பாஷ்யம் எழுதினாளே அவாளுக்கெல்லாம் வராத சந்தேகம் இந்த அறிவுகொழுந்துக்கு வந்திருக்கு. கிருஷ்ணன் நிஜமாம். கீதை நிஜமாம் .ஆனா அதுல பிராமணாள் கலப்படம் பண்ணூட்டாளாம். அட இழவே ஒன்னை மாதிரி ரெண்டுங்கெட்டானை விட கடவுளே இல்லைன்னு சொன்ன ராமசாமி நாயக்கரே மேல்.

இந்த மாதிரி அரைவேக்காட்டுத்தனமா உளர்ர இந்த பன்னாடைக்கு பல்லு மேல நாலு போட்டு அடக்கறதை விட்டுட்டு வெறுமனே வேடிக்கை பார்த்துண்டிருந்தா எப்படி?

இதை இப்படியே விட்டு வச்சா இதெல்லாமமெங்கே போய் நிக்க போறதோ புரியலை. இந்த ஆலாலத்தை நாம மட்டும் படிச்சா பரவால்லே. குழந்தேள் படிக்கறா, சின்னவயசுக்காரா படிக்கிறா. பொம்மனாட்டிகளும் படிக்கிறா.

இந்த அபிஷ்டு உளர்ரதையெல்லாம் நெஜமுன்னு நம்பி வச்சதுங்கனா வேற வம்பே வேணாம். மண்டை கலங்கினாலும் சொஸ்தப்படுத்திரலாம். நாண்டுக்கிட்டு செத்தா யார் பொறுப்பு.

சத்தியம் செருப்பை போட்டுக்கறதுக்கு முந்தி பொய் ஊரெல்லாம் சுத்தீட்டு வந்துரும்ங்கற மாதிரில்ல இருக்கிறது கதை. அனுபவம் அனுபவம்னு பீத்தறது. எனக்கு இந்த விஷாயத்துலல்லாம் அனுபவம் கிடையாதுதான்.ஆனா அனுபவஸ்தாளெல்லாம் மவுனமா இருந்துரலாமோ?

ஒரு வேளை இந்த ஊத்தை வாய்க்கு பயப்படறாளோ? தாயார் பிள்ளையோட படுத்துண்டுரனும்னு உள்ளூர நினைக்கிறாளாம். அதுக்கு என்னைக்கோ ஒரு நா வாய்ப்பு ஏற்படும்னு காத்துண்டிருக்காளாம். மாட்டுபெண் வந்ததும் அந்த சான்ஸு போயிர்ரதேனு பதறிப்போறாளாம் . மாமியார் மருமா சண்டைக்கு இப்படி ஒரு வியாக்யாணத்தை என் வாழ் நாள்ள கேட்டதில்லை.

இந்த வரிகளையெல்லாம் அடிச்ச கைக்கு குஷ்டம் வராதோ? இந்த அட்டகாசத்தை தட்டிக்கேட்காதவா மட்டுமென்ன தண்டனையிலருந்து தப்பவா முடியும்? பழி பாவத்துக்கு அஞ்சாத ஜென்மா இருந்தென்ன லாபம்.

ஸ்ரீனிவாச ஐயங்கார் சொன்னது…

ஒரு தத்தாரி கிளப்பின பீதியும் தமிழ் மணத்தின் பேதியும்
மறுபடி அந்த அச்சு பிச்சுவை பத்தியே அதான் சித்தூர் முருகேசனை பத்தித்தான் இந்த பதிவும். நான் ஏதோ ஒரு முருகேசனை பத்தி மட்டும் பேசறேன்னு நினைச்சுடாதிங்கோ. அந்த அபிஷ்டுவை போலவே அகாரணமா, ஒரு ஹேதுவே இல்லாம பிராமணாளை வறுத்து எடுக்கிற எல்லாத்தை பத்தியும் தான் பேசறேன்.

கருத்து சுதந்திரம்ங்கற பேர்ல கண்ட நாய்கள் கண்டதை குலைக்கலாம்.அதையெல்லாம் தமிழ் மணம் மணம் (?) பரப்பும். ஆனா அந்த அபிஷ்டுக்கள் வாசிக்கிற குற்ற பட்டியலுக்கு விளக்கம் கொடுக்க என்னை மாதிரி ஒரு பேக்கு வாயை திறந்தா குரள் வளையை நெறிக்குமா? மத்த திரட்டிகள்ளயும் இந்த வலைப்பூவை பதிஞ்சேன். ஒருத்தரும் நிராகரிக்கலை. தமிழ்மணம் காரா மட்டும் நிராகரிச்சுட்டா

இது என்னவித நியாயத்துல சேர்த்தினு புரியலை. தமிழ் மணத்துக்கு மட்டும் கொம்பா முளைச்சிருக்கு. நான் சொல்றேன். அந்த சித்தூர் முருகேசன் கிளப்பின பீதியால பேதியாகித்தான் என் வலைப்பூவை நிராகரிச்சுருக்கு.

அந்த சண்டாளப்பாவியோட பழம் பதிவுகளை புரட்டிக்கிட்டிருந்தப்ப தான் தமிழ்மணம் இந்த அரைவேக்காட்டோட பதிவையும் தடை பண்ணினதும், அதுக்கு இந்த தத்து பித்து கண்டதையும் உளறிவச்சிருக்கிறதும் தெரிய வந்தது.

கௌரவ சபையில திரவுதி வஸ்திராபரணம் நடந்தப்ப மவுனிகளா இருந்த பெரியமனுஷாளுக்கும் குருட்சேத்திரத்துல உரிய தண்டனை கிடைச்சதை எண்ணிப்பாருங்கோ .இப்பயாச்சும் வாய் திறவுங்கோ? ( அந்த திரவுபதியையே இந்த பிரகிருதி காமப்பேய்னு சொல்லி யிருக்கு. அதையும் இந்த வலையுலகமும், தமிழ் மணமும் சகிச்சிருக்கு. ஆனா என்னோட பதிவை பட்டியலிட கூட நிராகரிச்சிருக்கு )


தப்பு பண்றவாளைவிட அந்த தப்பை கண்டிக்காதவா தான் பெரிய தண்டனைக்குள்ளாவா.

முருகேசன் தான் பெட்டிப்படுக்கை கட்டிக்கிட்டு கிளம்பிட்டாரே .இன்னும் எதுக்கு அவரை விமர்சிக்கிறேன்னு இளகிய மனமுள்ளவா கேழ்க்கலாம். ஆள் இல்லேன்னா என்ன.. அந்த பிரம்மஹத்தி எழுதின விஷயமெல்லாம் அப்படியேத்தானே இருக்கு. அதுக்கு ஒரு பிராமணனா நான் பதில் சொல்லித்தான் தீருவேன்.

பிராமணாள் மேலே இந்த முருகேசன் தன் பதிவுகள்ள அள்ளி தெளிச்சிருக்கிற குற்றச்சாட்டுகளுக்கு அப்பப்போ பதில் சொல்லனாம்னு நினைச்சிருக்கேன்.

1.அன்னியருக்கு தாய் நாட்டை காட்டிக்கொடுத்தா:
ஏனய்யா நான் தெரியாமத்தா கேழ்க்கிறேன். நாட்டை காப்பாத்த வேண்டியவா சத்ரியாள். யுத்தத்துக்கு நிதி வழங்க வேண்டியது வைசியாள். அவாளுக்கு சேவைபண்ண வேண்டியது சூத்திராள். நல்லது கெட்டது சொல்றதுதான் எங்களாவா வேலை. நீங்க ஒத்துமையா இல்லே. அரை பர்லாங்,ஒரு பர்லாங்குக்கு ஒரு ராஜ்ஜியம். அந்த புரத்துலே கண்டவளோட உருண்டுண்டிருந்தேள். இவன் பெஞ்சாதியை அவன் தூக்கிப்போவான், அவன் பெஞ்சாதியை இவன் தூக்கிண்டு போவான் .யுத்தம். இதுக்கு நாங்களா பொறுப்பு. முஸ்லீம் ராஜாக்கள் தண்டெடுத்து வந்தப்போ நின்னு மோதி பசுவை, பிராமணாளை,பெண்களை காப்பாத்த வேண்டியது சத்ரியாள் பொறுப்பு. காப்பாத்தினேளா? இல்லையே. அப்படி காப்பாத்துவேள்ங்கற நம்பிக்கையை கொடுத்தேளா? இல்லையே. அப்புறம் பிராமணன் தன்னை, தன் அகத்து பெண்களை, தன் வித்தையை ,சம்பிரதாயங்களை எப்படி காப்பாத்திக்க முடியும்?

பிராமணன் பொறுமை காக்கனும்னு தான் சொல்லியிருக்காளே தவிர சொரணை கெட்ட ஜென்மமா இருக்கனும்னு சொல்லி வைக்கலியே. வாய் புளிச்சதோ மாங்காய் புளிச்சதோன்னு பேசிட்டு எழுதிட்டு அதும்பாட்டுக்கு போயிடுத்து. அப்போ அந்த ஆசாமியோட பேச்சே நிஜமாயிராதோ? அதுக்கு ஒரு கவுண்டர் கொடுக்கவேணாமோ?

அதைத்தான் நான் செய்யறேன்.

ஸ்ரீனிவாச ஐயங்கார் சொன்னது…

மாட்டு மாமிசம் தின்னா தாயின்னு பார்க்குமா? தங்கைனு பார்க்குமா?
அந்த அச்சு பிச்சுவை அடிச்சு விரட்டுங்கோ
அந்த சித்தூர் முருகேசனைத்தான் சொல்றேன். வலையுலகத்தை பிடிச்ச சனி அது. தானா விலக விடாதீங்கோ. அது அவ்ள லேசுல விலகாது. அடிச்சு விரட்டுங்கோ. ஆகஸ்ட் 15க்கே விலகறேன்னுட்டு வக்கிர சஞ்சாரம் பண்ணின்டு இருக்கு.சதா ஸ்வயம் ப்ரதாபங்களை அள்ளி விட்டுண்டு, விதண்டா வாதம் பண்ணிண்டு பிராம்மண தூஷனை பண்ணிண்டு வலையுலகத்தையே நாறடிச்சுண்டு இருக்கு. அழகிரியோட நண்பர்கள்னு ஒரு பதிவை போட்டிருக்கு. அழகிரியெல்லாம் வர பிரசாதி. ஓகோனு வரப்போறாரு. அந்த பதிவுகள்ள இந்த அரைவேக்காடு குற்றப்பட்டியல் வாசிச்சுதே அவாள் எல்லாம் பெரிய மனுஷா. லக்ஷ்மீ புத்ராள்.. விஷ்ணு சமானம். இதுக்கேதோ போறாத காலம் வந்தூடுத்து. அதான் இப்படி தலைவிரிச்சு ஆடறது . ஊர்ல அடங்காததை உலகத்தார் தான் அடக்கனும்.

இத்தனை நாள் கில்மா, அஜால் குஜால்னுட்டு கதை பண்ணின்டு இருந்துட்டு இப்போ மாய்மாலம் பண்றது. ஆனை கொழுத்துப்போனா தன் தலையில தானே மண்ணள்ளி போட்டுக்குமாம். அது மாதிரி இந்த அபிஷ்டு 500 பேரு மெம்பர்ஸா சேர்ந்தாதான் புது பதிவு போடுவேன்னு ஏன் ஷரத்து போடனும். சூரிய சந்திராள் வேளை மாறி உதிச்சாலும் இது நடக்க போறதில்லை. ஆனாலும் இந்த மானங்கெட்டது மறுபடி வாரி முடிஞ்சுண்டு வந்துரும். அதுக்கு இடம் கொடுக்காதீங்கோனு கேட்டுக்கத்தான் இந்த பதிவை போடறேன்.

கீதையையே விமர்சனம் பண்ற அளவுக்கு வந்தபிறவு ஈவு இரக்கம் எல்லாம் காட்டப்படாதுங்கறேன். ஒரு சிலர் பரிதாபப்பட்டு மெம்பரா சேர்ந்தாப்ல இருக்கு. பாத்திரமறிந்து பிச்சையிடு,கோத்திரமறிந்து பெண்ணை எடுன்னு பெரியவா சொல்லி வச்சிருக்கா.

அவாள் எல்லாம் வாழ்ந்து பார்த்தவோ. அவாள் சொன்னதெல்லாம் இன்னைக்கும் பொருந்தறது. மாட்டுக்கறி திங்கறவாளை ஊருக்கு வெளிய வச்சது ஏன்? மாடு பெரிய ஜீவன். சேரியே ஒன்னு சேர்ந்து தின்னாலும் தீராது.வெட்டின மறு கணமே அது பிணம். அந்த பிணத்தை உப்பு கண்டம் போட்டு திம்பா. கழிவெல்லாம் கிடக்கும். பாக்டீரியா வரும். வேண்டாண்டா பசு தாய் மாதிரி கொல்லப்படாதுன்னு பத்து தரம் சொல்லியிருப்போ.கேட்கலை. தள்ளி வச்சுட்டா.

இன்னைக்கு படிச்சு பட்டம் வாங்கினவா சேரிலயா இருக்கா? இல்லையே ஊருக்குள்ள வந்துட்டாளே. யாராச்சும் தடுத்தாளா? மாமிசம் தின்னாலே தேகம் மாமிசத்துக்கு அலையும். மாட்டு மாமிசம் தின்னா தாயின்னு பார்க்குமா? தங்கைனு பார்க்குமா?

ஸ்ரீனிவாச ஐயங்கார் சொன்னது…

பிராமணன்னா குரு சமானன்.குருன்னா தகப்பன் மாதிரி. குரு பத்தினி தாய் மாதிரி. அவாளோட வாரிசுகளை சகோதர சகோதிரி மாதிரியாகத்தானே மதிக்கனும். இன்னைக்கு எத்தனை கலப்பு திருமணம் நடக்கறது. அதனாலதான் அப்படி கட்டினது ஏதும் உருப்படறதில்லை. அதுகளுக்கு பொறக்கறதும் உருப்படறதில்லை.மனுதர்மம், தர்ம சாஸ்திரங்கறதுல்லாம் ஆகாசத்துலருந்து குதிக்கலை. அனுபவத்துலருந்து வந்தது.

இந்த ஞான சூனியம் எல்லாத்தையும் உருட்டறேன் ,பிறட்டறேன்னு அலட்டிக்கறது. எடுத்தேன் கவிழ்த்தேன்னு எழுதறது . குதிரைல எத்தனை சாதி இருக்கு? அலாவுதீன் கில்ஜி காலத்துல குதிரைகளுக்கு சூடு போடற வழக்கத்தை வச்சிருந்தாளாம். எதுக்குன்னா .. சைன்யத்துல உள்ள உசந்த சாதி குதிரைய லவட்டிண்டு மட்ட குதிரையை வச்சு ஃப்ராடு செய்துராம இருக்கத்தான்.

குதிரைல ரேஸ் குதிரை இருக்கு, கல்யாண ஊர்வல குதிரை இருக்கு. பீச் குதிரை இருக்கு. எல்லாத்தையும் ஒரே கொட்டில்ல கட்ட முடியுமோ?

மனுஷா மூளையாலயும் உழைக்கலாம், உடலாலயும் உழைக்கலாம். மூளையால உழைக்கிறவாளுக்கு உடல் பலம் இருக்காது. உடலால உழைக்கிறவாளுக்கு மூளை பலம் இருக்காது. இதை அனுபவத்துல தெரிஞ்சுண்டுதான் மனுஷாள நாலு வர்ணமா பிரிச்சா.

இன்னைக்கு ஐக்யூ டெஸ்ட் எடுத்து க்ரூப் பிரிக்கிறாளோன்னோ அந்த மாதிரிதான். ஜீன்ஸு டீ ஷர்ட்டுன்னு இப்ப பேசறா. இதையெல்லாம் வாழையடி வாழையா புரிஞ்சுண்டுதான் ஒரு க்ரூப்பை இன்னொரு க்ரூப்போட சேர விடப்படாதுன்னு நிர்ணயம் பண்ணினா.

வெறுமனே எடுத்தேன் கவிழ்த்தேன்னு உளறிக்கொட்டின பாவத்துக்கு,பிராமண தூஷனை ,தெய்வ தூஷனை பண்ண பாவத்துக்கு பஸ்மாசுரன் கதையா தன் கைய தன் சிரசு மேலயே வச்சுண்டு ஒழிஞ்சான்னு சந்தோஷப்படுங்கோ. மறந்தும் மேற்படி பாடாவதி சைட்ல மெம்பராயிராதிங்கோ..

அந்த துஷ்டனோட பாவத்துல பங்கு வாங்கிண்டு அவதிப்படாதீங்கோ

..ஆயிஷா மீரான்னு ஒரு பொண்ணு. ஹாஸ்டல்ல தங்கி படிச்சிட்டிருந்தது. இந்த கேஸ்ல ஒரு தலித்தை கைது பண்ணி கோர்ட்டுல நிறுத்தினா. உடனே நாட்ல உள்ள தலித் அமைப்புகள் எல்லாம் கச்சை கட்டிண்டு களமிறங்கினா.

நேத்திக்கு கோர்ட் தீர்ப்பு கொடுத்துருத்து. ஒரு ஆயுள் தண்டனை ,பத்து வருஷம் சிறை தண்டனை.

தலித்துன்னா அவன் அப்பாவியாத்தான் இருக்கனும்னு ரூலா என்ன? மனித உரிமைகள், தலித் அது இதுன்னு ஆனானப்பட்ட ஆகாத்தியம்லாம் பண்ணினா. டிவிகள்ள மணி கணக்குல சர்ச்சை.

அந்த பாவி வாக்கு மூலம் கொடுத்திருக்கான். போலீஸ் காராள் அதை வீடியோ எடுத்து கோர்ட்டுக்கு டிவிடியே சப்மிட் பண்ணா. அதுல கதை சொல்றாப்ல சொல்லியிருக்கான். ஒரே ஷாட்டுதான். மிக்சிங், மார்ஃபிங் எல்லாம் எதுவும் கிடையாது. அவனோட வாக்கு மூலத்தை பாருங்கோ..

"செகண்ட் ஷோ போனேன். திரும்பி வரப்ப மாடில யாரோ படிச்சுண்டிருந்தா. காம்பவுண்டு சுவர் ஏறி குதிச்சு உள்ள போனேன். இந்த பொண்ணு சன்னலை ஒட்டி படுத்திண்டிருந்தது. தொட்டா ஹாஸ்டலே விழிச்சுண்டுரும். என்ன பண்ணலாம்னு பார்த்தேன் பக்கத்துல உலக்கை இருந்தது. எடுத்து மண்டைல போட்டேன். கிர்கா மர்காங்கலே. அப்படியே இழுத்துண்டு பாத்ரூம் போனேன். அங்க வச்சு கெடுத்தேன்."

இந்த பாஷாண்டத்துக்கெல்லாம் வக்காலத்து வாங்கினவா முகத்தை கொண்டு வச்சுப்பா. ஹும்.. கலி முத்திப்போச்சு..

ஸ்ரீனிவாச ஐயங்கார் சொன்னது…

பிராமண தூஷனை பண்ணீட்டு த்ரிமூர்த்தாள் கிட்டே
சாதியை சொன்னதுக்கு அடி உதையா? Can't you believe ?

நான் இன்னாரை பார்த்து நீ இன்ன சாதின்னு சொல்லியிருந்தா அது குத்தமாகலாம். நான் என் சாதியத்தான் சொன்னேன். அது தப்பா? என் தோப்பனார் ஒரு பிராமணர். என் தாய் ஒரு பிராமணப்பெண் அப்போ நான் பார்ப்பான் தானே. நான் பார்ப்பான் தான்னு சொன்னா யாருக்கு வலிக்குது? எங்கே வலிக்குது?

அம்ருதமும் , ஆலாலமும் ஒரே பாற்கடல்ல உருவான மாதிரி என்னாட்டம் சத்ப்ராமணாள் வசிக்கிற இதே சித்தூர்ல ஒரு தீய சக்தி உருவாகிட்டுது. இந்த அச்சு பிச்சு இது நாள் வரை பண்ணாத அழும்புல்லை, போடாத ஆட்டமில்லை. எல்லாமே ஊத்திக்கும். அதான் ஹிஸ்டரி.

இந்த அச்சு பிச்சு அங்கங்கே நின்னு தானேதோ சாக்ரடீஸுங்கற நெனப்புல டமில் ப்ளாக்ஸை பத்தி அளந்து விட்டுண்டிருக்கும். இது என் காதுக்கும் வந்துது. இந்த அபிஷ்டு எல்லாத்துலயும் அரைகுறையாச்சே, அரை வேக்காடாச்சே இதும் வாசாலாக்குக்கு எத்தனை பேரு பலியாயிண்டிருக்காளோ என்னமோ பார்க்கலாம்னு ஒரு நோட்டம் பார்த்தேன்.

பச்சை பச்சையா எழுதறதும் , அதையும் சில அபிஷ்டுக்கள் கொண்டாடறதையும் பார்த்தேன். ஏதோ வயித்து பொழப்பு தொலையட்டும்னு பார்த்தா சதா ப்ராம்மண தூஷணை.

பிராமணங்கறவன் குருதத்வம். த்ரிமூர்த்தாளோட பகைச்சுண்டு பிராமணனை சரண் புகுந்தா சரணடைஞ்சவனை காப்பாத்தற சக்தி படைச்சவன் பிராமணன். ஆனால் பிராமண தூஷனை பண்ணீட்டு த்ரிமூர்த்தாள் கிட்டே போனாலும் பப்பு வேகாது.

ஏண்டான்னா த்ரி மூர்த்தாளுக்கு தெரியும். அவா என்ன யோசிப்போ.. " என்னடா இது நம்மோட ரச்சை பண்ணின்டு போனாலும் காப்பாத்தற பிராமணனையே துவேஷிக்கிறவனோட ப்ரேமை சாஸ்வதமா இருக்குமா.. செத்தாலும் இருக்காது"

அதனால தான் சொல்றேன் தெய்வ தூஷணை பண்ணவா யாரும் நிம்மதியா வாழ்ந்ததில்லை. அப்படியே வாழ்ந்தாலும் நிம்மதியா செத்ததில்லே.( உதாரணம் அண்ணாதுரை, பெரியார் - மூத்திர பானையை தூக்கிண்டு அலைஞ்சாரோன்னோ?) தெய்வ தூஷணை பண்ணவா கூட ஒரு சத்பிராமணனை சரண் புகுந்து அவன் காலை புடிச்சுண்டா கரையேறிடலாம் ( கல்கில கலைஞருக்கும் பிராமணாளுக்கும் உள்ள பிணைப்பை பத்தி ஞானி எழுதியிருக்கார் படிங்கோ)

இதெல்லாம் எதுக்கு சொல்லிண்டிருக்கேன்னு பார்க்கறேளா?

இவ்ள தூரம் வந்த பிறவு ஒளிவென்ன மறைவென்ன இந்த டமில் ப்ளாக்ஸ்ல தானேதோ கொம்பு முளைச்சவன்னு அலட்டிக்கிற , ஜோதிட ஓஷோ, வலையுலக மாத்ரு பூதம்னு உங்கள்ள சில அச்சு பிச்சுகள் கொண்டாடற முருகேசன் என்னை ஆளை வச்சு கூட்டு வச்சுண்டு ப்ளாக் மெயில் பண்ணான்.

இத்தனைக்கும் நானேதும் அவனோட மெயிலையோ , ப்ளாகையோ ஹாக் பண்ணிரலை. அவன் ரெகுலரா போவற நெட் சென்டருக்கு பை மிஸ்டேக் நானும் போனேன் போல. திரட்டில என் பதிவை இணைக்கறச்ச அந்த குரங்கோட மெயில் ஐடி வந்திருக்கு . நான் குருட்டாம்போக்குல அதை க்ளிக் பண்ணிட்டன் போல. என்னோட பதிவு அந்த எச்சக்கலையோட மெயில் ஐடியோட பப்ளீஷ் ஆயிடுத்து.

இதென்ன பஞ்சமா பாதகமா? பிரம்ம ஹத்தியா? எவனோ கட்டைல போறவன் என்னவோ இழவெடுத்த மிரட்டல் மெயில் அனுப்பி தொலைச்சான்னு சித்தூர் நெட் சென்டர்லயெல்லாம் அட்ரஸ் ப்ரூஃப். வாங்கிண்டுதான் சிஸ்டத்தையே கண்ணுல காட்டறாளா.. நெட் சென்டர்ல தனக்கு முந்தி சிஸ்டத்தை உபயோகிச்சவ விலாசமெல்லாம் பீராய்ஞ்சு என் விலாசத்தை தேடிப்பிடிச்சு ஆளனுப்பினான்.

வந்ததுங்க ஒன்னத்துக்கும் மூஞ்சில மீசை கூட கிடையாது. கழுத்துல சவுக்கம் போடாத குறையா என்னை ஆட்டோல கூட்டிண்டு போனதுங்க. அங்கே முருகேசனார் கீதோபதேசம் கணக்கா அறிவுரை சொல்ல விதியில்லாம கேட்டுண்டு வந்துட்டன்.

இந்த வாலை தெரியாத்தனமா மிதிச்சதுக்கே கிட்னாப்பு மிரட்டல்னா இது எந்த தலையை பார்த்து ஆடுதோ அதனோட லட்சணத்தை சொன்னா பிராணஹத்தியே கூட நடந்துரலாம். ஏதோ ஹார்ட் வேர் சாஃப்ட் வேர் தெரிஞ்சுண்டு பொழப்ப ஓட்டிண்டிருக்கேன். தோப்பனார் போஸ்டல் டிப்பார்ட்மென்ட்ல ஒர்க் பண்ணி ரிட்டையராகி ஜப மாலையும் கையுமா இருக்கார். தங்கச்சி ஒருத்தி கல்யாணத்துக்கிருக்கா. தாயாருக்கு மூத்திரப்பைல கல்லுன்னு சட்டிப்பானை கூட வித்து வைத்தியம் பார்த்தேன். எனக்கு கல்யாணத்துக்கு பார்த்துண்டிருக்கா. இத்தனை நடந்திருக்கு , போலீஸ்ல ஒரு புகார் கொடுக்கலாமேன்னு நீங்க கேழ்க்கலாம்.

இந்த வாலுக்கு ஒரு தலையிருக்கு. இந்த வாலுக்கு பின்னாடி நிருபர்னு ஒரு வாலு இருக்கு. ஸ்டேஷன்லயும் இந்த துஷ்டாளோட ராஜ்ஜியம் தானே நடக்குது. அது சரி இந்த விவரத்தையெல்லாம் இங்கே பதிவா போடறேளே இதனால ஆபத்துவராதான்னு கேழ்க்கலாம்.

இந்த வலையுலகத்துல இந்த துஷ்டன் தானேதோ பெரிய உத்தமன்னு பீத்திண்டிருக்கானே. அந்த இமேஜ் கெட்டுப்போயிருமேன்னு விளக்கம் சொல்ல முன் வரலாம். இல்லை இங்கே கடைய கட்டிண்டுர்ர மாதிரி இருந்தா என் மேல கை வைக்கட்டும்.

இந்த மாதிரி பிராமண துவேஷிகள் எல்லாம் அன்ன வஸ்திரத்துக்கு இல்லாம அவதிப்படப்போறா. இது நான் பன்னெண்டு வருஷமா ஜெபிச்சுண்டு வர்ர காயத்ரி மேல சத்தியம்.

rasikan சொன்னது…

திரு.கக்கு-மாணிக்கம் அவர்களே எந்த செய்தியின் அடிப்படையில் இந்த பதிவை நீங்கள் எழுதினீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?? மிக மோசமான வார்த்தைகளால் எழுதி உள்ளது வருந்ததக்கது. சன் நியூஸ் சேனலில் இந்த செய்தியைப் பார்த்த பொது எனக்கும் ஆத்திரம் வந்தது ஆனால் வெள்ளிகிழமை தொழுகை செய்யும் மக்களின் கூட்டத்தைக் காட்டி, இவர்கள் ஒசாமாவின் மரணத்திற்கு தொழுகை செய்கிறார்கள் எனக் காட்டினால் அதற்க்கு அந்த மதத்தினர் என்ன செய்ய முடியும். அந்த மசூதியின் இமாம் தவிர யாருமே அதை ஆதரித்து பேசவில்லையே... மீடியாக்கள் தங்கள் பொறுப்புகளை மறந்து செய்திகள் வெளி இடுகின்றன..
//அட நாயே ஒசாமாவை பற்றி உனக்கு என்ன தெரியும் இவ்வளு கேவலம்ஹா எழுதி இருக்கே முதலில் ஒருவருடைய அடிப்பாடைகளை தெரிந்து கொண்டு எழுத்தை ஆரம்பி //
திரு.Abusaud.. பிரச்சனையே அவருடைய அடிப்"பாடை"யைப் பற்றிதான்.

rasikan சொன்னது…

சமிபத்தில் படித்த மெயில்..

பாகிஸ்தானில் யார் உயிர்க்கும்
உத்திரவாதம் இல்லை அது
பின்லேடன் ஆனாலும் கூட......

இந்தியாவில் எல்லோர் உயிர்க்கும்
உத்திரவாதம் உண்டு அது
கசாப் ஆனாலும் கூட.............

kumar சொன்னது…

என் பின்னூட்டத்திற்கு காரசாரமான எதிர்வினை வரும் என்று எதிர்ப்பார்த்தேன்.அமைதியான முறையில்
பதில் கூறியது எனக்கு
ஆச்சர்யமே.
நல்லது.ஒசாமாவுக்கு தொழுகை நடத்தியதில் எனக்கு உடன்பாடில்லை.அதற்க்கான காரணங்களை பலர் எழுதிவிட்டனர்.வழக்கமான வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வந்த அனைத்து முஸ்லீம்களையும் தேசத்துரோகிகளாக இனம் பிரித்து நீங்கள் எழுதியது எந்தவிதத்தில் நியாயம்?
"" நீங்கள் தின்பது இந்திய உப்பு, குடிப்பது தமிழ் நாட்டு தண்ணீர் ""
இந்திய உப்புதான்.ஆனால் அவர்களின் சொந்த இந்திய உப்பு.
தமிழ்நாட்டு தண்ணீர்தான்.ஆனால் அவர்களின் சொந்த தமிழ்நாட்டு தண்ணீர்.
இதையெல்லாம் அவர்கள் சாப்பிடுவதும்,குடிப்பதும் அவர்களுக்கு கிடைத்த சலுகை என்பது போலத்தான் RSS பிரசாரம் இருக்கும்.கொஞ்சம் உங்கள் பதிவிலிருந்து விலகி நின்று ஒரு மூன்றாம்
மனிதனின் கோணத்தில் பாருங்கள்.உங்களையறியாமல் அப்படி ஒரு தொனி அதில் தொக்கி நிற்ப்பதை காண்பீர்கள்.
பொன்மாலைப்பொழுது என்ற அழகான தலைப்பே உங்கள் பதிவிற்கு என்னை அழைத்து வந்தது.
"" முகமது நபியை கொண்டாடும் எந்த முஸ்லிமும் இந்த ஒசாமா பின் லாடனை கொண்டாட மாட்டார்களே! இவனை இங்கு இந்தியாவில், தமிழ் நாட்டில் நீங்கள் கொண்டாட என்ன காரணம்? ""
இங்கே யார் எவ்வாறு கொண்டாடினார்கள் என்பதே என் கேள்வி?
"" பஷீர் உங்கள் பெயரைத்தவிர வேறு ஒன்றும் எனக்கு தெரியாது. இனிமேல் தான் உங்களின் வலைத்தளம் சென்று பார்க்கவேண்டும்.""
என் வலைதளத்தில் நீங்கள் காண ஒரேயொரு படைப்பு இருக்கும்.அது உங்களுக்கு கண்டிப்பாக
ஏமாற்றத்தையும் அளிக்கும்.ஏனென்றால் நானும் அப்படிப்பட்டவனல்ல.
"" ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் நண்பரே! நீங்கள் கற்பனை செய்து வைத்துள்ள அந்த மோசமான கக்கு-மாணிக்கம் நானல்ல. நான் வெகு இயல்பானவன்.""
நல்லது.அதைத்தான் நானும் விரும்புகிறேன்.
"" அதுசரி உங்களுக்கு வேறு வேலையே கிடையாதா பஷீர் பாய்? வம்புக்கு ஏன் இப்படி ஆளாய் அலைகிறீர்கள்? ""
இது என்ன அய்யா புதுகுற்றசாட்டு? நான் யாரிடம் எங்கே வம்பு செய்தேன்?
சரி விடுங்கள்.
நிஜ உலகில் என்னை பொறுத்தவரை ஏழை-பணக்காரன் என்று இரண்டே மதம்.
இந்த ஏழை மதத்திலும்,பணக்காரன் மதத்திலும் நல்லவன் -கெட்டவன் என்று இரண்டே ஜாதி.
அம்புட்டுதேன்.பின்னர் சந்திப்போம்.
(என் வார்த்தைகள் ஏதும் உங்களை காயப்படுத்தி இருந்தால் என் வருத்தங்கள்.)

பொன் மாலை பொழுது சொன்னது…

//இதையெல்லாம் அவர்கள் சாப்பிடுவதும்,குடிப்பதும் அவர்களுக்கு கிடைத்த சலுகை என்பது போலத்தான் RSS பிரசாரம் இருக்கும்.//
................................................basheer.

நான் அவ்வாறு எழுதியதற்கு காரணம் ஒரு அயல் நாட்டு பயங்கர வாதியை ,அதுவும் இந்தியாவை அழித்து ஒழிக்க நினைக்கும் பாகிஸ்தானிடம் அடைக்கலமாய் பதுங்கியிருந்த ஒருவனை அவன் ஒரு முஸ்லிம் என்ற ஒரு காரணத்துக்காக சிறப்பு தொழுகை மூலம் பெருமை படுத்தி நாம் வாழும் இம்மண்ணை கேவலப்படுத்தவேண்டுமா என்ற எண்ணத்தில்தான்.
இந்த உப்பும் தண்ணீரும் அவர்களுடையது,அவர்களின் உழைப்புத்தான் அவர்களின் உரிமையும் கூட. இதெல்லாம் அவர்களுக்கு கிடைத்த சலுகைகளாக நான் நினைக்கவில்லை.அதெப்படி ? அவர்களும் தமிழர்கள், இந்தியர்கள்தானே? முன்னரே இஸ்லாமியர்கள் என்றால் பயங்கரவாதத்துக்கு பக்கம் நிற்பவர்கள் என்ற பரவலான ஒரு கருது எங்கும் நிலவி நிற்கும் போது இது போன்ற நிகழ்வுகளை இந்த அமைப்பினர் ஏன் வேண்டுமென்றே நிகழ்திகாட்டுகிரார்கள்? அவர்கள் அதனால் பிறர்க்கு சொல்லவரும் செய்தி என்ன? இது போன்ற கேள்விகள் வருவது இயல்புதானே பஷீர்?

ஒரு வேலை உணர்ச்சி வேகத்தில் சற்று அதிகமாக தேவையில்லாமல் வார்த்தைகளை கொட்டியிருக்கிறேன் போல. சற்று தாமதித்து எழுதியிருந்தால் அந்த வேகம் சற்று குறைந்திருக்கலாம்.
ஒப்புக்கொள்கிறேன்.உண்மையில் அவர்கள் மீது எனக்கு வேறு எந்த காழ்புணர்வும் மத துவேஷமும் இல்லை.

R S S காரர்கள் மற்றும் உள்ள அமைப்புக்கள் எல்லாம் இஸ்லாமியர்களிபற்றி என்ன சொல்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. அவைகளில் எனக்கு ஆர்வமும் இல்லை.

பேச நிறைய இருகிறது ஒவ்வொன்றாக பேசினால் அது இன்னம் முடிவில்லாமல் வளரும். சரி.

இதுவரை எந்த காட்டரபியிடமும் மாட்டவில்லை. அப்படியே மாட்டினாலும் அதற்கும் இவ்வாறு ஒரு பதிவை எழுதவும் என்ன சம்பந்தம்? சரி இனிமேல் மாட்டினாலும் நான் பஷீரைத்தான் அழைப்பேன் சரியா?

//அதுசரி உங்களுக்கு வேறு வேலையே கிடையாதா பஷீர் பாய்? வம்புக்கு ஏன் இப்படி ஆளாய் அலைகிறீர்கள்? //

இது சும்மா நக்கலாகவே எழுதினேன் Just for kidding :))

YESRAMESH சொன்னது…

மிகவும் துணிவான இடுகை. பாராட்டுகள்.

vasan சொன்னது…

திக் விஜ‌ய் சிங்கின் அறிக்கையை பார்த்தீர்க‌ள் தானே?
வெறும் ஓட்டு அர‌சிய‌லில் ஓட்டு வாழ்க்கையை ந‌ட‌த்திக் கொண்டுருக்கிற‌து ஆளும் வ‌ர்க்க‌ம்.
அழிவ‌து ம‌க்க‌ளாய் இருப்பினும், வாழ‌வ‌து அர‌சிய‌லாய் இருக்கிற‌து.
சிறு(பான்மை)பிள்ளைத் த‌ன‌மான‌ அர‌சிய‌ல்.

டக்கால்டி சொன்னது…

அவரவர் நம்பிக்கை அவரவருக்கு...அந்த நம்பிக்கை அடுத்த சகமனுஷனை எந்த வகையிலும் பாதிக்காமல் இருந்தால் சரி தான்...அது தொழுகையாக இருந்தாலும் சரி...பூஜையாக இருந்தாலும் சரி என்பது என் கருத்துங்க...

Jey சொன்னது…

மதத்தின் பெயரால், ஓசாமாவுக்காக தொழுகை நடத்தியவருக்கும் அதில் கலந்து கொண்டவர்களுக்கும் எனது கடுமையான கண்டனங்கள்.

மதத்தின் பெயரால் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோரை அந்தந்த மத மக்கள் தனிமைப் படுத்த வேண்டும். இது போன்ற செயல்கள் கண்ண்டிக்கத்தக்கவை.
கக்கு-மணிக்கம் அவர்களின் இந்த பதிவின் அடிப்படை நோக்கத்திற்காக எனது ஆதரவு.

பதிவில் சில தடித்த வார்த்தைகள் தவிர்த்திருக்களாம்தான். வலைதளத்தில் நான் புரிந்துகொண்ட கக்கு மாணிக்கம் அவர்கள் எந்த மதத்திற்கும் விரோதியானவர் அல்ல என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.

பொன் மாலை பொழுது சொன்னது…

///பதிவில் சில தடித்த வார்த்தைகள் தவிர்த்திருக்களாம்தான். வலைதளத்தில் நான் புரிந்துகொண்ட கக்கு மாணிக்கம் அவர்கள் எந்த மதத்திற்கும் விரோதியானவர் அல்ல என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.////
-----------------------Jey சொன்னது.

உண்மையும் இதுதான்.வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பர் Jey அவர்களே

முத்துவாப்பா.. சொன்னது…

சகோதரர் கக்கு மாணிக்கம் அவர்களே உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக...

உங்களை போன்றவர்களுக்காகவே நான் ஒரு பதிவை உருவாக்கியிருகின்றேன் இங்கே சொடுக்கவும்....
http://kulkusma.blogspot.com/2011/05/blog-post_10.html

தமிழன் சொன்னது…

@கக்கு - மாணிக்கம்,
அருமையான பதிவு நண்பரே.

முஸ்லிம்களை எல்லா நாட்டிலும் இரண்டாந்தர குடிமக்காளாகத்தான் பாவிக்கவேண்டும்(இஸ்லாம் மற்ற மதத்தவரை அப்படித்தான் பார்க்கிறது)
கூட இருந்தே அடுத்தவங்க முதுகில் குத்துவது என்பது முகமது செஞ்சது. இவர்களும் அதைத்தான் செய்கிறார்கள்.
http://www.expatica.com/fr/news/french-news/French-Muslim-soldiers-refuse-Afghan-mission_-report_48688.html
// முகமது நபியை கொண்டாடும் எந்த முஸ்லிமும் இந்த ஒசாமா பின் லாடனை கொண்டாட மாட்டார்களே!//
முகமதுவைப்பற்றி தவறான அபிப்பிராயம் கொண்டுள்ளீர்கள்.
முகமதுவைப்பற்றி தெரிந்துகொள்ள.
http://www.faithfreedom.org/the-challenge/the-challenge/

Madhu சொன்னது…

பாகிஸ்தானில் நேற்று ஒசாமா கொலைக்கு பழி வாங்க தலிபான் குண்டு வைப்பு.பலர் மரணம் அடைந்தனர், படுகாயம் அடைந்தனர். இந்த மத வெறியர்கள் மெக்கா மசூதியில் இந்த அப்பாவிகளுக்காக ஜனாஸா தொழுகை நடத்துவார்களா.?

Aashiq Ahamed சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்,

---------------------
முகமதுவைப்பற்றி தவறான அபிப்பிராயம் கொண்டுள்ளீர்கள்.
முகமதுவைப்பற்றி தெரிந்துகொள்ள.
http://www.faithfreedom.org/the-challenge/the-challenge/
-----------------------

அப்படியா, இதையும் பாருங்கள்

http://www.muslim-responses.com/faithfreedom_org__ali_sina_
http://www.call-to-monotheism.com/refuting_faithfreedom_org
http://faithfreedom.com/ali_sina_exposed.html
http://answering-christianity.org/faithfreedom_rebuttals.htm
http://www.bismikaallahuma.org/archives/2009/ali-sina-understanding-muhammad-a-psychobiography/

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Unknown சொன்னது…

இந்த மதகுருக்கு இது தேவை இல்லாதது. மற்றவர்களையும் கலங்க படுத்தும் வேலை, ஒசாமா நல்லவனா கெட்டவனா என்பது நமக்கு தெரியாத போதும், இதே போல அமெரிக்க படையால் உயிர் நீத்த மக்களுக்கு எங்காவது தொழுகை வைத்தார்களா?.

இது ஒரு விளம்பரதிர்க்காகவே என கருதுகிறேன்.

Tamilan சொன்னது…

@Aashiq Ahamed

http://tamilan1001.blogspot.com/2011/08/blog-post_23.html
http://tamilan1001.blogspot.com/2011/08/blog-post_27.html

இதற்கு முடிந்தால் பதில் கூறவும்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக