பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், மே 2

அற்புதங்கள் இரண்டு நாட்களுக்கு நீண்டுவிட்டன!



வருடம் ஒரு நாள் என்று இருந்த கதை மாறி இந்த வருடம் அட்சய திருதியை இரண்டு நாட்களுக்காம். காசு பண்ண என்னென்ன மாதிரி பித்தலாட்டங்கள்? போக போக "அட்சய திருதியை வாரம்"  என கொண்டாடுவார்கள் போல.தங்கம், வெள்ளி போன்ற மதிப்பு மிக்க பொருள்களை மட்டும் விலை கொடுத்து வாங்கும் ஒரு வியாபர முறையில் மதமும்,கடவுள் நம்பிக்கையும், நாள், நட்சத்திரமும் எப்படி உள்ளே புகுந்து நம்ம சுரண்டுகின்றன?  வெகு விரைவில் இந்த " மாய்மாலம் " ரியல் எஸ்டேட் துறையிலும் வந்துவிடும். அட்சய திருதியை அன்று வீட்டு மனைக்கு அட்வான்ஸ் கொடுத்து புக் பண்ணிவிட்டால் மனை வாங்கிய அனைவருக்கும் வீட்டு மனைகள் பல்கி பெருகிவிடும். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பல மனைகள் வந்துவிடும் நீங்கள் அனைவரும் இனிமேல் கோடீஸ்வரர்கள் தான்.இனி இந்தியாவில் ஏழைகளே இருக்கமாட்டார்கள்.டி. வி. காமர்ஷியல்கள் பார்த்துவிட்டு எல்லோரும் ஓடுவோம் வாருங்கள் தங்கம் வாங்க!








வருடத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் தங்கம் வாங்கி வீட்டில் வைத்துவிட்டால் போதுமாம்,பின்னர் தங்கம் அந்த வீட்டில் பல்கி பெருகி சேர்ந்துவிடுமாம். இதை கேட்கும்போதே கேணத்தனமாக தோன்றவில்லை? திருமண வைபவம் , தீபாவளி, பொங்கல், வருட பிறப்பு போன்ற நாட்களில் பெரும்பாலும் தங்க நகைகள் வாங்கும் பழக்கம் தான் நம்மிடம் இதுவரை இருந்து வந்து. சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு, அரபு நாடுகளில் நல்ல வியாபாரம் செய்து நிறைய கிளைகளை பெற்றுள்ள அந்த நிறுவனம் கேரளாவிலும் ,சென்னையிலும் காலூன்றியது. மலையாளிகள் அல்லவா? கபடிற்கும், சூதுக்கும் பெயர்போனவர்கலாயிற்றே!

"அட்சய திருதியை " என்று ஒரு புது வியாபார யுக்தியை கொண்டுவந்து அந்த நாளில் தங்கம் வாங்கினால் அது பல்கி பெருகும் என்று மீடியாக்களில் காசை கொட்டி வித விதமாக் விளம்பரபாடுத்த, வந்தது வினை உழைத்து சேமிக்கும் காசுக்கு. அந்த குறிப்பிட்ட நாள் வரும் முன்னரே கடைகளில் முன் கூட்டியே தங்கம் வாங்க பதிவு செய்துகொள்ளும் நிலை வரை வந்தது. தினசரி, வார இதழ்கள் எல்லாம் இந்த 'அட்சய திருதியை ' பற்றித்தான் விதவிதமாக கதை விட ஆரம்பித்துவிடும்.

இது போதாதா நம் பெண்மணிகளுக்கு. தங்க நகை விற்கும் கடைகளின் முன்னே தேர்த்திருவிழா தான். போக்குவரத்து ஸ்தம்பித்துவிடும் அளவு கடைகளில் பெண்கள் கூட்டம்.அதுவும் மெத்த படித்த,அறிவில் சிறந்த I. T. பெண்கள் தான் இதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். வணிகர்களின் நோக்கமும் இதுவேதான். வீட்டில் இருக்கும் பெண்களோ கண்ட கழிசடை விளம்பரங்களை டி.வி யில் பார்த்துவிட்டு அவர்களும் "ஏதாவது" வாங்கிவிடவேண்டும் என்று நகை கடைகளை படையெடுக்க தங்கம் விற்பவர்களுக்கு தங்கள் "கல்லா" நிரம்பிய மகிழ்ச்சி. சொல்லி வைத்தார் போல சில தினங்களுக்கு முன்னரே தங்கத்தின் விலையில் வேறு ஏற்றம் இருக்கும். 

மலையாளிகளின் புத்தியில் பிறந்தது இந்த அட்சய திருதியை என்றால், நம்ம ஊர் அண்ணாச்சிகள் பல வருடங்களுக்கு முன்னரே "ஆடி கழிவு அதிரடி தள்ளுபடி" விற்பனையை ஆரம்பித்துவிட்டனர். பொத்தல் விழுந்தவைகள், இற்றுபோனவைகளை "தள்ளுபடி விலையில் " தலையில் கட்டி சென்னை T.நகர் மொத்தமும் வளைத்து போட்டு விட்டார்கள்.

வருடத்திற்கு ஒரு அட்சய திருதியை இனிமேல் பத்தாது. வரும் காலங்களில் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று வந்து விடும் . பின்னர் சிலவருடங்கள் கழித்து மாதா மாதம் அம்மாவாசை, பௌர்ணமி, கிருத்திகை வருவது போல அட்சய திருதியையும் மாதா மாதம் வந்துவிடும் பாருங்கள். முற்போக்கு வாதிகளாக தங்களை காட்டிகொள்ளும் மீடியாக்கள் விளம்பர தந்திரங்களால் தங்கள் கல்லா நிரம்புவதை கண்கொண்டு பூரித்து போகின்றன. 

இதில் மற்றொரு வேடிக்கை என்னவென்றால் வெறும் தங்க ஆபரணம் மட்டுமல்லாமல் வீட்டு உபயோக சாதனங்கள் டி.வி. ஏ,சி .கிரைண்டர்,ஆட்டுக்கல் ,அம்மி ,பிளாஸ்டிக் டபபி முதல் விளக்குமாறு,செருப்பு என்று சகலமும் இதே நாளில் கூறு கட்டி விற்க ஆரம்பித்துவிட்டனர் அண்ணாச்சி மார்கள். 


இதற்க்கு பெயர்தான் "இடுக்கில் கடுக்கன் கழட்டுவது "

தங்கம் வாங்குவது மிக நல்ல முதலீடுதான். ஆனால் அதனை சமயம் அறிந்து செய்யவேண்டும்.யாரோ சில பேராசைகாரர்கள், சில படித்த கயவர்கள்,தங்கம் வாங்குவதையும் , கடவுள் நம்பிக்கை, மதம், அதிஷ்டம் இவைகளை ஒன்றாக சேர்த்து இட்டுகட்டி தயாரித்த இந்த 'அட்சய திருதியை " என்ற தில்லு முள்ளு வியாபார தந்திரத்தை கொண்டாடாதீர்கள்.





33 comments:

அமைதி அப்பா சொன்னது…

அவசியமான நேரத்தில் அவசியமான பதிவு!

Unknown சொன்னது…

//வெகு விரைவில் இந்த " மாய்மாலம் " ரியல் எஸ்டேட் துறையிலும் வந்துவிடும்.//

ஆடித்தள்ளுபடி என்று துணிக்கடைகார்கள் கொண்டு வந்த விந்தையை இப்போது நகை கடைகார்கள் கைப்பற்றி கல்லா கட்டுகிறார்கள். நிச்சயம் மற்றவர்களின் கண்ணை உறுத்தாமல் இருக்குமா?

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

raittuuuu

Unknown சொன்னது…

தலைவரே அரசாங்கத்துக்கு எதிரான கருத்துகளை சொல்லும் பதிவுகள் முடக்கப்படுவதாக!

பெயரில்லா சொன்னது…

////வருடத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் தங்கம் வாங்கி வீட்டில் வைத்துவிட்டால் போதுமாம்,பின்னர் தங்கம் அந்த வீட்டில் பல்கி பெருகி சேர்ந்துவிடுமாம். இதை கேட்கும்போதே கேணத்தனமாக தோன்றவில்லை?//// ஹிஹிஹி உண்மை தான், எல்லாம் ஒரு வியாபார தந்திரம். ஆனால் ஏமாற்ற படுவது அப்பாவி மக்கள்........

பெயரில்லா சொன்னது…

salute for honur

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இதில் மற்றொரு வேடிக்கை என்னவென்றால் வெறும் தங்க ஆபரணம் மட்டுமல்லாமல் வீட்டு உபயோக சாதனங்கள் டி.வி. ஏ,சி .கிரைண்டர்,ஆட்டுக்கல் ,அம்மி ,பிளாஸ்டிக் டபபி முதல் விளக்குமாறு,செருப்பு என்று சகலமும் இதே நாளில் கூறு கட்டி விற்க ஆரம்பித்துவிட்டனர்///


நாமதான் எச்சரிக்கையா இருக்க வேண்டும்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//தங்கம் வாங்குவது மிக நல்ல முதலீடுதான். ஆனால் அதனை சமயம் அறிந்து செய்யவேண்டும்.//

அதுவும் காயின்சா வாங்குனா இன்னும் லாபம்...

எல் கே சொன்னது…

தலைவரே , அட்சய திருதியை அன்னிக்கு தானம் செஞ்சா நல்லது. அதுதான் அந்த நாளின் மகத்துவம். இதெல்லாம் இந்த வியாபாரிகள் பண்ண கூத்து

சசிகுமார் சொன்னது…

எதை எவன் சொன்னாலும் நம்பறாங்களே நம்ப மக்களை தான் சொல்லணும்.

உணவு உலகம் சொன்னது…

உங்கள் கருத்துக்கள் ஏற்கத்தக்கது. பாவம் பல மனிதர்கள்!

Philosophy Prabhakaran சொன்னது…

// அறிவில் சிறந்த I. T. பெண்கள் //

Oxymoron...?

velanblogger சொன்னது…

அட்சயதிருதியை அன்று திருமணம் செய்துகொண்டால் நிறைய மனைவி-துணைவிகள் கிடைப்பார்கள் என்று விரைவில் சொன்னாலும் சொல்வார்கள் பாருங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பாலா சொன்னது…

சரி போன வருடம் வாங்கியவர்கள் வீட்டில் தங்கம் கொட்டோ கொட்டென்று கொட்டியதா என்று விசாரிக்க வேண்டியதுதானே? அன்று தங்கம் வாங்கினால் பெருகும். கைவிட்டு போனால் ஏழையாகி விடுவோமா? அப்படியானால் நகைக்கடைக்காரர்கள்தான் ஏழை ஆகி இருக்க வேண்டும்.

Unknown சொன்னது…

ellame business thaan.

துளசி கோபால் சொன்னது…

ஆட்டுக்கல் வாங்கினா அதுவே அமோகமாப் பெருகிட்டால் அத்தனையையும் என்ன செய்ய? அடராமா.......

அக்ஷயத்ருதியை! இது மலையாளிகள் கண்டுபிடிச்சதில்லைங்க. காலங்காலமா இருக்கு. அன்றைய தினம் நம் மனசார எதாவது தான தருமங்கள் செய்யணும். அதுவே பல்கிப்பெருகி சித்ரகுப்தன் நோட்புக்கில் எண்ட்ரி ஆகும்.

இந்த நகை சமாச்சாரம்....இப்போ ஒரு பத்துவருசமாத்தான் இருக்கு. இதுக்கு ஊடகங்கள்தான் காரணம்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

தங்கம் வாங்குவது மிக நல்ல முதலீடுதான். ஆனால் அதனை சமயம் அறிந்து செய்யவேண்டும்.யாரோ சில பேராசைகாரர்கள், சில படித்த கயவர்கள்,தங்கம் வாங்குவதையும் , கடவுள் நம்பிக்கை, மதம், அதிஷ்டம் இவைகளை ஒன்றாக சேர்த்து இட்டுகட்டி தயாரித்த இந்த 'அட்சய திருதியை " என்ற தில்லு முள்ளு வியாபார தந்திரத்தை கொண்டாடாதீர்கள்.///

மிக அருமையாக சொன்னீர்கள் மாணிக்கம்! வெல் டன்!

Unknown சொன்னது…

///கடவுள் நம்பிக்கை, மதம், அதிஷ்டம் இவைகளை ஒன்றாக சேர்த்து இட்டுகட்டி தயாரித்த இந்த 'அட்சய திருதியை " என்ற தில்லு முள்ளு வியாபார தந்திரத்தை கொண்டாடாதீர்கள்.///
சூப்பர் பாஸ்!

சாந்தி மாரியப்பன் சொன்னது…

எல்லாம் வியாபாரத்தந்திரம்தான்..

கோவி.கண்ணன் சொன்னது…

அட்சயதிருதியை அன்னிக்கு பொண்ணு பார்த்து நிச்சயம் செய்தால் நல்லது என்று சொன்னாலும் திருமண உறவுகள் பெருகும்.

சென்னை பித்தன் சொன்னது…

இன்னும் புதுசா ஏதாவது கிளப்பி விடுவாங்க!அதுக்கும் ஒரு கூட்டம் சேரும்!

எம் அப்துல் காதர் சொன்னது…

படித்தவர்களும் விழிப்போடு இருக்கணும் என்று உஷார் படுத்தி இருக்கீங்க அண்ணே!

பெயரில்லா சொன்னது…

அட்சய திருதியை அன்னிக்கி காலைல ஆறு மணிக்கே தி.நகர் கடைங்க முன்னாடி க்யூ கட்டி நிக்கறாங்க மகா ஜனங்க. என்னத்த சொல்ல..

ஸ்ரீராம். சொன்னது…

அட்சயத் திருதியை தான தருமங்கள் போன்ற நல்ல காரியங்கள் செய்ய உகந்தது. அதை ஜனங்கள் செய்ய மாட்டார்கள். இப்படி ஏதாவது கிளப்பி விட்டு மக்களை முட்டாளாக்குவார்கள்.

syed சொன்னது…

super anna

டக்கால்டி சொன்னது…

Anubavam Pithatrugirathu

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

இது நல்ல வியாபாரத்தந்திரம்...
:-)

விடுண்ணா.. மக்கள் முட்டாளாத்தான் இருப்பேனு அடம் பிடிச்சா.. என்ன செய்யமுடியும்?..

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இட்டுகட்டி தயாரித்த இந்த 'அட்சய திருதியை " என்ற தில்லு முள்ளு வியாபார தந்திரத்தை கொண்டாடாதீர்கள்.//
மிக அருமை....

Jafarullah Ismail சொன்னது…

நல்ல விழிப்புணர்வு பதிவு. பாராட்டுக்கள்.

Jafarullah Ismail சொன்னது…

யாருக்கு பல்கி பெருகுதோ, ஆனால் அந்த கேரள நகைக்கடை அதிபர் தனது கிளைகளுக்கு சொந்த விமானத்தில் தான் சென்று வருகிறார்.

ஷர்புதீன் சொன்னது…

//கேணத்தனமாக தோன்றவில்லை?//


நீங்களெலாம் ரஜினியை பற்றி ரஜினியின் விசிறிகளிடமே பேசி ஆத்ம திருப்தி அடைந்து கொள்கிறீர்கள்., மூட நம்பிக்கைகளே வாழ்க்கை என்று வாழும் ஒரு கூட்டம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது., அவர்களிடம் உங்களது கட்டுரைகள் மட்டுமல்ல, பெரியார் வந்தால் கூட முடியாது., காரணம் பெரியாரையும் இந்த மனிதர் சாமி போன்றவர் என்று அவரையும் கும்பிட்டுவிட்டு நகை வாங்க சென்று விடுவார்கள்., இந்த குணத்தின் ஆரம்ப ஆதார குணம் பற்றி விளக்கினால், இந்து மத நண்பர்கள் என்னை இஸ்லாமிய மத கொள்கையின் தீவிரவாதி என்பார்கள், ( அடியேன் agnostic )

Chitra சொன்னது…

வருடத்திற்கு ஒரு அட்சய திருதியை இனிமேல் பத்தாது. வரும் காலங்களில் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று வந்து விடும் . பின்னர் சிலவருடங்கள் கழித்து மாதா மாதம் அம்மாவாசை, பௌர்ணமி, கிருத்திகை வருவது போல அட்சய திருதியையும் மாதா மாதம் வந்துவிடும் பாருங்கள்.



......இந்த அளவுக்கு தங்க விலை கூடியும், தங்கம் வாங்கி கொண்டே இருப்பது - பணபுழக்கம் அதிகம் ஆகி விட்டதை காட்டுகிறதா? இல்லை, தங்கத்தின் மேல் உள்ள மோகம் அதிகம் ஆகிவிட்டதை காட்டுகிறதா என்று தான் புரியவில்லை.

RVS சொன்னது…

அட்சய திருதியை அன்று ஏதாவது புது வித்தைகள் கற்றுக்கொள்ள ஆரம்பித்தால் அதில் கூட சிறந்து விளங்கலாம். அன்று தொடங்கும் எதுவும் சிறப்பாக வளரும் என்பது ஐதீகம். அவ்வளவு தான். நல்ல பதிவு மாணிக்கம். ;-))

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக