பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், ஏப்ரல் 26

ஆனாலும் இது ரொம்ப லேட் அண்ணாத்த !



சுரேஷ் கல்மாடிக்கு செருப்படி வெகுமதி !


காமன் வெல்த் விளையாட்டு ஒருங்கிணைப்பு குழுவின் சேர்மன் நம்ம அண்ணாத்த சுரேஷ் கல்மாடிக்கு கிடைத்தது செருப்படி!

கல்லுமாடி கைதுசெய்யப்பட்டு டெல்லியில் உள்ள C B I  கோர்டுக்கு காவலர்கள் புடை சூழ விசாரணைக்காக செல்லும் போது இளைஞர் ஒருவர் தன் காலில் இருந்த செருப்பை கழட்டி கல்மாடியை அடித்துவிட்டார். ஆனாலும் எவ்வித உணர்சிகளையும் வெளிக்காட்டாமல் நம்ம கல்லு மாடி தொடர்ந்து நடந்து செல்ல, உடன் வந்த காவலர்கள் செருப்பை வீசிய அந்த இளைஞரை சூழ்ந்து பிடித்து விசாரணைக்கு கொண்டு சென்றனர். செருப்பை வீசியவர் மத்திய பிரதேஷ் மாநிலத்தை சேர்ந்த கபில் தாகூர் என்ற விபரம் மட்டுமே இப்போது தெரிகிறது. மற்றவை பின்னர் .ஊழலில் ஊறித்திளைக்கும் அணைத்து அரசியல் மற்றும் ஆட்சியாளர்களுக்கு இனி இந்தியர்களின் பதிலடி இப்படித்தான் இருக்கும் போலும்! 





கல்லுமாடி மீது மோசடிகள், சதிவேலைகள் மற்றும் ஊழல்கள் (charged with cheating, conspiracy and corruption) ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடர்ந்துள்ளது C B I.  இதற்கிடையில் டெல்லியில் உள்ள பா. ஜ. க. வினர் வேறு திரண்டு ஆர்பாட்டம் செய்ய ஆரம்பித்து விட்டனர். டெல்லி முதலமைச்சர் அம்மணி ஷீலா தீட்சித் தையும் கைது செய்து இதே விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என்று. இதோடு நிற்காமல் இன்னு யார் யார் வருவார்களோ!  இதே காமன் வெல்த் ஊழலின் விளைவாக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டியும் விரைவில் தெருவுக்கு வரத்தான் போகிறார்.இதில் வேடிக்கை என்னவென்றால் கல்லு மாடியின் சார்பாக வாதாடும் வழக்கறிஞர் "கல் மாடி குற்றமற்றவர் ஆனால் M.S. கில் லைத்தான் கைது செய்து விசாரிக்க வேண்டும்"  என்று கோரியுள்ளார். நல்ல கூத்து இது. ஒட்டு மொத்தமாக வராமல் ஒவ்வொன்றாக வருவது மீடியாகளுக்கும் நல்ல வேலைதான். 

நேற்று புனேயில் இருக்கும் கல்லுமாடியின் அலுவலகத்தை அவரின் எதிர்பாளர்கள்  (வேறு யார்? காங்கிரஸ் காரர்கள்தான்) உள்ளே புகுந்து தாக்கி பொருட்களை அடித்து உடைத்து நாசம் செய்துள்ளனர்.







நம்ம அசல் ஹீரோ ஜூலியன் அசாஞ்சே TIMES NOW செய்தி சேனலில், சுவிஸ் வங்கிகளில் பணம் போட்டு வைத்துள்ளவர்களில் பிற ஏனைய உலக நாடுகளை விட இதியர்களின் பெயர் பட்டியலே மிக நீளம், அவர்களின் பங்கே மிக அதிகம் என்று குண்டை தூக்கிப்போடுகிறார். விரைவில் முழு விபரங்களையும் அவர் வெளி இடுவார் என்று நம்பலாம். இன்று இரவு 9 .00 மணிக்கு (இந்திய நேரம்)  TIMES NOW - Big Story.



18 comments:

பெயரில்லா சொன்னது…

இவன் போட்ட ஆட்டத்துக்கு சூப்பர் பதிலடியை ஒரு இந்தியன் கொடுத்திருக்கான்

பெயரில்லா சொன்னது…

இந்தியர்கள் வரிப்பணம் இவன் மாமனார் வீட்டு சொத்தா..?>

சக்தி கல்வி மையம் சொன்னது…

மவனே இவனெல்லாம்?

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

லேட்டானாலும் சட்டம் தன் கடமையை செஞ்சுருக்கே...அந்த வகையில் ஓகே.தான்

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

உப்பை தின்னவனட தண்ணிகுடிச்சித்தான் ஆகனும்...

settaikkaran சொன்னது…

//ஊழலில் ஊறித்திளைக்கும் அணைத்து அரசியல் மற்றும் ஆட்சியாளர்களுக்கு இனி இந்தியர்களின் பதிலடி இப்படித்தான் இருக்கும் போலும்!//

இருக்காது என்று நம்புகிறேன்; இருக்கக் கூடாது என்று விரும்புகிறேன்.

இப்போது தான் உச்சநீதி மன்றம் தன் பலத்தை வெளிக்காட்டத் தொடங்கியிருக்கிறது. மற்றும் பல ஊழல் எதிர்ப்பு சக்திகள் ஒன்றிணைந்து துணிச்சலான போர்க்குரல் கொடுத்து வருகின்றனர்.

எல்லாமே தாமதமாக நடப்பது உண்மைதான்; ஆனால், சில மாற்றங்கள் ஏற்படத்தொடங்கியிருப்பதே நல்ல அறிகுறி என்று கருதுகிறேன். பார்க்கலாம் நண்பரே!

பனித்துளி சங்கர் சொன்னது…

உள்ளம் நொந்தவர்களில் ஒருவர் மட்டும்தான் இப்பொழுது தொடங்கி இருக்கிறீர் . எல்லோரும் ஒன்றாய் இணைந்தால் பாவம் அண்ணாத்த சுரேஷ் நிலைமை !

RVS சொன்னது…

கள்ளமாடி போன்றோர் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை!
செருப்படி பத்தாது தோழரே! ;-)

Unknown சொன்னது…

தலைவரே அந்தாளு கல்லு மாதிரின்னு சொல்றீங்களோ!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//நம்ம அசல் ஹீரோ ஜூலியன் அசாஞ்சே TIMES NOW செய்தி சேனலில், சுவிஸ் வங்கிகளில் பணம் போட்டு வைத்துள்ளவர்களில் பிற ஏனைய உலக நாடுகளை விட இதியர்களின் பெயர் பட்டியலே மிக நீளம், அவர்களின் பங்கே மிக அதிகம் என்று குண்டை தூக்கிப்போடுகிறார். விரைவில் முழு விபரங்களையும் அவர் வெளி இடுவார் என்று நம்பலாம்.///

சீக்கிரமா வெளியிட சொல்லுங்க, செருப்பு ஆர்டர் பண்ணனும்.....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அப்போ ஆ ராசாவுக்கும் இன்னும் கைது செய்ய படபோரவங்களுக்கும் செருப்பு அணிவகுப்பு இருக்குன்னு சொல்லுங்க....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஹா ஹா ஹா ஹா செருப்பு செருப்பு, ஆமா அந்த பையனை என்ன செஞ்சாங்கய்யா...??? அடி பின்னி இருப்பாயிங்களோ....

வெங்கட் நாகராஜ் சொன்னது…

“அட இதுக்கெல்லாம் நாங்க அசந்துடுவோமோ” என்பது போலத்தானே இருந்தார் கல்மாடி! அடிக்க வேண்டிய அளவு அடிச்சுட்டோம்.. [பணத்தை] இப்ப நம்மளுக்கும் ஒரு அடி…. பரவாயில்லை என போய் விட்டாரே!!!!

Unknown சொன்னது…

அடின்னா இது அடி!!!

Unknown சொன்னது…

//கல்லுமாடியின் அலுவலகத்தை அவரின் எதிர்பாளர்கள் (வேறு யார்? காங்கிரஸ் காரர்கள்தான்)//

காங்கிரஸ்காரர்கள், கல்மாடியின் ஆதரவாளர்கள் தானே. தப்பு செய்திருக்கிறார் என்று தெரிந்து இத்தனை நாள் மடியில் வைத்து, மாடியை கொண்டாடிக்கொண்டுதானே இருக்கிறார்கள்?

Unknown சொன்னது…

அண்ணே ஆ.ராசா அவர்களே நலமாக இருக்கிறீர்களா? இப்படிக்கு திடீரென நலம் விசாரிப்போர் சங்கம்.

Unknown சொன்னது…

kanimolizhi and MK family also to be slippered very sooooon...

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//ஊழலில் ஊறித்திளைக்கும் அணைத்து அரசியல் மற்றும் ஆட்சியாளர்களுக்கு இனி இந்தியர்களின் பதிலடி இப்படித்தான் இருக்கும் போலும்! //
இது பத்தாது நண்பா .

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக